என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தேர்வு நாட்களில் தேவன் தாமே தம்முடைய ஞானத்தினாலும், ஞாபக சக்தியினாலும் உங்களை நிரப்பி இவ்வருடம் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் கட்டளையிடுவார்.
    தேர்வு நாட்களில் தேவன் தாமே தம்முடைய ஞானத்தினாலும், ஞாபக சக்தியினாலும் உங்களை நிரப்பி இவ்வருடம் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் கட்டளையிடுவார்.

    நம்புங்கள்

    ‘நீரே என் நம்பிக்கை’. (சங்கீதம் 39:7)

    இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கலாம் அல்லது தேர்வுக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்களுடைய சுய பலத்தையோ, ஞானத்தையோ நம்ப வேண்டாம். உங்களுக்கு வெற்றியை அருளுகிற ஜீவனுள்ள தெய்வம் ஒருவர் இருக்கிறார். அவர்- ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை நீங்கள் முதலாவது நம்ப வேண்டும்.

    நம்புவது என்றால் என்ன?

    எனக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார், தன் ஜீவனையே எனக்காக கொடுத்தார். மூன்றாம் நாள் கல்லறையில்இருந்து உயிரோடெழுந்தார். அவர் இன்றும் ஜீவிக்கிறார் என்ற மாறாத இந்த சுவிசேஷத்தை நம்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

    மேலும், ‘கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங்கீதம் 40:4) என்று தாவீது ராஜா கூறுகிறார். எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பாக தேர்வு காலங்களில் எந்த மனுஷனுடைய ஞானத்தையும், அறிவையும் நம்பாமல் கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருங்கள்.

    விடாமுயற்சி

    ‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’ (பிரசங்கி 9:10).

    மேற்கண்ட வார்த்தையை தேவன் அருளின ஞானத்தோடு சாலொமோன் ராஜா கூறுகிறார்.

    அற்புதங்களை செய்கிறவர் தேவன்தான் என்றாலும், நாம் செய்ய வேண்டியதை நாம்தான் செய்ய வேண்டும் அல்லவா? இந்நாட்களில் கர்த்தருடைய ஆவியின் ஏவுதலினால் உங்களுக்கு நான் கூறும் மற்றொரு முக்கிய ஆலோசனை, உங்கள் பாடங்களை கருத்தோடு முயற்சி எடுத்துப் படியுங்கள். அதிக உணவுக்கும், அதிக நித்திரைக்கும் இடங்கொடாதிருங்கள். இவை இரண்டும் சோம்பலையும், அசதியையும் கொண்டு வரும்.

    உங்களால் முடிந்தவரைக்கும் முயற்சிபண்ணுங்கள். உங்கள் இயலாமையைக் குறித்து மனவேதனைப்படாமல் ஆண்டவரிடம் அர்ப்பணித்து விடுங்கள். தேவன் அதை பொறுப்பெடுப்பார். பிரயாசப்படும் போதுதான் அதன் பலனை அடையமுடியும்.

    ஆயத்தம்

    ‘குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்’ (நீதிமொழிகள் 21:31).

    எந்த ஒரு அற்புதங்களையும், வெற்றியையும் நாம் அடைவதற்கு ஆயத்தம் அவசியம் தேவை. அதைப்போல தேர்வு நாட்களில் உங்கள் பாடங்களை கருத்தோடு படிக்க நேரத்தை ஒதுக்குங்கள். படிக்க வேண்டிய நேரங்களில் டெலிவிஷன், நண்பர்கள், உறவினர்களை சந்தித்தல் இவை அனைத்தையும் முற்றிலுமாய் தவிர்த்து, தேர்விற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

    மேலே குறிப்பிட்ட வசனத்தை கவனித்தீர்களா? குதிரையை யுத்தம் செய்வதற்கு ஆயத்தப்படுத்தினால் தான் வெற்றியை கர்த்தர் அருள முடியும்.

    ஆயத்தமாயிருக்க வேண்டிய காலங்களில் ஏனோதானோ என்று வீணாக காலங்களைக் கழிக்காதீர்கள்.

    நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்

    `நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்’ (எபேசியா 5:16)

    உங்கள் வாழ்க்கையில் காலங்களும் நாட்களும் மிகவும் முக்கியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலங்களை கர்த்தர் வைத்திருக்கிறார்.

    நம்முடைய கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கவும், ஞானத்தையும், அறிவையும் அருளவும் வல்லவராயிருக்கிறார். என்றாலும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் உண்டு.

    காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வதுதான் அந்த முக்கியமான காரியம். முதலாவது வேத வசனத்தை வாசித்து ஜெபிப்பதற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள். அதன்பிறகு உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணாகக் கழிக்காமல் முயற்சி எடுத்துப் படியுங்கள்.

