என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 3-ம் நாள் திருவிழாவில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.

    3-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி நடந்தது. இதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு முட்டம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜாண்ரூபஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
    அழகப்பபுரம் அருகே சவேரியார் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
    அழகப்பபுரம் அருகே சவேரியார் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருப்பலி ஆகியவை நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அருட்பணியாளர் போஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை போன்றவை நடைபெறும். 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சேவியர்புரம் பங்குத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் பங்கு மேய்ப்புப் பணி குழுவினர் செய்துள்ளனர்.
    பாளையங்கோட்டை சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் சவேரியார் ஆலயம் உள்ளது. மிகப்பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. உளவியல் வல்லுநர் அருள் அடிகளார் மறையுரை ஆற்றினார்.

    பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதிரியார்கள் ராஜேஷ், மிக்கேல் பிரகாசம், லூர்து ராஜ் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலையில் மறையும் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஒப்புரவு அருட்சாதனம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன. 2-ந் தே தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படுகிறது. அன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சேவியர் ஆலய பங்குத் தந்தைகள் செய்துள்ளனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கும்பிடு நமஸ்காரம் நேர்ச்சை செய்வார்கள்.
    உலக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கிள் ஏஞ்சலுஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர், பேராலய அருட்பணி பேரவை நிர்வாகிகள் அந்தோணி சவரிமுத்து, திலகராஜ், ஆஸ்டின், செலுக்கஸ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கும்பிடு நமஸ்காரம் நேர்ச்சை செய்வார்கள்.

    2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும். அன்றைய தினமும் இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.திருவிழாவையொட்டி கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சவேரியார் பேராலய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    இயேசு ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், யூத மதத் தலைவர்களுக்கும், பரிசேயர்களுக்கும் அவை போதுமானவையாக இல்லை
    இயேசு ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், யூத மதத் தலைவர்களுக்கும், பரிசேயர்களுக்கும் அவை போதுமானவையாக இல்லை. இத்தனைக்கும் அவர் அற்புதங்கள் செய்வதை அவர்களே நேரில் பார்த்திருக்கிறார்கள். இருந்தும் இயேசுவைச் சோதிப்பதற்காக சில யூதத் தலைவர்களும் பரிசேயர்களும் அடங்கிய குழுவினர் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “நீர் கடவுளின் மகன் என்பதை நிரூபிக்க எங்கள் முன்பாக அற்புதம் ஒன்றை நிகழ்த்திக் காட்டும். அதையே நாங்கள் அடையாளமாகக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.

    அதற்கு இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல காலநிலை என்கிறீர்கள். உதயத்தில் வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். அதைப் போலவே, தற்போது நடப்பவற்றை நீங்கள் கண்டு வருகிறீர்கள். இவையும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, ‘யோனா’வின் அடையாளத்தையன்றி வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறி னார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார். இயேசு யோனாவின் அடையாளம் என்று கூறியதன் பொருளை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    ‘யோனா’ அடையாளம் என்பதை பரிசேயர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக வேதத்திலிருந்து யோனாவின் வாழ்க்கையை அவர் எடுத்துச் சொன்னார். “இரவு பகலாக மூன்று தினங்கள் யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தார். அதைப் போலவே இறைமகனாகிய இயேசுவும் இரவு பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்” என்கிறார். யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது. பிறகு, இறந்து உயிர்த்தெழுந்ததைப் போல அதன் வயிற்றிலிருந்து யோனா உயிருடன் வெளியே வந்தார். அதைப் போல, தானும் இறந்த, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படப்போவதாக இயேசு கூறினார். அதைப் போலவே இயேசு பிற்பாடு உயிர்த்தெழுந்தபோது, இந்த ‘யோனாவின் அடையாளத்தை’ யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மனம் மாறவும் இல்லை.
    முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
    முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. காலையில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்க சேவா சங்க உறுப்பினர்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.

    திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பங்கு அருட்பணியாளர் சேவியர் புரூஸ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.
    பெரிய நாயகி மாதா ஆலயம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிருத்துவப் புனிதத்தலம் ஆகும். இந்த கிருத்துவக் கோயிலானது புதுக்கோட்டத்தை மாவட்டத்தின் ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.
    பெரிய நாயகி மாதா ஆலயம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிருத்துவப் புனிதத்தலம் ஆகும். இந்த கிருத்துவக் கோயிலானது புதுக்கோட்டத்தை மாவட்டத்தின் ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

    இந்தக் கோயிலானது தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் ஆவூா் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயமானது திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

    இயேசு சபையைச் சாா்ந்த பொிய சஞ்சீவி நாதா் எனும் அருட்தந்தை வெனான்ஸியுஸ் புட்சே பழைய ஆவூாில் ஒரு சிற்றாலயத்தை 1697-ல் கட்டி, அந்த ஆலயத்தை விண்ணேற்பு அன்னைக்கு அா்ப்பணித்தாா்.

    தொடா்ந்து நிகழ்ந்த வெள்ளப்பெருக்காலும் அதன்பின் தொண்டைமானுக்கும் நாயக்கா்களுக்கும் நடைபெற்ற உள்நாட்டு யுத்தங்களின் காரணமாக புதிய ஆவூா் எனும் கிராமத்தை அருட்தந்தை.பிரான்சிஸ் ஹோமன் நிா்மாணித்தாா். பின்னா் பல அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தற்போது உள்ள பொிய வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை வீரமாமுனிவரால் 1750 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

    சிலுவை வடிவில் உள்ள ஆலயம் 242 அடி நீளம், 28 அடி அகலம் மற்றும் 28 அடி உயரம் 8 தூண்கள் உடைய குவிமாடம் பிரமாண்ட உயரம் உடைய முகப்பு.
    நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.
    அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

    நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக இந்த தேவ வசனங்களை வைத்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் பிள்ளை(கள்) இப்போது உங்கள் வயிற்றில் உள்ளதோ அல்லது வளர்ந்து வருகிறார்களோ, அல்லது வளர்ந்து பெரியவர்களாகி குடும்பம் நடத்தி வருகிறார்களோ எப்படி இருந்தாலும் இந்த வசங்களை வைத்து நீங்கள் அவர்களுக்காக தினமும் ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.

    நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார் (எரேமியா 1:5).

    என் பிள்ளைகளையும் நீர் கருவிலே தெரிந்து கொண்டதற்காக ஸ்தோத்திரம். என் பிள்ளைகளைப் பரிசுத்தம் பண்ணி அவர்களுக்கு நீர் வைத்துள்ள திட்டத்தை நிறைவேற்றும். ஆமென்.

    இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங்கீதம் 127: 4-6).

    என் கருவில் உருவான பிள்ளைகள் உம்முடைய சுதந்திரம் என்று சொன்னீரே, நன்றி ஐயா. அவர்கள் என் குடும்பத்தில் பலவான்களாக இருப்பார்களாக. அவர்கள் ஒருநாளும் வெட்கப்படாதபடி செய்யும். ஆமென்.

    பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதிமொழிகள் 22: 6).

    என் பிள்ளையை என்னை நம்பி என் கையில் ஒப்புக்கொடுத்தீரே, நன்றி ஐயா. அவனை நல்ல வழியிலே நடத்த நீர் என்னிடம் எதிர்பார்க்கிறீர். நான் நல்ல வழியை அறிந்து, அதில் நடந்து, அவனையும் அதில் நடத்த எனக்கு கிருபைத் தாரும், ஆண்டவரே. ஆமென்.

    என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை (1 யோவான் 1: 3).

    என் பிள்ளைகளை சத்தியத்தில் நடத்த எனக்கு ஞானமும், கிருபையும் கிடைக்க ஜெபிக்கிறேன். நல்ல ஆலயத்தில் எங்களை நாட்டும், உம்முடைய வசனத்தினால் எங்களை போஷியும். உம்மை சந்தோஷப்படுத்தக் கிருபைத் தாரும், ஆமென்.

    குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார் (மத்தேயு 21:16).

    என் பிள்ளைகளின் வாயில் எப்போதும் துதி இருப்பதாக. அவர்கள் உமக்குப் புதுப் பாடல்களை எழுதுவர்களாக. ஆனந்த துதியுள்ள உதடுகளால் அவர்கள் உம்மை எப்போதும் போற்றுவார்களாக. அவர்கள் இல்லங்களில் எப்போதும் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் இருப்பதாக. கர்த்தரை எப்படி துதிப்பது என்பதை அவர்கள் என்னிடமும் கற்றுக்கொள்வார்களாக, ஆமென்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயமும் ஒன்று ஆகும். இது புனித சவேரியாருக்கு உலகிலேயே முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் ஆகும்.

    இங்கு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கும் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 3-ந் தேதியுடன் நிறைவடைகிறது. முதல் நாள் திருவிழாவான வருகிற 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராஜாவூர் பங்கு மக்கள் சார்பில் திருப்பலியும், 8 மணிக்கு அருகுவிளை மக்கள் சார்பில் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். முதல் நாள் திருவிழாவை குமரி மாவட்ட போலீசார் சிறப்பிக்கிறார்கள்.

    தொடர்ந்து திருவிழா நாட்களில் காலையில் இருந்து மதியம் வரை பல்வேறு அமைப்புகள், பக்த சபைகள், பல்வேறு துறையினர், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் சார்பில் திருப்பலிகளும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பரக் கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. 6-ம் நாள் திருவிழாவான 29-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது.

    8-ம் நாள் திருவிழாவான வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது. 2-ந் தேதி 9-ம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி நடத்துகிறார். அன்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழா டிசம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடக்கிறது. காலை 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமை தாங்குகிறார். 11 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    தேர்ப்பவனி நடைபெறும்போது பக்தர்கள் புனித சவேரியார், தேவமாதா தேர்களின் பின்னால் தலையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், தேருக்குப்பின்னால் தரையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது இந்த விழாவின் சிறப்பம்சமாகும். தேர்ப்பவனிக்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அரசு அனுமதித்தால் 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின்போது தேர்ப்பவனி ஆலயத்தின் வெளிப்பகுதிகளில் நடைபெறும். இல்லை என்றால் ஆலய வளாகத்துக்குள் மட்டும் நடைபெறும்.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு திருவிழா திருப்பலிக்குப் பின் பொதுக்கூட்ட நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் அரசு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே ஆலய வளாகத்துக்குள் வரவேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்து வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். ஆலயத்துக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். கிருமி நாசினி வழங்கப்படும். முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்பதும் கண்காணிக்கப்படும். மேலும் திருவிழாவில் பங்கேற்போர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான 25 ஆயிரம் துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்படும். இதற்காக 150 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருவிழா நிறைவடைந்த பிறகு 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடர்ந்து புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் திருப்பண்ட பவனி மற்றும் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சி, நற்கருணை ஆசீர் நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது பங்கு அருட்பணிப் பேரவை துணைத்தலைவர் திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, இணைச்செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் செலுக்கஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ஜெபம் என்பது அடிப்படையில் ஒரு தகவல் பரிமாற்றம். கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை நோக்கி தன் தேவைக்காகத் தகவல் பரிமாற்றம் செய்வது செபம் அல்லது மன்றாட்டு.
    'நீங்கள் அவ்வாறு ஜெபிக்க வேண்டாம்...
    ஏனெனில்...உங்களுக்கு என்ன தேவையென்று உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
    ஆகவே,
    நீங்கள் இவ்வாறு செபியுங்கள்...'
    (காண்க மத்தேயு 6:7-15)

    ஜெபம். புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல்.

    நம்மையறியாமலேயே நாம் கற்றுக்கொண்ட பல பழக்கங்களில் ஒன்று செபித்தல்.

