என் மலர்
இஸ்லாம்
இஸ்லாமிய மார்க்கம் எதை ‘ஹலால்’ (இது இறைவனால் அனுமதிக்கப்பட்டது) என்று வரையறுத்திக் கூறியிருக்கிறதோ, அவைகளைத் தான் நாம் உண்ணவும், குடிக்கவும் வேண்டும்.
நாம் இன்றைக்கு கொரோனாவை எதிர்த்து கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிற நேரமிது. சாதாரணமாக கை, கால், முகம் கழுவாமல் இருப்பதிலிருந்தும், நோய் தாக்கிய பிறரிடம் இருந்தும் தான் தொடங்குகிறது இத்தொற்று. இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து வேளை தொழுவது கட்டாயக் கடமை. அந்தத் தொழுகையை நிறைவேற்றும் முன்பு கை, கால், முகங்களை கழுவி விட்டுத் தான் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மார்க்க விதி.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் (5:6) வலியுறுத்துகிறது.
இன்றைக்கு நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது கவனமின்மை தான் முதல் காரணம். இதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதின் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன”. (திருக்குர்ஆன் 30:41)
“எந்த ஒரு தீங்கும் உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகத் தான்”. (திருக்குர்ஆன் 42:30)
இந்த இரு வசனங்களும் நம்மைச்சுற்றி நிகழ்கிற பிரச்சினைகளுக்கு நாம் தான் முதல் காரணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இஸ்லாமிய மார்க்கம் எதை ‘ஹலால்’ (இது இறைவனால் அனுமதிக்கப்பட்டது) என்று வரையறுத்திக் கூறியிருக்கிறதோ, அவைகளைத் தான் நாம் உண்ணவும், குடிக்கவும் வேண்டும்.
நாம் நமது உடலுக்குள் செல்லும் உணவில் கவனமாக இருப்பதைப் போல் நமது உடலின் மேல் படிந்திருந்திருக்கும் உடைகள் தூய்மையாக இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அசுத்தங்கள் தங்கும் இடங்களில் ஒன்றாக உடைகளும் இருக்கின்றன.
ஆகவே, உடல், உடை, உணவு, உள்ளம் என இந்த நான்கையும் நாம் நன்கு முழு கவனத்துடன் பராமரித்துக் கொண்டாலே போதும், நிச்சயம் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதுமட்டுமல்ல, கூடவே சக மனிதர்களுடன் இணைந்து, இசைந்து வாழ்வதும் தான் இஸ்லாம் வலியுறுத்தும் இனிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நாம் யாருக்கும் அணுவளவும் இடையூறுகள், தொந்தரவுகள் தரக்கூடாது என்பது முக்கியம்.
நபித்தோழர் ஒருவர் தமது ஒட்டகத்தை கட்டிவைக்காமலேயே மசூதிக்குள் வந்தபோது, ‘ஏன் கட்டிவைக்கவில்லை?’ என்று கேட்ட போது ‘நான் இறைவனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று வந்தவர் சொன்னபோது, “முதலில் ஒட்டகத்தை கட்டிப் போடு, பிறகு நீ இறைவனின் மீது நம்பிக்கை வை” என்று கண்டித்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
தொற்று நோயை தடுக்க அரசு அறிவித்துள்ள முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் தடுப்பூசிகளுக்கும் இது பொருந்தும். வெறும் குருட்டு நம்பிக்கை எந்தப் பலனையும் தராது, பலநேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு. எனவே நாம் எப்போதுமே முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அது தான் ஒரு இறைவிசுவாசிக்கு அழகு.
வாருங்கள்... முன்னெச்சரிக்கையுடன் இருப்போம். முழு மனித நேயத்துடன் செயல் பட்டு நோய் தொற்றில் இருந்து இறையருளால் பாதுகாப்பு பெறுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன்படி கடலூரிலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக மசூதிகளில் கடலூர் மஞ்சக்குப்பம் மசூதியில் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
மசூதிகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் தங்களால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்தனர். முன்னதாக அவர்கள் புத்தாடை அணிந்து, தொழுகை முடித்து ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல் கடலூர் டவுன்ஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர். பின்னர் பக்ரீத் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் கோவில் அருகே ஆயங்குடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற தொழுகையில், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
ராமநத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதன்படி, விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஏராளமான ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடினர்.
இதையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. நாகர்கோவில் இளங்கடையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
வெளியூர்களில் வசிக்கும் நண்பர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக பக்ரீத் வாழ்த்து அனுப்பி மகிழ்ந்தனர். இதுபோல், திருவிதாங்கோடு, களியக்காவிளை, பூதப்பாண்டி போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. பெருநாள் தொழுகை நடைபெற்ற பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த பண்டிகை தியாகப்பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே அழைக்கப்படுகிறது.
இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த அவருக்கு, இறுதியில் இவரின் 2-வது மனைவி ஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டனர்.
இஸ்மாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராகிமுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டாா். இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராகிம், அவரது அனுமதியுடன் பலியிட துணிந்த போது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தார். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராகிமிற்கு கட்டளையிட்டார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இப்ராகிம் நபி அவர்கள் இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் அன்பு மகனையே பலியிட முற்படும்போது இறைவன் உன் மகனை பலியிட வேண்டாம் என தடுத்து அதற்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டான்.
பக்ரீத் பண்டிகையையொட்டி மன்னான் பீடி பேக்டரி மேனேஜிங் பார்ட்னர் அல்ஹாஜ் எம்.நாசர்கான் என்கிற அமான் தெரிவித்துள்ளதாவது:-
தனக்காக வாழும் மனிதன் பிறருக்காக வாழத் தொடங்கும் போது ஒளிர தொடங்குகிறான். இறைவனின் நேசத்துக்கு தகுதியானவன் ஆகிறான். அதே மனிதன் தன் முழு வாழ்வையும் இறைவனுக்காக அர்ப்பணித்து இறைவனுக்கு அடி பணிந்து துயரங்களை சகித்துக் கொண்டு இறைவனின் திருப்திக்காகவே வாழும் போது புனிதன் ஆகிறான். அப்படிப் பட்டவர்தான் இறைதூதர் இப்ராகிம் நபி (அலை) அவர்கள்.
இப்ராகிம் நபி அவர்கள் இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் அன்பு மகனையே பலியிட முற்படும்போது இறைவன் உன் மகனை பலியிட வேண்டாம் என தடுத்து அதற்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டான். அவரும் அவ்வாறே செய்தார். இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறுகிறான். பலியிடப்படும், அறுக்கப்படும் பிராணியின் இறைச்சியோ, ரத்தமோ என்னை வந்து அடைவது இல்லை. உங்களின் இறையச்சமே என்னை வந்து அடைகிறது. ஆடு ேபான்ற பிராணியை நாம் பலியிடும் போது அதாவது குர்பானி கொடுக்கும் போது நமது பொருளாசை, உலக ஆசை, பேராசை இவை அனைத்தையும் குர்பானி கொடுப்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரத்துவம் காத்து மதநல்லிணக்கத்தின்படி வாழும் சகோதர சமுதாய மக்கள் அனைவருக்கும், எங்களின் அன்பு வியாபார பெருமக்களுக்கும் எங்களின் உளம் நிறைந்த பக்ரீத் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் ெபருமகிழ்ச்சி அடைகிறேன்.
இன்ஷா அல்லா, இந்த ஆண்டும் வல்ல இறைவனின் நாட்டப்படி ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இறைவனின் விருந்தாளிகள் அனைவரும் ஹாஜிகளாக நலமுடனும் இறை அருளுடனும் வரவேண்டுமென எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக பிரார்த்தனை செய்வதோடு இந்த வாய்ப்பினை (ஹஜ் கடமை) உலக முஸ்லிம்கள் அத்துணை பேருக்கும் இறைவன் அருள்வாராக! ஆமீன்!
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர்.
