என் மலர்
கிறித்தவம்
கிறிஸ்தவர்களின் முக்கிய விழாவான கிறிஸ்துமஸ் பெருவிழா 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் ரத பவனி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய விழாவான கிறிஸ்துமஸ் பெருவிழா 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் ரத பவனி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு அழகப்பபுரம் பங்கின் கிளை பங்குகளான வளன்நகர், பொட்டல்குளம், புன்னார்குளம், இந்திராநகர் ஆகிய ஊர்களில் நடக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு அழகப்பபுரம் நவமணி சாலையில் இருந்து பவனி ரதம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக சென்று இரவு 9.30 மணிக்கு ஆலயத்தை சென்றடையும். நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு மார்க்கெட் தெருவில் இருந்து புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக சென்று இரவு 9.30 மணிக்கு ஆலயத்தை சென்றடையும்
நாகர்கோவில கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் அமைந்துள்ளது பரிசுத்த திருக்குடும்ப ஆலயம். இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ேநற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடந்தது. இரவு 7.45 மணிக்கு ஆலய வளாகத்தில் நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்கினார்.
ஊர்தலைவர் ஆல்பர் மதியரசு கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செயலாளர் ஜூலியன், பொருளாளர் ஜோசப் ஆன்றனி, நண்பர்கள் நல சங்க தலைவர் ஜெரோம் ஜெயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து திருப்பலி நடந்தது. கன்னியாகுமரி கிளாரட் சபை அருட்பணியாளர் தனிஸ்லாஸ் மறையரையாற்றினார். விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
விழா வருகிற 27-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. தொடர்ந்து பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கிரேஸ் குணபால் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை பிரைட் மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் காலை, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. 26-ந் தேதியன்று இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
விழாவின் கடைசி நாளான 27-ந் தேதியன்று காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.
மதியம் 2 மணி, மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து பணவிளை இணைபங்குத்தந்தை ராபின் தலைமையில் கொடியிறக்கம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு வழிகாட்டுதலின்பேரில் ஊர்நிர்வாகிகள், பங்கு இறைமக்கள் உள்பட பலரும் செய்து வருகின்றனர்.

நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய டிரஸ்ட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 27-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். கன்னியாகுமரி கிளாரட்சபை அருட்பணியாளர் தனிஸ்லாஸ் மறையுரையாற்றுகிறார்.
19-ந்தேதி முதல் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி நடக்கிறது.
24-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா தலைமை தாங்க, தளவாய்புரம் பங்குத்தந்தை செயில்சிங் மறையுரையாற்றுகிறார். இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பின் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு புதுகிராமம் பங்குத்தந்தை கிறிஸ்டோ டாபின் தலைமை தாங்க, பள்ளவிளை பங்குத்தந்தை பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார்.
26-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இதற்கு புன்னைநகர் பங்குத்தந்தை ஜாய் தலைமை தாங்க, இளங்கடை பங்குத்தந்தை துரைசாமி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணி சிறப்பு ஆராதனைக்கு தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்க, கோட்டார் பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.
27-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். தேர்பவனி பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 6 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. இதற்கு பணவிளை இணைபங்குத்தந்தை ராபின் தலைமை தாங்குகிறார்.
31-ந்தேதி இரவு 11 மணிக்கு நன்றி வழிபாடும், நள்ளிரவு 11.45 மணிக்கு புதுவருட திருப்பலியும் நடைபெறுகிறது.
திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் பங்குத்தந்தை, ஊர் நிர்வாகத்தினர், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

மார்த்தாண்டம் மறை வட்ட திருத்தலமாக விமலபுரம் தூய அமலோற்பவ அன்னை ஆலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்டம் மறை வட்ட திருத்தலமாக விமலபுரம் தூய அமலோற்பவ அன்னை ஆலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருத்தல அதிபரும் பங்கு தந்தையுமான ஏசுதாஸ் கூறியதாவது:-
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறை மாவட்டத்திற்கு உட்பட்டது தூய அமலோற்பவ அன்னை ஆலயம். மறைமாவட்ட வெள்ளி விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று மார்த்தாண்டம் மறைமாவட்ட பேராலயத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய உயர் பேராயர் கர்தினால் கிளீமிஸ் காதோலிக்கோஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலையில் விமலபுரம் தூய அமலோற்பவ அன்னை ஆலயத்தை திருத்தலமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.
