search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்துமஸ்
    X
    கிறிஸ்துமஸ்

    மகிழ்ச்சியின் திருநாள் கிறிஸ்துமஸ்

    கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தாலே நமக்குள் சந்தோஷம் ஏற்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதில் உளமாற நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
    கிறிஸ்துமஸ் இந்த வார்த்தையை உச்சரித்தாலே நமக்குள் சந்தோஷம் ஏற்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதில் உளமாற நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லூக்கா 2:10-11 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வானதூதர் அவர்களிடம் அஞ்சாதீர்கள். இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

    இன்று ஆண்டவராகிய மேசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்து இருக்கிறார். ஆம், மீட்பர் பிறந்த மகிழ்ச்சியின் திருநாள் கிறிஸ்துமஸ். ஆதியில் கடவுள் மனிதர்களை படைத்து அவர்களிடம் பல்கி பெருகி உலகத்தை நிரப்புங்கள் என்று ஆசிர்வதித்தார். அத்துடன் இந்த உலகத்தை ஆளும் முழு அதிகாரமும் கொடுத்தார். ஆனால் மனிதன் தனது சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் கடவுளுக்கு எதிராக பாவம் செய்ய தொடங்கினான். பாவத்தினால் மனதில் நிம்மதியின்றி அமைதி இல்லாமல் பழிவாங்கும் உணர்வுடன் அலைந்தான்.

    உலக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைவன் தனது ஒரே மகனை உலகுக்கு அனுப்பி பாவத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை நல்வழிப்படுத்த எண்ணினார். இந்த உன்னத பணிக்காக இறைமகன் இயேசு மனிதனாக பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ். இயேசு கிறிஸ்து தனது வாழ்நாளில் அன்பின் வழியை போதித்து மக்களை நல்வழிபடுத்தினார். அவரது போதனைகளால் நாம் நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனவே இறைமகன் இயேசு பிறந்த நாள் நமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை தரக்கூடியதுதான். இந்த மகிழ்ச்சியின் திருநாளை வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டு, மின்விளக்குகள் அலங்காரம் செய்து நாமும் கொண்டாடு வோம்.உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள்
    இயேசு
    வின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் டிசம்பர் மாதம் தொடங்கியதுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் குடில் அமைப்பது முக்கியமான பங்கு வகிக்கிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக உலகின் பல பாகங்களில் பல வகையான கலாசாரங்களில் குடில் அமைத்து கிறிஸ்து பிறப்பினை கொண்டாடி வருகிறார்கள்.

    வட அமெரிக்க நாட்டில் எல்லா வீடுகளிலும் குடில் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்தவர்கள் குடில் அமைக்கிறார்கள். மாவட்டத்தில் பிரமாண்டமான குடில் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்படுவது வழக்கம். இந்த குடிலை பார்வையிட பொதுமக்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக அனுமதிக்கப்படுவார்கள். அந்த அளவுக்கு கிறிஸ்துமஸ் குடில் சிறப்புக்குரியது.
    Next Story
    ×