என் மலர்

    ஆன்மிகம்

    கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை
    X
    கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

    கிறிஸ்துமஸ் பண்டிகை தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    புதுச்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் அதிபரும், பங்குத்தந்தையுமான குழந்தைசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பாடலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து திருப்பலி மற்றும் கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது இயேசு கிறிஸ்து பிறப்பதை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

    புதுவை மி‌‌ஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுச்சேரி- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடந்தது. நள்ளிரவு 11.50 மணிக்கு இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசே‌‌ஷ குடிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

    நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்கு தந்தைகள் வின்சென்ட், உதவி பங்குதந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் கூட்டுத்திருப்பலி நடந்தது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குடிலில் உள்ள இயேசுவின் சொரூபத்தை வணங்கினர். அதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை செயலாளர் பால்ராஜ் மற்றும் உறுப்பினர் செய்திருந்தனர்.

    ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயத்தில் பங்குதந்தை டொம்னிக் ரெசாரியோ தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்புகள் வழங்கினர்.

    புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தூய யோவான் தேவாலய ஆயர் ஹென்றி ஜெபா ரிச்சர்ட் தலைமையிலும், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குதந்தை அந்தோணிரோஜ் தலைமையிலும் தட்டாஞ்சாவடியில் உள்ள பாத்திமா தேவாலயம், வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா தேவாலயம், கொருக்குமேடு புனித அன்னம்மாள் ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம், முத்தியால்பேட்டை புனித அந்தோணியார் ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடந்தன.

    கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. சிறப்பு திருப்பலியில் பெஞ்ச்களில் 2 நபர்கள் மட்டுமே அமருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
    Next Story
    ×