என் மலர்
கிறித்தவம்
நம் பாவங்களை கடவுள் மன்னிக்க வேண்டுமானால், பிறர் குற்றங்களை நாம் மன்னிப்பது அவசியம். நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கு விண்ணக வாழ்வு உறுதியாகும்.
“பகைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும்” என்று ஆண்டவர் இயேசு போதித்தார்.
தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்த இயேசு, “தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று எதிரி களுக்காக வேண்டுதல் செய்ததையும் காண்கிறோம். அவர் எப்படி நடந்து கொண்டாரோ, அவ்வாறே தமது சீடர்களும் பிற மனிதர்கள் செய்யும் குற்றங்களை மன்னிக்க வேண்டுமென கற்பித்தார்.
“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்கு செவிசாய்த்தால் நல்லது, உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சி களுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போல இருக்கட்டும்” (மத்தேயு 18:15-17) என்று இயேசு போதித்தார்.
இதைக் கேட்டதும், அவரது சீடரான பேதுருவுக்கு ஒரு சந்தேகம். அவர் இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு, “ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” (மத்தேயு 18:21-22,35) என்று பதிலளித்தார். நானூற்று தொன்னூறு முறை, அதாவது எத்தனை முறை பாவம் செய்தாலும் கணக்கு பார்க்காமல் மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் போதனை.
மன்னிப்பின் அவசியத்தை விளக்க இயேசு ஓர் உவமையையும் கூறுகிறார்: “அரசர் ஒருவரிடம் பத்தாயிரம் தாலந்து (ஆறு கோடி தெனாரியம்) கடன்பட்ட பணியாள் ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அரசரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க! எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அரசரும் பரிவு கொண்டு அவனை விடுவித்து, கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன் பட்டிருந்த உடன் பணியாளர் ஒரு வரைக் கண்டு, ‘என்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க! நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் அரசரிடம் போய் நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறினார்கள்.
அப்போது அரசர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.” (மத்தேயு 18:23-34)
இந்த உவமையில் வருகின்ற அரசர்தான் கடவுள். அவருக்கு எதிராக நாம் செய்கின்ற குற்றங்களே, அவரிடம் நாம் பெறுகின்ற கடன். நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும், நமது குற்றங்களை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார். நமது குற்றங்களுக்காக மனம் வருந்தி அவரிடம் சரணடைந்தால், கடவுள் நம்மை உறுதியாக மன்னிப்பார். அதே நேரத்தில், பிறர் குற்றங்களை மன்னிக்க நமக்கு மனம் வரவில்லை என்றால், நமது குற்றங்களுக்கான தண்டனையை கடவுள் வழங்குவது உறுதி என்பதே இயேசு தருகின்ற போதனை.
ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு கற்பித்த செபத்தில், “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்” (மத்தேயு 6:12) என்று வேண்டுமாறு அறிவுறுத்துகிறார். நாம் பிறரது பாவங்களை மன்னித்தால், நமது பாவங்களை மன்னிக்குமாறு கடவுளிடம் உரிமையோடு கேட்க முடியும் என்பதே இயேசு நமக்கு கற்றுத் தருகின்ற பாடம்.
“மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” (மத்தேயு 6:14-15) என்ற எச்சரிக்கையையும் இயேசு கிறிஸ்து வழங்குகிறார். நம் பாவங்களை கடவுள் மன்னிக்க வேண்டுமானால், பிறர் குற்றங்களை நாம் மன்னிப்பது அவசியம். நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கு விண்ணக வாழ்வு உறுதியாகும்.
டே. ஆக்னல் ஜோஸ்

அன்பு உள்ள இடத்தில் மலையளவு சுமையும், கழுத்தில் தொங்கும் மாலையளவு சுமையாகும் என்பார்கள். இன்று பெரிய வெள்ளி. உண்மையான அன்பை உலகம் அனுபவித்த தினம்.

இரண்டாம் உலகப்போரின் போது ஒரு சித்ரவதை முகாமில் மூன்று யூதர்களை தூக்கிலிட்டனர். அவர்களில் இருவர் வயதானவர்கள். தூக்கிலிட்டதும் அவர்கள் உடனே இறந்து விட்டனர். ஆனால் மூன்றாவது நபர் ஒரு இளைஞர். அவரை தூக்கிலிட்டதும் உடனே அவர் இறந்து போகாமல், நீண்ட நேரம் தூக்கில் தொங்கி வேதனையால் துடித்து கொண்டிருந்தார்.
