என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    ரமலான் கூறும் இந்த தத்துவப் பண்பை நாம் அனைவரும் இந்த ரமலானில் மட்டுமின்றி, மற்ற எல்லாக்காலங்களிலும் கடைப்பிடித்து, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்வோமாக, ஆமின்.
    மகத்துவம் வாய்ந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் முவாஸாத்’ - ‘மனிதர்களுடன் கலந்துறவாடி, அவர்களின் சுக-துக்கங்களில் பங்கு கொள்கிற மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ஒரு மனிதனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் உண்மையான மனித நேயம். ஒருவரின் வாழ்வில் வெற்றியும், செல்வமும், செல்வாக்கும், பட்டமும், பதவியும், குவியும்போது அவரைத்தேடி அவரின் உதவியை நாடி, தேனீக்களைப் போன்று மக்கள் மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    அவருக்கு தோல்விக்கு மேல் தோல்வி வரும்போது, அவரின் செல்வாக்கும், சொல்வாக்கும் சரிந்து விழும்போது, அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். இந்த நிலை சந்தர்ப்ப வாதம், அல்லது சுயநலம் என்று சொல்லப்படுகிறது.

    இன்பத்திலும், துன்பத்திலும் உடன்பிறப்புகள் கூட உடனிருக்காத நிலையில், உற்ற துணையாக இருப்பவன்தான் உண்மையான தோழன். ஒருவரின் இன்பத்தில் சுகத்தை அனுபவிக்கும் நபர், அவரின் துன்பத்திலும் சோகத்தை சரிசமமாக பங்கெடுக்க வேண்டும்.

    ‘பிஷ்ருல் ஹாபி’ எனும் மகான் இருந்தார். அவரைக் காண அவரின் இல்லத்துக்கு ஒருவர் சென்றார். அது கடுங்குளிர்காலம். குளிர் போக்கும் கம்பளி ஆடை இருந்தும் அதை அந்த மகான் பயன்படுத்தாமல் குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அந்த மனிதர் ‘ஏன் கம்பளி ஆடையை அணியாமல் இருக்கிறீர்கள்?’ என்றார்.

    அதற்கு அந்த மகான், ‘குளிர்காலத்தில் ஏழைகளுக்கு கம்பளி ஆடைகள் வாங்கி கொடுக்க என்னிடம் வசதி இல்லை. எனவே அவர்கள் படும் துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன்’ என்றார். இத்தகைய மகத்தான தன்மையை புனித ரமலான் மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.

    ஏழைகள் படும் பசியின் கொடுமையை தெரிந்து கொள்ளவே நோன்பு கடமையாக்கப் பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை நீக்குவதே நோன்பின் தத்துவம் ஆகும்.

    நபி யூசுப் (அலை) காலத்தில் கடுமையான பஞ்சம். அப்போது அவரிடம் கொஞ்சம் உணவு இருந்தும் பட்டினி கிடந்தார். ஏன் தெரியுமா? பட்டினி கிடப்பவர்களின் பசியின் வேதனையை தானும் உணர வேண்டும் என்பதற்காக.

    உமர் (ரலி) அவர்கள் தனியாக நோன்பு நோற்பார். ஆனால் ஏழைகள் இன்றி நோன்பு திறக்க மாட்டார்கள். இதை அவரது குடும்பத்தார் யாராவது தடுத்தால், அவர் அந்த இரவு முழுவதும் கவலையால் தூங்கமாட்டார். அதுபோல அவர் சாப்பிடும் போது யாசகர் எவரும் வந்து கேட்டால், உடனே எழுந்து சென்று தனது பங்கு உணவை எடுத்து வழங்கிடுவார். எனவே அந்நாளில் அவர் உண்ணாமல் நோன்பு நோற்பார்.

    தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட பிறருக்கு முன்னுரிமை அளிப்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஏன்என்றால் ‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் உள்ளது’ என்று திருக்குர்ஆன் (94:6) குறிப்பிடுகிறது.

