என் மலர்
இஸ்லாம்
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். காரணம் இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு அருளப்பெற்றது.
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். காரணம் இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு அருளப்பெற்றது. இதைப்பற்றி இறைவன் கூறுவதை பாருங்கள்:
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கி அருளப்பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மா தம் நோப்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில்விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.) (திருக்குர்ஆன் 2:185)
எனவே இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு தினங்களையும் நாம் கட்டாயம் கண்ணியப்படுத்த வேண்டும். முதலில் தினமும் நாம் குர்ஆனை ஓதிப்பார்க்க வேண்டும். காலை முதல் மாலை வரை கட்டாயம் உண்ணா நோன்பும் இருக்க வேண்டும். முடியாதவர்களுக்கு விதிவிலக்கும், அதற்கு பரிகாரமும் உண்டு. நம்மால் தாங்க முடியாத எந்த ஒன்றையும் அல்லாஹ் நமக்கு கடமையாக்குவதும் இல்லை. இன்னொரு இறைவசனம் இப்படிக் கூறிக்காட்டுகிறது:
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டு உள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவங்களாக ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)
இந்த நோன்பு நம்மின் மீது மட்டும் கடமையாக்கப்டவில்லை நமதுமுன்னோர்கள் மீதும் கடமையாக்கப்பட்ட ஒன்றுதான் இது என்று இவ்வசனம் தெளிவுபடுத்திக்காட்டுகிறது.
இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ரஹ்மத் எனும்இறையருள் நிறைந்த நாட்கள். எனவே இந்நாட்களில் அதிகமதிகம் இறையருளை அல்லாஹ்விடம் கேட்டு பிரார்த்தனை செய்யவேண்டும், அடுத்து பத்துநாட்கள் மஅஃபிரத் எனும் பாவ மன்னிப்பிற்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் அதிகமதிகம்நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். இறுதி பத்துநாட்கள் இத்க் எனும் நரகத்தின் விடுதலைக்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் நரக வேதனைகளை விட்டும் அதிகமதிகம் நாம் அல்லாஹ் விடம் பாதுகாப்பு தேட வேண்டும்
மவுலவி எஸ்.என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

சிறப்புமிக்க ரமலான் மாத பிறை நேற்று மாலையில் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தென்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை :
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர் ஆன் அருளப்பட்டது. ஹஜ்ஜை தவிர ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக்கொடை) ஆகிய 4 கடமைகளும் ஒரு சேர இந்த ரமலான் மாதத்தில் நிறைவேறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ரமலான் மாத பிறை நேற்று மாலையில் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் தென்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி மவுலவி முப்தி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டுள்ளார்.

அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதற்கு ஏற்ப நாம் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் என்றும் செயல்பட்டால் இறையருளால் வெற்றி நம்மை தேடிவரும்.
ஒருமுறை அண்ணல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் மிகநீண்ட நேரம் தொழுதவர்களாகவும், கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை செய்தார்கள்.
இதைக்கண்ட நபித்தோழர் ஹம்பாஹ் பின் அர்ஹம் (ரலி) அவர்கள் நபிகள் பெருமானாரை நோக்கி, “கண்மணி நாயகமே! நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். இறைவனிடம் இருகரம் ஏந்தினாலே போதுமானது. ஆனால், நீங்கள் இத்தனை சிரமம்எடுத்துக்கொள்வதேன்?” என வினவினார்கள்.
ஏறிட்டு நோக்கிய அண்ணலார், “அர்ஹமே! நான் இன்று அல்லாஹ்விடம் மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளை கேட்டேன். இரண்டை ஒப்புக்கொண்ட அல்லாஹ் ஒன்றை முற்றிலுமாக மறுத்து விட்டான்” என்றார்கள்.
“அப்படி என்ன துஆவை நீங்கள் கேட்டீர்கள்?” என்று அர்ஹம் (ரலி) அவர்கள் கேட்க, பெருமானார் (ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“யா அல்லாஹ்! என்னுடைய உம்மத்தை மற்ற நபிமார்கள் உம்மத்தைப் போல் அவர்களின் பாவச்செய்கைகளின் மிகைப்பால் ஒட்டு மொத்தமாக அழித்துவிடாதே” என்றேன். அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டுசம்மதித்தான்.
“யா அல்லாஹ்! என்னுடைய இந்த பலவீனமான கூட்டத்தினர் மீது எதிரிகளை ஒட்டுமொத்தமாக சாட்டிவிடாதே” என்றேன். அதனையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.
“மூன்றாவதாக, என்னுடைய இந்த உம்மத்தை மனமாச்சர்யங்களாலும் மனமுரண்பாடுகளாலும் தர்கித்து, ஒற்றுமை இழந்து சிதறி விட செய்யாதே!” என்றேன். அல்லாஹ் அந்த கோரிக்கையை மட்டும் ஏற்க மறுத்து விட்டான். அதனால் தான் நான் மனம் வேதனையுற்றவனாக என் உம்மத்தின் எதிர்கால நிலையை எண்ணி நிலை குலைந்துள்ளேன்” என்றார்கள்.
ஒற்றுமை என்பது உணர்வுப்பூர்வமாக ஒவ்வொரு தனிப்பட்டவரும் தம் விருப்பு வெறுப்புகளை விலக்கி, விட்டுக்கொடுத்து உருவாக்க வேண்டிய ஒரு பாசப் பிணைப்பு. அதனால் தான் அருள்மறை அல்லாஹ்வின் கட்டளையை இப்படிச் சொல்லிக்கொடுக் கின்றது.
“நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம்”. (திருக்குர்ஆன் 3:103)
வேற்றுமைகளால் வீழ்ந்து விட்ட பல சாம்ராஜ்யங்கள் பின்னர் ஒன்று பட்ட எழுச்சியினால் மீண்டும் உயிர்பெற்ற இஸ்லாமிய சரித்திர வரலாறுகள் எத்தனையோ நமக்குபாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன.
உஹது போர் உச்சகட்ட நேரம் கிட்டத்தட்ட வெற்றிக்கனியைப் பறித்தாகிவிட்டது. கணவாயின் பிரிவில் காவலர்களாய் நின்ற 70 வீரர்களுக்குள்ளே சலசலப்பு. போர் முடிந்து விட்டது யுத்த களத்தில் உள்ள பொருட்களைச் சேர்ப்போம் என்று ஒரு பிரிவினர் கூறினார்கள். நபி அவர்களிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை நாம் இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது என்று இன்னொரு பிரிவினர் கூறினர். இருப்பினும் பலர் நபியின் உத்தரவை மறந்து ஓடிச்சென்றனர். கணவாயில் பெரும்வழியைக் கண்ட எதிரிப் படையினர் மீண்டும் வந்து போர்வீரர்களை பின் புறத்திலிருந்து தாக்கினர். வெற்றியின் பாதை மாற்றப்பட்டுவிட்டது. விளைவு அண்ணலார் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். அருமை சஹாபா ஹம்ஸா (ரலி) அவர்களின் உடல் சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்டது. ஒரு சின்ன கருத்து வேற்றுமையால் எத்தனைப் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருந்தது.
காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் சிறந்த தளபதி. பல போர்களில் தளபதியாக இருந்து பல நாடுகளை வென்றெடுத்தவர்கள். அவர் போருக்குச் சென்றால் வெற்றிக்கனியை நிச்சயமாக பறித்து வருவார் என்ற எண்ணம் வீரர்கள் மத்தியில் பிரபலமானது.
