என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் பவனி நிகழ்ச்சி நடத்தப்படும். ஒவ்வொரு கிறிஸ்தவரின் வீட்டுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா சென்று, இயேசு கிறிஸ்துவின் துதிப்பாடலை பாடி மகிழ்ந்து, உற்சாகமாக நடனம் ஆடுவார்.
    இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகெங்கிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இயேசு பிறந்த போது வானில் நட்சத்திரம் தோன்றியது. அதன் அடையாளமாக தான், தற்போது கிறிஸ்தவர்களின் வீடுகளில் பெரிய ஸ்டார்கள் அலங்காரமாக தொங்க விடப்படுகின்றன.

    டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு அழைப்பு மணியாக இந்த ஸ்டார்கள் விளங்குகிறது. மின் விளக்கு அலங்காரத்துடன் ஸ்டார்களை ஜொலிக்க விட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்துள்ளார் என்பதை அறிவித்து மகிழ்கின்றனர். தற்போது கடைகள், வணிக வளாகங்களிலும் ஸ்டார்கள் தொங்க விடப்படுகின்றன.

    அதிலும் குறிப்பாக குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் இயேசு பிறப்பை விளக்கும் விதமாக குடில்கள் அமைக்கப்படுகின்றன.

    அந்த குடில்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் ஒவ்வொருவரும் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள். மேலும் அந்த குடில்களுக்கு மின் விளக்கு அலங்காரம் செய்து பார்ப்போரை கவர்வார்கள். குமரி மாவட்டத்தில் பிரமாண்டமான குடில் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த குடிலை பொதுமக்கள் பார்க்க ஒரு வாரம் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் பவனி நிகழ்ச்சி நடத்தப்படும். ஒவ்வொரு கிறிஸ்தவரின் வீட்டுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா சென்று, இயேசு கிறிஸ்துவின் துதிப்பாடலை பாடி மகிழ்ந்து, உற்சாகமாக நடனம் ஆடுவார். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் இரவு நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரவை எதிர்நோக்கி பெரியவர்களும், சிறியவர்களும் காத்து இருப்பார்கள். வீட்டுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வந்தவுடன் இயேசு பாலன் பிறந்தார் என்ற புதுப்பாடல் பாடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படும். அப்போது இயேசு பிறப்பின் நற்செய்தியை அனைவரும் மகிழ்ச்சியாக கூறுவார்கள். தற்போது பெரிய வணிக நிறுவனங்களின் வாயில்களில் கிறிஸ்துமஸ் தாத்தா நின்று கொண்டு கடைக்கு வரும் குழந்தைகளுக்கு பரிசு பொருள் அளிப்பதும், கைகுலுக்கி வாழ்த்து கூறுவதும் வழக்கமாக உள்ளது.
    கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் கரைபுரண்டோடும். கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகள், வண்ண, வண்ண தோரணங்கள், ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் என வீதிகள் எங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும்.
    கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் கரைபுரண்டோடும். கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகள், வண்ண, வண்ண தோரணங்கள், ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் என வீதிகள் எங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும்.

    * கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கும் கிறிஸ்துமஸ் மரம் பண்டிகை கால உற்சாகத்தை மேலும் அதிகரிக்கிறது. பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது. அதன்படியே கிறிஸ்துமஸ் மரங்கள் பண்டிகையையொட்டி வாசலை அலங்கரிப்பதை தற்போதும் காண முடிகிறது.

    * 1521-ம் ஆண்டு பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்துக்கு பிறகு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை பாரீஸ் நகருக்கு கொண்டு வந்து விழா கொண்டாடியதே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக கூறப்படுகிறது. 18-ம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் முகப்பில் வைத்து அலங்கரிக்கும் வழக்கம் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெகுவாக பரவி இருந்தது.

    * கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பது கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பம்சமாகும். அதேபோல மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் ஏசுவின் 3 பரிமாணங்களை குறிக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஏசு பிறந்த நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தம் உடையது என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.
    கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தாலே நமக்குள் சந்தோஷம் ஏற்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதில் உளமாற நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
    கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தாலே நமக்குள் சந்தோஷம் ஏற்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதில் உளமாற நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லூக்கா 2:10-11 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வானதூதர் அவர்களிடம் அஞ்சாதீர்கள். இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

    இன்று ஆண்டவராகிய மேசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்து இருக்கிறார். ஆம், மீட்பர் பிறந்த மகிழ்ச்சியின் திருநாள் கிறிஸ்துமஸ். ஆதியில் கடவுள் மனிதர்களை படைத்து அவர்களிடம் பல்கி பெருகி உலகத்தை நிரப்புங்கள் என்று ஆசிர்வதித்தார். அத்துடன் இந்த உலகத்தை ஆளும் முழு அதிகாரமும் கொடுத்தார். ஆனால் மனிதன் தனது சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் கடவுளுக்கு எதிராக பாவம் செய்ய தொடங்கினான். பாவத்தினால் மனதில் நிம்மதியின்றி அமைதி இல்லாமல் பழிவாங்கும் உணர்வுடன் அலைந்தான்.

    உலக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைவன் தனது ஒரே மகனை உலகுக்கு அனுப்பி பாவத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை நல்வழிப்படுத்த எண்ணினார். இந்த உன்னத பணிக்காக இறைமகன் இயேசு மனிதனாக பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து தனது வாழ்நாளில் அன்பின் வழியை போதித்து மக்களை நல்வழிபடுத்தினார். அவரது போதனைகளால் நாம் நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனவே இறைமகன் இயேசு பிறந்த நாள் நமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை தரக்கூடியதுதான். இந்த மகிழ்ச்சியின் திருநாளை வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டு, மின்விளக்குகள் அலங்காரம் செய்து நாமும் கொண்டாடு வோம்.உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் டிசம்பர் மாதம் தொடங்கியதுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் குடில் அமைப்பது முக்கியமான பங்கு வகிக்கிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக உலகின் பல பாகங்களில் பல வகையான கலாசாரங்களில் குடில் அமைத்து கிறிஸ்து பிறப்பினை கொண்டாடி வருகிறார்கள்.

    வட அமெரிக்க நாட்டில் எல்லா வீடுகளிலும் குடில் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்தவர்கள் குடில் அமைக்கிறார்கள். மாவட்டத்தில் பிரமாண்டமான குடில் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்படுவது வழக்கம். இந்த குடிலை பார்வையிட பொதுமக்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக அனுமதிக்கப்படுவார்கள். அந்த அளவுக்கு கிறிஸ்துமஸ் குடில் சிறப்புக்குரியது.
    தஞ்சை திரு இருதயபேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    ஏசு பிறந்த நிகழ்வை கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திரு இருதய பேராலய பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் கூட்டுதிருப்பலி நடந்தது. இதில் ஏசுவின் பிறப்பினை நினைவு கூரும் வகையில் சூசையப்பர், கன்னிமரியாள் வேடமணிந்த இருவர் குழந்தை ஏசுவின் சொரூபத்தை கையில் ஏநதி வந்து பங்குத்தந்தை இருதயராஜ் கையில் வழங்கினர்.

    அதை பெற்றுக்கொண்ட அவர் சொரூபத்தை புனிதம் செய்து மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தார். அப்போது தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. திருப்பலி முடிந்தவுடன் பங்குத்தந்தை கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

    விழாவில் உதவி பங்குத்தந்தை அலெக்ஸ், மைக்கேல், சகோதரர் கிட்டேரிமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேராலய துணைத்தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    வழக்கமாக கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நேற்று சிறப்பு பிரார்த்தனை இரவு 9 மணி முதல் 10 மணிவரை நடைபெற்றது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பிரார்த்தனை இன்று அதிகாலை 5.45, காலை 7.15, 9, 11 மற்றும் மாலை 6 மணிக்கும் நடைபெறுகிறது.

    இதே போல் தஞ்சையில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் பேராலயத்தில் இயேசுவின் பிறப்பு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று நடந்தது. ஆயரின் செயலர் ஆபேல், பேராலய பங்கு தந்தையர்கள் சகாயராஜ், ஜெயசீலன் பிரபு, ஜெபராஜ் ஆகியோர் இணைந்து சிறப்பு கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.