    இந்நாட்களில் உங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியம். பொழுதுபோக்குகளை முற்றிலும் தவிர்த்து படிக்க வேண்டிய காலங்களில் படித்து ஓய்வு எடுக்க வேண்டிய நேரங்களில் ஓய்வெடுத்து கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருங்கள். கர்த்தரோடு நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். உங்கள் வாழ்க்கையில் இனி தோல்வி இல்லை. வெற்றி நிச்சயம்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    திருச்சி பொன்மலைப்பட்டியில் பழமை வாய்ந்த அடைக்கல மாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி சிறப்பாக நடந்தது.
    திருச்சி பொன்மலைப்பட்டியில் பழமை வாய்ந்த அடைக்கல மாதா ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மறையுரை, ஜெபம், மாதா மன்றாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் நடந்தது. தேர் பவனியை பங்கு தந்தை சின்னப்பன் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். மின் விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அடைக்கல மாதா, சூசையப்பர், காவல் சம்மனசு ஆகிய 3 தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தன.

    இரவு 11.30 மணி அளவில் தொடங்கிய தேர் பவனி அதிகாலை 5 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. அதன் பிறகு திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொண்டு அடைக்கல மாதாவை வழிபட்டனர். திருவிழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

    உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.
    இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். (யோவான் 19:26,27)

    உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.

    “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”.

    தந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.

    இயேசு சிலுவையின் உச்சியிலிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்க தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.

    தான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.

    வலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம். வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.

    சிலுவை வரைத் தன்னை பின்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

    தொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.

    ‘வியாகுல அன்னை’ என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி, சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.

    ஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் ரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.

    எல்லோரும் ஓடிவிட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார். வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரியாள் அதனால் தான் ‘வியாகுல அன்னை’ என அழைக்கப்படுகிறார்.

    “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.

    “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.

    மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும், உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித் திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும்.

    இயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மிக மகனிடம்” ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக்கொடுக்கிறார்.

    தம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக்கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்ல வில்லை என்கிறது மரபுச் செய்தி.

    இயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.

    உலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது. சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.

    இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.

    சேவியர்
    வாழ்வில், செல்வத்தை கொண்டு ஏழை, எளிய முதியோர்கள், அனாதைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வது, அந்த கடவுளுக்கே செய்தது போன்ற நன்மையை தேடி தரும்.
    அரசர் ஒருவர், தன் பிறந்த நாள் பரிசாக, இந்த அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டனர். ஆனால் பெற்றோரை இழந்த அனாதை சிறுவன் ஒருவன் மட்டும் விலை உயர்ந்த பொருட்களில் எதையும் எடுக்கவில்லை. தாய், தந்தையரின் அன்புக்காகவே அவன் ஏங்கினான்.

    அதனால் அச்சிறுவன், அரசரை பார்த்து, எனக்கு தாய், தந்தை இல்லை. நான் அனாதை. அதனால் உங்களை ஒரு முறை தந்தையே என்று அழைக்கலாமா? என்று கேட்டான். சிறுவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட அரசர், அந்த சிறுவனை கட்டியணைத்து, முத்தமிட்டு அன்பு காட்டினார். அவனை மகனாக ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் அச்சிறுவனே அந்த ராஜ்ஜியத்துக்கு அரசனானான்.

    விவிலியத்தில் இருவேறுபட்ட மனநிலை கொண்ட கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று, மதலேன் மதியாள். மற்றொன்று, யூதாஸ் இஸ்காரியோத்து. அதில் முதலாமவர், இயேசுவின் காலடியில் அமர்ந்து தன் பாவ வாழ்விற்கு பரிகாரமாக எலாமிச்சை என்னும் விலையுயர்ந்த நறுமண தைலத்தை இயேசுவின் கால்களில் ஊற்றி தன் கூந்தலால் துடைத்து மோட்சத்தை தேடிக்கொண்டார். இவர் நன்றியுடையவர்.

    மற்றொருவரான யூதாஸ் நன்றி கெட்டவர். 30 வெள்ளிக்காசுக்காக தன் குருவை காட்டிக்கொடுத்தவர். யூதாசு சம்பாதித்தது மரணம். நித்திய நரகம். இவர்களில் முதலாமவர் கடவுளையே சொந்தமாக்கி கொண்டார். நமது அன்றாட வாழ்வில் பணத்திற்கா? அல்லது நம்மை படைத்த கடவுளுக்கா? யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

    வாழ்வில், செல்வத்தை கொண்டு ஏழை, எளிய முதியோர்கள், அனாதைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வது, அந்த கடவுளுக்கே செய்தது போன்ற நன்மையை தேடி தரும். எனவே, அத்தகைய அருள் வாழ்வு வாழ முயலுவோம். இந்த ஆண்டின் புனித வாரம் நம்மையும் புனிதமாக்கட்டும்.