    ஜெபம் என்பது அடிப்படையில் ஒரு தகவல் பரிமாற்றம். கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை நோக்கி தன் தேவைக்காகத் தகவல் பரிமாற்றம் செய்வது செபம் அல்லது மன்றாட்டு.

    ஆக, இங்கே இருவர் இருக்கின்றனர். ஒருவர், தேவையில் இருப்பவர். மற்றவர், தேவையைப் பூர்த்தி செய்பவர். மன்றாட்டு எப்பொழுதும் கீழிருந்து மேல்நோக்கி செல்கின்றது.

    ஜெபம் பற்றியும், செபத்தில் தேவையான விடாமுயற்சி பற்றியும் நற்செய்தி நூல்களும், புதிய ஏற்பாட்டு கடிதங்களும் நிறையவே சொல்கின்றன.

    மேலும் செபத்தில் தேவையான நம்பிக்கை, மனவுறுதி ஆகியவையும் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன.

    நாளைய நற்செய்தி வாசகத்தில இயேசு புறவினத்தாரின் செபம் போல உங்கள் செபம் இருக்கக் கூடாது என்று தன் சீடர்களுக்கு வலியுறுத்துகின்ற இயேசு, ஒரு முன்மாதிரியான செபத்தையும் தருகின்றார்.

    அப்படி இருக்கக் கூடாது, ஆனால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இயேசு இடையில் சொல்வது, 'உங்களுக்கு இவையெல்லாம் தேவையென்று உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்!'

    தவக்காலத்தின் முதல் நாளில் 'உங்கள் தந்தை' என்று நாம் சிந்தித்தோம். இந்த வாசகப் பகுதியில் நாம் காணும் வார்த்தை 'வானகத் தந்தை'. ஆக, இந்த வார்த்தை முன்னிறுத்துவது என்ன? நம் தந்தை வானகத்தில் இருக்கிறார். நாம் கீழே, பூமியில் இருக்கிறோம். செபம் கீழேயிருந்து, மேல் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.
    இப்ப நம்ம கேள்வி என்னன்னா, 'அவருக்குத்தான் நம் தேவை என்ன என்று தெரியுமே!' அப்படியிருக்க நாம் ஏன் அதைக் கேட்க வேண்டும்?

    தினமும் காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கு நாம் ரிமைன்டர் கொடுக்க வேண்டுமா என்ன? இன்னைக்கு நான் இதச் செய்யப்போறேன், அவங்களப் பார்க்கப் போறேன், நீண்ட பயணம் போறேன் - நீதான் பார்த்துக்கணும்! அப்படின்னு சொல்லனுமா?

    செபம் கடவுளுக்குத் தேவை என்பதல்ல. அது நமக்குத் தேவை. இந்தச் செபம் தான் கடவுளின் உடனிருப்பை நமக்கு நினைவுபடுத்துகின்றது.

    நமக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். எதற்காக அவர்களோடு உரையாட நாம் பிரியப்படுகிறோம்? பேசாவிட்டால் உறவு முறிந்து விடும் என்பதற்காகவா. இல்லை. நம் உரையாடலில் நாம் ஒருவர் மற்றவரோடு இருக்கின்ற உடனிருப்பை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக்கொள்கின்றோம். ஆனால், கடவுளுக்கு இந்த நினைவுபடுத்தல் தேவையில்லை. நமக்குத் தேவையாக இருக்கிறதே!

    ஆகவே, ஜெபம் என்பது ஒரு நினைவூட்டல். யாருக்கு? நமக்கு! யாரைப் பற்றி? கடவுளைப் பற்றி!

    பல நேரங்களில் ஜெபம் என்பது நமக்கு ஒரு 'விஷ் லிஸ்ட்' போலத்தான் இருக்கிறது. 'இது வேண்டும்! அது வேண்டும்! நான் நல்லாப் படிக்கணும்! என் மகனுக்கு நல்ல வரன் அமையணும்!' இப்படி விண்ணப்பங்கள் தான் அதிகம் இருக்கிறது.