    இதையொட்டி இரவு 11.45 மணி அளவில் திருப்பலி தொடங்கியது. இதில் முன்னுரை வாசித்தல், பாவமன்னிப்பு வழிபாடு நடந்தது. அதன்பின் நள்ளிரவு 12 மணி அளவில் உன்னதங்களிலே பாடல் பாட கிறிஸ்துபிறப்பு நிகழ்வுகள் நட்சத்திரங்கள் ஒளிர பீடத்தின் முன்பு நடந்தது.

    அதைத்தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, ஆயரின் மறையுரை, மன்றாட்டு, நற்கருணை வழிபாடு,
    இயேசு பாலன் ஆசி வழங்குதல் நடைபெற்று திருப்பலி நிறைவு பெற்றது. அதன்பின் ஒருவருக்கொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி, முத்தழகுபட்டி, குமரன் திருநகர் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் அந்தந்த பங்குத்தந்தையர்கள் தலைமையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை தலைமை போதகர் டேவிட்சன் பால்ஜேக்கப் தலைமையில் அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது.

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி, ரவுண்டுரோடு, முத்தழகுபட்டி, பஞ்சம்பட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் ஆராதனை அந்தந்த போதகர்கள் தலைமையில் நடைபெற்றது.

    திண்டுக்கல் டி. இ.எல்.சி. திருத்துவநாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை சபைகுரு காருண்யா தலைமையிலும், வெள்ளோடு அம்மாபட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.இ.எல்.சி. தேவாலயங்களிலும் அந்தந்த சபை குரு தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    புதுச்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் அதிபரும், பங்குத்தந்தையுமான குழந்தைசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பாடலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து திருப்பலி மற்றும் கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது இயேசு கிறிஸ்து பிறப்பதை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

    புதுவை மி‌‌ஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுச்சேரி- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடந்தது. நள்ளிரவு 11.50 மணிக்கு இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசே‌‌ஷ குடிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

    நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்கு தந்தைகள் வின்சென்ட், உதவி பங்குதந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் கூட்டுத்திருப்பலி நடந்தது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலில் உள்ள இயேசுவின் சொரூபத்தை வணங்கினர். அதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை செயலாளர் பால்ராஜ் மற்றும் உறுப்பினர் செய்திருந்தனர்.

    ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயத்தில் பங்குதந்தை டொம்னிக் ரெசாரியோ தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்புகள் வழங்கினர்.

    புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தூய யோவான் தேவாலய ஆயர் ஹென்றி ஜெபா ரிச்சர்ட் தலைமையிலும், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குதந்தை அந்தோணிரோஜ் தலைமையிலும் தட்டாஞ்சாவடியில் உள்ள பாத்திமா தேவாலயம், வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா தேவாலயம், கொருக்குமேடு புனித அன்னம்மாள் ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம், முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடந்தன.

    கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. சிறப்பு திருப்பலியில் பெஞ்ச்களில் 2 நபர்கள் மட்டுமே அமருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. உலக அளவில் பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று (வியாழக்கிழமை) இரவு 11 மணி அளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது.

    வழக்கமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விண்மீன் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கம்.

    தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக விண்மீன் ஆலயம் அருகில் உள்ள சேவியர் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும், அரசு அறிவுரையின்படி பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இதற்காக பேராலயம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவாலயங்களில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. உயர் மறைமாவட்ட பேராயர் ஆராதனை நடத்துகிறார்.
    இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

    மதுரை கீழவெளிவீதியில் உள்ள தேவாலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி சிறப்பு ஆராதனை நடத்துகிறார். இதுபோல், புதூர் லூர்துஅன்னை ஆலயத்தில் பங்குதந்தை தாஸ்கென்னடி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிநடைபெறுகிறது.

    தமிழக ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர் மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    ஏறக்குறைய 9 மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை, பொதுமுடக்கம், நம் அன்புக்குரியவர்களின் பிரிவு, மறைவு தந்த வருத்தம், சோகம் போன்றவற்றிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். மானுடம் தன் எதிர்நோக்கை இன்றும் தக்கவைக்க காரணம், பலர் தங்களை இந்த வலுவற்ற மானுடத்திற்கான கையளித்து உடன் நின்றது தான் எந்தவொரு எதிர்மறை நிகழ்வும் கடவுள் நம்மோடு இருக்கும் வரை நம்மை பின்னோக்கி இழுக்க முடியாது.