    அருட்பணி. அருமைசாமி, பங்குத்தந்தை,

    என்.ஜி.ஓ.காலனி பங்கு, திண்டுக்கல். 
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
    இந்த பூமியில் நடந்த மூன்று பெரிய சரித்திரப்பூர்வமான சம்பவங்கள், 1. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, 2. சிலுவையில் ஜீவபலியாக மரித்த சம்பவம், 3. இயேசு உயிர்த்தெழுந்தது.

    இவை அனைத்தும் என்றென்றும் மாறாத, காலத்தால் அழிக்கப்படாத மகிமையான சம்பவங்கள். இதில் ஒன்று தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சிலுவையில் தன்னைத்தானே ஜீவபலியாக அர்ப்பணித்தது ஆகும்.

    அவர் ஜீவனுள்ள தெய்வமாயிருந்தார். அவரை எப்படி சிலுவையில் அறைந்து கொலை செய்ய முடியும்? என்ற கேள்வி எழக்கூடும். உண்மையிலேயே ரோம சேவகர்கள் தங்கள் பலத்தினால் அவரை கொலை செய்யவில்லை. மனிதகுலத்திற்காக தம்மைத்தாமே சிலுவையில் ஜீவபலியாக அர்ப்பணித்தார்.

    பாவங்களிலிருந்து விடுதலை

    ஏன் இயேசு சிலுவையில் மரித்தார் என்றால் நம் ஒவ்வொரு வருக்கும் பாவத்திலிருந்து விடுதலை தருவதற்காகவே.

    வேதம் சொல்லுகிறது, ‘நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’ (ஏசாயா 53:5).

    ‘நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சிலுவையில் சுமந்தார்’ என்று வேதம் கூறு கிறதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அதுமாத்திரமல்ல தேவன் அருளுகிற இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மேலும், சங்கீதம் 32:5-ல் தாவீது ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன்’ என்றேன். ‘தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்’ என தெளிவாக கூறுகிறார்.

    ஆகவே நாம் செய்கிற தேவன் விரும்பாத அனைத்து காரியங்களையும் கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிட வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்திலிருந்து விடுதலையை கர்த்தர் கட்டளையிடுவார்.

    நோயிலிருந்து விடுதலை

    ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’ (மத்தேயு 8:17).

    ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே. நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு பலவீனங்களையும், ஒவ்வொரு நோய் களையும் சிலுவையில் சுமந்து விட்டார் என வேதம் சொல்லுகிறது.

    அப்படியானால் இனி நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும். இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளே தீராத நோய்களும் பலவீனங்களும் இருக்குமானால் கட்டாயம் ஆண்டவர் உங்களை சுகமாக்கி, உங்களுக்கு விடுதலைத் தர வல்லவராயிருக்கிறார்.

    இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப்பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும் மனதார நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது கட்டாயம் அவரது தெய்வீக சுகத்தை அனுபவிக்க முடியும்.

    வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பலவீனத்தோடும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

    ‘பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ (III யோவான் 2)

    மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா? நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பதுதான் தேவனுடைய விருப்பம். இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள். மாத்திரமல்ல, ‘நம் முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ (ஏசாயா 53:5) என வேதம் தெளிவாகக் கூறுகிறது.

    ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின தம்முடைய ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார். ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.

    தரித்திரத்திலிருந்து விடுதலை

    ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே’ (II கொரிந்தியர் 8:9)

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய நோய்களிலிருந்து மாத்திரம் விடுதலை தருகிறார் என்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய சகல தரித்திரங்களிலிருந்தும் விடுதலை தருகிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

    நம்முடைய வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியமானதாகும். இந்த பெரிய வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய நம்முடைய தேவன் ஐசுவரியமுள்ளவர். ‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது’ என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அப்படியானால் ஒருவேளை தரித்திரம் அல்லது கடன்பாரம் நம்முடைய வாழ்வில் இருந்தாலும் அதைப் போக்குவதற்கு வழிகளை தேவன் கொடுத்துள்ளார். அந்த வழிகள் என்ன?

    1. உங்கள் கண்கள் கர்த்தரையே நோக்க வேண்டும், மனிதனை ஒருநாளும் நம்பாதீர்கள்.

    2. உங்கள் செலவு உங்கள் வருமானத்திற்குள் அமைய வேண்டும்.

    3. வீணான ஆடம்பரம் வேண்டாம். மற்றவர்களைப் பார்த்து, அவர்களைப் போல வாழ வேண்டும் என விரும்பாதீர்கள்.