    ‘தன் அண்டை வீட்டான் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மையான இறைவிசுவாசியாக ஆக முடியாது’ என்பது நபிமொழி ஆகும்.

    ஏழைகளுடன் கலந்துறவாடி அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்குபெறும் மாதம் இந்த ரமலான் மாதமாகும். ரமலான் கூறும் இந்த தத்துவப் பண்பை நாம் அனைவரும் இந்த ரமலானில் மட்டுமின்றி, மற்ற எல்லாக்காலங்களிலும் கடைப்பிடித்து, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்வோமாக, ஆமின்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர்.
    பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகையை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

    இதனால் கோவில்கள், தேவாலயம், பள்ளிவாசல்கள் என அனைத்துமே கடந்த ஆண்டு மூடப்பட்டது. பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். தற்போதும் கொரோனா தொற்றி னால் பள்ளிவாசல்களில் இரவு 8 மணி வரை கால அவகாசம் கொடுக் கப்பட்டது. பின்னர் நோன்பு காலம் என்பதால் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

    தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் இப்பகுதியில் உள்ள வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர். கடந்த வருடத்தை போல் நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறாமல் இருந்தது. தற்போது நோன்பு நேரத்தில் பள்ளிவாசலில் தொழுவது மன நிறைவை தருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    இஸ்லாமிய மார்க்கத்தின்படி இறைவன் விரும்பக்கூடிய, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய நற்செயல்கள், நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும்.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இபாதத்’ வணக்க வழிபாடுகள் நிறைந்த மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    இஸ்லாமியப் பார்வையில் ‘இபாதத்’என்றால் என்ன?

    ‘இபாதத்’ என்பதற்கு அரபி அகராதியில் ‘வழிபடுதல்’, ‘பணிதல்’, ‘இறைவன் முன்பு தாழ்வை வெளிப்படுத்துதல்’ என்பது பொருள் ஆகும்.

    இஸ்லாமிய மார்க்கத்தின்படி இறைவன் விரும்பக்கூடிய, அவன் பொருந்திக் கொள்ளக்கூடிய நற்செயல்கள், நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும். இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ‘நல்லோர்கள் பிரியப்படக்கூடிய செயல்பாடுகளும் ‘இபாதத்’ என்று சொல்லப்படும்’.

    இந்த அடிப்படையில் இன்சொல்லும், நற்செயலும், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், சதகா, உண்மை, நம்பிக்கை, பெற்றோர்களுக்கு நன்மை புரிதல், உறவுகளுடன் உறவாடுதல், வாக்குறுதியை நிறைவேற்றுதல், நன்மையை ஏவி, தீயதை தடுத்தல், உபகாரம் செய்தல், ஏழைகள், விதவைகள், அனாதைகள், வழிபோக்கர்கள், நலிந்த மக்கள் அனைவருக்கும் பாடுபடுவதும், உயிரினங்களின் மீது கருணை காட்டுவதும், சகித்துக் கொள்வதும், நன்றி செய்வதும், பிரார்த்திப்பதும், குர்ஆன் ஓதுவதும், இறைவனை நினைப்பதும், இறையச்சம், உள்ளச்சம் இன்னும் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ‘இபாதத்’ ஆகும்.

    இவற்றை ஒரு நோன்பாளி, நோன்பு காலங்களிலும், மற்ற நேரங்களிலும் பேணி, கடைப்பிடித்து வாழ்ந்தால், அவரின் வாழ்க்கையே இறையச்சமும், இறைவழிபாடும் நிறைந்ததாக மாறிவிடும். இதற்கு தான் மனிதனை படைத்ததாக திருக்குர்ஆனில் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

    ‘இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை’. (திருக்குர்ஆன் 51:56)