அந்த எண்ணம் அல்லாஹ்வை மறந்து காலித் பின் வலீத் (ரலி) மீது நம்பிக்கையை அதிகரித்து விடும் ஆபத்தை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், ஒரு கடுமையான போரின் மத்தியில் தளபதிக்கு ஓலை அனுப்புகிறார்கள்.
“இந்த ஆணை உங்கள் கையில் கிடைக்கும் போது உங்கள் தளபதி பொறுப்பை அபூ உபைதா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் படையில் ஒரு சிப்பாயாக நீங்கள் போரில் கலந்து கொள்ளவேண்டும்”.
வீரர்களின் நம்பிக்கை படைத்தவனிடமிருந்து படைப்பினங்கள் மீது சென்று விடலாகாது. வெற்றியைத்தருவது அல்லாஹ் மட்டுமே என்ற நம்பிக்கை தான் அவர்களிடம் மேலோங்க வேண்டும். போரில் தோல்வி கிடைக்கலாம், தவறில்லை. ஆனால் நம்பிக்கையில் சோரம் போகலாகாது என்பதை வலியுறுத்தவே அந்த ஆணையை அனுப்பினார் உமர் (ரலி) அவர்கள்.
சிப்பாய்கள் இரு பிரிவினராக சிதறத் தொடங்கினர். சிலர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அணுகி, “எப்படிப்பட்ட வீரர் நீங்கள்? அபூ உபைதாவின் கீழ் சிப்பாயாக செயலாற்றுவதா? வேண்டாம். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். கலீஃபாவின் ஆணையை புறக்கணியுங்கள். நாம் போரில் வெற்றிபெற்றால் கலீஃபா மனசாந்தி பெறுவார்” என்றார்கள்.
காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், “இது கலீஃபாவின் ஆணை. காரணம் இல்லாமல் இருக்க முடியாது. என்னிடம் தர்கித்து படையை பிளவுபடுத்த வேண்டாம். நாம் பலவீனப்பட்டு விடுவோம். நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். அபூ உபைதா (ரலி) அவர்களே இனிமேல் நம்படையின் தளபதி” என்று மிக தீர்க்கமாக சொன்னார் காலித் பின்வலீத் (ரலி).
போர் தொடர்ந்தது காலித் பின் காலித் (ரலி) சிப்பாயாய் போர் புரிந்தார்கள். அன்றைய தினம் படை வீரர்கள் பிளவுபடாமல் ஒன்றிணைத்ததால் வெற்றிக்கனியை மிக எளிதாக பெற்றார்கள்.
நான் தான் பெரியவன் என்று கலீஃபாவின் கட்டளையை மறுத்திருந்தால், இன்று வரலாறு தோல்வியை பதிவு செய்து இருக்கும். வரலாற்றில் கறை படிந்திருக்கும்.
அல்லாஹ் சொல்கிறான்: “அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர் களுடன் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 8:46)
ஆனால் இன்று உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமையின்மையால் மக்கள் தொகையில் அதிகம் இருந்தும் சிதறி சின்னாபின்னமாகி இழப்புகளை சந்தித்து பலவீனப்பட்டுள்ளோம்.
சிங்கத்தை விரட்டிய மாட்டு மந்தையைப் போல், வலையில் பிடிபட்டும் ஒன்றாய் பறந்து வேடனை ஏமாற்றிய புறாக் கூட்டத்தைப் போல நாம் ஒன்று பட்டால் மட்டுமே உயர முடியும் என்பது காலத்தின் கட்டாயம். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதற்கு ஏற்ப நாம் ஒற்றுமையுடனும், பொறுமையுடனும் என்றும் செயல்பட்டால் இறையருளால் வெற்றி நம்மை தேடிவரும்.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த நம்பிக்கைகளில் ஒன்றான பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது குறித்த தகவல்களை காண்போம்.
உண்மையான இறைநம்பிக்கை என்பது ஒரு இறைநம்பிக்கையாளர் பொதுமக்களுக்கு எள்முனை அளவு கூட தொல்லைகள் தரக்கூடாது.
அந்த தொல்லைகள் அவரின் கரங்களாலோ, அவரின் கருத்துக்களாலோ, அவரின் நடவடிக்கைகளாலோ, அவரின் உத்தரவுகளாலோ எந்தவிதத்திலும் வெளிப்படக்கூடாது.
மனதால் கூட அவர் பொதுமக் களுக்கு தொல்லை கொடுப்பதை கனவிலும் நினைக்கக்கூடாது. இவ்வாறு நடப்பதும் இறைநம்பிக்கையின் உடல்சார்ந்த ஒரு பகுதியாக இஸ்லாம் தேர்வு செய்கிறது. அவ்வாறு நடப்பவரே உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆவார்.
‘உண்மையான ஒரு முஸ்லிம் யாரெனில் அவரின் நாவின் தொல்லையிலிருந்தும், அவரின் கரத்தின் தீங்கிலிருந்தும் பிற முஸ்லிம்கள் அமைதி பெறுபவர்களே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்).
‘உண்மையான ஒரு இறைநம்பிக்கையாளர் யாரென்றால் அவரிடமிருந்து பொதுமக்கள் தங்களின் உடைமைகள் விஷயத்திலும், தங்களின் உயிர்கள் விஷயத்திலும் அபயம் பெறுபவர்களே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: பளாளா பின் உபைத் (ரலி), நூல்: இப்னுமாஜா)
‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, ‘எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றுள்ளனரோ அவரின் செயலே சிறந்தது’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)
பொதுமக்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது இறைநம்பிக்கையான காரியம் மட்டுமல்ல. அது நன்மையான காரியமாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு சிந்தனையை அபூதர் (ரலி) அவர்கள் வரலாற்றில் இவ்வாறு பதிவு செய்கிறார்கள்:
‘அபூதர் (ரலி) கூறியதாவது: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, நற்செயல்களில் சிலவற்றைக் கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் நான் என்ன செய்வது? என தாங்கள் கூறுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள். ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் ஒரு நல்லறம்தான்’ என பதில் கூறினார்கள்’. (நூல்: முஸ்லிம்)
ஒருவரின் வளர்ச்சிக்கும், அவரின் எழுச்சிக்கும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர, அவரின் அழிவிற்கும், அவருக்கு நேரப் போகும் தீங்கிற்கும் பிரார்த்திக்கக் கூடாது. நம்மால் ஒருவர் வாழவேண்டும்; நம்மால் ஒருவர் அழியக்கூடாது; நம்மால் ஒருவருக்கு தீங்கு நேர்ந்து விடக்கூடாது. இந்த விஷ யத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். பின்வரும் ஒரு நிகழ்வு மிகப்பெரும் படிப்பினையாக அமைகிறது.
‘துபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும், அவர்களின் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதரே, எங்கள் ‘தவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். எனவே, அவர்களுக்கு தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்’ என்று வேண்டிக் கொண்டனர். அப்போது, ‘தவ்ஸ் குலத்தார் அழியட்டும்’ என்று கூறப்பட்டது. உடனே நபியவர்கள், ‘இறைவா, தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக, அவர்களை நேரான மார்க்கத்தின் பக்கம் கொண்டு வருவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
பொதுமக்களுக்கு தொல்லை தரும் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு தரக்கூடாது. பாதசாரிகளுக்கு தொந்தரவு தரக்கூடாது. மருத்துவ மனைகள் போன்ற இடங்களில் நோய்க்கு நிவாரணம் தேடிவரும் நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும் கூச்சல், குழப்பம் போட்டு தொல்லை தரக்கூடாது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் சாலைகளில் வண்டியின் ஹாரனை அதிகமாக ஒலி எழுப்பி, சாலையில் கடப்போருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கக் கூடாது. காற்று, ஒலி, நீர், நிலம், ஆகாயம் இவற்றை மாசுபடுத்தி பொதுமக்களின் நல்வாழ்வை சீரழித்துவிடக்கூடாது.