    குழந்தையின் எளிமையில், வலுவற்ற நிலையில், கையறுநிலையில், சார்பு நிலையில் கடவுள் வந்து பிறக்கிறார். நம் வாழ்விலும் எளியவர்களையும், வலுவற்ற நிலையில் உள்ளவர்களையும், கையறு நிலையில் உள்ளவர்களையும், சார்பு நிலையில் உள்ளவர்களையும் நாம் தேடிச் சென்றால் அங்கே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறக்கிறார்..

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தேவாலயங்களில் இன்று நள்ளிரவு முதல் சிறப்பு ஆராதனை நடைபெற இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆராதனை நடக்க உள்ளது.
    இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாட உள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள் சற்று களையிழந்து உள்ளன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அந்தவகையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. இதேபோல் அனைத்து ஆலயங்களிலும் வைக்கப்பட்டுள்ள உயரமான கிறிஸ்துமஸ் மரங்களும் மின் விளக்குகள் பளிச்சிட கண்ணைக் கவருகின்றன.

    ஒவ்வொரு ஆலயத்திலும் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதலே ஆராதனை தொடங்க இருக்கிறது. சாந்தோம் தேவாலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆராதனை நடக்கிறது. இதனை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நடத்துகிறார். அதன் தொடர்ச்சியாக நாளை காலை 6 மணி, 7.30 மணி, 10 மணி மற்றும் 11.30 மணிக்கும் ஆராதனை நடக்க இருக்கிறது.

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆராதனை நடக்கிறது. நுங்கம்பாக்கம் சி.எஸ்.ஐ. கதீட்ரல் தேவாலயத்தில் நாளை காலை 6.30 மணி, 7.30 மணி, 9 மணி என 3 நேரங்களில் ஆராதனை நடைபெற உள்ளது. இந்த ஆராதனையை ஆலயத்தின் தலைமைப் பாதிரியார் லாரன்ஸ் ஜெபதாஸ் நடத்துகிறார். இதில் காலை 7.30 மணிக்கு நடைபெறும் ஆராதனையில் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்துகொண்டு அருளுரையாற்றுகிறார்.

    கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை நடைபெற இருக்கிறது. அந்தவகையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் இன்று நள்ளிரவு நடைபெற உள்ள சிறப்பு ஆராதனையில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு டோக்கனும் வழங்கப்பட்டுவிட்டது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கதீட்ரல் தேவாலயத்தில் 3 நேரங்களில் நடைபெறும் ஆராதனைகளில், ஒவ்வொரு ஆராதனையிலும் தலா 100 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல் பல தேவாலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆலயத்தில் சிறப்பு ஆராதனையில் கலந்துகொண்டு வீடு திரும்பும் கிறிஸ்தவர்கள், தங்கள் அருகில் உள்ள குடும்பத்தினருடன் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவார்கள்.
    வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கு அடிமையாக வாழ்ந்து, துன்பப்பட்டனர். அவர்களை விடுவிக்க கடவுள் சித்தம் கொண்டார்.
    இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கு அடிமையாக வாழ்ந்து, துன்பப்பட்டனர். அவர்களை விடுவிக்க கடவுள் சித்தம் கொண்டார். 80 வயதான மோசேவை, எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் அனுப்பி வைத்து, அருள் அடையாளங்களை அற்புதங்களாகச் செய்து காண்பிக்கச் செய்தார். ஆனால் பார்வோன் மன்னன், இஸ்ரவேலர்களை விடுவிக்க மறுத்தான். இனி எகிப்தியரைத் தண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார் கடவுள்.

    கடவுள் உத்தரவிட்டபடி ஆரோன் தன் கைத்தடியால் நைல் நதியில் அடிக்க, அடுத்த நொடியே நதியின் தண்ணீர் ரத்தமாக மாறியது. மீன்கள் கொத்துக் கொத்தாய் செத்து மிதந்தன. இதனால் நதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. எகிப்தியர்கள் திகைத்துப் போனார்கள். ஆனால் மன்னன் பயப்படவில்லை.