    வணக்க வழிபாடுகள் செய்வதற்கு புனித ரமலான் பெயருக்கு ஏற்றாற்போல் சிறந்த மாதமாக விளங்குகிறது. ரமலானில் ஹஜ்ஜைத் தவிர மற்ற வணக்க வழிபாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. எனினும் புனித மக்கா சென்று ஹஜ் செய்யமுடியாத குறையை ‘உம்ரா’ எனும் மக்கா பயணம் நிவர்த்தி செய்கிறது. ‘எவர் ஒருவர் ரமலான் மாதத்தில் ‘உம்ரா’ செய்கிறாரோ, அவர் என்னுடன் ஹஜ் செய்தவர் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் கடமையான ஐங்காலத் தொழுகைகள் அழகாக நிறைவேற்றப்படுகின்றது; இரவு நேர சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ தொழுகை கூட்டம் கூட்டமாக நிறைவேற்றப்படுகின்றது. ‘ஜகாத்’ எனும் கடமையான ஏழை வரியும், ‘சதகா’ எனும் தர்ம நிதியும், ‘ஜகாத்துல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மமும், ‘தஹஜ்ஜத்’ எனும் ஸஹ்ர் நேரத் தொழுகையும் பிரத்யேகமான முறையில் நிறைவேற்றப்படுகின்றது.

    புனித ரமலானில் உடல் ரீதியான கடமை தொழுகை, மன ரீதியான கடமை நோன்பு, பொருள் ரீதியான கடமை சதகா, ஸகாத், ஜகாத்துல் பித்ர் ஆகும். உடல் மற்றும் பொருள் ரீதியான கடமை ‘உம்ரா’ இவை அனைத்தும் ஒரு சேர ஒன்றாக நிறைவேற்றப்படக்கூடிய வணக்க வழிபாடுகள் நிறைந்த மாதம் தான் புனித ரமலான் மாதம். புனிதமான இந்த மாதத்தில் இதன் சிறப்புக்கள் அனைத்தையும் நாம் பெற்று சிறப்புடன் வாழ வழி காண்போம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.37 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.37 மணி
    30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
    மகத்துவமிக்க ரமலானுக்கு ‘ஷஹ்ருர் ரஹ்மத்’ - ‘இறையருள் மிக்க மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. 30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

    இயற்கையாகவே இறையருள், என்றும் எப்போதும் நிறைந்தே காணப்படுகிறது. இறைவனும் திருக்குர்ஆனில் அவ்வாறுதான் தன்னை அறிமுகம் செய்கின்றான்:

    ‘அவன் (அல்லாஹ்) அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்’. (திருக்குர்ஆன் 1:2)

    ஒரு தாய் தன் குழந்தையின் மீது செலுத்தும் அன்பு, கருணையை விட எழுபது மடங்கு அன்பையும், கருணையையும், இறைவன் தமது அடியார்கள் மீது பொழிகின்றான். இதற்கு சான்றாக, தன்னை ஏற்க மறுக்கும் மனிதர்களுக்குக் கூட அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்கி, அவர்கள் மீது அருள்மழை பொழிவதை காணலாம்.

    ‘ஒரு இறை மறுப்பாளர் இறைவனின் வற்றாத கருணையை அறிந்தால், எந்த ஒருவரும் இறையருள் குறித்து நிராசை அடையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இறையருள் குறித்து யாரும் வாழ்வில் நிராசை அடையக்கூடாது என திருக்குர்ஆன் பின்வருமாறு அறிவுறுத்துகிறது:

    ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், இறைவனுடைய அருளில் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக இறைவன் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 39:53)

    இந்த அடிப்படையில் ரமலானின் முதல் பத்தில் இறையருள் அதிகம் இறங்குகிறது. அதை அடைவதற்கு சிறந்த பிரார்த்தனைகள் மூலம் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

    முற்காலத்தில் பாவச் செயல்களால் ஒருவர் தமக்குத் தாமே எல்லை மீறி நடந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது, தம் புதல்வர்களிடம் இறுதி ஆசையை தெரிவித்தார்.

