என் மலர்
இஸ்லாம்
மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)
உலகம் அமைதியாக இயங்க அவசிய மானது வலுவான, தரமான மனித வளம். அந்த மனித வளத்தின் ஆதாரமே ஆரோக்கியமான உணவுகள்தான். மனித வள மேம்பாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை அமைய முதல் காரணிகளான உணவு முறைகளை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதுபோல மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளைத் தடுக்கிறது இஸ்லாம்.
மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)
அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கப்பட்டு, அந்த மிருகங்களின் ரத்தம் உடலை விட்டு முழுமையாக வெளியேறிய பின்பு பெறப்படும் மாமிசங்கள் ஹலாலாகும். நேர்மையான முறையில் உழைத்து அதன் மூலம் பெறப்படும் உணவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் உணவுகளும் தூய்மையான (ஹலால்) உணவாகும்.
அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்படாத மாமிசங்கள் மட்டுமே ஹராமென்று சுருக்கிப் பார்க்க இயலாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்பட்ட உணவு, அநியாயமான முறையில் வருமாயின் அதுவும் ஹராமாகும். அதேபோல், மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கும் அத்தனை உணவுகளும் தடுக்கப்பட்ட (ஹராம்) உணவுகளாகும்.
‘நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.
உழைப்பில் கிடைத்த உணவாக இருந்த போதும் அவைகளை வீணடிப்பதை இறைவன் விரும்பவில்லை. தேவைகளை கருத்தில் கொண்டு உணவு தயாரித்தலை வலியுறுத்துகிறது இஸ்லாம். உணவின் மகிமையை அறியாமல் வீண் விரயம் செய்பவன் ஷைத்தானின் உடன் பிறப்பாகக் கூறி, வீண் விரயத்தை விட்டு தவிர்த்திருக்க இவ்வாறு சொல்கிறது திருக்குர்ஆன் (17:27):-
‘நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்’.
சாப்பிடும் சமயங்களில் பணிவாகத் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். சாய்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு சாப்பிடுவது பெருமை, ஆணவத்தின் அடையாளமாக எண்ணி, அவ்வாறு சாப்பிடுவதை நபி தடுத்த தரவுகள் நம் கண் முன்னே உள்ளன. மனிதனை அழிவுவரை இழுத்துச் செல்லும் பெருமை, ஆணவத்தை எப்போதும் இஸ்லாம் விரும்புவதில்லை. சாப்பிடும் நேரங்களில் உணவிற்கு மதிப்பளித்து சாப்பிடுதலை விரும்புகிறது. இதுபற்றிய நபி மொழி வருமாறு:
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாமிய வணக்கங்களில் விதிவிலக்கில்லாதது இறைவணக்கம் (தொழுகை). பசி அதிகமான நேரங்களில் தொழுகையின் நேரம் குறுக்கிட்டால், சாப்பிட்ட பிறகே இறைவணக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் உயிர் காப்பது இறைவணக்கம் செய்வதை விட மேலானது என்ற உயரிய கருத்தாழத்தை சில நபி மொழிகளைக் கொண்டு நாம் விளங்க முடிகின்றது.
“இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்: ‘இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கான அழைப்பு சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்)”. (நூல்: புகாரி)
உணவு வைக்கப்பட்ட தட்டில் அங்குமிங்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிடுவது நாகரிகமான செயல்கள் அல்ல. நடுப்பகுதியிலிருந்து அல்லது அங்குமிங்கும் சாப்பிடுவது மற்றவர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தும். அதனால்,நம் அருகிலிருந்து சாப்பிடுவதே. நாகரிகமான முறையில் சாப்பிடும் வழிமுறையாகும். நபியின் வழிமுறைகள் இதற்கும் வழிகாட்டுகின்றன.
“ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் அபீசலமா (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).
உயிர் வாழ தேவையான அளவிற்கு சாப்பிட வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றவரின் உணவைச் சாப்பிடுவது போன்றாகும். மற்றவர்கள் பசியில் வாடும்போது அவர்களுக்கு பகிராமல் நாம் மட்டும் சாப்பிடுவது மனிதத் தன்மைக்கு எதிரானதாகும். நம் தேவைக்கு அதிகமான உணவுகள் இருந்தால் அதனைத் தேவையானவர்களுக்குக் கொடுப்பது நன்மையாகும். உங்களுக்கு ஒரு உணவு கொடுக்கப்பட்டால், இருவர் சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என்பதால் பகிர்ந்துண்ண கூறுகிறது மற்றோர் நபி மொழி.