இந்த பரிதாப காட்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் மனம் வருந்தி, தன் அருகில் இருந்தவரை பார்த்து, எங்கே கடவுள்? கடவுள் எங்கே? என்று கேட்டார். அதற்கு அருகில் இருந்தவர், ‘அவர் தான் அந்த தூக்கு கயிற்றில் தொங்குகிறார்‘ என்றார். ஆக, இயேசு, சிலுவையை அன்பின் சுமையாக ஏற்று கொண்டதால், தமது இறப்பின் மூலம், கடவுளே மனிதரின் துன்பத்தில் நேரடியாக, முழுமையாக பங்கேற்றார் என்பதை காட்டுகிறது.
திருத்தூதர் பவுலுடன் இணைந்து நாமும், ‘கிறிஸ்து என் மீது அன்பு கூர்ந்தார். எனக்காக ஒப்புவித்தார்‘ (கலா 2:20) என்று நன்றி பெருக்குடன் கூற வேண்டும். ‘கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர வேண்டும்‘. (எபே 3:18-19) கிறிஸ்துவினுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மை பிரிக்க முடியும்?‘ (உரோ 8:35) என்று சூளுரைக்க வேண்டும்.
சிலுவை என்னும் அன்பின் சுமையால் கடவுள் மனிதரின் துன்பத்தில் தன்னை இணைத்துக்கொண்டு துன்புற்றார். மனிதர் சிந்தும் கண்ணீர் கடவுளுடைய கண்ணீர். மனிதரின் சாவு கடவுளின் சாவு என்பதை உணர்ந்தவர்களால் இந்தப்புனித நாளில் கிறிஸ்துவின் சிலுவை அன்பை சுவைத்து, அந்த அன்பை பிறரில் விதைத்து, அதை பன்மடங்கு அறுவடை செய்ய இயலும். அதற்கு நாம் முயற்சிப்போம்.
அருட்பணி. ஆ.ஜேம்ஸ் அந்தோணிதாஸ், பங்குத்தந்தை, காமலாபுரம்.

இயேசுவின் சிலுவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் பாலமாய் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தது சிலுவை தான்.
தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக்கா 23:34)
இயேசு சிலுவையில் பேசிய முதல் வாக்கியம் இது தான்.
இயேசு கைகளிலும், கால்களிலும் ஆணிகளால் அடிக்கப்பட்டு சிலுவையில் தொங்கியபோது, மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு ஏழு வாக்கியங்களைப் பேசினார்.
அவை கிறிஸ்தவ ஆன்மிக வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் விஷயங்களாக அமைந்துள்ளன.
‘சிலுவை’, மீட்பின் சின்னம். இன்றைக்கு அது காதுகளிலும், கழுத்திலும், விரல் களிலும், ஒரு அலங்காரச் சின்னமாக இடம்பெற்று விட்டது.
சிலுவை அலங்காரப் பொருளா?
கல்வாரியில் இயேசுவின் குருதியும், வலி நிறைந்த வார்த்தைகளும், உயிர் உறைந்த அவமானங்களும் இறுகப்பற்றியிருக்கும் சின்னம்.
ஒழுங்கற்ற மரத்துண்டுகளால் இணைந்த சிலுவை தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாக மாறியது.
‘சிலுவை’ என்பது அழகியலின் அடையாளம் அல்ல. இயேசு எனும் மீட்பரின் உயிர் உறிஞ்சிய கொலைக்கருவி. நிராகரிப்புகளின் வலி நிரம்பிய கொலைக்கருவி. அது இயேசுவைத் தாங்கியதால் மீட்பின் கருவியாக மாறிப்போனது.
‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்பார்கள். ஏதேன் தோட்டத்தில் மரத்தின் கனியினால் விளைந்த பாவத்தை, கல்வாரியில் மரத்தின் சிலுவையால் நீங்கியது.
குற்றுயிராய் நைந்து தொங்கிய உடல், சிலுவையில் ஓர் அழுக்கான படத்தைப் போல ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்பட்டது. அந்த வேதனையின் பெருங்கடலிலும் இயேசு தந்தையிடம் வேண்டுதல் செய்தார்.
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”.
தனக்காக வேண்டுதல் செய்யவே பிரியமில்லாத மனிதர்களின் மத்தியில், பிறருக்காக வேண்டுதல் செய்கிறார் இயேசு. அதுவும் மரணத்தின் வாசலில் கால் வைக்கும் போதும் அவர் வேண்டுகிறார்.
