என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் தேவாலயத்தில் 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது.
    வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 16-ந் தேதி புனிதரின் ஆடம்பர கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17-ந் தேதி திருவிருந்து திருப்பலி நடந்தது. நேற்று அதிகாலையில் 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது.

    மாலையில் புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வனதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் பவனி தேவாலயத்தை சுற்றி வந்தது. இத்திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மறை வட்ட முதன்மை குரு, பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை மற்றும் இறைமக்கள் செய்து இருந்தனர்.
    கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியா, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெற இருந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்டம் மூலம் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கும், ராமேசுவரம் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ‘‘இந்த ஆண்டு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து ெசய்யப்படுவதாகவும், அடுத்த ஆண்டு திருவிழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரு நாட்டை சேர்ந்த மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும் எனவும் அதில் நெடுந்தீவு பங்குக்கு உட்பட்ட 150 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவிழா முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் நடந்த தேர் பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.
    மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் மறைமாவட்ட முதன்மைகுரு ஞானபிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை பிரிட்டோ அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார்.

    ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை கஸ்மீர்ராஜ் அடிகளார் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிர்வாகி ஜார்ஜ் அடிகளார் சிறப்புரையாற்றினார். திருப்பலியில், உலகையே அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், உலக அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும், மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.

    தொடர்ந்து ஆலய வளாகத்தில் தேர் பவனி நடைபெற்றது. பங்குதந்தை பிரிட்டோ அடிகளார் தேர்களை புனிதம் செய்தார். புனித மைக்கேல் சம்மனசு, மாதா, அந்தோணியார் உருவம் தாங்கிய மூன்று தேர்கள் ஆலய வளாகத்தை சுற்றி பவனி வந்தது. இதில், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பாடகற்குழுவினர், பலிபீட சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாளான நேற்று ஆண்டு திருவிழாவில், தினசரி நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலி உள்ளிட்ட மறைநிகழ்வுகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்டம் ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை ஷிஜின், அருட்பணியாளர் எக்கர்மன்ஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டனர். விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    புனித செபஸ்தியார் நினைவு தினமான 20-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து புனிதரின் அருளிக்கம் முத்தம் செய்தல், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது.

    23-ந் ேததி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி மற்றும் வாணவேடிக்கையும் நடைபெறும்.

    இறுதி நாளான 24-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது
    விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சேலம் மறை மாவட்ட முன்னாள் மேதகு ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

    தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித பெரியநாயகி அன்னை ஓவியம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலதண்டாயுதம், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய விழாவான தேர் பவனி, வருகிற 23-ந்தேதி இரவு 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணி தேவ சகாயராஜ் மற்றும் திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் ஒளில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பலி நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா மற்றும் இறை சமூக பெருவிழா நேற்று தொடங்கியது. விழா 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அருட்பணியாளர் ஜோன்ஸ் ஜீனியர் பங்கேற்று கொடியை ஏற்றி வைத்தார். ஆயர் இல்ல முப்பணிக்குழு இயக்குனர் மரிய வின்சென்ட் எட்வின் அருளுரையாற்றினார். பின்னர் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், ஆகியவை நடக்கிறது. 16-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து கூட்டு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை தேவதாஸ், பங்கு பேரவை துணைத்தலைவர் பனிபிச்சை, செயலாளர் ஆண்டனி பென்சிக், பொருளாளர் ராஜன், துணை செயலாளர் அமலா மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
    கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    ராமேசுவரம் 

    இயற்கை எழில் கொஞ்சும் கச்சத்தீவு 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் நம் நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பின்போது ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தவும் உரிமை உண்டு. கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம், இருநாட்டு மீனவர்களுக்கும் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.

    ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் இரு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நெடுந்தீவு பங்குக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 150 பேர் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்றும், இரு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் யாரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடையாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    மறைசாட்சி தேவசகாயத்தின் நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய அருட்பணி பேரவையில் 23-வது பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்டான்லி சகாய சீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு திருப்பலியுடன் தொடங்குகிறது. இதில் கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஏஞ்சலூஸ், பங்குதந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குதந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர் ஆகியோர் பொங்கல் விழா திருப்பலி நிறைவேற்றுகின்றனர். தொடர்ந்து திருப்பலி முடிந்ததும் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்படுகிறது.

    குமரி மாவட்ட மண்ணின் மறைசாட்சி என அழைக்கப்படும் தேவசகாயத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ந்தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    தேவசகாயம் இயேசு கிறிஸ்துவை பின்பற்றியதற்காக பல துன்பங்களை சந்தித்தார். 1752-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் திருவிதாங்கூர் மன்னராட்சியின் போது ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி மறைசாட்சியானார். கோட்டார் மறைமாவட்டம் இவரது மறைசாட்சி தினத்தை ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகிறது. மேலும், உலக திரு அவை இவரை முத்திபேறு ஏற்றுக்கொண்டு அருளாளர் என்று அறிவித்தது.

