என் மலர்
கிறித்தவம்
நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் திருப்பலி, செபமாலை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு நடக்கிறது.
19-ந் தேதி காலை 7 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்ப்பவனி போன்றவை நடைபெறுகிறது.
திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். விழாவுக்கு அருட்பணியாளர் ஞானசேகரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்செய்தி கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
13-ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
19-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் டயனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜான்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, முதல்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை நியுமேன் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

ஒரு சமூகத்தின் நன்மைக்கும் மேன்மைக்கும் கருவியாக சட்டம் இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களை ஒடுக்குவதாக அது இருக்கக்கூடாது என்பதே அவரது அறிவுரை.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற விதிகளைக் கற்றுத் தந்தார். மனித குலத்துக்கு அவர் வழங்கிய போதனைகள் அனைத்தும் நமது சிந்தனைகளுக்கு மேற்பட்டவையாக இருக்கின்றன.
இயேசு கிறிஸ்து தாம் வாழ்ந்த அறிவார்ந்த யூத சமூகத்தில் இழையோடிக் கிடந்த பழமையான எண்ணங்களைத் தூக்கி எறியுமாறு வற்புறுத்தினார்.
மரபுகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார். நாம் எப்பொழுதும் பழம்பெருமை பேசிக்கொண்டு, பாரம்பரிய மரபு களைத் தூக்கி நிறுத்த ஆசைப்படுகிறோம்.
நம் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பலவற்றை தொடர்ந்து செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறோம். ஆனால், இயேசு கிறிஸ்து இத்தகைய வழக்கத்தை கண்டிக்கிறார்.
ஒருமுறை பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உம் சீடர்கள் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்தும்முன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே” என்றனர்.
யூதர்கள் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை. சந்தையில் இருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் பல இருந்தன.
இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் கடவுளின் கட்டளை களைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும், ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கடவுளுக்கு காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு உங்கள் மரபை நிலைநாட்ட கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து, நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று கண்டித்தார்.
பின்னர் இயேசு தம் சீடர்களிடம், “வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது” என்றார்.
மேலும் “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில், பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச் செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைத் தூண்டும் தீய எண்ணங்கள் அனைத்தும் உள்ளத்தில் இருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று அவர் கூறினார். (மாற்கு 7:1-23)
இவ்வாறு, மூதாதையரின் மரபுகள் என்ற பெயரில் கடவுளுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்வது தவறு என்று இயேசு சுட்டிக்காட்டினார். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் மனித மாண்பு பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, அது கடவுளுக்கு மாட்சியை ஏற்படுத்தும். மனித மாண்பைக் குலைக்கும் வகையிலான எந்தவொரு மரபும் சட்டமும் கடவுளுக்கு எதிரானதே என்று இயேசு வலியுறுத்தி கூறினார்.
மனிதர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அவற்றுக்கு துணைபோகின்ற சட்டங்களும் குப்பை போன்றவை என்று இயேசு அழுத்தமாக எடுத்துரைத்தார்.
ஓய்வு நாளை யூதர்கள் ஆண்டவரின் புனித நாளாக கருதி வந்தனர். அந்த நாளில், மற்றவருக்கு உதவி செய்வது உள்ளிட்ட எந்த வேலைகளையும் செய்யக்கூடாது என்பதை சட்டமாக கடைப்பிடித்தனர்.
இத்தகையச் சூழலில், உடல் நலமற்ற ஒருவரை இயேசு ஓய்வு நாள் ஒன்றில் குணப்படுத்தியதால், சமயத் தலைவர்கள் சினமுற்றனர்.
அவர்களிடம் இயேசு, “ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?” என்று கேள்வி எழுப்பி அவர்களை மடக்கினார்.
மற்றொரு ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கொண்டே வழி நடந்தனர்.
அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீது அரசர் உணவின்றிப் பசியாய் இருந்தபோது, இறை இல்லத்திற்குள் சென்று, குருக் களைத் தவிர வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? அவர் தேவைக்காக சட்டத்தை மீறி முடிவெடுத்தார். அவ்வாறே, ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்று அவர்களிடம் கூறினார். (மாற்கு 2:23-28)