    ‘நான் இறந்ததும் என்னை எரித்துத் தூளாக்கி, பிறகு கடலில், காற்றில் தூற்றுங்கள். இறைவன் மீதாணை! என் மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு எனக்கு அவன் வேதனை அளிப்பான்’ என்றார்.

    தந்தை கூறியபடி புதல்வர்களும் செய்தனர்.

    பிறகு இறைவன் பூமியை நோக்கி, ‘நீ எடுத்ததை கொடுத்துவிடு’ என்று கட்டளையிட்டான்.

    அப்போது அந்த மனிதர் முழுவடிவில் இறைவனிடம் நின்றார்.

    ‘நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?’ என விசாரித்தான்.

    ‘இறைவா, உன் மீதான அச்சம் தான்’ என்று பதிலளித்தார்.

    இறைவன் அவரை மன்னித்தான்.

    ‘ஒரு பெண் ஒரு பூனையை அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் நரகத்தில் நுழைந்தாள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘எந்த மனிதரும் முதல் நபரைப் போன்று இறையருள் மீது அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. மேலும், எவரும் இரண்டாம் நபரைப் போன்று இறையருளை முழுவதுமாக நம்பி நல்லறங்கள் செய்யாமல் இருந்து விடக்கூடாது’ என ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.37 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.37 மணி
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம், மேலக்காவேரி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், ஆடுதுறை, கதிராமங்கலம், திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம், மேலக்காவேரி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், ஆடுதுறை, கதிராமங்கலம், திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சி நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளின்படி வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோன்பு காலத்தில் இரவு 8 மணிக்கு தான் தொழுகை தொடங்குவதால் வழிபாட்டு தலங்கள் திறந்திருப்பதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
    காரைக்கால் புதுத்துறை கிராமத்தில், 165 ஆண்டுகள் பழமையான முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. தற்போது அந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது.
    காரைக்கால் புதுத்துறை கிராமத்தில், 165 ஆண்டுகள் பழமையான முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. தற்போது அந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது.

    பள்ளிவாசல் வக்பு நிர்வாக சபை தலைவர் முஹம்மது யாசின் தலைமை தாங்கினார். புதுத்துறை பள்ளி வாசல் இமாம் முஹம்மது அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். மவுலவி முகம்மது ரியாஜ் மிஸ்பாஹி சிறப்புரை ஆற்றினார். இதில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
    ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான ரமலான் மாத பிறை நேற்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தென்படவில்லை. எனவே நாளை (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும்.

    இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டுள்ளார்.
    ரமலான் நோன்பு தொடங்கும் நாள்பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்களின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கரும்புக்கடைபவுசுல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் வளாகத்தில் நடைபெறுகிறது.
    கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் எம்.ஐ. முகமது அலி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-ரமலான் நோன்பு தொடங்கும்

    நாள்பற்றி அறிவிக்க ஒருங்கிணைந்த முப்பெரும் ஜமாத்களின் ரமலான் பிறை காணும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கரும்புக்கடைபவுசுல்

    இஸ்லாம் சுன்னத் ஜமாத் வளாகத்தில் நடைபெறுகிறது. பிறை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை ஹிலால் கமிட்டி தலைவர் அப்துர்ரஹீம் இம்தாதி, செயலாளர் நாசர் தீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரமலான் பிறை பார்க்கும்

    கூட்டம் ஹிலால் கமிட்டி சார்பில் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் அருகே உள்ள இர்ஷத்துல் முஸ்லிமின் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில்

    இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. பிறை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விவரம் அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
    ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்களுக்கு அதிகப்படியான இறைவழிபாடு செய்வதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நன்கொடை வழங்குவதிலும், வழக்கமாக செய்து வரும் முக்கிய கடமையாகும் இந்த மாதத்தில் மட்டும் தான் சிறப்பு தொழுகைகள் செய்வது வழக்கம்.
    குடியாத்தம் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து ஜமாத் சார்பாக நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