“நபி (ஸல்) கூறினார்கள்: ‘ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்”. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
உணவின்றி அமையாது மனித வாழ்வு. உணவுகளுக்கு மதிப்பளித்து அதனை வீணடிக்காமல் உணவருந்தி, மற்றவர்களுக்கும் உணவுகளைப் பகிர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுதல் இஸ்லாம் தொகுத்த உணவிற்கான அறங்களாகும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். காரைக்காலில் தங்கி இருந்தபோது, அவர் இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. தர்காவில் இருந்து இரவு 11 மணிக்கு சந்தன கூடு ஊர்வலம் தொடங்கியது. காரைக்காலின் முக்கிய வீதிகளின் வழியாக விடிய விடிய சென்று நேற்று அதிகாலை பள்ளிவாசலை சென்றடைந்தது. விழாவில் ஏராளமான இஸ்லாமியர்களுடன், இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோடியக்கரை கோடியக்காடு முக்கிய வீதிகளில் சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவை அடைந்தது.
பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தர்காவின் மூத்த பரம்பரை அறங்காவலர் மற்றும் முத்தவல்லியுமான சையத் மசாரூதீன் கவர்னர் மற்றும் ஆற்காடு இளவரசருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ஆண்டு விழா மலரை கவர்னர் வெளியிட்டார். இதன்பின்பு, அங்குள்ள ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி சமாதியில் மலர்ப்போர்வையை கவர்னர் போர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.
விழாவில் மூத்த பரம்பரை அறங்காவலர் சையத் வாஜிதுதீன், பரம்பரை அறங்காவலர்கள் சையத் மன்சூருதீன், சையத் சாதிக் முகைதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சந்தனக்கூடு திருவிழா நாளை (31-ந் தேதி) வரை நடக்கிறது.

கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர்.
எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடி ஏற்றம் நடைபெற்று, ஷாபான் 10-ம் பிறையில் சந்தனக்கூடு நகர் வலம் வந்து ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவை வந்தடைந்தது.
கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் இணைந்து, வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் வாங்கி தினமும் பாத்தியா ஓதப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் நார்ஷா எனும் இனிப்பு வழங்கப் பட்டது. இது கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, கரியாம்பட்டி என 3 கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்தும் விழாவாகும்.
இந்த விழாவிற்கு கரிசல்பட்டி நாட்டாண்மை அபி முகமது தலைமை தாங்கினார். ஜமாத் கமிட்டி தலைவர் சையது முன்னிலை வகித்தார். நிர்வாக குழு கமிட்டி மக்கள் ஷாஜகான், அப்துல் ரஷீது, சாகுல் ஹமீது, இதயத்துல்லா, ரகுமத்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர். பின்னர் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்காவிற்கு சந்தனக்கூடு வந்து சேர்ந்தது. அங்கு சந்தனக்கூட்டில் வைக்கப்படிருந்த சந்தனக்குடத்தில் இருந்து சந்தனம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு சாதி, மத பேதமின்றி நடத்தக்கூடிய மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்காலில் நூற்றாண்டுகள் பழமையான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள பல்வேறு நாடுகள் வழியாக இந்தியா வந்தார். இவர், இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். அதுபோல், காரைக்காலில் தங்கி இறைப்பணியாற்றிவந்தபோது, தமது 120-வது வயதில் காரைக்காலில் இயற்கை எய்தினார்.
அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்க்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 198-வது கந்தூரி விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியானது, அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில், மாலை 3 மணிக்கு பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணி அளவில் கொடிமரத்தை சென்றடைந்தது. தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதிவுலா வரும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படும் நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். ஏப்ரல் 4-ந் தேதி இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.

உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி).
உலகில் ஏற்பட்ட முதல் உறவு கணவன், மனைவி என்ற குடும்ப உறவுதான். இந்த உறவுக்கு இஸ்லாத்தில் மிக அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, உயரிய நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் ஓரு வாழ்க்கை நெறியாகும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவது போல் குடும்ப வாழ்க்கை மலரவும், அதன் மூலம் அமைதியான ஆக்கப்பூர்வமான வாழ்க்கை கட்டிடத்தைக் கட்டமைக்கவும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.
எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முதல் படி தனிமனித, குடும்ப சீர்திருத்தம் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனையாகும். இந்த முதல் படியைப் புறக்கணித்து உருவாகும் எந்த சீர்திருத்தமும் நிலையான சீர்திருத்தமாக அமையாது. திருக்குர்ஆன், வீட்டை அமைதி பெறும் இடமாக சித்திரிக்கிறது. எனவே வீட்டில் அமைதியில்லையேல் நாட்டில் ஏது அமைதி? குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவதும் இறைக்கட்டளை என்று இறைமறை போதிக்கிறது.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 66:6)
குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவது குடும்பத்தலைவனின் மிக முக்கியமான பொறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே, அவரிடமும் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் எஜமானின் பொருளுக்குப் பொறுப்பாளனாவான். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)
இவ்வுலகில் சிறந்த ஒழுக்க முறையிலும், இறையச்சத்தின் அடிப்படையிலும் வாழும் மக்களை நாம் விட்டுச் செல்லவேண்டும். இவர்களின் மூலமாக வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவவேண்டும். மறுமையில் அமைதிப் பூங்காவாகிய சொர்க்க சோலையில் குடும்பத்துடன் வாழும் பேற்றைப் பெறவேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘மனிதன் இறந்துவிடும்போது அவனது செயல்களும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. தொடர்ந்து நீடித்துப் பலன் தரும் நிலையான நல்லறம் எதையேனும் ஆற்றிவிட்டுச் செல்வது. மக்கள் பயனடையக்கூடிய கல்வியை அளித்துவிட்டுச் செல்வது. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த மகன். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: மிஷ்காத்)
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: ‘மேலும் அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக் கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன’. (திருக்குர்ஆன் 30:21)
மகிழ்ச்சியான குடும்பம் உருவாக முதலாவது அடிப்படை கணவன், மனைவி உறவுகளில் அன்பும், கருணையும், பாசமும் மலர வேண்டும். தம்பதிகளுக்கிடையே அமைதி நிலவ அவர்களுக்குள் அன்பையும், கருணையையும் அல்லாஹ் உருவாக்குகிறான் என்பதை மேற்குறிப்பிட்ட வசனம் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டாவதாக: கணவன், மனைவி இருவரும் இஸ்லாம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற கடமைகளையும், உரிமைகளையும் உணர்ந்து பேணுபவர்களாக இருக்கவேண்டும்.
கணவன் ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன, பெற வேண்டிய உரிமைகளும் உள்ளன. அவ்வாறே மனைவியும் கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன, பெற வேண்டிய உரிமைகளும் உள்ளன. இந்த அடிப்படைக் கல்வியை இருவரும் கற்று, சரிவர உணர்ந்து செயல்படவேண்டும். இருவரில் யாராவது குறை செய்தாலும் குடும்பம் சீர்பெறாது.
இதற்குக் குர்ஆன் கூறும் அழகான எடுத்துக்காட்டு ‘ஒருவர் மற்றவர்க்கு ஆடையாக அமைய வேண்டும்’ என்பதே. ஆக இருவரும் இந்த ஆடையை அணியவேண்டும். அக ஒழுக்கங்களாகிய மானம், மரியாதை பேணப்படவேண்டும். புற அபாயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும்.
மூன்றாவதாக: குடும்ப சீர்திருத்தத்தின் தொடக்கம் கணவன், மனைவியிலிருந்து தொடங்கி பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், சமூகம் என்று பரவவேண்டும். தன்னை மறந்து பிறரின் சீர்திருத்தத்திற்காக உழைப்பது பெரும் மடத்தனமாகும். ஆக தொடக்கம் தன்னிடமிருந்துதான்.
நமது சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். தம்பதிகள் இருவரும் இஸ்லாமிய வாழ்க்கையின் வடிவங்களாய்த் திகழ வேண்டும். மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத கல்வி எந்தப் பயனும் அளிக்காது. ஒருவர் மிக அழகாகச் சொன்னார், ‘கல்வி - செயலின் வீட்டைத் தட்டும், பதில் வரவில்லையெனில் திரும்பி விடும்’.
நமது செயல் சான்றுதான் வீட்டில் பிள்ளைகள் மத்தியில் சாதக அல்லது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
பெற்றோர்கள் என்ற வகையில் குடும்பத்தில் உலக செல்வச் செழிப்பை மட்டும் பார்க்காமல் அவர்களின் ஈருலக செழிப்பும் நமது இலக்காக இருக்கவேண்டும். இல்லையேல் மறுமையில் நமது பிள்ளைகள் நம்மைச் சபிப்பவர்களாக மாறிவிடக்கூடும்.