இவ்வாறு, சட்டங்களும் மரபுகளும் மனிதருக்கு கட்டுப்பட்டவை என்று ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார்.
மனிதரின் நன்மைக்காக ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுகளும் சட்டங்களும், மனிதருக்கு தீமை விளைவிக்கின்ற காலம் வரும்போது தூக்கி எறியப்பட வேண்டும் என்பதே இயேசுவின் போதனை.
ஒரு சமூகத்தின் நன்மைக்கும் மேன்மைக்கும் கருவியாக சட்டம் இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களை ஒடுக்குவதாக அது இருக்கக்கூடாது என்பதே அவரது அறிவுரை.
மரபுகளைக் கைவிட்டு மனித நேயத்தை முன்னிறுத்தினால், இயேசு கிறிஸ்து விரும்பிய அழகிய உலகை நம்மால் உருவாக்க முடியும்.
டே. ஆக்னல் ஜோஸ்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டிமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ஊர்வலம் கொடிமேடையை அடைந்தது. பின்னர் கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து மரியா- திருத்தூதர்களின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி நிறைவேற்றினார். இதில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் அமலதாஸ், எடிசன்ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் சிறு சப்பர பவனியும், திருப்பலியும் நடைபெறுகிறது. வருகிற 14-ந்தேதி இரவு அலங்கார தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமை யிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 43-வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடி கொடியை பவனியாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் புதுவை சமூகசேவை மையத்தின் இயக்குனர் அருமைசெல்வம் கொடியை ஏற்றினார்.
இதையடுத்து கடலூர் புனித ஆக்னேஸ் குருமட அதிபர் அருட்தந்தை ரொசாரியோ, அருட்தந்தை மிக்கேல்புரம் மகிமை, பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. வருகிற 12-ந் தேதி வரை தினந்தோறும் சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கும், இரவு 9 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக பூண்டிமாதா பேராலயத்தின் முகப்பில் இருந்து நாளை மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
ஊர்வலம் கொடிமரத்தின் அருகில் வந்தவுடன் குடந்தை மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து மரியா-திருத்தூதர்களின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலியை பிஷப் அந்தோனிசாமி நிறைவேற்றுகிறார். திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் எடிசன்ராஜ், அமலதாஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு தேர்பவனி மற்றும் திருப்பலி நடைபெறும். 14-ந்தேதி(திங்கட்கிழமை) காலை பூண்டி பேராலயத்தின் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்துசேவியர், ராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நடக்கிறது.
மாலையில் மரியா அருளின் ஊற்று என்ற தலைப்பில் குடந்தை பிஷப் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றுவார். திருப்பலிக்கு பின்னர் வண்ண மின்விளக்கு மற்றும் மல்லிகை மலர் அலங்காரத்தில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனியை குடந்தை பிஷப் தொடங்கி வைக்கிறார். தேர்பவனி நிறைவடைந்தவுடன் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர்், துணை அதிபர் தியான மைய இயக்குனர் மற்றம் பங்குகுழுவினர் செய்து உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தல திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், புதிய கலையரங்கம் திறப்பு விழா, திருப்பலி, இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது.
விழாவில் 10-ந்தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை ஆசிர் ஆகியவை நடக்கிறது.
11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
12-ந்தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, 8.30 மணிக்கு ஆங்கில திருப்பலி, மாலை 4 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. அதைதொடர்ந்து 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஜெபமாலை, ஆடம்பர ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
13-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணிப்பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர் , துணை செயலாளர் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோஸ், பங்குத்தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்குத்தந்தை ஆரோக்கிய ரமேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. வீரமாமுனிவர் வழிபட்ட பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் இரவு புனித அந்தோணியார் தேர்பவனி வான வேடிக்கைகளுடன் நடைபெறுகிறது.
இதையொட்டி இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தோணியார் திருத்தல பங்கு தந்தை ஏ.கிறிஸ்து அமலதாஸ், வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

