என் மலர்

  ஆன்மிகம்

  கிறிஸ்துமஸ் தாத்தா
  X
  கிறிஸ்துமஸ் தாத்தா

  இயேசு பிறப்பின் பண்டிகையில் கிறிஸ்துமஸ் தாத்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் பவனி நிகழ்ச்சி நடத்தப்படும். ஒவ்வொரு கிறிஸ்தவரின் வீட்டுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா சென்று, இயேசு கிறிஸ்துவின் துதிப்பாடலை பாடி மகிழ்ந்து, உற்சாகமாக நடனம் ஆடுவார்.
  இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகெங்கிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  இயேசு பிறந்த போது வானில் நட்சத்திரம் தோன்றியது. அதன் அடையாளமாக தான், தற்போது கிறிஸ்தவர்களின் வீடுகளில் பெரிய ஸ்டார்கள் அலங்காரமாக தொங்க விடப்படுகின்றன.

  டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு அழைப்பு மணியாக இந்த ஸ்டார்கள் விளங்குகிறது. மின் விளக்கு அலங்காரத்துடன் ஸ்டார்களை ஜொலிக்க விட்டு, தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்துள்ளார் என்பதை அறிவித்து மகிழ்கின்றனர். தற்போது கடைகள், வணிக வளாகங்களிலும் ஸ்டார்கள் தொங்க விடப்படுகின்றன.

  அதிலும் குறிப்பாக குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் இயேசு பிறப்பை விளக்கும் விதமாக குடில்கள் அமைக்கப்படுகின்றன.

  அந்த குடில்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் ஒவ்வொருவரும் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள். மேலும் அந்த குடில்களுக்கு மின் விளக்கு அலங்காரம் செய்து பார்ப்போரை கவர்வார்கள். குமரி மாவட்டத்தில் பிரமாண்டமான குடில் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த குடிலை பொதுமக்கள் பார்க்க ஒரு வாரம் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் தாத்தாவின் பவனி நிகழ்ச்சி நடத்தப்படும். ஒவ்வொரு கிறிஸ்தவரின் வீட்டுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா சென்று, இயேசு கிறிஸ்துவின் துதிப்பாடலை பாடி மகிழ்ந்து, உற்சாகமாக நடனம் ஆடுவார். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் இரவு நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரவை எதிர்நோக்கி பெரியவர்களும், சிறியவர்களும் காத்து இருப்பார்கள். வீட்டுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வந்தவுடன் இயேசு பாலன் பிறந்தார் என்ற புதுப்பாடல் பாடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படும். அப்போது இயேசு பிறப்பின் நற்செய்தியை அனைவரும் மகிழ்ச்சியாக கூறுவார்கள். தற்போது பெரிய வணிக நிறுவனங்களின் வாயில்களில் கிறிஸ்துமஸ் தாத்தா நின்று கொண்டு கடைக்கு வரும் குழந்தைகளுக்கு பரிசு பொருள் அளிப்பதும், கைகுலுக்கி வாழ்த்து கூறுவதும் வழக்கமாக உள்ளது.
  Next Story
  ×