    இந்த ஆண்டு அருளாளர் தேவசகாயம் மறைசாட்சி தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கோட்டார் புனித சவேரியார் பேராயத்தில் மறைசாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க கோட்டார் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் இருந்தும் இறைமக்கள், குருக்கள் வருகை தருகிறார்கள். விழாவில் நாளை மாலை 5 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மிக விரைவில் புனிதர் பட்டம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இவ்விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்பட உள்ளது.

    கோட்டார் மறை மாவட்டத்தின் மறைந்த முன்னாள் ஆயர் லியோன் தர்மராஜின் 14-ம் ஆண்டு நினைவு தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டார் சவேரியார் ஆலயத்தில் வருகிற 16-ந்தேி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி, கல்லறை மந்திரிப்பு தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    இந்த முப்பெரும் விழாவில் மறைமாவட்ட இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கோட்டார் சவேரியார் பேராலய அருட்பணி பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முடிவில் அருட்பணி பேரவை செயலாளர் அந்தோணி சவரிமுத்து நன்றி கூறினார்.
    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    நாகர்கோவில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. 

    இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு குருசடி அர்ச்சிப்பு போன்றவை நடைபெறும். அருட்பணியாளர் அந்தோணி எம். முத்து தலைமை தாங்கி குருசடியை அர்ச்சி

    த்து திறந்து வைக்கிறார். பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப் பங்குத்தந்தை ஷிஜின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணி பேரவை, கட்டிட குழு மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 5.30 மணிக்கு கொடிபவனி, செபமாலை, புகழ்மாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு முளகுமூடு பங்குத்தந்தை டோமினிக் கடாட்சதாஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறார். மயிலோடு பங்குத்தந்தை ரோமரிக்ததேயு அருளுரையாற்றுகிறார். திருவிழா நாட்களில் காலை, மாலை திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு மணலிக்கரை பங்குத்தந்தை மரிய டேவிட் தலைமை தாங்குகிறார். தக்கலை பங்குதந்தை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.

    14-ந்தேதி காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்டம் நிதி பரி பாலகர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். வட்டம் பங்குத்தந்தை சகாயதாஸ் மறையுரையாற்றுகிறார்.

    திருப்பலி முடிந்தவுடன் உதயகிரி கோட்டையில் உள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை தோட்டத்தை அருட்பணியாளர்கள் அர்ச்சிக்கிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வட்டார முதன்மை பணியாளர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தைகள் மரியதாஸ், மரியதாசன் வின்சென்ட் ராஜ், பங்கு பேரவை உதவித் தலைவர் ஆல்பர்ட், செயலாளர் ஜெனி, உதவிச் செயலாளர் கிறிஸ்டிபாய், பொருளாளர் பாபு மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பக்த சபையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
    அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை தூய திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 

    விழாவின் முதல் நாளில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவையும், நேற்று காலையில் திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் போன்றவையும் நடந்தது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை ேபான்றவை நடைபெறும். 16-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 

    விழாவின் இறுதி நாளான 17-ந் ேததி திருவிழா திருப்பலியும், தேர்ப்பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயம் நாகர்கோவில் குருசடியில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தன.

    இதனைதொடர்ந்து 6.40 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணியாளர் இயேசுரெத்தினம் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கார்மல் நகர் பங்கு பணியாளர் சகாயபிரபு, கார்மல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைமன்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். அப்போது ஆலய நிர்வாகிகள் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினர்.

    2-ம் நாளான இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, செபமாலை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மணக்குடி இணைப்பணியாளர் அருட்பணி ஞானராய் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட அன்பியப்பணிக்குழு இயக்குனர் அருட்பணி வலோரியன் அருளுரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக கீழ ஆசாரிபள்ளம் பங்குபணியாளர் அந்தோணிபிச்சை கலந்து கொள்கிறார்.

    9-ம் நாள் திருவிழாவன்று காலை 6.30 மணிக்கு செபமாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் சிறப்பு ஆராதனை நடக்கிறது. வட்டக்கரை பங்குப்பணியாளர் ஆண்ட்ரூஸ் அருளுரையாற்றுகிறார். இதனைதொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறும்.

    10-ம் நாள் திருவிழாவில், அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். காலை 9.30 மணிக்கு மேல் ஆசாரிபள்ளம் பங்குபணியாளர் ஜார்ஜ் வின்சென்ட் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    ×