இது குறித்த நபி மொழி வருமாறு:-
‘நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக்கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள். அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து அமரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்.
மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள் ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் தான் அதன் உரிமை ஆகும்’ என இவ்வாறு பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி)
ஏதேனும் ஒன்றை கூறி ஒருவருக்கு நோவினை தருவது பாவமான காரியமாகும். இதிலிருந்து தவிர்ந்து நடக்க முயலவேண்டும் அல்லது கேட்டில் விழும் சூழல் ஏற்படும்.
‘இறைநம்பிக்கை கொண்ட ஆண் களையும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்’. (திருக்குர்ஆன் 33:58)
நோவினை தருவது, தொல்லை கொடுப்பது, தீங்கு விளைவிப்பது, ஒருவரின் மனதை புண்படுத்துவது யாவுமே இறைநம்பிக்கைக்கு புறம்பான செயல் களாகும். அதுமட்டுமல்ல, இவை நரகத்தின் படுகுழியில் தள்ளும் மோசமான காரியங்களாகும்.
‘ஒருமனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண் அவளின் அதிகமான தொழுகைகள், அதிகமான நோன்புகள், அதிகமான தானதர்மங்கள் இவற்றைக்கொண்டு நினைவுபடுத்தப்படுகிறாள். எனினும், அவள் தமது அண்டை வீட்டாருக்கு தமது நாவினால் தொல்லை தருகிறாள்’ என்று முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவள் நரகவாதி’ என்றார்கள். மேலும் அவர், அல்லாஹ்வின் தூதரே! இந்தப்பெண் அவளின் குறைவான தொழுகைகள், குறைவான நோன்புகள், குறைவான தானதர்மங்கள் கொண்டு அவள் பேசப்படுகிறாள். எனினும், அவர் தமது நாவால் தமது அண்டை வீட்டாருக்கு நோவினை தருவதில்லை’ என்று முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவள் சொர்க்கவாசி’ என்று விளக்கமளிப்பார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)
பெரும்பாலும் பொதுமக்களுக்கு தொல்லை கிடைப்பது மனிதனின் நாவினால் ஏற்படுகிறது. சில வேளை அவனது கரத்தாலும், அவனது இன்னும் பிற செயல்களாலும் ஏற்படுகிறது. எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஈடுபடுவோர் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்கமுடியாது. உண்மையான இறைநம்பிக்கையாளர்களாகவும் முடியாது.
நமது இறைநம்பிக்கை பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதில் அமைந்துள்ளது.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

காற்று, நீர் மாசுபடுவதால் காலரா, அம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவுகின்றன என்பது நாம் அறிந்த செய்தி. நோய் மூலம் ஏற்படும் ஆபத்தைவிட, நோய் தாக்கிவிடுமோ என்ற பீதியில் ஏற்படும் ஆபத்துதான் பேராபத்தாகும்.
காற்று, நீர் மாசுபடுவதால் காலரா, அம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவுகின்றன என்பது நாம் அறிந்த செய்தி. நோய் மூலம் ஏற்படும் ஆபத்தைவிட, நோய் தாக்கிவிடுமோ என்ற பீதியில் ஏற்படும் ஆபத்துதான் பேராபத்தாகும். வரலாறு நெடுகிலும் தொற்று நோய்கள் புதுப்புது பெயர்களில் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது.
ஹிஜ்ரி 18-ம் ஆண்டு சிரிய நாட்டில் ஏற்பட்ட ‘அமவாஸ்’ என்ற கொள்ளை நோயில் 30 ஆயிரம் பேர் இறந்தனர். அமவாஸ் என்பது பைத்துல் முகத்தஸுக்கும் ரம்லாவுகும் இடையே உள்ள ஒரு கிராமத்தின் பெயராகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காசநோய் பெரும் கொள்ளை நோயாக இருந்தது. 2002-ம் ஆண்டு ‘சார்ஸ்’ நோய் உலகெங்கும் பரவி பெரும் பீதியைக் கிளப்பியது. 2012-ம் ஆண்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் ‘மெர்ஸ்’ எனும் கொள்ளை நோயால் பலர் பாதிக்கப்பட்டனர்.
ஆக ஏதோ ஒரு பெயரில் கொள்ளை நோய்கள் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கின்றது. நாம்தான் அதற்குப் புதுப்புது பெயர்களைச் சூட்டி கிலி ஏற்படுத்துகின்றோம். கொள்ளை நோய் பரவினால் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நட வடிக்கை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?
உமர் (ரலி) அவர்கள் மக்களின் நிலையை ஆராய்வதற்காக சிரியா நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்ஃக் எனும் இடத்தை அடைந்தபோது மாகாணப் படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர் களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து சிரிய நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “ஆரம்பகால முஹாஜிர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்” என்று சொல்ல, அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். “சிரியா நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ள காரணத்தால் அங்கு போகலாமா? அல்லது மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா?” என்று ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அவர்களில் சிலர், “நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லை” என்று சொன்னார்கள். வேறு சிலர், “உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை” என்று சொன்னார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, “மதீனாவாசி களான அன்சாரிகளை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறு அழைத்து வரப்பட்டது. அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்கள் வழி யிலேயே சென்று அவர்களைப் போன்ற கருத்து வேறுபாடு கொண்டார்கள்.
அப்போதும் உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டுப் பிறகு, “மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷிப் பெரியவர்களில் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவ்வாறே அழைத்து வரப்பட்டது.
அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் அனைவரும், “மக்களுடன் நீங்கள் திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளை நோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்” என்றனர்.
ஆகவே உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே, “நான் காலையில் என் வாகனத்தில் மதீனா புறப்படவிருக்கின்றேன். நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.
அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா ஊர் திரும்புகின்றீர்?” என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், “அபூஉபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். ஆம், நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப் படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகப் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக அவ்வூரைவிட்டு வெளியேறாதீர்கள்” என்று சொல்ல நான் கேட்டேன் என்று சொன்னார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள், (தமது முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
கொள்ளை நோய் பரவுவதைத் தடுப்பதற்காக இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான். அதே சமயம் இஸ்லாம் மனிதர்களிடையே உருவாக்க விரும்பும் தூய்மை, சுத்தம், ஒழுக்க விழுமங்கள், நல்ல உணவு முறைகள், ஆரோக்கியகரமான முன்னேற்பாடுகள், மன நிம்மதி தரும் வணக்க வழிபாடுகள் ஆகிய அனைத்தும் மனிதர்களுடைய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பலவிதமான நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு ‘உளு’ எனும் அங்கசுத்தி, பல்வேறு ரூபங்களில் உதவிகரமாக அமைகிறது என்பதையே இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். கொள்ளை நோய் பரவாமல் தடுக்க இன்றைய மருத்துவ உலகம் அனைத்துக்கும் முதலாவதாக தூய்மையையே பரிந்துரை செய்கிறது. அதுவும் தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதை வலியுறுத்துகிறது. தண்ணீரால் உறுப்புகளைச் சுத்தம் செய்வதையே இஸ்லாம் ‘உளு’ என்ற பெயரில் அழைக்கிறது.
அங்க சுத்தி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்க விதிமுறைகளை இஸ்லாம் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளது. அவை இன்றைய சூழலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்.
1) ஒவ்வொரு முறை ‘உளு’ செய்யும்போதும் பல் துலக்க வேண்டும்.
2) தொடக்கத்தில் மணிக்கட்டுவரை உள்ள பகுதிகளை மூன்று முறை கழுவ வேண்டும்.
3) மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.
4) மூன்று முறை மூக்கிற்கு தண்ணீர் செலுத்துதல், வெளியேற்றுதல் வேண்டும்.
5) தாடியைக் கோதிக் கழுவ வேண்டும்.
6) விரல்களையும் கோதிக் கழுவ வேண்டும்.
7) ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை கழுவுதல் வேண்டும்.
8) உறுப்புகளை அழுத்தித் தேய்த்துக் கழுவுதல் வேண்டும்.
9) முகம், கை கால்களை நீட்டிக் கழுவ வேண்டும்.
10) தண்ணீரைக் குறைவாகச் செலவு செய்ய வேண்டும்.
கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தச் செய்முறையையே வலியுறுத்துகின்றன. ஒரு முஸ்லிம் எப்போதும் அங்கசுத்தி உடையவனாக இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதையும் மறக்க வேண்டாம்.
ஓர் இடத்தில் தொற்று நோய் பரவிவிட்டால் அது வேறோரு இடத்திற்குப் பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தானே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுதானே புத்திசாலித்தனம்.
தொற்றுநோய் இருப்பவர் மற்றவர்களுடன் தங்குதல் கூடாது. அவ்வாறு தங்குவதைத் தடை செய்யவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “நோயுற்ற மனிதரை ஆரோக்கியமானவருக்குப் பக்கத்தில் கொண்டு வரவேண்டாம்”. (புகாரி, முஸ்லிம்)
“நோயுற்ற கால்நடைகள் நோயற்ற கால்நடை களுக்கு அருகே சென்று தண்ணீர் குடிக்க வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” (புகாரி) என்ற நபிமொழியையும் இத்துடன் இணைத்துப் படிக்க வேண்டும்.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான ‘புனித கஅபாவை வலம் வருவோம், இறையருள் பெறுவோம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.
புனித இறையில்லமான கஅபாவை வலம் வருவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக உள்ளது.
புனித ஹஜ், புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும்போது அதன் ஆரம்ப நிலையான கடமை புனித கஅபாவை ஏழு தடவை வலம் வருவது ஆகும். இது அரபி மொழியில் ‘தவாப்’ என்று அழைக்கப்படுகிறது.
புனித ஹஜ் பயணமும், புனித உம்ரா பயணமும் இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த அங்கங்களாக இருந்தும், அவற்றில் புனித கஅபாவை வலம் வருவதும் ஒரு வணக்கமாக இருந்தும், தனியொரு அம்சமாக இங்கே குறிப்பிடப்படுவதற்குரிய காரணம் யாதெனில் அதனுள் அடங்கியுள்ள அற்புதமான, பிரத்தியேகமான தனித்தன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
உலகில் எழுப்பப்பட்ட முதல் இறையில்லம் கஅபா தான். அந்த கஅபாவை மட்டுமே சுற்றிவர இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதைத்தவிர வேறெந்த இறையில்லங்களையும், கட்டிடங்களையும், கல்லறை களையும், மரங்களையும் சுற்றிவர மார்க்கத்தில் அனுமதி இல்லை.
கஅபா எனும் புனித ஆலயம் எழுப்பப்பட்டதற்கு அடிப்படையான மூன்று முத்தான காரணங்கள் உண்டு. 1) அதை வலம் வருதல், 2) அதில் தங்கி (இஃதிகாப்) இருத்தல், 3) அதில் தொழுகையை நிலை நிறுத்துதல். இத்தகைய காரணிகளை இறைவன் இவ்வாறு திருக்குர்ஆனில் விவரிக்கின்றான்:
‘(இதையும் எண்ணிப் பாருங்கள்; ‘கஅபா எனும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும், இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராகீம் நின்ற இடத்தை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்’ (என்றும் நாம் சொன்னோம்). ‘இன்னும் என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஉ, சுஜூது (தொழுகை) செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராகீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்’. (திருக்குர்ஆன் 2:125)
மற்றொரு வசனத்தில்:
‘நாம் இப்ராகீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து ‘நீர் எனக்கு எவரையும் இணை வைக்காதீர்; எனது இந்த ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் தொழுவோருக்கும் அதைத் தூய்மையாக வைப்பீராக’ என்று கூறியதை (நபியே! நினைவு கூறுவீராக!)’ (திருக்குர்ஆன் 22:26)
வலம் வரும் முறை
கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் தென்கிழக்கு மூலையில் ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கருங்கல் பதிக்கப்பட்டிருக்கும். அந்தக்கல் அவரின் வலப்புறம் இருக்கும் வண்ணம் கஅபாவை முன்னோக்கியவாறு அவரது வலது பாகமாக நகர்ந்து வலம் வரவேண்டும். இவ்வாறு அந்தக் கல் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஒரு சுற்று முடிந்து விடுகிறது. இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். இந்த ஏழு சுற்றுக்கள் நிறைவானதுதான் ஒரு ‘தவாப்’ என்று கூறப்படும்.
‘எவர் கஅபாவை ஏழு முறை சுற்றி வலம் வந்து, மகாமே இப்ராகீமில் (இப்ராகீம் (அலை) நின்ற இடம்) இரண்டு ரகஅத்கள் தொழுதாரோ அவருக்கு ஒரு அடிமையை விடுதலை செய்தது போன்ற நன்மை கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது)
‘எவர் கஅபாவை சுற்றி வலம் வர, ஒரு காலை முன் வைத்து, அடுத்த காலை உயர்த்துவதற்குள் அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன; பத்து பாவங்கள் அழிக்கப்படுகின்றன; பத்து அந்தஸ்துகள் உயர்வாக வழங்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மது, திர்மிதி)
கஅபாவை வலம் வருவது தொழுகையில் ஈடு படுவதற்கு நிகரானது. தொழுகை விஷயத்தில் பேணவேண்டிய உடல் சுத்தம், உடை சுத்தம் போன்ற ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். எனினும், தொழுகையில் ஈடுபடும் போது பேசக்கூடாது. ஆனால், வலம் வரும்போது பேச அனுமதியுண்டு. அதில் நல்லதையே பேசி வர வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி வருவதை பார்க்க முடிகிறது:
‘கஅபாவை வலம் வருவதெல்லாம் தொழுகை போன்றதுதான். எனவே நீங்கள் வலம் வந்தால், பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: நஸயீ).
மற்றொரு நபிமொழியில் வருவதாவது:
‘கஅபாவை சுற்றி வலம் வருவது தொழுகையைப் போன்றதாகும். எனினும், வலம் வரும்போது நீங்கள் பேசிக் கொள்கிறீர்கள். எனவே, எவர் அதில் பேசுவாரோ அவர் அதில் நல்லதைத் தவிர பேச வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)
‘கஅபாவைச் சுற்றியும், ஸபா-மர்வா இடையேயும் (தவாப்) வலம் வருதல் ஏற்படுத்தப்பட்டதெல்லாம் இறைவனை நினைவு கூர்வதை நிலை நிறுத்துவதற்காகத்தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: சுயூதி)
வலம் வருதல் (தவாப்) பல வகைகள் உண்டு. அவை:
1) உம்ராவுக்கான வலம் வருதல் ‘தவாபுல் உம்ரா’ ஆகும்,
2) உம்ராவையும், ஹஜ்ஜையும் ஹஜ் காலங்களில் நிறைவேற்றும் போது, மக்கா வந்து இறங்கியதும் நேராக புனித கஅபாவுக்கு வந்து, தமது வருகைக்கான காணிக்கையாக கஅபாவை வலம் வரவேண்டும். இதற்கு ‘தவாபுல் குதூம்’ என்று பெயர்.