மறை வட்டத்தின் அனைத்து பங்குகளில் இருந்தும், பிற ஊர்களில் இருந்தும் மக்கள் திருப் பயணமாக விமலபுரத்திற்கு வந்து ஜெபிக்க சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் நற்கருணை ஆண்டவர் பிரசன்னத்தில் வைக்கப்படும். வேண்டுதல்கள் நிறைவேறி தூய அமலோற்பவ அன்னையின் அருள் விளங்கி நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அவர்கள் போலி இறைவாக்கினரிடமும், பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.
இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார். பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அதிகார வர்க்கத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்கள் போலி இறைவாக்கினரிடமும், பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.
“போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். ஒவ்வொரு மரமும் அதனதன் கனியால் அறியப்படும். போலி இறைவாக்கினரை அவர்களின் செயல்களைக்கொண்டே அறிந்துகொள்வீர்கள். நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். மரம் அதன் கனியால் அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியாது. அதைப் போல, செயல்களைக்கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத் தொனியுடன் கற்பித்தார் இறைமகன்.
ஒரு முறை இயேசு வரி வசூலிக்கும் அலுவலகத்தில் மத்தேயு என்ற ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறியதும் உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார். பின்பு, மத்தேயுவின் வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வரி வசூலிப்பவர்கள், பாவிகள் எனப் பலரும் அங்கே வந்து இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த சமய அதிகாரம் கொண்ட பரிசேயர்கள், இயேசுவின் சீடர்களைப் பார்த்து “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று சத்தமாகக் கேட்டார்கள். அது அவருடைய காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. அதனால், ‘பலியை அல்ல; இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல: பாவிகளைத்தான் நான் மீட்க வந்தேன்” என்று சொன்னார்.

கடவுளின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருந்தாலும், சாத்தானின் சோதனைகளுக்குக் களமாகவும் இது இருக்கிறது. அதில் சிக்கி அவனது அடிமைப் பொறியில் மாட்டிக்கொண்டால் மீண்டு வருதல் அபூர்வம்.
துயரத்தின் முகமறியாமல் பூமியில் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர்தான் யோபு. அவருடைய அந்தஸ்து மலைக் குன்றைப்போல உயர்ந்து நின்றது. குறைவில்லா சந்தோஷத்தின் காரணமாக ஆரோக்கியம் அவரிடம் விளைக்கைப்போல் ஒளிவீசியது. ஆனந்தமே உருவாக அவரது குடும்பம் பாசத்தில் திளைத்தது. மொத்தத்தில் ஊரும் உறவும் போற்ற அவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது வாழ்வில் சோதனைகள் சூறாவளியாகச் சூழ்ந்து தாக்கின.
ஒரே நாளில் தன் ஆஸ்திகள் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டார். திடீரென்று வீசிய சூறாவளிக் காற்று, அவருடைய பிள்ளைகளின் உயிரைப் பறித்துவிட்டுப் போனது. ஆஸ்திகளை இழந்து, அவற்றைவிடவும் உயர்ந்த செல்வம் என்று அவர் எண்ணிக்கொண்டிருந்த தன் பிள்ளைச் செல்வங்களை இழந்து மனம் வெந்து நடைபிணமாக இருந்த வேளையில் அவரை ஒரு கொடிய நோய் தாக்கியது. அந்த நோயின் விளைவாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொப்புளங்கள் பெருகின. அவை தந்த வலி அவரை சித்திரவதை செய்தது. நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் துடியாய்த் துடித்தார்.
இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும் கடவுள் மீதான நம்பிக்கையும், ஞானத்தையும் அவர் இழக்கவில்லை, கடவுளைத் திட்டவில்லை. ஆனால் மனதளவில் அவர் உடைந்துபோயிருந்தார். “தீய மனிதர்கள் என்னைவிட சந்தோஷமாக இருக்கிறார்களே (யோபு 21:7-9)” என்று ஏக்கமாகக் கூறினார். கடவுளை நோக்கி “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து வையும் (யோபு 14:13).” என்று அழுது புலம்பினார். யோபு ரொம்பவே நொந்துபோயிருந்தார்.
தான் கஷ்டப்படுவதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், கடவுளிடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். சோதனை வந்தபோதும் அதை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்(யோபு 27:5).” என்று யோபு உறுதியாகக் கூறினார்.
இழப்பையும், வேதனைகளையும் துச்சமாக மதித்த யோபுவுக்கு இருந்த அதே மனவுறுதி நமக்கும் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் பரலோகத் தந்தைக்கு உத்தமமாயிருக்க அது உதவி செய்யும். சோதனைகளோ, எதிர்ப்புகளோ, கஷ்டங்களோ எது வந்தாலும் சரி, நம் உத்தமத்தை விட்டு விலகாமல் இருக்க அது நிச்சயம் உதவி செய்யும்.
கடவுளின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருந்தாலும், சாத்தானின் சோதனைகளுக்குக் களமாகவும் இது இருக்கிறது. அதில் சிக்கி அவனது அடிமைப் பொறியில் மாட்டிக்கொண்டால் மீண்டு வருதல் அபூர்வம். நம்முடைய சகிப்புத்தன்மையும், உறுதித்தன்மையும் மட்டுமே சாத்தானை எதிர்த்துப்போரிடத் தகுந்த ஆயுதங்கள். சாத்தானால் நாம் சோதிக்கப்படும் காலங்களில் எல்லாம் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும், அது மட்டுமே முக்கியம். சில சமயங்களில் கஷ்டங்களும், சோதனைகளும் நம்மை ஓட ஓட விரட்டுவதுபோல் தோன்றலாம். இனிமேலும் நம்மால் பொறுக்க முடியாததுபோல் தோன்றலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சகித்திருப்பதற்கு யோபுவின் வாழ்க்கை நமக்கு உயரிய உதாரணம். யோபுவின் உறுதியும், சகிப்புத்தன்மையும், உத்தமத்தன்மையும் இறுதியில் அவரை மீட்டன.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழாவின் நிறைவு நாளில் மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை செலுத்தினர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கினார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. மறைமாவட்ட நிதி காப்பாளர் அலாய்சியஸ் பென்சிகர் தலைமை தாங்கினார். மறைமாவட்ட அனைத்து பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் அருள் உரையாற்றினார். 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை செலுத்தினர். தொடர்ந்து, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்குதந்தையர்கள் லெனின், சுரேஷ், சிபு, பங்குப்பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு தங்கத் தேர் பவனி நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் 10 நாட்கள் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடக்கிறது.
காலை 6.15 மணிக்கு திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிள்ளைத்தோப்பு பங்குதந்தை அமுதவளவன் தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனை நிகழ்ச்சிக்கு திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை லியோன் கென்சன் தலைமை தாங்குகிறார். நாகர்கோவில் பங்குத்தந்தை ஜான்சன் அருளுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு சூசையப்பர் தங்க தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட நிதி காப்பாளர் அலாய்சியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். மறைமாவட்ட அனைத்து பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் அருளுரையாற்றுகிறார்.
காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்கு தந்தைகள் லெனின், சுரேஷ், சிபு, பங்கு பேரவை துணை தலைவர் மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
மரியா அல்லது மரியாள் என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார்.
மரியா அல்லது மரியாள் என்பவர் இயேசு கிறிஸ்துவின் தாய் ஆவார். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா தூய ஆவியினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார். உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவை செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு இறைவாக்குகள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அவற்றில் சில பெண்ணின் வித்தாக மீட்பர் தோன்றுவார் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையில் இடம்பெறும், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்" என்ற கடவுளின் வார்த்தைகள், மரியாவையும் அவரது வித்தாக தோன்றிய இயேசுவையும் குறிக்கின்றன என்பது நம்பிக்கை. அவ்வாறே, "இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்" என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளும் இறைமகனின் தாயாக மரியாவைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.
நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய கபிரியேல் தேவதூதர், மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின் வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக இருந்தார் என்றே மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.
கன்னி மரியா பெத்லகேமில் இருந்தபோது, இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக[8] லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது. மரியாவும் யோசேப்பும் குழந்தைக்கு எட்டாம் நாளில் இயேசு என்று பெயரிட்டதாகவும், நாற்பதாம் நாளில் இயேசுவை கோவில் அர்ப்பணித்ததாகவும் நற்செய்திகள் எடுத்துரைக்கின்றன. குழந்தை இயேசுவை ஞானிகள் வணங்க வந்தபோது, மரியா அவரை தம் கையில் வைத்திருந்ததாக மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகிறார். பின்னர் ஏரோதின் சதியிலிருந்து இயேசுவைக் காப்பாற்றுவதற்காக, மரியாவும் யோசேப்பும் அவரை எகிப்துக்கு தூக்கிச் சென்றதாகவும் காண்கிறோம். பன்னிரு வயது சிறுவனான இயேசுவை அழைத்துக்கொண்டு, மரியாவும் யோசேப்பும் எருசலேம் கோவிலுக்கு பாஸ்கா விழா கொண்டாடச் சென்றதையும், கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் அலைந்து திரிந்ததையும் நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கிறார். பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்என்று வாசிக்கிறோம்.
இயேசு தம் முப்பதாம் வயதில் யோவானிடம் திருமுழுக்கு பெற்று இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். அப்போது கலிலேயாவின் கானாவில் நடைபெற்ற திருமணத்தில், தண்ணீரை திராட்சை இரசமாக்கி முதல் அற்புதம் செய்ய அன்னை மரியா தூண்டுதலாக இருந்தார் என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர் என்று யோவான் நற்செய்தி கூறுவது, இயேசுவின் பணி வாழ்வின்போதும் அவரோடு மரியா உடன் பயணித்தார் என்பதை சுட்டிக் காட்டுகிறது. மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுவதும் இதற்கு சான்றாக உள்ளது.
இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு பயணித்த அன்னை மரியா, சிலுவைச் சாவு வரையிலும் அவரை பின்தொடர்ந்தார் என்று காண்கிறோம். சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்என்று யோவான் குறிப்பிடுகிறார். இவ்வாறு தம் அன்பு சீடருக்கு ஒரு தாயையும், மரியாவுக்கு ஒரு மகனையும் இயேசு ஏற்படுத்துகிறார். பரந்த பொருளில், இயேசு தம் சீடர் அனைவருக்கும் மரியாவைத் தாயாக கொடுத்தார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர்.
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும்.
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய்மை நிறை மூவொரு இறைவா
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே
கன்னியருள் சிறந்த கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
இறையருளின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனை அன்னையே
மீட்பரின் அன்னையே
திருச்சபையின் அன்னையே
அறிவுமிகு அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
வல்லமையுள்ள அன்னையே
தயையுள்ள அன்னையே
நம்பிக்கைக்குரிய அன்னையே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே
ஞானப் பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
பக்தி நிறை பாத்திரமே
மறைபொருளின் நறுமலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
பொன் மயமான ஆலயமே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்காலையின் விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துயருறுவோருக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையரின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியரின் அரசியே
அனைத்துப் புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு பெற்ற அரசியே
திருச்சபையின் அரசியே
குருக்களின் அரசியே
குடும்பங்களின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
இறைவனுடைய புனித அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும்போது நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார்.
ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். இயேசுவை நோக்கி... “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.
நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.
இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.
பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.
பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.
மரணத்தை தழுவியவர்கள் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல. அது நம் மனதைக் குளிர்விக்கும் விவிலிய போதனை.