    4. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை உற்சாகமாக கர்த்தருக்கென்று கொடுத்து லூக்கா 6:38-ன்படி பலமடங்கு ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள்.

    உங்கள் வாழ்வில் இதை அப்பியாசப்படுத்த முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் பொருளாதார வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை-54
    சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது.
    சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 57-வது ஆண்டு ஆசீர்வாத பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    13-ந்தேதி ஆசிரியர் தினம், 14-ந்தேதி தம்பதியர் தினம், 15-ந்தேதி உபகாரிகள் தினம், 16-ந்தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 17-ந்தேதி நலம் நாடுவோர் தினமாக விழா நடந்தது.

    18-ந்தேதி தேவ அழைத்தல் தினம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இளையோர் தினத்தை இளைஞர் இயக்கத்தினர் கொண்டினர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நற்கருணை தினம் கொண்டாடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது. நாளை சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.

    அன்று மாலை 6 மணிக்கு கோடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆர்.பால்ராஜ் மற்றும் புனித சூசையப்பர் ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
     
    எபிரேயர் 9:28 இயேசு அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.
    எபிரேயர் 9:28 இயேசு அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.

    பழைய ஏற்பாடு காலத்தில் பாவ நிவாரணபலி செலுத்த வருகிறவன். இரண்டு வெள்ளாட்டுக்கிடாக்களை கொண்டு வரவேண்டும். ஆசாரியன் இந்த இரண்டு கிடாக்களை குறித்தும் சீட்டு போடுவான், ஒன்று கர்த்தருக்கு பலி செலுத்தப்பட தீர்மானிக்கப்படும். இன்னொன்று போக்காடாக விட்டு விடப்படும். இந்த பலியாக தெரிந்து கொள்ளப்பட்ட ஆடு அங்குள்ள பலிபீடத்தில் கொல்லப்பட்டு ரத்தம் சிந்தி தன் ஜீவனை கொடுக்கும்.

    மற்ற ஆடோ விடுதலை பெற்று சுதந்தரமாக வெளியே செல்லும்(லேவி 16:7.26). யோவான் இயேசுவை குறித்து சொல்லும் போது இதோ உலகத்தில் பாவங்களை சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று சொல்கிறார். இயேசு பாடுபடும் நேரம் வந்த போது அவரை விசாரித்து அவரிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று தெரிந்து விடுதலை செய்ய நினைத்த பிலாத்து கொடுமையான மனிதனான பரபாஸ் என்பவனையும் ஒரு குற்றமும் செய்யாத இயேசுவையும் கொண்டு வந்து கேட்கிறான் இயேசுவையா? பரபாசையா? யார்? கொலை செய்யப்பட வேண்டும் என்றான். ஜனங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட வேண்டும் என்றும் பரபாசை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டார்கள். இயேசு பலி ஆடாக பலியிடப்பட்டார்.

    பரபாஸ் என்பவன் விடுதலை பெற்றவனாக வெளியே வந்தான். இயேசு அக்கிராமத்தில் ஒருவராக எண்ணப்பட்டு அநேகருடைய பாவத்தைத்தாமே சுமந்தார் ஏசா (53:12) என்று வேதம் சொல்கிறது. தேவப்பிள்ளைகளே அவர் உன் தண்டனைகளை தன்மேல் ஏற்றுக்கொண்டு பாடனுபவித்து இருக்கிறபடியால் நீ நீதிமானாய் விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய் என்பதை மறந்து போகாதே.

    அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டார். அவரிடத்தில் பாவமில்லை (1 யோவான்:3:5) என்பதை அறிந்து இயேசு சிந்தின ரத்தத்தினாலே பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வோம். நமக்கு ஒரு விடுதலை உண்டு. இயேசுவே பெற்றுத்தந்திருக்கிறார். இன்று நீ எதிலிருந்து விடுதலையாக வேண்டுமோ? அதிலிருந்து இயேசுவே உனக்கு விடுதலை தருவார். உனக்கு பதில் இயேசு மரித்தார்.

    பாதிரியர். எஸ்.ஜெபமணி.
    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா என்ற இடத்தில் உள்ள தூய ஜார்ஜியார் ஆலய பெருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா என்ற இடத்தில் உள்ள தூய ஜார்ஜியார் ஆலயம் மிகவும் பழமையும், சிறப்பும் வாய்ந்தது. இந்த ஆலய பெருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுதொடர்பாக திருவிழா பேரவை நிர்வாகிகள் ராம்சே, பில்பி மாத்யூ, தோமஸ் ஜோசப், மனோஜ் மாத்யூ ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலயம் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. பழமையை எடுத்துரைக்கும் ஆலயமாக இது திகழ்கிறது. ஆலய பெருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை நடப்பது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஆலயம் கேரளாவில் இருந்தாலும் விழாவில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் தான் அதிகளவில் கலந்து கொள்வார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக புதிதாக 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 7-ந் தேதி வரை தமிழ் முறைப்படி திருவிழா நடைபெறும். அதன் பிறகு கேரள முறைப்படி திருப்பலி நிறைவேற்றப்படும். விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன. விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் உள்பட 9 ஆயர்கள் பங்கேற்கின்றனர். மே 7-ந் தேதி திருவிழா மிகவும் முக்கியமானது.