திருச்சி பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி பொன்மலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
உழைப்பாளர்களின் பாதுகாவலர் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுபவர் சூசையப்பர். உழைப்பாளர் தினமான மே 1-ந் தேதி இந்த ஆலயத்தில் தேர்பவனி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. பங்கு தந்தை சின்னப்பன மற்றும் உதவி பங்குத்தந்தை பிலவேந்திரன் ஆகியோர் சிறப்பு புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தனர்.
தேரில் உயிர்த்தெழுந்த இயேசு, மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய தெய்வங்களை எழுந்தருள செய்து பவனி வந்தன. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து ஆலயத்தை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் இயக்கத்தினர் செய்து இருந்தனர்.

கடவுள், மோசே வழியாக நமக்கு கொடுத்த கட்டளைகள் 10. அந்த 10 கட்டளைகளும் நாளடைவில் பெருகி 613 கட்டளைகள் ஆனது. அதில் 248 கட்டளைகள், ஒரு சில வேளைகளில் மக்களுக்கு சாதகமானதாகவே இருந்தது.
கடவுள், மோசே வழியாக நமக்கு கொடுத்த கட்டளைகள் 10. அந்த 10 கட்டளைகளும் நாளடைவில் பெருகி 613 கட்டளைகள் ஆனது. அதில் 248 கட்டளைகள், ஒரு சில வேளைகளில் மக்களுக்கு சாதகமானதாகவே இருந்தது. ஆனால் எஞ்சியுள்ள 365 கட்டளைகளும், ஒரு சில வேலைகளை செய்யக்கூடாது என்றிருந்தது. இத்தகைய கட்டளைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு சிலர் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அந்த கட்டளைகளை கடைபிடிக்க, புதிய ஏற்பாட்டில் இயேசு சிறிய இரண்டு வழிகளை காட்டியுள்ளார். அதாவது இரண்டு கட்டளை எடுத்துக்காட்டியுள்ளார்.
(மத்தேயு 22:37-39) ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து‘. இதுவே தலை சிறந்த முழுமையான கட்டளை. ‘உன் மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக‘ என்பது அதற்கு இணையான இரண்டாவது கட்டளை. இவ்வாறு இயேசு அனைத்து கட்டளைகளையும் சுருக்கி இரண்டு கட்டளைகளை நமக்கு தந்தார். இந்த இரண்டு கட்டளைகளையும் கடைபிடிக்க நம்மால் முடியாது என்பதை உணர்ந்த இயேசு, இரண்டையும் சுருக்கி ஒரு கட்டளையாக கொடுத்தார்.
(யோவான் 13:34) ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்‘. நாம் மற்றவர்களிடம் அன்பு செலுத்தும் போது, அவர்களை பற்றி தவறாக பேசவோ, அவர்கள் மீது பொறாமையோ கொள்ள மாட்டோம். அவ்வாறு நாம் அன்பு செய்து வாழ்கின்ற போது, நமக்கும் மற்றவர்களுக்குமான உறவு நல்லதாக இருக்கும். இவ்வாறு வாழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கட்டளை ஒன்று தான். அதுதான் அன்புக்கட்டளை.
அருட்பணி. பிரபின் சூசடிமை, சலேசிய சபை,
சவேரியார் பாளையம் பங்கு, திண்டுக்கல்.

கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மூலம் கிறிஸ்து விட்டுப்போன அடிச்சுவடுகளைக்குறித்து தியானிப்போம்.
கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மூலம் கிறிஸ்து விட்டுப்போன அடிச்சுவடுகளைக்குறித்து தியானிப்போம். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப்பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத்தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப்பின்வைத்துப்போனார்.
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும் போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச்செத்து, நீதிக்குப்பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச்சிலுவையின் மேல் சுமந்தார்.
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். கிறிஸ்துவின் நிமித்தம் வரும் பாடுகளை சகிப்பதே பாக்கியம் என்று வேதம் கூறுகிறது. ஒரு விசுவாசிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய சிலாக்கியம் கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக வரும் பாடுகளை அனுபவிப்பது ஆகும். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச்சுமந்தார்.
நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்று வேதம் கூறுகிறது.
நாம் பாவத்தின் வல்லமை, அதிகாரம் மற்றும் குற்ற உணர்வுகளின்றி முற்றிலும் விடுவிக்கப்படும்படியாக அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். அவரை ஏற்றுக்கொண்டு அவரது ரத்தத்தினாலே கழுவப்பட்டவர்களாக தேவனிடத்தில் திரும்ப வழியையும் உண்டு பண்ணினார். அடிச்சுவடுகளை பின்பற்றி வரும்படி நமக்கும் அழைப்பைக்கொடுக்கிறார். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோ:14:6).தேவனிடத்தில் செல்ல அவரே வழி என்று வேதம் கூறுகிறது.
கிறிஸ்துவுக்காகவும், சுவிசேஷத்திற்காகவும் வருகிற பாடுகளை அர்ப்பணத்தோடு சகிப்பதே தேவன் நமக்கு வைத்துப்போன பாதை ஆகும். அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபி:12:2). இயேசுவானவர் சிலுவையை சுமந்து, பாடுகளை சகித்து, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பது போல நாமும் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்ற கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக
போதகர்-அமல்ராஜ்

எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் எடத்துவாவில் பிரசித்த பெற்ற புனித ஜார்ஜியார் ஆலயம் அமைந்துள்ளது. ஜார்ஜியார் கி.பி. 3-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த புனிதர் ஆவார்.
எடத்துவாவில் உள்ள புனித ஜார்ஜியார் ஆலயமானது 218 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் பெற்றது ஆகும். அங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு நவநாள் மன்றாட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு ஆலய பங்குத்தந்தை ஜாண் மணக்குந்நேல் திருவிழா கொடியை ஏற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஆயர் மார் செபாஸ்டின் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. 10 மணிக்கு அருட்தந்தை இக்னேசியஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது. குமரி மாவட்ட மக்களின் வருகையை கருத்தில் கொண்டு, விழா நாட்களில் வருகிற 7- ந் தேதி வரை தினமும் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். மேலும் நவநாள் மன்றாட்டு புகழ் மாலை, ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறும்.
வருகிற 6-ந் தேதி காலை 9 மணிக்கு தக்கலை மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமையில் திருப்பலி நடைபெற இருக்கிறது. மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியாரின் சப்பர பவனி நடைபெறும்.
7- ந் தேதி காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி, திருப்புகழ் மாலை நடைபெறும். தொடர்ந்து சங்கனாச்சேரி உயர் மறை மாவட்ட பேராயர் மார் ஜோசப் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஓய்வு பெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் தமிழில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும்.
வருகிற 14- ந் தேதி மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். விழாவையொட்டி, கேரள மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.