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்ராகீம் நபிகள். இவர், இளமைக்காலம் தொட்டே பகுத்தறிவில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்கள். எந்த ஒரு நிகழ்வையும் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பி, அதற்கு விடை காண்பதற்கு பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
இப்ராகீம் நபிகளின் தந்தை ஆஜர் என்பவர் களிமண்ணில் கடவுள் பொம்மைகள் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தார். இதனை பிடிக்காத இப்ராகீம் நபிகள், ‘கீழே விழுந்தால் உடைந்து விடக்கூடிய, தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மண் பொம்மைகள் எப்படி உலகைக் காக்கும் கடவுளாக முடியும்’ என்று அதனை எதிர்த்தார்கள். அதனால் தந்தையை மட்டுமல்ல அந்த ஊரையே பகைத்துக் கொண்டார்கள்.
‘மண் பொம்மைகள் கடவுள் இல்லை என்றால், உண்மையான இறைவன் யார்?’ என்பதில் அவர்கள் கவனம் திசை திரும்பியது.
‘இருளிலும், வெளிச்சத்திலும் உலகை காக்கும் மகா சக்தியே இறைவனாக இருக்க முடியும். அதுவே அல்லாஹ்’ என்று தனது ஞானத்தின் மூலம் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ்வும் இப்ராகீமை நபியாக ஏற்றுக்கொண்டான்.
அல்லாஹ்வும், இப்ராகீம் நபிகளுக்கு உள்ளுணர்வின் மூலமாகவும், கனவின் மூலமாகவும் தன்னுடைய கட்டளைகளை பிறப்பித்து வந்தான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அந்த கட்டளைகள் அவர்களுக்கு சோதனையாக அமைந்ததாகத் தான் தெரியும். ஆனால் அல்லாஹ் அதன்மூலம் மிகச் சிறந்த கடமைகளை மனித இனத்திற்கு உணர்த்தினான்.
ஒருமுறை தான் கண்ட கனவின் மூலமாக அருமை மனைவி ஹாஜரா அம்மையாரையும், அருந்தவச் செல்வன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு திரும்பி வந்து விட்டார்கள். அவர்களுக்கு அது சோதனை. ஆனால் அதன் விளைவாக மக்கா என்ற சிறப்புற்ற நகரமும், ’ஜம்ஜம்’ என்ற வற்றாத ஜீவ நீர் ஊற்றும் உருவானது.
மற்றொரு முறை, குழந்தை இஸ்மாயிலை, அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுத்து பலியிடுவதாக கண்ட கனவை நிறைவேற்ற முயன்றார்கள். அப்போது அல்லாஹ் அதனைத் தடுத்து, ஒரு ஆடு அனுப்பி, அதை அறுத்து குர்பானி கொடுக்க கட்டளையிட்டான். அரேபிய மாதமான துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் இது நடந்தது.
உலக வாழ்வில் தான் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தையும் ஏன் எதற்கு என்று கேட்டவர்கள், அல்லாஹ்வின் கட்டளை என்று வந்தபோது எந்தவித ஆட்சேபனையும் இன்றி உடனே அடிபணிந்தார்கள். எனவே தான் அல்லாஹ் இப்ராகீம் நபிகளை, ‘தன் நேசத்துக்கு உரியவர்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றான்.
இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
அஸ்ரா உமர் கத்தாஃப், சென்னை.

“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்”. (திருக்குர் ஆன் 67:2)
உலக வாழ்வை ‘சோதனைக்களம்’ என்கிறது இஸ்லாம். இறைநம்பிக்கை, இறைவனுக்கு அடிபணிதல், இறைவன் கூறியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை சோதிக்கும் இடமாக உலகம் படைக்கப்பட்டுள்ளது. இதைப் பல இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்”. (திருக்குர் ஆன் 67:2)
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பெருநாளை கொண்டாட்டம் என்ற பார்வையில் இலகுவாகக் கடந்து விட இயலாது. அது, இறைவனின் கட்டளையை ஏற்று, பிரியமான மகனைப் பலி கொடுக்க துணிந்த ஒரு குடும்பத்தாரின் அர்ப்பணிப்பு மற்றும் இறை நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
இறைநம்பிக்கையின் ஆத்மார்த்தமான பொருள் என்ன? என்பதை உலகத்திற்கு உணர்த்த தந்தை, தாய் மற்றும் மகனை இறைவன் சோதனைக்கு உள்ளாக்கினான். இந்த சோதனையில் அவர்கள் பெற்ற வெற்றிகளை ஏற்றுக்கொண்டு, அந்த செயலை இறை வணக்கமாக மாற்றியதன் நிகழ்ச்சி தான் தியாகத் திருநாளாக (பக்ரீத் பண்டிகையாக) பார்க்கப்படுகிறது.