3) ஹஜ்ஜூக்குரிய கடமையான வலம் வருதல் ஆகும். இதை நிறைவேற்றாமல் போனால் ஹஜ் எனும் கடமை நிறைவேறாது. இது ஹஜ்ஜூடைய கிரியைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு ‘தவாபுல் இபாளா’ என்று பெயர்.
4) ஹஜ் கடமையை முழுமையாக நிறைவேற்றிய பின்பு, மக்காவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முன்பு நேராக கஅபா சென்று அதைச் சுற்றி வலம் வரவேண்டும். கஅபாவிற்கு பிரியாவிடை கொடுப்பதற்காக நிறைவேற்றும் இந்த வலம் வருதலுக்கு ‘தவாபுல் விதாஆ’ என்று பெயர்.
5) ஒருவர் ஏதேனும் நேர்ச்சை செய்து, அது நிறைவேறும்பட்சத்தில், கஅபாவை வலம் வரவேண்டும் என மனதில் உறுதிபூண்டிருந்தார். அவரின் தேவை நிறைவேறியதும் புனித கஅபாவை வலம் வரவேண்டும். அதற்கு ‘தவாபுன் நத்ர்’ என்று பெயர்.
6) மேலும், உபரியான முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் புனித கஅபாவை வலம் வரலாம். இதற்கு ‘தவாபுத் ததவ்வுயி’ என்று பெயர்.
மேற்கூறப்பட்ட இரண்டு வலம் வருதலும் ஹஜ், மற்றும் உம்ரா அல்லாத காலங்களிலும் நிறைவேற்றலாம். இவ்விரண்டையும் நிறைவேற்றுவதற்கு ‘இஹ்ராம்’ எனும் தைக்கப்படாத இரு உடைகளை அணிய வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறான ஆறு வகையான வலம் வருதல் உண்டு. இத்தகைய வலம் வருதல் சிறப்பு வேறு எங்கும் காண முடியாது. வேறு எங்கும் நிறைவேற்றவும் முடியாது.
வலம் வரும் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரியாக உள்ளார்கள்.
‘நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவதாக வலம் வரும்போது ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கருப்புக் கல்லை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றுகளில் தோள்களை குலுக்கி வேகமாக ஓடுவார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
‘நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்; மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
கஅபாவை சுற்றி வலம் வரமுடியாதவர், நடக்க முடியாதவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து, ஒருவரின் உதவியுடன் நிறைவேற்றலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.
‘நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கஅபாவை வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் கருப்புக் கல்லைத் தொட்டார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)
உலக அழிவு நாள் ஏற்படும் வரைக்கும் புனித கஅபாவில் வலம் வருதல் நடந்து கொண்டேதான் இருக்கும். கஅபாவில் வலம் வருவது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் இன்றியமையாத செயல் ஆகும். அது ஒரு இறைநம்பிக்கையின் அடையாளமாகவும், நினைவுச் சின்னமாகவும் காட்சித் தருகிறது.
‘ஒவ்வொரு நாளும் புனித கஅபாவை ஹஜ் செய்பவர்களின் மீது இறைவன் தமது 120 நற்கிருபைகளை இறக்கி வைக்கிறான். அவற்றில் 60-ஐ வலம் வருபவர்களுக்கும், 40-ஐ அதில் தொழுபவர்களுக்கும், 20-ஐ அதைக் கண்கூடாக காண்பவர்களுக்கும் கிடைக்கிறது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவது’ குறித்த தகவல்களை காண்போம்.
குற்றம் இல்லாத உலகை உருவாக்க இஸ்லாம் ஆசைப்படுகிறது. குற்றவாளிகள் இல்லாத உலக சமூகத்தை கட்டியமைக்க இஸ்லாம் பாடுபடுகிறது. குற்றமும், இறைநம்பிக்கையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றுபடாது. எனவேதான் குற்றம்புரியும் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைநம்பிக்கை தற்காலிகமாக கழன்று விடுகிறது.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வாறு தெரிவித்துள்ளார்:
‘ஒரு அடியான் விபச்சாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபச்சாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு திருடமாட்டான். அவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு கொலை செய்யவும் மாட்டான்’.
‘இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்’ என இக்ரிமா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ‘இவ்வாறு தான்’ என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காட்டிவிட்டு, அவற்றைப் பிரித்தும் வெளியிலெடுத்தார்கள். ‘அவன் மனம் திருந்தி, பாவமன்னிப்புக் கோரி மீண்டால், அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது’ என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோர்த்துக் காட்டினார்கள்.’ (நூல்: புகாரி)
குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவதும் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை உடல்ரீதியாக வழங்கப்படுவதால் இஸ்லாம் அதை இறைநம்பிக்கையின் உடல்சார்ந்த வகையில் சேர்த்து, அதை நிலைநிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறது.
குற்றவாளிகளுக்கு அவர்கள் ஈடுபடும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளை வழங்கும்படி இஸ்லாம் சட்டப்பூர்வமான சில தீர்வுகளை முன் வைக்கிறது. அதற்கு ‘இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டங்கள்’ என்று கூறப்படுகிறது. இவை இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைக்கு ‘ஹத்’ என்று பொருள். ‘ஹத்’ என்றால் ‘தடுப்பு’, ‘எல்லை’ என்று பொருள்படும். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை, குற்றவாளி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விட்டும் அவனைத் தடுக்கிறது. அந்தத் தண்டனையே இறுதி எல்லையாகவும் அமைந்து விடுகிறது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் என்பது சமூகத்தை சீர்திருத்தம் செய்வதற்காக நிறைவேற்றப்படுகிறது. எனவேதான் குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றும்படி இஸ்லாம் கூறுகிறது.
அதனால் மற்றவர்கள் குற்றம்புரிய அச்சப்படுவார்கள். நாம் செய்தால் நமக்கும் இதுபோன்ற தண்டனை கிடைக்கும் எனும் அச்சஉணர்வு அவர்களை குற்றம் செய்வதை விட்டும் தடுத்து பாதுகாக்கிறது. ஏன் பிற குற்றவாளிக்கே அவன் பாவங்களில் ஈடுபடுவதை விட்டும் பாதுகாக்கிறது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைமுறை வெறும் தண்டனையாக மட்டும் அமையாமல் குற்றவாளி திருந்துவதற்கு பாடமாகவும், மற்றவர் குற்றச்செயலில் ஈடுபடாமலிருப்பதற்கு எச்சரிக்கையாகவும், தனிமனித உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் கேடயமாகவும் அமைகிறது. அதன் தண்டனை விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மதுவும், அதன் தண்டனையும்
குடி குடியைக் கெடுக்கும். இத்தகைய குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் சில சட்டங்களை வகுத்து, அதன்படி தண்டனையும் வழங்குகிறது.
‘மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும், காலணியாலும் மது அருந்தியவனை அடித்திடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) (தமது ஆட்சிக்காலத்தில்) நாற்பது கசையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
‘உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தின் இறுதியில் (குடிகாரனுக்கு) நாற்பது கசையடிகள் வழங்கிடுமாறு உத்தரவிட்டார்கள். (மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்து கொண்டு, கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரனுக்கு) அன்னார் எண்பது கசையடிகள் வழங்கினார்கள்’. (அறிவிப்பாளர்: சாயிப்பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி)
குடி எனும் செயலைத்தான் வெறுக்க வேண்டுமே தவிர குடிகாரனை வெறுக்கக்கூடாது; அவனை சபிக்கக்கூடாது; அவனை கேவலப்படுத்தவும் கூடாது.