    அன்றைய தினம் காலை 6 மணிக்கு சங்கனாசேரி உயர் மறைமாவட்ட பேராயர் மார் ஜோசப் தலைமையில் நவநாள், திருப்புகழ்மாலை மற்றும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 7.30 மணிக்கு அருட்தந்தை ஜார்ஜ், திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட உதவி ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் மலையாளம் மற்றும் லத்தீன் வழிபாட்டு முறையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மதியம் 3 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 5 மணிக்கு திருப்பவனி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினர். பேட்டியின்போது பங்குதந்தை தாமஸ் பவ்வத்து பரம்பில், ஜினு ஆகியோர் உடனிருந்தார்.
    புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 467-வது ஆண்டு பெருவிழாவானது ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.
    புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையாரின் திருத்தலம் சென்னை மாநகரில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் சாலையில் சைதாப்போட்டையில் உள்ள சின்னமலையில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சென்னை மாநகரிலுள்ள பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உயிர்ப்பு ஞாயிறுக்கு பின்வரும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வெகு ஆடம்பரத்துடன் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.



    இந்த வருடம் இத்திருவிழாவானது ஏப்ரல் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6.00 மணிஅளவில் மேதகு.Dr.ஜார்ஜ் அந்தோணிசாமி பேராயர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் அவர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணி அளவில் பல அருட்தந்தையர்களால் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் 9-ம் நவநாளன்று (28.04.2018, சனிக்கிழமை) ஆடம்பரத் தேர்த்திருவிழாவானது மேதகு சிங்கராயர், ஆயர், சேலம் மறைமாவட்டம் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் இறுதி நாளில் (29.04.2018 ஞாயிறு) மாலை 6.00 மணி அளவில் கொடியிறக்கம் மற்றும் சிறப்பு திருப்பலியோடு இத்திருவிழா நிறைவுபெற உள்ளது.



    புனித ஆரோக்கிய அன்னையின் பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் பக்தியோடு பங்கேற்று அன்னையின் ஆசீரை பெற்ற செல்ல இத்திருத்தலத்தின் அதிபரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை P.J.லாரன்ஸ்ராஜ் அவர்கள் அன்போடு அழைக்கிறார்.

    இத்திருத்தலத்தைப் பற்றிய சிறிய வரலாறு :

    இத்திருத்தலத்தில் அநேக அற்புதங்களும், அதிசய சுகங்களும் நடந்துள்ளன. இப்பெருவிழா நாட்களில் எண்ணற்ற திருப்பயணிகள் இத்திருத்தலத்தை நாடி தேடி வருகின்றனர். சின்னமலை திருத்தல வளாகம் உலகிலுள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும்கூட வரலாற்று சான்றுகளை தாங்கியுள்ளது. இது சென்னை மாநகரின் வரலாற்று சொத்தாகும். இந்த புனித திருத்தலத்தின் தொடக்கம் கி.பி.68-ம் ஆண்டாகும். இயேசுவின் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தோமையார் இந்தியாவில் வாழ்ந்த 20 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சின்னமலையில் வாழ்ந்திருக்கிறார். புனித தோமையார், அன்னை மரியாளின் சிறப்பு பக்தர். புனித தோமையார் கால் பதித்த இப்பூமியில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இப்பகுதியில்தான் கிறிஸ்தவம் ஐரோப்பிய நாடுகளுக்கும் முன்பே பிறந்தது முதன்முதலில் அன்னை மாரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயம் கி.பி.1551 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் இந்த மலை குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போதுள்ள வட்டவடிவிலான ஆலயமானது 1971ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இந்த வளாகத்தில் புனித தோமையார் வாழ்ந்த குகை பலிபீடம் அதிசய நீருற்று, இரத்தம் கசியும் கற்சிலுவை மற்றும் மலை சரிவிலே வடிவமைக்கப்பட்ட படைப்புகள் வரலாற்று சான்றுகளாக திகழ்கின்றன.