இறைவனின் தூதுவர்களில் ஒருவர் இப்ராகிம் (அலை). அவருக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்டது. இப்ராகிம் நபியின் குடும்பத்தினரைச் சோதிக்க இறைவன் விரும்பினான்.
இஸ்மாயீல் பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, இப்ராகிம் அவர்களுக்குக் கனவில் கட்டளையிட்டான் இறைவன். தன் பாசம் முழுக்க கொட்டி வளர்க்கும் மகனை இறைவன் பலியிட கூறுகிறானே! என்று கிஞ்சிற்றும் யோசிக்காமல். கண்ட கனவை மகன் இஸ்மாயீலிடம் தெரிவித்தார் இப்ராகிம் நபி.
இது இறைவனின் கட்டளை என்பதால் தன்னை பலியிட முழுமனதுடன் அனுமதி கொடுத்தார் மகன் இஸ்மாயீல். இறைவனின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்த நேரத்தில், இப்ராகிம் நபியின் இறையச்சம், இறைவனுக்கு அடிபணியும் தன்மையைக் கண்டு வியந்து இறைவன் தடுத்து நிறுத்திய சம்பவத்தை இவ்வாறு திருக்குர்ஆன் காட்சிப்படுத்துகிறது.
“பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: ‘என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக’. (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்”. (திருக்குர்ஆன் 37:102)
மனித ரத்தமோ, பிராணிகளின் ரத்தமோ இறைவன் விரும்பவில்லை. முழுமையான இறையச்சத்தை சோதிப்பதற்காக இந்த நிகழ்வை நடத்திக் காட்டினான் இறைவன்.
“(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக” (திருக்குர்ஆன் 22:37)
தங்களை இறைவனுக்காக முற்றிலும் அர்ப்பணித்த இப்ராகிம் நபி, அவரது மனைவி மற்றும் மகன் இஸ்மாயீல் நபியின் பொறுமை, இறைவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்க முன்வருதலை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ் விரும்பினான். இதனால் தான், இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையின் போது குர்பானி கொடுக்க வேண்டும் என்பதன் மூலம் தன் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினான் இறைவன்.
சோதனைக் களமான உலகில் மனிதகுல எதிரியான ஷைத்தானின் பிடியில் சிக்கிப் போகாமல் இறைவனின் பொருத்ததைப் பெற இறைநம்பிக்கை, இறைபக்தியின் நிழல்களில் நம் வாழ்வை அமைத்துக்கொண்டு வெற்றிபெறுவோம்.
- ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும்.
உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ். மனிதனை தன்னுடைய அடியானாக படைத்தது மட்டுமல்லாமல், அவனை சுற்றி சூழ்ந்த அத்தனையுமே மனிதனின் பயன்பாட்டிற்காக உருவாக்கினான்.
தனக்கு நிகழ்கின்ற நன்மை-தீமை எதுவாகிலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றது என்பதை மனிதன் நம்புவதே இறையச்சத்தின் அடையாளம். அந்த உறுதி ஏற்படும் போது மனிதன் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால், அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடியார்களில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:107).
அதேநேரத்தில் “எந்த மனிதனையும் அதிகமாக சோதிக்கமாட்டேன்” என்றும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.
“நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை”. (திருக்குர்ஆன் 6:152).