    ரம்ஜான் மாதம் வருகிற 13-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 12-ந் தேதி முடிவடைகிறது. இந்த மாதம் இஸ்லாமியர்களுக்கு அதிகப்படியான இறைவழிபாடு செய்வதிலும், குர்ஆன் ஓதுவதிலும், ஏழைகளுக்கு ஜகாத் என்னும் நன்கொடை வழங்குவதிலும், வழக்கமாக செய்து வரும் முக்கிய கடமையாகும் இந்த மாதத்தில் மட்டும் தான் சிறப்பு தொழுகைகள் செய்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டதால் இறைவழிபாடு செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம். அதேபோல் இந்த ஆண்டும் இரவு 8 மணிக்கு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட வேண்டும் என்ற அரசின் முடிவு இஸ்லாமிய மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுபடுகிறோம். நாங்கள் மசூதியில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியையும், முக கவசம் அணிந்து மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்போம் என உறுதி அளிக்கிறோம் எனவே எங்களுடைய மத நம்பிக்கையின்படி இறைவழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் புதிய மஸ்ஜிதுல் ஆரிபின் (மலாக்கா பள்ளி) இறை இல்ல திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் புதிய மஸ்ஜிதுல் ஆரிபின் (மலாக்கா பள்ளி) இறை இல்ல திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவில் முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் மற்றும் மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மலரை தொழில் அதிபரும், ஆரிபா குழுமம் தலைவருமான சுல்தானுல் ஆரிபின் வெளியிடுகிறார்.

    விழாவுக்கு வருவோருக்கு அன்னதானம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர், தர்கா பரிபாலன சங்கம் பள்ளிவாசல் கட்டுமான பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
    உயர்ந்த பண்பை நம்மில் வளர்த்து, இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்புடைய வெற்றியாளர்களாக வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.
    நாம் இந்த உலக வாழ்வில் எதை எதை எல்லாமோ வெற்றி என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘பெரும் தனவந்தராகவோ, அறிவுஜீவிகளாகவோ வாழ்வது வெற்றி’ என்ற மாயையில் மூழ்கி இருக்கின்றோம். அப்படி என்றால் இந்த வரையறைக்குள் வராதவர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் இல்லையா?. அப்படியானால் உண்மையான வெற்றியாளர்கள் யார்?.

    அல்லாஹ் தன் அருள் மறையிலே இதுபற்றி இவ்வாறு சொல்லுகின்றான்:

    “நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் என்றால், மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள், வீணான காரியத்தில் இருந்து விலகி இருப்பார்கள். ஜகாத் கொடுத்து வருவார்கள், தங்கள் மர்ம ஸ்தானத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும் தங்களுடைய வாக்குறுதிகளையும் பேணிக்காத்து நடப்பார்கள்” (திருக்குர்ஆன் 23:1-8)

    இப்படிப்பட்ட பண்பு கொண்டவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. இது அனைத்து மக்களுக்கும் அறநெறியைப் போதிக்கின்ற, நேர்வழியைக் காட்டுகின்ற உபதேசமாகவே அமைந்துள்ளது. நம் வாழ்வியலை அதனோடு ஒப்பிட்டு சுய பரிசோதனை செய்து பார்த்தால் நாம் வெற்றியாளரா இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

    ஒருவர் வெற்றியாளராக திகழ என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதில் முக்கியமானது இறையச்சத்துடன் கூடிய இறைவணக்கம். எனவே, நம்மைப் படைத்து, பாதுகாக்கின்ற அல்லாஹ்வுக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும். இந்த உணர்வில், உள்ளச்சத்தோடு தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினால் மனதில் தெளிவான சிந்தனை தோன்றும். உலக ஆசைகளுக்கு ஆட்படாமல் உறுதியான நிலையில் அல்லாஹ்வை வணங்கும் போது அந்த ஏக இறைவன் மகிழ்கின்றான். அவனது அருளால் நமது வாழ்வு வெற்றிப்பாதையை நோக்கி செல்லத்தொடங்கும்.