    ஒருசிலர் சொல்வார்கள்: முதலில் புகழ்ச்சி, இரண்டு மன்னிப்பு, மூன்று நன்றி, நான்கு விண்ணப்பம் என நம் செபம் இருக்கவேண்டும். இது எப்படி இருக்கிறது என்றால் முதலில் உள்ள மூன்றும் கடவுளின் தலையில் 'ஐஸ்கட்டி' வைப்பது போலத்தான் இருக்கின்றது.

    ஜெபம் என்பது ஒரு உறவு. அதற்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனம் கூட செபம்தான். நம் உள்ளத்தின் உள்ளறையில் இருக்கின்ற இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவே ஜெபம்.
    நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கிறோம். ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். ஆக, நாம் இருந்தாலும், இறந்தாலும் ஆண்டவரோடு இருப்போம். அதாவது, உயிரோடு இருப்போம்.
    இறப்பை நமக்கு பிடிப்பதில்லை.

    அல்லது பிறப்பை பிடிக்கும் அளவுக்கு நமக்கு இறப்பைப் பிடிப்பதில்லை.

    இறப்பில் ஒரு திரை விழுகிறது. திரைக்கு அந்தப் பக்கம் என்ன என்பது நமக்குத் தெரிவதில்லை. திரைக்கு அந்தப் பக்கம் சென்ற எவரும் இதுவரை நம்மிடம் வந்து 'இப்படித்தான் இருக்கும்!' என்று எதையும் சொல்லியதில்லை. ஏன்? வாழும்போதே அடுத்த நிமிடத்திற்கும் நமக்கும் இடையேகூட ஒரு திரை இருக்கின்றதே.

    இறப்பு நம் குடும்பத்தில், சமுதாயத்தில் ஒரு நிரப்பமுடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிடுகின்றது.

    நாம் கண்ட கனவுகளை, கட்டிய கோட்டைகளை பொடியாக்கிவிடுகிறது.

    என்னதான் இறப்பை நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அது ஒரு அழையா விருந்தாளியாக நம் நடுவீடு வரை வந்துவிடுகிறது.

    ஆனால், இறப்புதான் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது.

    வாழ்வை வேகமாக்கி முன்னே தள்ளுகிறது.

    பிறப்பை போன்றே இறப்பும் ஒரு எதார்த்தம்.

    நம் உரையாடலில் முதல் வார்த்தை இறந்தால்தானே அடுத்த வார்த்தை பிறக்க முடியும்!
    நம் நடையில் முதல் அடி இறந்தால்தானே அடுத்த அடி பிறக்க முடியும்!
    நம் உடலில் முதல் செல் இறந்தால்தானே அடுத்த செல் பிறக்க முடியும்!
    ஆக, இறத்தலும், பிறத்தலும் இணைந்தே செல்கின்றன.

    'கிறிஸ்தவர்களாகிய நமக்கு வாழ்வு முடிவதில்லை. வாழ்வு மாற்றப்படுகிறது. மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும், விண்ணகத்தில் நிலையான வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது!' என்று திருப்பலியில் நாம் தொடக்கவுரையில் செபித்தாலும், மனத்தின் ஓரத்தில் முடிவில்லா வாழ்வு குறித்த கேள்விக்கு நாம் விடை தெரியாமலேயே நிற்கின்றோம்.

    தொடக்கத் திருச்சபையினர் கொண்டிருந்த பல கேள்விகளுள் முதன்மையாக இருந்ததும் இறந்தோர் உயிர்ப்பே. இந்தக் கேள்விக்குத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 4:13-17) விடையளிக்க முயற்சி செய்கின்றார். தெசலோனிக்கருக்கு எழும் கேள்விகள் இரண்டு:

    1. இறப்பிற்குப் பின் வாழ்வு இருக்கிறதா?
    2. இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு நமக்கு இயேசுவால் அல்லது அவரது உயிர்ப்பால் வந்தது என்றால், இயேசுவுக்குமுன் இறந்தவர்கள் நிலை என்ன? அவர்களும் உயிர்ப்பார்களா?