சிலருக்கு பல திசையிலிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து மீண்டுவரவும் வழி உள்ளது. இதையே, “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்” என்று திருக்குர்ஆனில் (2:153) குறிப்பிடுகின்றான்.
தனக்கு ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். அதன்பொருட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை அள்ளி வழங்க காத்திருக்கின்றான்.
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, அதற்காகவே அல்லாஹ் ‘துவா’ (பிரார்த்தனை) என்ற கவசத்தை நமக்கு வழங்கியுள்ளான். நமக்கெல்லாம் வழிகாட்டியாக வந்த நபிமார்களும் தங்கள் வாழ்வில் பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள் தான். அவற்றிலிருந்து மீள்வதற்கு துஆவையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளான்.
ஐயுபு நபி (அலை) அவர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். “யாஅல் லாஹ் நிச்சயமாக என்னை நோய் பீடித்துள்ளது அதை நீக்கி விடு. நீ கிருபையாளருக்கெல்லாம் மகா கிருபையாளன்” (திருக்குர்ஆன் 21:83) என்று துஆச் செய்தார்கள், இறையருளால் நலம் அடைந்தார்கள்.
நபி யூனுஸ் (அலை) மீன் வயிற்றில் கடும் இருட்டில் மாட்டிக் கொண்டார்கள். தப்பிப்பதற்கு வழியே இல்லை, இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. “எங்களின் இறைவா! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயோ மிகப் பரிசுத்தமானவன், என்னை மன்னித்து அருள்புரிவாயாக” (திருக்குர்ஆன் 21:87) என்று இரு கரம் ஏந்தி துஆ செய்தார்கள். இறையருளால் அவர்கள் கடற்கரையில் கொண்டு வந்து விடப்பட்டார்கள்.
எத்தனைப்பெரிய நெருக்கடிகள் இருந்தாலும், நாம் நினைத்தறியாத திசைகளிலிருந்து அல்லாஹ் உதவி செய்வான், என்ற நம்பிக்கையில் துஆ செய்தால் நிச்சயமாக வழி பிறக்கும். அது நம்பிக்கையின் உறுதித்தன்மையை பொறுத்தே அமையும்.
நோய், வறுமை, கடன், மற்றும் பிரச்சினைகள் எல்லாம் இறைவன் விதித்தபடியே நடந்தது என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை, மன அழுத்தங்களை நம்மை விட்டும் தூரமாக்கும்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும். தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலம் மனதிற்கு ஆறுதலைத் தந்து, மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும்.
நம்பிக்கையோடு காத்திருப்போம், எல்லா நிலைகளிலும் இறைவனிடம் கையேந்துவோம், ஈருலக நன்மைகள் அனைத்தும் பெற்றுக்கொள்வோம்.
“மன அழுத்தங்களை மறப்போம், மனமகிழ்ச்சியை மனதில் நிறைப்போம்”.
மு. முகமது யூசுப், உடன்குடி.

நாகூர் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சின்ன ஆண்டவர் கந்தூரி விழா கடந்த 11-ந் தேதி இரவு தொடங்கியது. தர்கா அலங்கார வாசல் முன்பு தொட்டி பந்தல் அமைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சின்ன ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். நிகழ்ச்சி டிரஸ்டிகள், தர்கா ஆதீனஸ்தர்கள் உள்பட பலர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
பக்ரீத் பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் பல்வேறு இடங்களில் 11-7-21 துல் ஹஜ் மாத பிறை தென்பட்டது. எனவே, நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத் பண்டிகை) வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.
முன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடி இறக்கப்பட்டு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் திருவிழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
அதன் பின்னர் 5-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள் ஏர்வாடி தர்கா கொடி இறக்கத்தை காண்பதற்கு குவிந்தனர். நேற்று காலை குர்ஆன் ஓதப்பட்டு நேர்ச்சைகள் வழங்கப்பட்டு திருவிழா நிகழ்ச்சி நிறைவு நடைபெற்றது.
மாலை 5.45 மணி அளவில் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் கொடி இறக்கப்பட்டு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக முடிவடைந்தது. முன்னதாக காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.