
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மார்த்தாண்டம் மறை மாவட்டத்திற்கு உட்பட்டது தூய அமலோற்பவ அன்னை ஆலயம். மறைமாவட்ட வெள்ளி விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று மார்த்தாண்டம் மறைமாவட்ட பேராலயத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய உயர் பேராயர் கர்தினால் கிளீமிஸ் காதோலிக்கோஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலையில் விமலபுரம் தூய அமலோற்பவ அன்னை ஆலயத்தை திருத்தலமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.
மறை வட்டத்தின் அனைத்து பங்குகளில் இருந்தும், பிற ஊர்களில் இருந்தும் மக்கள் திருப் பயணமாக விமலபுரத்திற்கு வந்து ஜெபிக்க சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் நற்கருணை ஆண்டவர் பிரசன்னத்தில் வைக்கப்படும். வேண்டுதல்கள் நிறைவேறி தூய அமலோற்பவ அன்னையின் அருள் விளங்கி நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.