    இவற்றில் இரண்டாவது கேள்வி மிக நுணுக்கமானது. 'ஆம், உயிர்ப்பார்கள்' என்று பதில் சொன்னால், 'அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்' என்று கேட்பார்கள். 'இல்லை, உயிர்க்க மாட்டார்கள்' என்று பதில் சொன்னால், 'இயேசுவின் உயிர்ப்புக்கு ஆற்றல் இல்லையா?' என்று கேட்பார்கள். வழுக்குகின்ற மணலில் இப்போது பவுல் நின்றுகொண்டிருக்கின்றார்.

    பவுலின் பதில் ரொம்ப சிம்பிள்:

    நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கிறோம். ஆண்டவர் உயிரோடு இருக்கிறார். ஆக, நாம் இருந்தாலும், இறந்தாலும் ஆண்டவரோடு இருப்போம். அதாவது, உயிரோடு இருப்போம்.

    இந்தப் பதில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டும் இருந்தார்கள் என்றால் சரி என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், எண்ணற்ற மதங்கள், எண்ணற்ற கடவுளர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இறந்தவுடன் அவரை யார் கிறிஸ்தவர், இசுலாமியர், இந்து, மதம் சாராதவர் என அடையாளம் கண்டு, அந்தந்த இடத்திற்கு 'சார்ட் அவுட்' செய்வார்? கிறிஸ்தவ மதத்திலேயே எத்தனை பிரிவுகள்? சிலருக்கு மூவொரு இறைவன், சிலருக்கு இயேசு, சிலருக்கு யெகோவா, சிலருக்கு தூய ஆவி என வேறு வேறு இன்-சார்ஜ் இருக்க, அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்?

    'இறப்பிற்குப் பின் வாழ்வு என்று எதுவும் இல்லை!' என்று சொல்லவும் முடியவில்லை. 'இருக்கிறது!' என்று நம்பவும் முடியவில்லை. எளிதான வழியை பாஸ்கல் என்ற விஞ்ஞானி சொல்கிறார்: 'இருக்கிறது என்றே நம்பு! ஏனெனில் இல்லாமல் போனாலும் பிரச்சினையில்லை. ஆனால், இல்லை என்று நீ நம்பி அது இருந்துவிட்டால் அப்போது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!'

    பவுலுக்கு மணல் சறுக்கியதுபோல நமக்கும் இன்று மணல் சறுக்குகின்றது.

    நாளைய முதல் வாசகம் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றி சொல்கிறது என்றால், நாளைய நற்செய்தி வாசகம் (காண். லூக்கா 4:16-30) இறப்பிற்கு முன் உள்ள இயேசுவின் வாழ்வு பற்றி சொல்கின்றது.

    'எல்லாரும் வாழ்வு பெறுவர்!' என்று போதிக்கும் இயேசு இரண்டுமுறை தன் சொந்த மக்களால் கொலைமுயற்சிக்கு ஆளாக்கப்படுகின்றார்: முதலில், நாசரேத்து மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்குவதன்மூலம் அவரை மனதளவில் கொலைசெய்ய முயல்கின்றனர். இரண்டாவதாக, அவரை உடலளவில் கொல்லும் முயற்சியாக மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் செல்கின்றனர். ஆனால், இரண்டிலும் இயேசு தப்பிவிடுகின்றார்.

    என்ன ஒரு முரண்பாடு?

    தங்கள் வாழ்வுக்கே அர்த்தம் தெரியாத மானிடம், தங்கள் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க வந்த கடவுளை கொன்றுவிட நினைக்கிறது.

    'இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப்பற்றிக் கவலைப்படுவதை விட இறப்பிற்கு முன் உள்ள வாழ்வைப்பற்றிக் கவலைப்படுவோம்!' என்று ஒற்றைவரியில் சொல்லி 'ஆமென்!' என முடிக்கவும் எனக்கு மனமில்லை.