இயேசுவின் நண்பனும், மார்த்தாள் மற்றும் மரியாளின் தம்பியுமான லாசரு, இறந்துபோயிருந்தார். அந்த இழப்பை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. இரங்கல் தெரிவிக்கவும், ஆறுதல் கூறவும் ஆட்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் மார்த்தாள், மரியாள் இருவரது உள்ளங்களும் இதுபோன்ற ஆறுதல்களால் சமாதானம் அடையவில்லை. காரணம் தங்கள் குடும்பத்தின் மீது அன்பாயிருந்த இறைமகன் இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை.
அவர் மட்டும் ஊரில் இருந்திருந்தால் நோய்வாய்ப்பட்டிருந்த தங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று அவர்கள் நம்பினார்கள். அவன் நோயுற்றிருந்த தொடக்கத்திலேயே இயேசுவுக்கு செய்தியும் அனுப்பினார்கள். நிலைமை கைமீறிப் போவதற்கு முன்னால் அவர் வந்துவிடுவார் என மார்த்தாளும் மரியாளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால் அன்பான தம்பி மரித்துப்போனான். மனமில்லாமல் அவனை கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால் இயேசு வரவில்லை, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. லாசரு இறந்து நான்கு நாட்கள் கழித்து, பெத்தானியாவுக்கு அருகே இயேசு வந்துகொண்டிருப்பதைப் பற்றிய செய்தி மார்த்தாளுக்குக் கிடைக்கிறது. துக்கம் மனதை அடைக்க ஓடோடிப் போய் இயேசுவை எதிர்கொண்டாள்.
இயேசுவைப் பார்த்த கையோடு தன் மனதிலும் மரியாளின் மனதிலும் தேங்கியிருந்த ஏக்கத்தைக் கொட்டுகிறாள். “ஆண்டவரே, நீங்கள் இங்கு இருந்திருந்தால் எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள். மார்த்தாளுடைய நம்பிக்கையும், விசுவாசமும் இன்னும் மறைந்துவிடவில்லை. எனவே, இயேசுவைப் பார்த்து, “நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். அவளுடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்துவதற்காக இயேசு உடனடியாக அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான். கடவுளுடைய மகிமையைக் காண்பாய் (யோவா. 11:21)” என்று சொன்னார். இயேசுவை அவர்கள் லாசருவின் கல்லறைக்கு அழைத்துப்போனார்கள். அதற்குள் ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கே திரண்டுவிட்டார்கள்.
கல்லறையை மூடியிருந்த கல்லை எடுத்துப் போடச் சொல்லி இயேசு கட்டளையிட்டார். ஆனால் மார்த்தாள் அதை ஆட்சேபிக்கிறாள். “லாசரு இறந்து நான்கு நாளாகிவிட்டது, உடல் அழுகி இருக்குமே” என்று சொல்கிறாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பாய் என உனக்குச் சொன்னேன் அல்லவா?” என்று திரும்பவும் அவளுக்குச் சொல்கிறார். அவள் நம்புகிறாள், பரலோகத் தந்தையின் மகிமையைப் பார்க்கிறாள்.
அடுத்து அங்கே நிகழ்ந்த அற்புதம் மரணம்வரை மார்த்தாளுடைய மனதைவிட்டு மறையாமல் இருந்திருக்கும். “லாசருவே, வெளியே வா!” என்று இயேசு அதிகார தொனியில் அழைக்கிறார்; உடனே, உடல் முழுக்கச் சுற்றப்பட்டுள்ள துணியோடு கிடத்தப்பட்டிருந்த லாசருவின் உடல் எழுந்து அமர்கிறது. இப்போது உயிர்பெற்ற உடலோடு அந்தக் கல்லறைக் குகையின் வாசலை நோக்கி லாசரு நடந்து வருகிறார். “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள்” என்று இயேசு கட்டளையிடுகிறார்; அந்த கணம் மார்த்தாளும் மரியாளும் ஓடிப்போய் தங்கள் சகோதரனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு ஆனந்தத்தில் அழுகிறார்கள்.
அந்தக் கல்லறையின் கல்லைப்போல அவர்களது மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் நீங்கிவிடுகிறது. மரணத்தை தழுவியவர்கள் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல. அது நம் மனதைக் குளிர்விக்கும் விவிலிய போதனை.