என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழாவில் இன்று இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடக்கிறது. (இன்று )7-ம் திருவிழா, 8-ம் திருவிழா அன்று இரவு 9 மணிக்கு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவன்று இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்க தேர் பவனியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவன்று அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியஸ் தலைமையில் தங்க தேர் திருப்பலியும், 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9 மணிக்கு மாதா சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும், தொடர்ந்து 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்கு தந்தைகள் லெனின், சுரேஷ், சிபு, பங்கு பேரவை துணை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 

    இதில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கழுத்தில் அணியும் அடையாள நாடா வழங்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு உதவி பங்குத்தந்தை ரூபன் தலைமையில் விழா திருப்பலி நடந்தது. இதில் புனித அமல அன்னை சபை உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவில் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டார்.
    குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவான முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

    நிகழ்ச்சியில், பங்குதந்தை டோமினிக் கடாச்சதாஸ், குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின், நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் இணை பங்குதந்தை தாமஸ், பங்குபேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மோன் மணி, பொருளாளர் விஜிகலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து பங்குதந்தை டோமினிக் கடாச்சதாஸ் கூறுகையில், முளகுமூடு தூய மரியன்னை பேராலயம் குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ்சால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா விரைவில் நடைபெற உள்ளது. இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைஆசிர் பெற்று செல்கிறார்கள் என்றார்.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவின் முதல்நாளாக 4-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5. 30 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது. 10 மற்றும் 11-ந்தேதிகளில் இரவு 9 மணிக்கு திருச்சப்பர பணி நடைபெறுகிறது.

    விழாவில் 12-ந்தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடக்கிறது. 13-தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலி, 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழாவில் பங்கு மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருமாறு பங்கு பேரவை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்டனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் லெனின் சுரேஷ், பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்டின் செல்வகுமார் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    நாகர்கோவில், கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழா நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1-ந் தேதி 8-ம் நாள் திருவிழா நடந்தது. அன்று இரவு தேர்ப்பவனி நடைபெற்றது.

    வழக்கமாக தேர்ப்பவனி பேராலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அப்போது தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் உருண்டு வணங்கியும், கும்பிடு நமஸ்காரம் செலுத்தியும் தங்களுடைய நேர்ச்சையை செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி ஆலய வளாகத்துக்குள்ளேயே தேர்ப்பவனி நடந்தது. நேற்று முன்தினம் 9-ம் நாள் திருவிழா நடந்தது.

    திருவிழாவின் 10-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழாத் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றினார். அவருடன் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் கிளாரியுஸ், செயலாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், மறைவட்ட முதல்வர் மைக்கில் ஏஞ்சலுஸ், பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர் ஆகியோரும் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது. தேர்ப்பவனியின் போது புனித மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார், புனித தேவமாதா ஆகியோரின் சொரூபம் தாங்கிய 4 தேர்கள் பேராலய வளாகத்துக்குள் பவனியாக வந்தன. கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பக்தர்கள் தேர்ப்பவனியின்போது வழிபாடு செய்தனர். பலர் பூக்கள், மாலைகள், உப்புமிளகு, மெழுகுவர்த்திகள், புதுத்துணிகள், பழவகைகள் ஆகியவற்றை காணிக்கையாகவும், நேர்ச்சையாகவும் செலுத்தி வழிபட்டனர்.

    மாலை 6 மணிக்கு தேரில் திருப்பலி நடந்தது. புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    திருவிழா தொடர்பாக பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் கூறுகையில், “புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா சீரும், சிறப்புமாக நடந்து முடிந்தது. அரசின் வழிகாட்டுதல்படியும், அதிகாரிகளின் அறிவுரைப்படியும் கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி திருவிழாவை நடத்த ஒத்துழைத்த அனைத்து பக்தர்களுக்கும் பேராலய நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் திருவிழா நடத்த தகுந்த கொரோனா கால வழிகாட்டுதல்களை வழங்கிய அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்“ என்றார்.
    சவேரியார் பேராலயத்தின் 9-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்களும் ஆலய வளாகத்தில் வலம் வந்தன. ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி மற்றும் ஆடம்பரக்கூட்டு திருப்பலி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் முதல் நாள் தேர்பவனி, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுக்குட்பட்டு ஆலய வளாகத்திற்குள் இரவு 9 மணிக்கு நடந்தது. 9-ம் நாள் விழாவான நேற்று அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடந்தது.