    அதனால் நைல் நதியிலிருந்து தவளைகள் கூட்டங்கூட்டமாகப் படையெடுத்து நகரத்துக்குள் வரும்படி செய்தார் கடவுள். ஒவ்வொரு வீட்டிலும் தவளைகள் நிறைந்தன. அடுப்புகளிலும் சமையல் பாத்திரங்களிலும் படுக்கைகளிலும் கூட தவளைகள் தாவி ஏறின. இப்படி வந்த தவளைகள் செத்து மடிந்தபோது நாடே நாறியது. அவற்றை அள்ளிப் போட்டு அப்புறப்படுத்துவதில் எகிப்தியர்கள் களைத்துப்போனார்கள்.

    தவளைகளால் தன் மக்கள் பட்ட துன்பத்தைக் கண்டும் துவளாமல் இருந்தான் மன்னன். இதனால், மோசேவின் தம்பியான ஆரோனை மேற்கொண்டு வழிநடத்தினார் கடவுள். ஆரோனைத் தனது கைத்தடியால் தரையை அடிக்கும்படி செய்தார். அப்போது கிளம்பிய புழுதியும் தூசிகளும் அந்துப் பூச்சிகளாய் மாறின. அவை நாடெங்கும் நிறைந்து மக்களுக்குப் பெரும் தொல்லையாக அமைந்தன.

    இந்த மூன்று வாதைகளையும் எகிப்தியர்களோடு இஸ்ரவேலர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால் கடவுள் நான்காவது வாதையில் தொடங்கி அதன் பிறகு எகிப்தியரை மட்டுமே வாட்டும்படியாக ஏழு கஷ்டங்களைக் கொடுத்தார். நான்காவதாகப் பெரிய ஈக்களைப் பெருகச் செய்த கடவுள், அவற்றை எகிப்தியரின் வீடுகளில் மட்டுமே ஆயிரக்கணக்கில் படையெடுக்கும்படி செய்தார். இப்படி வந்து மொய்த்த ஈக்களால் அவர்கள் தூக்கம் இழந்தார்கள்.

    கடவுள் ஐந்தாவது வாதையை எகிப்தியரின் கால்நடைகளின் மீது தொடுத்தார். இதனால் எகிப்தியரின் பெரும் செல்வங்களில் ஒன்றாயிருந்த அவர்களின் ஆடு மாடுகள் அத்தனையும் செத்து விழுந்தன. பிறகு மோசேயும் ஆரோனும் கொஞ்சம் சாம்பலை எடுத்து அதைக் காற்றில் ஊதினார்கள். இதனால் எகிப்தியர் மீதும் எஞ்சியிருந்த விலங்குகள் மீதும் கொடும் வேதனைத் தரக்கூடிய கொப்புளங்கள் தோன்றின. இதனால் எகிப்தியர் கதறித் துடித்தனர். ஆனால் மன்னன் கலங்கவில்லை.

    அதன் பிறகு மோசே தன் கையை வானத்தை நோக்கி நீட்டினார், அப்போது கடவுள் இடி முழக்கத்துடன் கூடிய கல் மழையை பொழியச் செய்தார். கல் மழையைக் கண்டதும் நடுங்கிப் போனான் மன்னன். ஆனால் மனமாற்றம் ஏற்படவில்லை.

    இதனால் கடவுள் எட்டாவது வாதையை உருவாக்கும்படி ஆனது. பெரும் கூட்டமான வெட்டுக்கிளிகள் எகிப்தை நோக்கிப் படையெடுக்கும்படி செய்தார். ஒருபோதும் இப்படி கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகளை எகிப்தியரோ இஸ்ரவேலர்களோ கண்டதில்லை. கல் மழை அழிக்காமல் விட்டுவைத்த எகிப்தியரின் வயல்களில் இருந்த விளைச்சல் அனைத்தையும் தோட்டங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று தீர்த்தன.