    ஒருவர் நற்காரியங்கள் செய்ய நினைத்தாலும் அதற்கு தடைபோடுகின்ற எத்தனையோ கேளிக்கைகள். வீண் விளையாட்டுகள், ஆடம்பர பொருட்கள் உள்ளன. உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டுவந்த செல்போன்களே இன்று பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாய் அமைந்துவிட்டது. சிறுவர்கள் முதல் முதுமையைத் தொட்டு நிற்பவர்கள் வரை கைபேசிகளில் கலாசார பண்பாட்டை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட காரியங்களில் இருந்து இறைநம்பிக்கை கொண்டவர்கள் விலகி இருப்பார்கள். நல்ல விஷயங்களில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள், சமுதாயம் மேம்பட வழி திறப்பார்கள்.

    அடுத்து அவர்கள், தாங்கள் ஈட்டிய வருமானங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தை ‘ஜகாத்’ எனும் ஏழை வரியாக தானமாக கொடுத்து விடுவார்கள். இதன்மூலம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் உருவாக உதவுவார்கள்.

    கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வணிகத்தில் ஈடுபடும் போது கிடைக்கும் லாபத்தை நான்கு பகுதியாக பிரிப்பார்கள். அதில் ஒன்றை தனக்காகவும், மற்றதை உறவுக்காகவும், மூன்றாமதை மீண்டும் முதலீடு செய்யவும், நாலாமதை ஏழைகளுக்கு தானமாகவும் அளித்து விடுவார்கள். இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. இவ்வாறு சமுதாய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் பாதையில் பயணிக்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான்.

    தற்கால கலாசார சீர்கேடுகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் மது மற்றும் மனம்-உடல் இச்சைகள். அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அந்த இச்சையை ஒருவன் துறந்து விடும் போது பாலுணர்ச்சிகளினால் தூண்டப்படும் பாதகங்களை தடுக்க முடியும். வன்மம் இல்லாத உலகை உருவாக்க அது வழி கோலும். அதற்கு உடந்தையாய் இருப்பவர்கள் வெற்றியாளர்கள்.

    உயர்ந்த குணங்கள் கொண்டவர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உரியவரிடம் பெற்ற அதே நிலையில் ஒப்படைப்பார்கள். அவ்வாறு இறையச்சத்துடன் அமானிதங்களை பேணிக்காத்து, நம்பிக்கையை நாம் வலுப்படுத்தி வந்தால் அவர்களும் வெற்றியாளர்களே.

    கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாவது காப்பாற்றுபவர்களும் வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். நிறைவேற்ற முடியாத, நிறைவேற்றும் எண்ணம் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் குணம் கொண்ட மக்கள், சமூகங்களின் எல்லாத் தட்டுகளிலும் நிறைந்துள்ளனர். அவர்கள் ஒருபோதும் வெற்றியாளர்களாக ஆக முடியாது.

    அருள்மறை திருக்குர்ஆன் ஒரு வசனத்தில் ஆறு பண்புகளைச் சொல்லி அதனைப் பேணிப் பாதுகாப்பவர்களே வெற்றியாளர்கள் என்று வரையறுத்துச் சொல்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வசனத்திலேயே, இவர்கள் தான் சொர்க்கத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை பெற்றவர்கள் என்றும் நற்செய்தி கூறுகிறது.

    அப்படிப்பட்ட உயர்ந்த பண்பை நம்மில் வளர்த்து, இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்புடைய வெற்றியாளர்களாக வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    இத்தகைய குண நலன் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக நம் அனைவருக்கும் நல்வாழ்க்கையை தந்தருள அந்த ஏக இறைவனை வேண்டுவோம். ஆமின்.
    நம்மை நோக்கி யாராவது ஒருவர் “நீங்கள் வலிமையானவரா?” என்ற கேள்வியைக் கேட்டால் நமக்கு எப்படி இருக்கும்?