    ஏனெனில் இறப்புக்கு முன் உள்ள வாழ்வுபற்றித்தான் அனுதினம் நாம் கவலைப்படுகிறோமே!
    'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன!' (யோவான் 6:68) என்று சொன்ன பேதுரு, 'அவர் யாரென்றே எனக்குத் தெரியாது!' (லூக் 22:55-57) என்று மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கவில்லையா?
    'அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்' (யோவான் 6:66)

    'இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது 666.' (திருவெளிப்பாடு 14:18)

    எனக்கு 11ஆம் வகுப்பு மறைக்கல்வி எடுத்த ஆசிரியர் ஒருநாள் தென்னமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும், அந்தக் குழந்தையின் நெற்றியில் 666 என எழுதியிருப்பதாகவும், அந்தக் குழந்தையே அந்திக்கிறிஸ்து (antichrist) எனவும், உலகம் சீக்கிரம் அழியப்பபோவதாகவும் சொன்னார். 'உலகம்தான் அழியப்போகிறதே!' என்ற சொல்லி இரண்டு வாரம் வீட்டுப் பாடம் செய்யாமல் அடி வாங்கியது வேறு விஷயம்.

    அந்திக்கிறிஸ்து, அதாவது, கிறிஸ்துவுக்கு எதிராக இருப்பவரின் எண் 666 என யோவானுக்கு திருவெளிப்பாடு அருளப்படுகிறது. யோவான் 6:66ஐ; பாருங்களேன். என்ன சொல்கிறது? 'அன்றே பலர் அவரிடமிருந்து விலகினர்' அல்லது 'அவருக்கு எதிராக மாறினர்'. 1555ஆம் ஆண்டில்தான் ராபர்ட் எஸ்டியன் என்பவர் கிரேக்க புதிய ஏற்பாட்டை எண்ணிக்கை கொண்ட வசனங்களாகப் பிரிக்கிறார். இப்படி அவர் பிரிக்கும்போது 6:66 என்ற எண் எப்படி சரியாக இந்த வசனத்திற்குப் பொருந்தியது? இது தானாக நிகழ்ந்த ஒரு செயலா?

    666 என்ற எண்ணை நாம் திபா 66:6 மற்றும் எசாயா 66:6லிம் பார்க்கலாம். ஆனால் அவைகளுக்கும் எதிர்கிறிஸ்துவுக்கும் தொடர்பே இல்லை. ஆனால் யோவான் 6:66க்கும் திவெ 14:18ல் வரும் '666'க்கும் தொடர்பு இருக்கிறது. எப்படி? ஒன்று, இரண்டையும் எழுதியவர் யோவான். இரண்டு, இரண்டிலுமே, புரிந்துகொள்வதைப் பற்றியும், புரிந்துகொள்வதற்கு தடையாக இருப்பது பற்றியும் இருக்கின்றது.

    'பலர் அவரை விட்டு நீங்கினர்!'

    இந்த வாக்கியத்தை மட்டும் சிந்தனைக்க எடுத்துக்கொள்வோம்!

    அதாவது, இவ்வளவு காலம் இயேசுவோடு இருந்த சிலர் இன்று அவரை விட்டு விலகுகின்றனர். இப்படி விலகுகிறார்கள் என்றால், ஒன்று, இயேசுவைவிட பெரிய ஆளை அல்லது பொருளை அல்லது கருத்தியலை அவர்கள் கண்டிருக்கலாம், அல்லது, இயேசு தரும் சவால் மிகப்பெரியதாக இருப்பதால் அதிலிருந்து பின்வாங்கலாம்.

    இயேசுவை விட்டு நீங்கினர் இந்தச் சீடர்கள்!