    இதில் கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ், செயலாளர் இமானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், மறைமாவட்ட குருக்கள், பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேள தாளம் முழங்க தேர்பவனி தொடங்கியது.

    முதலில் காவல் சம்மனசு, செபஸ்தியார் மற்றும் சவேரியார் தேர், மாதா தேர் என 4 தேர்கள் சவேரியார் ஆலய வளாகத்திற்குள் வலம் வந்தன.

    10-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இரவு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி நேற்று இரவு நடைபெற்றது.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி நேற்று இரவு நடைபெற்றது. 

    இதையொட்டி நேற்று காலை பங்குத்தந்தை ஆண்டோ தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் சிறப்பு திருப்பலி நடத்தினர். இதைத்தொடர்ந்து சவேரியார் திருஉருவத்துடன் கூடிய சப்பர பவனி நடைபெற்றது. தெற்கு பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ராஜேஷ், உதவி பங்குதந்தைகள் மிக்கேல் பிரகாசம், லூர்து ராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய 8-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று இரவு தேர் பவனி நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆலய வளாகத்தில் தேர்பவனி நடந்தது.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும், உலகில் புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் பேராலயமாகவும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் 3-ந் தேதி நிறைவு பெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. நேற்று 7-ம் நாள் திருவிழா நடந்தது. 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். 8-ம் நாள் திருவிழாவான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஆலய வளாகத்தில் தேர்ப்பவனி நடந்தது.

    அதில் குறைந்த அளவிலான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பயன்படுத்தியும் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் தேர்ப்பவனி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.
    கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும், உலகில் புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் பேராலயமாகவும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் 3-ந் தேதி நிறைவு பெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. நேற்று 7-ம் நாள் திருவிழா நடந்தது. 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். 8-ம் நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்ப்பவனி நடைபெற இருக்கிறது.

    இதற்கிடையே திருவிழாவில் பங்கேற்பவர்களை கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றச் செய்வது, அதிகமாக கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

    இதில், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது பங்குத்தந்தை மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கூறியதாவது:-

    சவேரியார் பேராலய திருவிழாவின் 9, 10-ம் நாள் திருவிழாக்களின்போது வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றும் வகையில் கூட்டம் அதிகமாகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பலியின்போது 100 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட வேண்டும். அதன்பிறகு வருபவர்களை ஆலயத்துக்குள் சென்று பிரார்த்தனை செய்து செல்லும் வகையில் பக்தர்களை நகர்த்த வேண்டும். கூட்டம் ஒரே இடத்தில் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    இதுதொடர்பாக பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன் கூறுகையில், “கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றியும், அதிகாரிகள் உத்தரவு படியும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி நடத்த திட்டமிட்டுள்ளோம். வழக்கமாக 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது ஆலயத்துக்கு வெளியே சுற்றுவட்டார பகுதிகளில் தேர்ப்பவனி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பேராலய வளாகத்துக்குள் தேர்ப்பவனி நடத்த அதிகாரிகள் அனுமதி தந்துள்ளார்கள். எனவே தேர்ப்பவனி சுற்று வட்டாரப்பகுதியில் நடைபெறாது. பேராலய வளாகத்துக்குள் மட்டுமே தேர்ப்பவனி நடைபெறும். அதேபோல் கொடியிறக்கத்து அன்று அதாவது 8-ந் தேதி புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் திருப்பண்டம் முத்தி செய்தல் நிகழ்ச்சி, அன்பின் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது” என்றார்.