    இத்திருத்தலத்திற்கு வரும் அன்னையின் பக்தர்களுக்கென்று பேருந்து வசதிகளும், மெட்ரோ இரயில் மற்றும் மின்சார இரயில் வசதிகளும் உண்டு. அருட்தந்தை.P.J.லாரன்ஸ் ராஜ் இத்திருத்தலத்தின் அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்று பங்குமக்களை ஆன்மீகத்திலும், புனித தோமையார் பறைசாற்றிய விசுவாசத்தை உலகறிய செய்யவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அனைவரும் வாரிர்! ஆசீர் பெறுவீர்!!

    புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்
    சின்னமலை,
    சைதாப்பேட்டை,
    சென்னை-600015.
    “அறிவிலியே இன்றிரவே உன் உயிரை எடுக்கப் போகிறார்கள்” என்று இயேசு சொன்னது போல, நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியோம்.
    ‘நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’ (லூக்கா 23:43).

    இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறைந்தது.

    “யூதர்களின் அரசன்” என நக்கல் தொனியுடன் ஒரு வாசகத்தையும் இயேசுவின் சிலுவையின் உச்சியில் வைத்தார்கள். அங்கே அவர் அருகிலிருந்த ஒரு கள்ளனிடம் சொன்னதே இந்த வாக்கியம்.

    1. கேட்கத் தயாராக இருக்கிறார்

    இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வலி மிகுந்த தருணத்திலும், அருகில் இருந்தவர்களின் உரையாடல்களை செவிகொடுத்துக் கேட்கிறார்.

    சிலுவையில் உச்சியில் தொங்கிய இயேசுவைப் போன்ற வலியோ, துயரமோ நம்மைச் சந்திப்பதில்லை. அப்படியே சந்தித்தாலும், பிறருக்காய் காதுகளைத் திறந்தே வைத்திருங்கள், என்பதே இயேசுவின் செயல் சொல்லும் செய்தி.

    2. அவமானங்கள் மன்னிக்கப்படும்

    இயேசுவின் ஒரு புறம் இருந்த கள்வன் இயேசுவை நோக்கி பேசினான். அவனுடைய குரலில் கேலியும், பழியும் இருந்தது.

    “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று”

    இயேசு எரிச்சலடையவில்லை. கோபமடையவில்லை. மவுனமாய் இருந்தார். இயேசுவின் மவுனம் அவருடைய பேரன்பின் வெளிப்பாடு. மரணத்தின் நுனியிலும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனமும், பலமும் வேண்டும் என்பதை இயேசு சிலுவையில் நிகழ்த்திக் காட்டினார்.

    3. சுய பரிசோதனை வாழ்வளிக்கும்

    ம‌ற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா நாம் தண்டிக்கப்படுவது முறையே. இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என்று பதிலுரைத்தான்.

    இருவருமே திருடர்கள் தான். இருவருமே சிலுவைச் சாவுக்கு தகுதியானவர்கள் தான். ஒருவனுக்கு அது தெரிந்திருந்தது. இன்னொருவனுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

    தன்னை பரிசோதனை செய்ததால் கள்ளன் கூட “நல்ல கள்ளன்” எனும் அடைமொழியைப் பெறுகிறான்.

    4. இயேசுவின் தூய்மையை உணர்தல்

    “இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே” என ஒரு கள்ளன் மற்ற கள்ளனைப் பார்த்துச் சொல்கிறான். “இயேசு குற்றவாளி” என மறைநூலைக் கரைத்துக் குடித்தவர்கள் தீர்ப்பிட்டார்கள். இயேசுவை, கூட இருந்தவனே காட்டிக்கொடுத்து காசு வாங்கினான்.

    ஆனால், இயேசுவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கள்ளன் ‘இயேசு குற்றமற்றவர்’ என சான்று பகர்கிறான். இயேசுவின் ராஜ்ஜியத்தில் பாவிகளும், நிராகரிக்கப்பட்டவர்களும் நுழைவார்கள் என்பதன் இன்னொரு உறுதிப்படுத்துதல் தான் அது எனலாம்.

    5. கேளுங்கள், தரப்படும்

    “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான் அந்த க‌ள்ளன்.

    தனது தவறுகள் பாவங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்வதும். தான் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் முடிவு நரகம் மட்டுமே என்பதைப் புரிவதும் மீட்பின் முதல் படி. இரண்டாவதாக, இயேசுவின் மீது வைக்கின்ற நம்பிக்கை. மூன்றாவதாக, இறைவனிடம் தனது மீட்புக்காய் மன்றாடுவது.

    “ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்னும் வேண்டுதலில் தான் கள்ளனுக்கு மீட்பு கிடைக்கிறது.

    6. தனிப்பட்ட மீட்பு

    இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

    முதலாவது சிலுவை வார்த்தையான, “தந்தையே இவர்களை மன்னியும்” எனும் வார்த்தையில் ஒட்டு மொத்தமாக பொதுவான ஒரு மன்னிப்பை வழங்கிய இயேசு, தனது இரண்டாவது வார்த்தையின் மூலம் மீட்பு என்பது தனிநபருக்குரியது. ஒவ்வொருவரும் தனித்தனியே மீட்பின் பாதையில் வரவேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்.