    இத்தனை கொடிய வாதைகளைக் கடவுள் கொண்டுவந்தபோதும் மன்னன், எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று திடமாக இருந்தான். ஆனால் அவனது எண்ணத்தை இருண்டு போகும்படிச் செய்தார் கடவுள். அவர் தேசம் முழுவதையும் மூன்று தினங்கள் கடும் இருளில் தள்ளினார். ஆனால் இஸ்ரவேலர் வசித்து வந்த பகுதிகளில் மட்டும் வெளிச்சம் ஒளிர்ந்தது. கும்மிருட்டால் மன உளைச்சலுக்கு ஆளான மன்னன், அப்படியும் துணிச்சல் காட்டவே கடைசியாகப் பத்தாவது வாதையைத் தந்தார் கடவுள்.

    ஓர் இளம் செம்மறியாட்டின் ரத்தத்தைத் தங்கள் வாசல் நிலைக்கால்களில் தடவி அடையாளம் செய்துகொள்ளும்படி, தனது மக்களாகிய இஸ்ரவேலர்களிடம் சொன்னார் கடவுள். அவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் கடவுளுடைய தூதன் எகிப்து தேசத்தை வீதிவீதியாகக் கடந்து சென்றார். அப்போது எந்தெந்த வீடுகளின் நிலைக்கால்களில் ரத்தம் காணப்பட்டதோ அந்த வீட்டிலிருந்த எவரையும் அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால் ரத்தமில்லாதிருந்த எல்லா வீடுகளிலும் சாவு விழுந்தது. அந்த வீடுகளில் இருந்த தலைப் பிள்ளையையும், எஞ்சியிருந்த கால்நடைகளில் தலைச்சன் குட்டிகளையும் கடவுளின் தூதன் கொன்றுபோட்டார்.

    பத்தாவது வாதைக்குப் பின், பார்வோன் மன்னன் இனியும் இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருக்கும்படி கட்டாயப்படுத்தினால் இங்கே எல்லாம் அழிந்துபோகும் என்பதை உணர்ந்துகொண்டான். எனவே ‘இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து செல்லலாம்’ என்று உத்தரவிட்டான். எகிப்தியரின் வீடுகளில் மரணம் நிகழ்ந்த அதே இரவில் எகிப்தை விட்டு இஸ்ரவேலர்கள் புறப்பட்டார்கள்.
    குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை களை கட்டுகிறது. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று ஆகும். கிறிஸ்தவர்கள் கடவுளாக வணங்கும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் புத்தாண்டு விழாவையும் கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு கேக் மற்றும் விருந்து கொடுத்து மகிழ்வது இந்த விழாவின் சிறப்பம்சமாகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்களே உள்ளன. மேலும், புத்தாண்டு விழாவுக்கும் இன்னும் 12 தினங்களே உள்ளன.

    எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையையும், புத்தாண்டு விழாவையும் வரவேற்க கிறிஸ்தவர்கள் தயாராகி வருகிறார்கள். கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் வீடுகளில் குடில்கள் மற்றும் ஸ்டார் தோரணங்கள் அமைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்கள். மேலும் தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் வாங்கவும், கேக் வகைகளை ஆர்டர் செய்யவும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம், வேப்பமூடு பகுதி, கே.பி.ரோடு, கேப் ரோடு, கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரோடு, மணிமேடை சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, பாலமோர் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறிய ஜவுளிக்கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் வரையில் மக்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிகளை தேர்வு செய்து வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

    இதேபோல் குடில் அமைப்பதற்கு தேவையான சொரூபங்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், சீரியல் விளக்குகள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் அதிமாக இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் கேக் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் ஏராளமானோர் திரண்டு இப்போதே தங்களுக்கு தேவையான கேக் மற்றும் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்து வருகிறார்கள். எனவே கேக் கடைகள், சுவீட் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    வசதி படைத்தவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களின் போது புதிய நகைகள் வாங்குவது வழக்கம். புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டார் நகைகள் வாங்கிக் கொடுப்பார்கள் அதனால் நகைக்கடைகளிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    இதுஒருபுறமிருக்க கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழாவையொட்டி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்களில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இருசக்கர வாகனம் மற்றும் கார் விற்பனை செய்யும் நிறுவனங்களும் சலுகைகள் அறிவித்துள்ளன. எனவே இத்தகைய நிறுவனங்களிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இதனால் குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா களை கட்டியுள்ளது.
    ×