    எனவே இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ள தேர்ப்பவனி புனித சவேரியார் பேராலய வளாகத்துக்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. இந்த திருவிழாவையொட்டி வருகிற 3-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    மாலன்விளை சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழாவில் பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ச்சித்தார்.
    மார்த்தாண்டம் சேகரத்துக்கு உட்பட்ட மாலன்விளை சி.எஸ்.ஐ. பாஸ்ட்ரேட் சபை சார்பில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. இதன் அர்ப்பண விழா மற்றும் 45-வது சபை நாள் விழா நடந்தது. மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். சபை போதகர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சி.எஸ்.ஐ. குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்து அர்ச்சித்து ஆசியுரை வழங்கினார். ஆதீன மாமன்ற உறுப்பினர் ஜெயசிங் வரவேற்று பேசினார். சபை செயலாளர் பிராங்ளின் ஜோஸ் அறிக்கை படித்தார். பொருளாளர் மற்றும் கட்டிட குழு கன்வீனர் ராஜரத்தினம் ஆலய கட்டிட அறிக்கை சமர்ப்பித்தார்.

    நிகழ்ச்சியில், பேராய செயலாளர் பைஜூ நிசித்பால், துணைத்தலைவர் தம்பி விஜயகுமார், பொருளாளர் தங்கராஜ், முன்னாள் செயலாளர்கள் கிறிஸ்டின் பாபு, அசோகன் சாலமன், விஜயதரணி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன், பங்குத்தந்தை அருள், காஞ்சிரகோடு மண்டல கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், பெரும்புளி லூத்தரன் சபை போதகர் பென்ஜமின், மார்த்தாண்டம் வர்த்தக சங்க துணைத்தலைவர் சுந்தர்ராஜ், சபை கமிட்டி உறுப்பினர்கள் ராஜ ஜஸ்டின், எபிராஜ், சுபா மல்லிக குமாரி, ரமேஷ், ஜான் ஜெயசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சபை போதகர் விஜயகுமார் தலைமையில் சபை குழு, கட்டிட குழு மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழாவில் நாளை ஆடம்பர கூட்டு திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
    உலக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கிள் ஏஞ்சலுஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர், பேராலய அருட்பணி பேரவை நிர்வாகிகள் அந்தோணி சவரிமுத்து, திலகராஜ், ஆஸ்டின், செலுக்கஸ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, மறையுரை நடைபெற்று வருகிறது. நாளை-  1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கும்பிடு நமஸ்காரம் நேர்ச்சை செய்வார்கள்.

    2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும். அன்றைய தினமும் இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.திருவிழாவையொட்டி கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சவேரியார் பேராலய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    மார்த்தாண்டம் சேகரத்துக்கு உட்பட்ட மாலன்விளை சி.எஸ்.ஐ. பாஸ்ட்ரேட் சபை புதிய ஆலய அர்ப்பண விழா நாளை நடக்கிறது.
    மார்த்தாண்டம் சேகரத்துக்கு உட்பட்ட மாலன்விளை சி.எஸ்.ஐ. பாஸ்ட்ரேட் சபை சார்பில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. இதன் அர்ப்பண விழா மற்றும் 45-வது சபை நாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு நடக்கிறது. மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தங்கையா தலைமை தாங்குகிறார். சபை போதகர் விஜயகுமார் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்துகொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணித்து வைத்து ஆசியுரை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் ஆதீன மாமன்ற உறுப்பினர் ஜெயசிங் வரவேற்று பேசுகிறார். சபைச் செயலாளர் பிராங்கிளின் ஜோஸ் அறிக்கை படிக்கிறார். பொருளாளர் மற்றும் கட்டிட குழு கன்வீனர் ராஜரத்தினம் ஆலய கட்டிட அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.

    விழாவில் பேராய தலைவர்கள், முன்னாள் போதகர்கள், திருப்பணியாளர்கள் வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவையொட்டி நாளை மாலை 6.30 மணிக்கு சிறப்பு நன்றி பிரார்த்தனை நடக்கிறது. இதில் போதகர் அருள்தாஸ் சிறப்பு செய்தி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சபை போதகர் விஜயகுமார் தலைமையில் கட்டிட குழுவினர், சபை மக்கள் செய்துள்ளனர்.
    ×