    “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?” எனும் கள்ளனின் வார்த்தை களால் அவனுக்குள் பாவத்தைக் குறித்த அச்சமும், மீட்பின் தாகமும் இருப்பது புரிகிறது. கடவுள் மீது அவன் கொண்ட அச்சமே அவனை மீட்பை நோக்கி வழி நடத்தியது.

    7. மீட்பு உடனடிப் பரிசு

    இயேசுவை நோக்கி விண்ணப்பம் வைக்கிறான் நல்ல கள்ளன். இயேசு, “யோசித்து சொல்றேன்” என்று சொல்லவில்லை.

    “இன்றே…” என உடனடி மீட்பை அவருக்கு வழங்குகிறார். அத்துடன் நிற்கவில்லை. “என்னுடன்” என சொல்லி அந்தத் திருடனை திக்குமுக்காட வைக்கிறார் இயேசு.

    பேரின்ப வீட்டில் இருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றால், அங்கே இயேசுவோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.

    அந்தக் கள்ளனைப் பொறுத்தவரை இயேசுவை அவன் சந்தித்த முதலாவது நிகழ்வு அது. முதல் நிகழ்விலேயே அவன் தனது பாவங்களை உணர்ந்து, இயேசுவிடம் மீட்புக்காக விண்ணப்பிக்கிறான்.

    “அறிவிலியே இன்றிரவே உன் உயிரை எடுக்கப் போகிறார்கள்” என்று இயேசு சொன்னது போல, நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியோம். எனவே இறைவனிடம் கேட்பதில் தாமதம் கூடாது.

    சேவியர்
    உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உள்ளங்கனிந்த அன்பு காட்டுங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உரோமையர் 12:10-13.
    யூதர்கள் ஓய்வு நாள் சட்டத்தை யாரும் மீறக்கூடாது என்ற தங்கள் பக்கத்திலிருந்து தான் யோசித்தார்களே தவிர 38 ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த ஒருவருக்கு புது வாழ்வு கிடைத்து இருக்கிறது என்ற அவன் பக்கம் இருந்து யோசிக்கவில்லை. ஆனால் இயேசுஅவனுடைய கஷ்டத்தை தனது கஷ்டமாக எண்ணி அவரை குணப்படுத்துகிறார். இயேசு குணப்படுத்திய இடம் பெத்சதா. இது குளத்தின் பெயர். இதனை பெதசஸ்தா என்றும் கூறுவர். பெத்சாய்தா என்றால் மீன்பிடிக்கும் வீடு என்பது பொருள்.

    இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் உடல் நலமற்ற நோயாளி வித்தியாசமானவராகத் தென்படுகிறார்.

    முதலாவதாக, இயேசு அவரிடம் தானே வலிய சென்று “நலம்பெற விரும்புகிறீரா? என்ற கேள்வியை கேட்டபோது ஆவலோடு, “ஆம்“ என்று சொல்லாமல் தன் கடந்த காலத்தைப் பற்றியும், தன் இயலாமையைப் பற்றியும் பேசி கொண்டிருக்கிறார். நம்மில் பலரும் இந்த நோயாளியை போல இருக்கிறோம். இறைமகன் இயேசு இன்று இப்போது நமக்கு குணம் தர தயாராக இருந்தாலும் நாமோ நம் இயலாமையையும், பலவீனங்களையும் குறித்தே அதிகம் சிந்திக்கிறோம். அவற்றையே வார்த்தைகள் மற்றும் கண்ணீர் வழியாக இறைவன் பாதத்தில் கொட்டுகிறோம்.

    இரண்டாவதாக 38 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கிடந்த தன்னை குணமாக்கியவர் யார் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. எனவே தான் யூதர்கள் குணம் கொடுத்தவர் பற்றி கேட்ட போது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. நாமும் கூட இயேசுவை தேடி வந்து அவரிடமிருந்து உடல் உள்ள நலன்களை பெற்று கொண்டாலும் அவரை பற்றிய அறிவிலும், ஞானத்திலும் வளர ஆர்வம் காட்டுவதில்லை. நன்றி சொல்ல கூட மறந்து விடுகிறோம். குணம் தருபவராக மட்டுமே இயேசுவை அணுகுகிறோம்.

    மூன்றாவதாக மீண்டும் இயேசு அவரை சந்தித்து தான் யாரென்று வெளிப்படுத்திய போது அவரை பின்பற்றுவதை விட்டு அவரை யூதர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறார். நம் வாழ்க்கையிலும் சிலநேரங்களில் இயேசுவிடமிருந்து நன்மைகள் பெற்றாலும், வாழ்க்கையில் துயரங்கள் வரும் போது அவரை விட்டு புற தெய்வங்களை நாடி செல்ல தயங்குவதில்லை, வேறுவகையில் சொல்ல போனால் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய தயங்குவதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.