பாவத்தை யார் தான் தெரியாமல் செய்தது? இயேசுவை சாட்டையால் அடித்தவனுக்குத் தெரியவில்லையா?, சிலுவையைத் தோளில் தூக்கிப் போட்டவனுக்குத் தெரியவில்லையா?, கூர் ஆணிகளால் வெள்ளைப் புறாவின் இறகுகளை இறுக்கமாய் அடித்தவனுக்குத் தெரியவில்லையா?
எல்லோருக்கும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், ‘மீட்பரைச் சிலுவையில் அறைகிறோம்’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
வாழ்நாள் முழுவதும் மன்னிப்பைச் செயலிலும், போதனைகளிலும் காட்டி வந்த இயேசு, தனது முடிவுரையில் மீண்டும் ஒரு முறை அதை எழுதி வைக்கிறார்.
“தந்தையே இவர்களை மன்னியும்” என யாரைக் குறிப்பிட்டார் இயேசு.
இயேசுவை குற்றம் சாட்டியவர்களை, சாட்டையால் அடித்தவர்களை, ‘சிலுவையில் அறையும்’ என கத்தியவர்களை, ‘பரபாஸ் போதும்’ என சமரசம் செய்தவர்களை, சிலுவையில் அறைந்தவர்களை, அவருக்கு ஆதரவாய் நிற்காத மனிதர்களை... எல்லோரையும் இயேசு மன்னித்தார். அவ்வளவு தானா?
“நமது பாவங்கள் தான் அவரைச் சிலுவையில் அறைந்தது” என்கிறது பைபிள்.
அப்படியானால் அவரைச் சிலுவையில் அறைந்தது யார்? நமது பாவங்கள்தான்.
நம்மிடம் பாவம் இல்லை என்றால் நாம் பொய்யர்கள். எனில், சிலுவையில் உச்சியில் இயேசு யாருடைய பாவங்களை மன்னித்தார்?
நமது பாவங்களை, இயேசுவை, சிலுவையில் அறைந்ததில் நமது பங்கும் உண்டு.
நாம் தெரிந்தே செய்கின்ற பாவத்தைக் கூட இயேசு, “தெரியாமல் செய்கிறார்கள்” என கரிசனையோடு கூறுகிறார். நமது பாவங்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.
மூன்று வயது மழலை மகள் தவறு செய்து விட்டு ஓடி வரும் போது, “சின்னப்பிள்ள தெரியாம செஞ்சுடுச்சு” என தழுவிக்கொள்ளும் ஒரு தந்தையின் பிரமிப்புப் பாசத்தை அல்லவா இயேசு சிலுவையில் காட்டினார்?
“இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் சந்ததி மேலும் வரட்டும்” என திமிராய்ப் பேசிய மக்களை இயேசு சிறிதும் வெறுக்கவில்லை.
“தெரியாமல் செய்கிறார்கள், மன்னியுங்கள் தந்தையே” என வலியின் உச்சத்திலும் கதறி வேண்டுகிறார்.
“பாவத்தின் சம்பளம் மரணம், இதோ அந்த மரணத்தை நான் சிலுவையின் வழியாக நிறைவேற்றி விட்டேன். தந்தையே இவர்களை மன்னியும்” என இயேசு மக்களுக்காய் வேண்டுகிறார்.
பழிக்குப்பழி வாங்கும் எண்ணமோ, முள்ளை முள்ளால் எடுக்கும் குணமோ எனக்கு இல்லை. “பிதாவே என்னிடம் வெறுப்பு இல்லை, இவர்களை மன்னியும்” என எதிரி களுக்காய் மன்றாடுகிறார்.
அந்த வார்த்தை கூடியிருந்த சேவகர்களை ஊடுருவக் குத்தியிருக்க வேண்டும். அங்கிருந்த படைவீரர்களில் சிலர் புனிதர்களாக மாறினார்கள் என்கிறது வரலாறு.
இயேசுவின் சிலுவை, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் பாலமாய் இருக்கிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த திரையைக் கிழித்தது சிலுவை தான்.
எப்படி செபிக்க வேண்டும் எனும் போதனையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி வாழவேண்டும் என வாழ்க்கையில் மன்னிப்பைப் போதித்த இயேசு, எப்படி இறக்க வேண்டும் என்பதிலும் மன்னிப்பை முன்னிறுத்துகிறார்.
கேட்காமலேயே மன்னிக்கும் மனம் கொண்ட இறைவனிடம், மன்னிப்பைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளத் தயாராவோமா?
சேவியர்

ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30).