    மற்றொரு பக்கம் இயேசுவை தங்கள் வாழ்விலிருந்து நீங்கும்படி மூன்றுபேர் அவரிடம் சொல்கின்றனர்: ஒன்று, ஏரோது (மத் 2:16-22). இயேசு என்ற குழந்தை பிறந்ததே அவனின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. ஆக, இயேசு மட்டும் அல்ல, எந்த ஆண் குழந்தையும் தன் நாட்டில் இருக்கக்கூடாது என்று அனைத்து ஆண் குழந்தைகளையும் நீக்கிவிடத் துணிகின்றான். இரண்டாவது, பேதுரு. இயேசு முதன்முதலாக தன்னை அழைக்கும்போது அவர் செய்த மீன்களின் புதுமையைப் பார்த்துவிட்டு, 'ஐயோ! பாவி நான்! என்னைவிட்டு அகலும்!' (லூக் 5:8) என்கிறார். பேதுருவுக்கு இயேசுவின் இரக்கப்பெருக்கைவிட தன் பாவச்சுமைதான் கண்முன் பெரிதாக நின்றதால் அப்படிச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக, கெனசரேத் நகர மக்கள். பேய்பிடித்த ஒருவரின் பேயை நீக்கிய இயேசு அதை பன்றிகள் கூட்டத்தில் அனுப்ப, பன்றிகள் கூட்டமாய் கடலில் விழுந்து மடிந்துவிடுகின்றன. அந்த நேரத்தில் அங்கு வருகின்ற நகர மக்கள் இயேசுவை தங்கள் ஊரிலிருந்து அகலுமாறு வேண்டுகின்றனர் (மாற்கு 5:17).

    ஆக, இயேசு தங்களைவிட்டு நீங்க வேண்டும் என்றும், இயேசுவைவிட்டு தாங்கள் நீங்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.

    இப்படி விரும்புதல் தவறா? இல்லை! இதுதான் மனித இயல்பு. எப்படி?

    'ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன!' (யோவான் 6:68) என்று சொன்ன பேதுரு, 'அவர் யாரென்றே எனக்குத் தெரியாது!' (லூக் 22:55-57) என்று மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கவில்லையா?

    ஆக, நம்மில் இருக்கும் ஒரு இயல்பு கடவுளைப் பற்றிக்கொள்ள நினைக்கிறது. மற்றொரு இயல்பு அவரைவிட்டுத் தூரப் போக நினைக்கிறது. ஒரு இயல்பில் நாம் வானதூதரைப் போல மகிழ்ச்சியாக, அமைதியாக, சாந்தமாக இருக்கிறோம். மறு இயல்பில் நாம் வருத்தமாக, சலனத்தோடு, அமைதியற்று இருக்கிறோம். ஒரு இயல்பில் 'நான்தான் இவ்வுலகின் ராஜா!' என்று பெருமிதத்தோடு இருக்கிறோம். மறு இயல்பில் 'நான் ஒன்றுமே இல்லை!' என்று அதாள பாதாளத்தில் விழுந்துவிடுகின்றோம்.

    இந்தப் போராட்டத்தை பவுல், அகுஸ்தினார் என எல்லாப் பெருந்தலைகளும் அனுபவித்திருக்கின்றன.

    இந்தப் போராட்டம் இருக்கும்வரைதான் நாம் மனிதர்கள்! அல்லது மனித உருவில் நாம் இருக்கும்வரை இந்தப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும்!

    'தீதும் நன்றும் பிறர்தர வாரா!' என்று புறநானூறு (பாடல் 192) சொல்வதன் அர்த்தமும் இதுதான். தீமையும், நன்மையும் வெளியிலிருந்து நம்மிடம் வருவதில்லை. அவை இரண்டும் நம் அகத்தில் என்றும் இருக்கின்றன.

    'வாழ்வுதருவது தூய ஆவியே! ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது!' (யோவான் 6:63) என்ற இயேசுவின் வார்த்தைகள்தாம் நம் பாதைக்கு வெளிச்சம்.

    மேலானவைகளை நாம் தழுவிக்கொண்டால், தாழ்வானவைகள் தானாகவே அகன்றுவிடும்!
    ×