    வழக்கமாக இயேசுவை தேடித்தான் நோயாளிகள் செல்வார்கள். மேலும் அவர்களை குணமாக்குவதற்கு முன்பாக இயேசு அவர்களது விசுவாசத்தைக் கேட்டு தெரிந்துகொள்வார். ஆனால் 38 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தவர் இயேசுவை பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை. அவரது உதவியை நாடவுமில்லை. ஆனால் இயேசுவே தானாக முன்சென்று குணம் பெற விரும்புகிறீரா? ஏன்று சொல்லி குணம் கொடுக்கிறார். தேவையிலிருப்பவர்கள் நம்மிடம் ஒன்றும் கேட்கவில்லையே என்று சும்மா இருந்துவிடமால் நாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். “உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உள்ளங்கனிந்த அன்பு காட்டுங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உரோமையர் 12:10-13.

    ஆல்பட் புஷ்பராஜ், பங்குத்தந்தை,

    புனித அன்னாள் ஆலயம், கிழநெடுவாய்.
    அன்பு செய்வதே என் கட்டளை என்ற இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற நம் மனப்பாங்கினை கழுவி, பலியாகி நடமாடும் நற்கருணைகளாக வாழ இன்று முடிவெடுப்போம்.
    பணம், பொருள், பதவி, பட்டம் எதுவானாலும் இன்னும் வேண்டும் என்ற பேராசைக்கு உட்பட்டு தான் மனித மனம் ஏங்குகிறது. ஆனால் பதவி, பட்டம், பகட்டு இவையெல்லாம் வாழ்வின் இடையில் வருபவை. நிரந்தரமற்றவை. பணிவு, எளிமை இவையே நிரந்தரம். பணிவே பாரை ஆளும்.

    இறைத்தன்மையை விட்டு மனிதரானார் இயேசு, முற்றும் துறந்தார் மகாவீரர், பற்று துறந்து பாரை வென்றார் புத்தர், அகிம்சையால் அகிலத்தை வென்றார் மகாத்மா காந்தி. இவர்களின் வாழ்வு நமக்கு சுட்டிக்காட்டும் பாடம், பணிவு உலகை வெல்லும் என்பதே.

    அரசியல், ஆன்மிகத்தில் எளிமையான மனிதர்களை காண்பது அரிதாகி விட்டது. இத்தகைய சூழலில் ‘புனித வியாழன்‘ ஆணவத்தை சுட்டெரிக்கும் பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

    இயேசுவின் காலத்திலேயே நீயா? நானா? யார் பெரியவர்? என்கிற ஆணவப்போட்டி தொடங்கி விட்டது. அதனை ஆராய்ந்து இயேசு அதற்கு ஒரு செய்முறை விளக்கம் அளித்தார். அதுதான் பாதம் கழுவும் சடங்கு. ஆண்டவரே, நீரோ என் பாதங்களை கழுவுவது? என்ற பேதுருவின் வார்த்தை, ‘கடவுளாக இருக்கும் நீரா என்னை கழுவுவது?, கடவுள் தன்மையில் உள்ள நீரா என் பாதங்களை தொடுவது?‘.

    வேண்டாம், என்னை தொடாதே என்ற வார்த்தைகள், இயேசு தன் மனப்பான்மையில் இருந்து இறங்கி மனிதத்தன்மைக்கு வந்ததை காட்டுகிறது. அதிலும், அடிமையாக தன் சீடர்களின் பாதங்களை கழுவி ஒரு குரு என்றால், அவர் பலியாக வேண்டும் என்பதை சுட்டி காட்டுகிறது.

    அன்பு செய்வதே என் கட்டளை என்ற இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற நம் மனப்பாங்கினை கழுவி, பலியாகி நடமாடும் நற்கருணைகளாக வாழ இன்று முடிவெடுப்போம். ஏனோ, தானோவென்று நற்கருணையை பெறுவது வெறும் சடங்கு. மாறாக, நற்கருணையை உண்ணும் நாம் உறவு வாழ்வில், சமூக வாழ்வில், பிறருக்காக பணிந்து பலியாகி வாழ வேண்டும். அத்தகைய எண்ணம் இன்று மேலோங்க வேண்டும். ஏனெனில் பணிவே உலகை வெல்லும்.

    அருட்பணி. எஸ்.ஜான் நெப்போலியன், பங்குத்தந்தை,

    குட்டத்து ஆவரம்பட்டி, திண்டுக்கல்.
    ×