திருட்டுக் குற்றம்
திருட்டுக்குற்றத்திற்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகள் கூறுவதாவது:
‘திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, இறைவனிடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். இறைவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.’ (திருக்குர்ஆன் 5:38)
‘கால் தீனார் (தங்கக்காசு) மேலும் இதை விட அதிகமானதை திருடுபவனின் கரம் வெட்டப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல் கேடயம், அல்லது தோல் கவசத்தின் விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர திருடனின் கை துண்டிக்கப்படவில்லை.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாம் வருவதற்கு முன்பே திருட்டுக் குற்றத்திற்கு கரங்களை வெட்டும் கடுமையான தண்டனை அளிப்பது அறியாமைக்காலத்திலேயே இருந்து வருகிறது.
விபச்சார குற்றம்
பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் திருமணமாகாதவராக இருந்தால் அவருக்கு 100 சாட்டையடி வழங்கிட வேண்டும். அவர்கள் திருமணமானவராக இருந்தால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கிடும்படி இஸ்லாமிய குற்றவியல் சட்டம் கூறுகிறது. இருவரும் விரும்பி செய்யும் விபச்சாரத்தில், இருவருக்கும் மேற்படி தண்டனை முறைதான் தீர்வாக அமையும்.
‘விபச்சாரம் செய்யும் பெண்ணையும், ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். நீங்கள் இறைவனையும், இறுதிநாளையும் நம்பினால், இறைவனின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.’ (திருக்குர்ஆன் 24:2)
அதே நேரத்தில் இந்தக் குற்றத்தை நிரூபிக்க சாட்சிகள் அவசியம் தேவை.
‘அவதூறும், இஸ்லாமிய தண்டனையும்’
பெரும்பாலும் அவதூறு பரப்புவது பெண்களின் கற்பு சம்பந்தமாகத்தான் இருக்கும். அவர்கள் மீது அவதூறு பரப்புவோர் அதற்கான நான்கு சாட்சியங்களை நிரூபித்துக் காட்டவேண்டும். அவ்வாறு நிரூபிக்காத சமயத்தில் அவனுக்கு 80 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கவேண்டும்.
‘ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழிசுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம்புரிபவர்கள். இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. இறைவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.’ (திருக்குர்ஆன் 24:4,5)
வன்முறை
‘குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியதாகும்’ என்று திருக்குர்ஆன் (2:191) குறிப்பிடுகிறது.
கொலையால் ஒரு சில உயிர்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் வன்முறையாலும், குழப்பத்தாலும் உலகமே பற்றி எரியும். பல உயிர்கள் பறிபோகும். இதனால்தான் இதன் தண்டனையும் கடுமையாக இருக்கும் என இஸ்லாம் எச்சரிக்கிறது.
‘இறைவனுடனும், அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான். அவர்கள் கொல்லப்பட வேண்டும், அல்லது தூக்கிலிடப்பட வேண்டும், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்பட வேண்டும், அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.’ (திருக்குர்ஆன் 5:33)
‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரம் ஆகும். இறைவன் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் ஆவர்.’ (திருக்குர்ஆன் 5:45)
அனைத்து மதங்களிலும் கடுமையான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை களை வழங்கியுள்ளது. பழிக்குப் பழி வாங்குவது சாதாரண மனிதப் பண்பு. மன்னிப்பது மகத்தான மனித நேயப் பண்பு. குற்றங்கள் கொடூரமாக அமையும் போது அதற்கான தண்டனைகளும் கொடூரமாக அமைகிறது.
தண்டனைமுறை குற்றவாளியை தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்படவில்லை. பிற மனிதர்களின் வாழ்வு மனஅமைதியுடன், அபயத்துடனும் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதுவும் இறைவனின் ஓர் அருட்கொடை தான். இதுவும் இறைவனின் ஒரு கிருபைதான். ஒருவனின் நலனுக்காக பிறமக்களின் நலன்களை புறந்தள்ளி விட முடியாது.

நாம் வீணடிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீருக்கும், ஒவ்வொரு துகள் உணவுக்கும், ஒவ்வொரு மின் திறனுக்கும் இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இவற்றை நாம் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம்.
ஏக இறைவன் நம்மை படைத்ததோடு மட்டும் விட்டுவிடவில்லை. மாறாக எண்ணற்ற அருட்கொடைகளையும் வழங்கியுள்ளான். மனிதனது அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை மற்றும் உறைவிடம் ஆகியவையே அருட்கொடைகள் என்றுதான் நம்மில் பலர் எண்ணலாம். சிலபோது இது சரியான கருத்தாகவும் இருக்கலாம்.
ஆனால் இவை மட்டும்தான் அருட்கொடைகளா..?. இல்லை இதையும் தாண்டி வேறு அருட்கொடைகள் இருக்கின்றனவா என்று எண்ணிப் பார்த்தால்.. எண்ணி முடிக்க இயலாத அருட்கொடைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றில் எதேனும் ஒன்றை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால்கூட அதற்கு உறுதுணையாக பல்வேறு உபரி அருட்கொடைகள் தேவைப்படும். ஓர் அருட்கொடையின் உதவியின்றி இன்னொரு அருட்கொடையை நம்மால் அனுபவிக்கவும் முடியாது. இதுதான் இயற்கை நியதி. இந்த ரீதியில் எண்ணினால் அருட்கொடைகளை கூறிக்கொண்டே போகலாம்.
உதாரணமாக, அரிசியை எடுத்துக் கொள்வோம். அதை உற்பத்தி செய்ய விவசாயி, விவசாய நிலம், தண்ணீர், மாடுகள், உரிய காலம், உரம், சூரியன் போன்ற எல்லாமே தேவைப்படும். நெல் என்ற அருட்கொடை உற்பத்தியாகி அறுவடைக்குத் தயாராவதற்கு மட்டும்தான் இவை தேவைப்படும். உற்பத்தியான பின் அந்த நெல் அரிசியாக நம் கரங்களில் தவழ வேண்டுமெனில் அதனை விநியோகிக்க ஆட்கள், விற்பதற்கு சந்தைகள் இப்படி எத்தனையோ வகையான அருட்கொடையின் கூட்டுக் கலவைதான் நாம் அன்றாடம் உண்ணும் அரிசி எனும் உணவு.
இவ்வாறு எண்ணற்ற அருட்கொடைகளை அனுதினமும் இறைவன் தன் அடியார்களுக்கு வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றான். அவற்றை எண்ண முற்பட்டால் உங்களால் எண்ணி முடிக்கவே முடியாது. அவன் வழங்கிய அருட் கொடைகளின் சிறு பட்டியலைப் பாருங்கள்:
“நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா? மேலும், உங்களை (ஆண்-பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா? மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா? மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா? மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா? மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா? மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா? தானியங்களையும் தாவரங்களையும் மற்றும் அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!” (திருக்குர்ஆன் 78:6-16)
இந்த அருட்கொடைகளுக்கு நாம் செய்யும் கைமாறு என்ன?
நம்மால் உருவாக்க இயலாத இந்த அருட்கொடைகளை தாறுமாறாக வீண்விரயம் செய்கின்றோம். வீண்விரயம் என்றால் என்ன? மானிடர்கள் புரியும் அத்துணை வினை களிலும் ஏவலை கடப்பதே வீண் விரயம் ஆகும்.
இன்றைய மனிதர்கள் உணவு உட்கொள்ளும்போது செய்யும் விரயம் சகித்துக்கொள்ள இயலாத ஒன்று.
‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழர் பழமொழி. “ஓடும் ஆற்றில் ஒளு செய்தாலும் தண்ணீரை வீண் விரயம் செய்யாதே!” என்கிறது நம் அண்ணலாரின் பொன்மொழி. (நூல்: அஹ்மத், இப்னுமாஜா)
இப்படிப்பட்ட அண்ணலாரின் வழிகாட்டுதல்களைப் பெற்ற இஸ்லாமிய சமூகம்தான் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை அனைத்திலும் பகட்டையும் விரயத்தையும் கடைபிடிக்கின்றனர். விரயம் செய்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லையே. இது இறைவனே அருள் மறையில் கூறும் செய்தி.
அல்லாஹ் கூறுகின்றான்: “உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை”. (7:31)
இன்றைய சமூகத்தின் வீண் விரயங்கள்
விரயங்களிலேயே மிக மோசமான விரயம் தண்ணீர் விரயம் தான். ‘தண்ணீரை வீணடிக்காதீர்’ என்ற நபிகளாரின் அற்புதமான உபதேசத்தைப் பெற்றிருக்கும் இஸ்லாமிய சமூகம், நீர் மேலாண்மை குறித்தோ வருங்கால சந்ததிக்கு அதை சேமித்து வைக்க வேண்டும் என்பது குறித்தோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமே.
பேரண்டத்தின் அனைத்துப் படைப்புகளும் தண்ணீர் மூலம்தான் படைக்கப்பட்டுள்ளது என்கிறான் இறைவன்.
இறைவன் கூறுகின்றான்: “மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரே விதமான நீரிலிருந்து படைத்தான்”. (24:45)
வீணடிக்காமல் உணவு உட்கொள்வதன் ஒழுக்கம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
“(உண்ணும் போது) வயிற்றின் மூன்றில் ஒரு பகுதியளவு உண்ண வேண்டும். மூன்றில் ஒரு பகுதி நீர் குடிக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி விட்டுவிட வேண்டும்” (திர்மிதி, இப்னுமாஜா)
சுய விசாரணை தேவை
நாம் வீணடிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீருக்கும், ஒவ்வொரு துகள் உணவுக்கும், ஒவ்வொரு மின் திறனுக்கும் இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இவற்றை நாம் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம்.
உலகின் ஒரு மூலையில் எங்கோ ஒருவர் பசியுடன் இருக்கின்றார் என்றால், மற்றொரு மூலையில் எங்கோ ஒருவர் அவருக்கான உணவை அபகரித்து வைத்துள்ளார் அல்லது வீணடிக்கின்றார் என்று பொருள்.
அவ்வாறுதான் நாம் வீணடிக்கும் தண்ணீரும் மின்சாரமும். வேறு யாருக்கோ உரிமையான இந்த அருட்கொடைகளை வீணடிக்கும் போது, இது வேறு யாருக்கோ சொந்தமானது என்ற உணர்வு வரவேண்டும்.
அத்துடன் நிச்சயம் நாளை மறுமையில் இறைவனின் சந்நிதியில் நிற்கும்போது இது குறித்தும் நாம் விசாரிக்கப்படுவோம், பதில் கூறித்தான் ஆகவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் வர வேண்டும்.
முஹம்மது ஷுஐப், திருச்சி.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரிவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் ஒலியுல்லா தர்காவும் ஒன்று.
இந்த தர்காவில் கந்தூரி விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
21-ந்தேதி இரவு 7 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம், 8 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெறுகிறது. இதற்கு திட்டுவிளை ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகமது அனிபா, அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திட்டுவிளை ஜூம்ஆ பள்ளி இமாம் முகமது இப்ராகிம் பைஜி தொடக்க உரையாற்றுகிறார். அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சர்புதீன் ஆலீம் சிறப்புரையாற்றுகிறார். விழாக்குழு தலைவர் நாஞ்சில் ஹாஜா நன்றி கூறுகிறார்.
23-ந்தேதி காலை 10 மணிக்கு நேர்ச்சை வழங்குதல், இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி, 25-ந்தேதி காலை 10 மணிக்கு 3-ம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பை சாகிபு சுன்னத் ஜாமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா கந்தூரி விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

ராமநத்தம் அருகே வடகராம்பூண்டியில் உள்ள ஹஜரத் ஷாசானி சுல்தான் வலியுல்லாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
ராமநத்தம் அருகே வடகராம்பூண்டியில் உள்ள ஹஜரத் ஷாசானி சுல்தான் வலியுல்லாவின் சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் குழந்தை இல்லாதவர்கள் இரவு முழுவதும் தங்கி, தொழுதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் எவ்வித பாகுபாடும் இன்றி விழாவில் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஹஜரத் ஷாசானி சுல்தான் வலியுல்லாவின் சமாதியில் சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் நள்ளிரவில் சந்தனகூடு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் வடகராம்பூண்டி, கீழ்கல்பூண்டி, கொரக்கவாடி, தைக்கால், வி.களத்தூர், தொழுதூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் திருச்சி, சேலம், ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை இனாம்தாரர்கள் சையத் மக்பூல் ஷா உசைனி, ஷாஜகான், சையத்அலி, சையத் ரபிக், சையத் சுல்தான் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தக்கலையில் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு விழாவின் சிகர நிகழ்ச்சியான ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு விடிய, விடிய நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு ஞானப்புகழ்ச்சி, ஞானப்பால் உள்பட 18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டு விழா தக்கலையில் உள்ள பீர்முகமது தர்காவில் வருடம் தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் போது தினமும் இரவு மார்க்கப் பேருரைகள், மவுலிது ஓதுதல் ஆகியன நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பீர்முகமது சாகிபு இயற்றிய ஞானப்புகழ்ச்சியில் உள்ள 686 பாடல்களை ஜமாத் மக்கள் ஏராளமானோர் குழுக்களாக சேர்ந்து விடிய, விடிய பாடினர்.
இதில் ஹாமீம் முஸ்தபா, ஷர்புதீன், ஷாகுல் ஹமீது, அபு தாஹிர், நிஜாம், முகம்மது பஷீர், ஷேக் ஜுனைத், உவைஸல் கர்னி, ஆரிபீன், முகம்மது அனீஸ், முகம்மது சித்திக், அலி அகமது, முகம்மது ஸம்மில் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் மக்கள் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.
ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நேர்ச்சை வழங்குதலும், 12-ந் தேதி இரவு 7 மணிக்கு மூன்றாம் சியாரத் நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது. ஞானப்புகழ்ச்சியையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வக்பு வாரிய மேற்பார்வையில் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

உன்னதமான நன்மைகளை மானசீகமாகக் கடைபிடித்து வாழ்ந்த குறைஷிப் பிரமுகர் தான் அபுல் புக்தரி. இஸ்லாத்தின் ஆரம்பம் முதலே நபிகளாரையோ முஸ்லிம்களையோ அவர் தொந்தரவு செய்ததில்லை.
பத்ருப் போர் முடிவடைந்த நேரம். நபிகளாருக்கும் தோழர்களுக்கும் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. இதற்கிடையே நபி (ஸல்) அவர்களிடம் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய போர் அனுபவங்களை விவரித்துக்கொண்டிருந்தனர்.
முஜத்தர் பின் ஸியாத் (ரலி) எனும் நபித்தோழரும் நபிகளாருக்கு முன்னால் வந்து நின்றார். போரில் கிடைத்த வெற்றி உள்ளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், முகத்தில் கடும் துக்கத்தின் ரேகைகள் தெரிந்தன.