ஆண்டவர் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30). எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல, மாறாக அது வெற்றியின் முழக்கம். நாம் நம்முடைய சாதாரண பார்வையில் அது தோல்வியின் குரலாக விரக்தியின் உச்சத்தில் கதறுபவரின் சத்தம் போலத்தான் பார்க்க முடியும்.
அதாவது, நான் முயற்சி செய்தேன், ஆனால் தோற்றுவிட்டேன் என்பது போல தோன்றும். இதற்கு காரணம், உலகை மீட்க வந்த உன்னத தேவன் சிலுவையில் தொங்கிக் கொண்டு இருக்க, அவரை கொலை செய்பவர்கள் அவருக்கு முன் திடமாக நின்றுகொண்டு அவரை எள்ளி நகையாடி கொண்டும், அவரை சிலுவையிலிருந்து இறங்கிவர கூறி சவால் விட்டுக்கொண்டும் இருப்பது, ஆண்டவர் இயலாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு உருவாக்கலாம்.
கசையால் அடிகள் வாங்கி தசைகள் கிழிந்து குருதி வழிந்தோடும் நிலையில் சிலுவை மரத்தில் தொங்கி கொண்டு எப்படி அவர் வெற்றியின் குரலாக முழங்க முடியும் என்று எண்ணத் தோன்றும். மீட்பின் வரலாற்றோடு விவிலியத்தின் முன்னறிவிப்புகளோடு இறை நம்பிக்கையோடு நாம் அதைப் பொருத்தி பார்த்தால் தான் அது வெற்றியின் முழக்கம் என்பது தெளிவாகத் தெரியும்.
எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு “தெதேலேஸ்தாயி” என்ற கிரேக்க வார்த்தையை நற்செய்தியாளர் பயன்படுத்துகிறார். இது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு எளிய வார்த்தை. ஒரு வேலையாள் தன் வேலைகளை முடித்தவுடன் தன் தலைவரிடம் வந்து எல்லாம் முடிஞ்சிடுச்சி (தெதேலேஸ்தாயி) என்று தன் பணியின் நிறைவை சொல்வது. ஒரு சிற்பி அல்லது ஒரு ஓவியர் தன் சிலை அல்லது ஓவியம் முழு வடிவம் பெற்றவுடன் எல்லாம் முடிஞ்சிடுச்சி என்று மனமகிழ்வுடன் சொல்வது போல, ஆண்டவர் இயேசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்.
கெத்சமணி தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்த படைவீராகளிடம் “நான் தான் என்று துணிந்து கூறுகிறார். அவர்கள் சற்று பின்னோக்கி செல்கின்றனர். பேதுருவிடம் வாளை உரையில் போடு என்று சொல்கிறார். தன் தந்தையிடம் சொல்லி தூதர்களை அனுப்பி போர் புரிய சொல்ல கேட்கவில்லை. தந்தையின் விருப்பம் நிறைவேறிவிட்டது (மாற்கு 14:36) பழைய ஏற்பாட்டின் வாக்குகள் அனைத்தும் நிறைவேறிவிட்டன.
சாவு முடிந்துவிட்டது. பாவம் முடிந்துவிட்டது என்ற தன் வருகையின் நோக்கம் வெற்றிப் பெற்றுவிட்டதை முழங்குகின்றார். முடிவில்லாதவருக்கு எதுவும் முடிவாக இருக்க முடியாது. எல்லாம் நிறைவேறியது ஒரு வெற்றியின் குரல் கீழ்படிதலின் குரல் மற்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் குரல் மனித சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் நிறைவேறிற்று. மண்ணகத்தில் போரினை முடித்து விட்டு உன்னருகே வருகின்றேன் தந்தையே என்ற வெற்றியின் முழக்கம். அதனால் தான் நாம் அந்த நாளை புனித வெள்ளி என்று போற்றுகிறோம்.
தேவதாஸ், பங்குத்தந்தை,தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.

ஆண்டவரின் வெற்றி, சாவு இல்லாமல் இல்லை. மாறாக சாவுக்குள்தான் அவரின் வெற்றி இருக்கிறது. புனித சனி புதிய விடியலுக்காய் காத்திருக்கும் அமைதியின் நாளாகும்.
திருஅவை கொண்டாடும் புனித சனிக்கிழமையை பெரும் பாலானவர்கள் சிறப்பான நாளாக கருதாமல் இருப்பதுண்டு. புனித வெள்ளிக்கும், உயிர்ப்பு ஞாயிறுக்கும் இடையே வருகின்ற புனித சனியின் உண்மையான நிலையை நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது. சிலுவை மரணம் என்ற கொடிய வேதனைக்கு பின், உயிர்ப்பு என்ற மகிமையின் நிலைக்கு முன் உள்ள முக்கியமான நாள்.