இஸ்லாமியக் குடும்பத்தின் முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பம். அன்பும், பாசமும், பரிவும் நிறைந்த முழுமையான குடும்பம் அது. பிள்ளைகளின் பயிற்சிக்கும், பேரப்பிள்ளைகளின் பயிற்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி).
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக குதிரை மீது வைத்து முக்கிய வீதி மற்றும் தெருக்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் தர்காவை அடைந்தது. பின்னர் பாத்தியா ஓதப்பட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் முத்தவல்லி சையத்முர் துஷாபாஷா மற்றும் சையத்குலாம் மொய்தீன் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை தர்காவில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் மதரசாவில் 76-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் கமரூன் ஜமான் தலைமை தாங்கினார்.
தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் மதரசாவில் 76-ம் ஆண்டு விழாவும் அங்கு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் கமரூன் ஜமான் தலைமை தாங்கினார்.
சேகு மைதீன் ஆதம் மாலிக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை அப்துல் அஜீஸ் அஜ்ஹரி மவுலவி தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஹாஜாமைதீன், ஆலிம் அன் பாரி, ஹஜரத், காரைக்குடி வட்டார ஜமாஅத் உலமா சபை கலந்து கொண்டனர். ரபீக் அகமது நன்றி கூறினார்.

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது.
முன்னதாக மதியம் கந்தூரி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து குதிரைகள் நடனமாட, வாணவேடிக்கைகளுடன் கொடி ரதம் மச்சுவீடு அம்மா தர்காவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஹஜ்ரத் மேல்கரை பீர்சுல்தான் ஒலியுல்லா கொடிமரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். வருகிற 23-ந்தேதி இரவு மதநல்லிணக்க உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.

கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான ரதி முத்தம்மாள் தர்காவில் உள்ள ரதி முத்தம்மாள் மக்பராவில் புனித அக்தர் கலந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான ரதி முத்தம்மாள் தர்கா உள்ளது. இங்கு இந்து, முஸ்லிம் மக்கள் இணைந்து கந்தூரிவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பின்பு தர்காவில் உள்ள ரதி முத்தம்மாள் மக்பராவில் புனித அக்தர் கலந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறை வடிவ பச்சை போர்வை போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஜவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.பின்பு கிடாய் மற்றும் சேவல் பலியிடப்பட்டு சமையல் செய்யப்பட்டு பனை ஓலை பட்டையில் கறிச்சோறு, பாரம்பரிய உணவு பொருட்கள் படைக்கப்பட்டு பொது அன்னதானம் வழங்கப்பட்டது.கடலாடி பகுதியில் சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து, முஸ்லிம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திட்டுவிளை பக்கீர் பாவா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களால் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திர பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் துவா ஓதினார்கள். இதில் ஜமாத் தலைவர் மைதீன் பிள்ளை, தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் சேக் முகம்மது, ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து தர்கா மைதானத்தின் முன்பாக உள்ள அலங்கார கொடி மரத்தில் இறைநாம முழக்கத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களால் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து முஸ்லீம்கள் புனிதம் நிறைந்த இரவாக கருதப்படும், மிஹ்ராஜ் இரவு என்பதையொட்டி, இஸ்லாமிய மார்க்கப் பேருரை நடந்தது. இதில் உதுமான் லெப்பை, சாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி அறக்கட்டளை தலைவர் மைதீன் பிள்ளை தலைமை தாங்கினார். அல்ஹாபிழ், ஷேக்ஹஸன் அலியார் ஸமதானி இமாம், வரவேற்புரை ஆற்றினர். ஓய்வு பெற்ற வன அலுவலர் முகமது ஹனிபா, ஓய்வு பெற்ற, பி.எஸ்.என்.எல். உதவிப் பொறியாளர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் செய்யது மீர் காஸிம் ஆலிம் சிறப்புரையாற்றினார்.
முடிவில் தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறினார். விழாவின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றூக் என்கிற நேர்ச்சை வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. முடிவில் தர்கா நிர்வாக செயலாளர் முகமது ரபீக் நன்றி கூறுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான் லெப்பை, சாகிபு சுன்னத் ஜமாத் ஜூம்மா பள்ளி டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகத்தினருடன், பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.