“அல்லாஹ்வின் தூதரே!” முஜத்தர் (ரலி) விசும்பலுடன் அழைத்தார். நபிகளார் திரும்பிப் பார்த்தார்கள். நபிகளாரைப் பார்த்ததும் விசும்பல் கண்ணீராக மாறத் தொடங்கியது. கூறத்தொடங்கினார்: “நடைபெற்ற போரில் அபுல் புக்தர் பின் ஹிஷாமை கொல்லக் கூடாது என்று தாங்கள் ஆணை பிறப்பித்திருந்தீர்கள். ஆனால் அவரை நான்தான் போரில் எதிர்கொண்டேன். போர்க்களத்தில் எனக்கு முன்னால் அவர் வாளுயர்த்தி வந்தபோதெல்லாம் இயன்றவரை அவரை நான் தவிர்த்தேன்”.
அப்போது அவர் கேட்டார்: “நீ ஏன் என்னோடு சண்டை செய்ய மறுக்கின்றாய்?”
“தங்களை போர்க்களத்தில் கண்டால் கொல்லக்கூடாது என்று எங்கள் நபி (ஸல்) ஆணை பிறப்பித்துள்ளார்கள்”.
“என்னுடன், எனது நண்பன் ஜினாதா பின் மலீஹாவும் உண்டு. அவருக்கும் இது பொருந்துமா?”
“உங்கள் நண்பரைக் குறித்து நபிகளார் எதுவும் கூறவில்லை. ஆகவே அவரை நாங்கள் நிச்சயம் பொருட்படுத்தமாட்டோம்”.
“அவ்வாறாயின் நாங்கள் இருவரும் சேர்ந்து உங்களுடன் போர் செய்வோம். ‘ஆபத்து வேளையில் நண்பரைக் கைவிட்டவன்’ என்று மக்கத்துப் பெண்கள் கூறும் இழி சொல்லை என்னால் கேட்க முடியாது”.
“இவ்வாறு கூறியவாறு அவர் என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்காகத் தயாராக நின்றார். அவரை எப்படியாவது கைது செய்து தங்களுக்கு முன்னர் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நான் கடுமையாக முயன்றேன் அல்லாஹ்வின் தூதரே! ஆயினும் அது பலிக்கவில்லை. எனது உயிரைக் காப்பதற்காக அவரை நான் கொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அல்லாஹ்வின்தூதரே!”
இத்தனையையும் கூறி முடிக்கும்போது முஜத்தர் (ரலி) அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இந்த விஷயத்தில் தங்களை நான் குற்றம் சுமத்த மாட்டேன். அபுல் புக்தரிக்கு நாம் செய்ய வேண்டிய பெரும் நன்றிக்கடனை நினைத்துதான் அவ்வாறு ஆணை பிறப்பித்தேன்”.
யார் அந்த அபுல் புக்தரி? அல்லாஹ்வின் தூதரும் அன்புத் தோழர்களும் அபுல் புக்தரிக்கு அப்படி என்ன நன்றிக்கடன் ஆற்ற வேண்டியிருந்தது? தெரிந்துகொள்ள வேண்டாமா?
உன்னதமான நன்மைகளை மானசீகமாகக் கடைபிடித்து வாழ்ந்த குறைஷிப் பிரமுகர் தான் அபுல் புக்தரி. இஸ்லாத்தின் ஆரம்பம் முதலே நபிகளாரையோ முஸ்லிம்களையோ அவர் தொந்தரவு செய்ததில்லை.
நபி (ஸல்) அவர்களையும் அன்னாரது ரத்த பந்த உறவினர்களான பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் குடும்பத்தாரை அபூதாலில் எனும் பள்ளத்தாக்கில் குறைஷிகள் மூன்று வருடகாலம் ஊர் விலக்குச் செய்திருந்தனர். ஊர்விலக்கு செய்யப்பட்டவர்களுடன் பேசக்கூடாது; அவர்களுடன் சேர்ந்து இருக்கக் கூடாது; அவர்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடாது; திருமண பந்தம் எதுவும் வைக்கக் கூடாது; அத்துடன் அவர்கள் மீது எக்காரணம் கொண்டும் கருணை காட்டக் கூடாது என்ற கட்டுப்பாட்டு விதிகளை எழுதி கஅபாவில் தொங்கவிட்டனர் குறைஷிகள்.
இந்தத் தடை மூலம் நபிகளாரும் குடும்பமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஊர்விலக்கு செய்யப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடையும் தருவாயில் ஒருநாள் இரவு வேளையில் கதீஜா (ரலி) அவர்களுடைய உறவினரான ஹகீம் பின் ஹிஷாம் அவர்கள், உணவுப் பொதி ஏற்றிய ஓட்டகத்துடன் அங்கு வந்தார். காவலுக்கு நின்றிருந்த அபூஜஹ்ல் முடியாது என்று தடுத்தான். அபுல் புக்தரி அவர்கள் உடனடியாக அங்கு வருகை தந்தார்.
அபூஜஹ்லிடம் கோபத்துடன் கேட்டார்: “ஒருவர் தமது ரத்த பந்த உறவுகளுக்குக் கருணையின் அடிப்படையில் உதவ முன் வருவதையும் நீர் தடுக்கின்றீரா?”.
ஆனால் அபூஜஹ்லில் காதுகளில் எதுவும் விழவில்லை. கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளை எடுத்து அபூஜஹ்லுடைய உடலில் ஓங்கி அடித்தார் அபுல் புக்தரி. இத்தனைக்கும் அபுல் புக்தரியைவிட அபூஜஹ்ல் வயதில் மூத்தவன். (அபுஜஹ்லுடைய மகன் இக்ரிமா (ரலி) அவர்கள் நபி களாரைவிட மூன்று வயது இளையவர் என்பதிலிருந்தே அபூஜஹ்லுடைய வயதை கணக்கிட்டுக்கொள்ளலாம்)
விடவில்லை அபுல் புக்தரி. ஊர்விலக்கு எனும் அந்த அந்த அநியாய அறிவிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தே தீரவேண்டும் என முடிவு செய்தார். அதற்கான நடவடிக்கையில் புத்திசாலித்தனமாகவும் துரித கதியிலும் ஈடுபட்டார். இறுதியில் அது முடிவுக்கு வந்தது. அது ஒரு பெரும்கதை. ஊர்விலக்கை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் முன்னணியில் நின்று நட வடிக்கை எடுத்த ஆறு நபர்களில் அபுல் புக்தரி அவர்கள் முக்கியப் பங்கு வகுத்தார்.
இவ்வளவு சீரிய நற்குணங்கள் கொண்ட அபுல் புக்தரி முழுமையான இணைவைப்பாளராகவே இருந்தார். இந்த நல்லவர், முஸ்லிம்களுடைய கரங்களால் கொல்லப்படக் கூடாது என்று நபிகளார் பெருவிருப்பம் கொண்டிருந்தார்கள்.
காலம் மாறியது. தேசமும் மாறியது. ஹிஜ்ரத் என்ற நாடு துறத்தலின் மூலம் முஸ்லிம்கள் மதீனா வந்தடைந்தனர். ஆயினும் அபுல் புக்தரி என்ற நல்ல மனிதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடத்திலும் முஸ்லிம்களிடத்திலும் எப்போதும் நினைவு கூரப்படும் நபராகவே திகழ்ந்தார். நன்றி மறத்தல் ஒரு முஸ்லிமின் பண்பல்லவே. பத்ருப் போரில் ‘அவரைக் கொல்லக் கூடாது’ என்ற உத்தரவின் மூலம் அந்த நன்றி மறவாமையை நபிகளார் நிறைவேற்றினார்கள். ஆம், அபுல் புக்தரியை எங்கு கண்டாலும் யாரும் கொல்லக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு.
அபுல் புக்தரி குறித்த பெருமானாருடைய இந்த ஆணை, செய் நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
நூஹ் மஹ்ழரி, குளச்சல்.