    வலிமை என்றால் உடல் வலிமையா?, அல்லது மன வலிமையா?

    உடல் வலிமை என்றால் உறுதியான உடல் அமைப்பு கொண்டவர், தன்னை வலிமையானவர் என்று கருதலாம். மன வலிமை என்றால், மன உறுதி கொண்டவர் தன்னை வலிமையானவர் என்று குறிப்பிடலாம்.

    ஆனால், இஸ்லாம் பார்வையில் இந்த கேள்விக்கு பதில் என்ன தெரியுமா?

    இது தொடர்பாக நபி மொழிகளும், திருக்குர்ஆனும் என்ன சொல்கின்றன என்பது குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.

    இந்த உலகிலும், மறு உலகிலும் வலிமை மிக்கவர் யார் என்றால் அது ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். இதையே திருக்குர்ஆன் (42:19) குறிப்பிடும்போது: “அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்”.

    நம்மைப்படைத்த இறைவன் நமக்கு உணவளிக்கின்றான். நம்மை பராமரித்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றான். அவனுக்கு இணை எதுவும் கிடையாது. அவன் அனைவரையும்விட பலம் மிக்கவன். அந்த வலிமை மிகுந்த இறைவன் முன்பு நாம் மிகவும் பலவீனமானவர்கள். அவனுடைய அருள் இன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது.

    இருந்தாலும், மனிதர்களில் வலிமைமிக்கவர் யார் என்பதையும் அந்த ஏக இறைவன் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு முதல் தேவை- நாம் பயபக்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும். வல்லமை மிக்க இறைவன் மீதும், அவனது சக்தி மீதும் நாம் நம்பிக்கையும், அச்சமும் கொள்ள வேண்டும். வறுமை-செல்வம் என எந்த நிலையில் இருந்தாலும் இறைவனின் பாதையில் செலவு செய்ய வேண்டும். கோபத்தை அடக்கிக்கொள்ள வேண்டும். நம்மைச்சார்ந்தவர்கள் ஏதேனும் பிழை செய்தால் அதை பொறுத்துக்கொண்டு மன்னிக்கும் மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

    “(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 3:134)

    “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (திருக்குர்ஆன் 11:52).

    நபி (ஸல்) அவர்களும் வலிமை பற்றி குறிப்பிடும் போது, இவ்வாறு கூறினார்கள்: “வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே”. (நூல்: புகாரி)

    அதேநேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏதேனும் அச்சுறுத்தல், ஆபத்து வந்தால் அதற்காக கோபத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. கோபம் என்பது சுய நலனுக்காக அல்லாமல் மார்க்கத்திற்காக வெளிப்படலாம்.

    நாம் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்? எதில் தெரியுமா?

    ஏக இறைவனின் கொள்கைகளை பின்பற்றுவதில், இறையச்சம் கொள்வதில், இறைவன் வகுத்த கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் வலிமையுடன் இருக்க வேண்டும்.

    அறியாமல் செய்யும் பிறரின் தவறுகளையும், பிழைகளையும் பொறுத்துக்கொண்டு மன்னிக்கும் மன வலிமையுடன் திகழ வேண்டும்.

    தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் வல்லமை மிக்க மனவலிமையுடன் வாழ வேண்டும். உற்றார்களையும், உறவினர்களையும், மற்றவர்களையும் அரவணைத்து அன்பு செலுத்தும் மனவலிமை உள்ளவர்களாக வாழ வேண்டும்.

    இத்தகைய குண நலன் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக நம் அனைவருக்கும் நல்வாழ்க்கையை தந்தருள அந்த ஏக இறைவனை வேண்டுவோம். ஆமின்.

    பேராசிரியர். அ முகம்மது அப்துல் காதர், சென்னை.
    ×