புனித வெள்ளியன்று நிகழ்ந்து முடிந்த சிலுவைப்பாடுகளுக்கும், வர இருக்கின்ற உயிர்ப்பின் மகிமைக்கும் இடையே உள்ள புரியாத ஒரு அமைதி. நடந்தது நடந்து விட்டது, வரவிருப்பது இன்னும் வரவில்லை என்ற இரு வேறுபட்ட நிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு புதிரான நிலை. வெள்ளிக்கிழமையின் வேதனையை நினைத்து அழுவதா அல்லது உயிர்ப்பின் வருகையை நினைத்து மகிழ்ந்து இருப்பதா என்ற ஒரு இனம் புரியாத அமைதியில் நாம் இருக்கும் நாள்.
புனித சனியின் அமைதி நமக்கு பல்வேறு செய்திகளை சொல்கிறது. ஆண்டவர் இயேசுவின் மரணம் சீடர்களின் வாழ்விலும், உறவை இழந்த நிலை நம்பிக்்கையை, கனவுகளை இழந்த நிலையை உருவாக்கியது. அவர்கள் உயிர்ப்பு ஞாயிறு ஒன்று இருப்பதை அறியவில்லை. புனித வெள்ளியிலிருந்து, ஞாயிறு நோக்கி நகர முடியவில்லை.
எனவே அவர்கள் கல்லறை நோக்கி செல்கிறார்கள். புனித சனிக்கிழமை அமைதியும், அசையாநிலையும் கொண்டது. அவரைப் பற்றிய நினைவுகளையும், அவர் கொடுத்த நம்பிக்கையையும் கொண்டது. கல்லறையின் அமைதி புதிய விடியலுக்கானது. நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிக்கையிடுவது போல, அவர் பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
அங்கு அவர் சாவின் அடிமைத்தனத்தை உடைக்கிறார். புனித சனி, துன்பத்தின் இடத்தில் மகிழ்ச்சியை வைக்கும் நாள் அல்ல. அது துன்பத்தையே மகிழ்ச்சியாய் மாற்றிக்கொள்ளும் நாள், கல்லறை கருவறையாக மாறும் நாள், வாழ்க்கை முடியும் இடத்தில் புதிய வாழ்வு தொடங்கும் நாள். ஆண்டவரின் வெற்றி, சாவு இல்லாமல் இல்லை. மாறாக சாவுக்குள்தான் அவரின் வெற்றி இருக்கிறது. புனித சனி புதிய விடியலுக்காய் காத்திருக்கும் அமைதியின் நாளாகும்.
- தேவதாஸ், பங்குத்தந்தை, தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.

இறப்பதற்காக பிறந்த இறைமகன் இயேசுவின் மீது இறைவன் வைத்திருந்த இறுதி திட்டம் அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதாகும்.
புனையப்பட்ட பொய்சாட்சிகளோடும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளோடும் ரோம ஆளுநர் பிலாத்து, கலிலேயா சிற்றரசன் ஏரோது முன், மாபெரும் குற்றவாளியாக இயேசுவை அழைத்துச் சென்றனர். சமய தலைமைச் சங்கத்தில் வைத்து தீட்டப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திடவே மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இயேசு தன் கடும்வேதனை மிகுந்த வேளையில் கூறிய சிலுவை மொழிகள் ஏழு. துன்பத்தின் மத்தியிலும் இயேசுவின் தூய இயல்பு மாறவில்லை என்பதை இவ்வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
1. “தந்தையே இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”. (லூக்கா 23, 34)
“உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று போதித்த இயேசு இப்போது வாழ்ந்து காட்டுகிறார். வக்கிரமும், வன்மமும் நயவஞ்சகமும் நிறைந்த செயலைச் செய்தவர்களுக்காக இறைவனிடம் பரிந்து மன்றாடுகிறார். தெரிந்து செய்த பிழைக்கு தெரியாமல் வழங்கப்படுகிறது மன்னிப்பு.
2. “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக்கா 23,43)
தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு குற்றவாளியின் தாழ்மையான வேண்டுதலுக்கு இணங்கி பேரின்ப வாழ்வை அருள்வதாக வாக்குரைக்கிறார். இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்பதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று வரிதண்டுவர் சகேயுவுக்கு வழங்கியதைப் போல் இவருக்கும் தாமதமற்ற உடனடி மீட்பின் வாழ்வை உறுதி செய்கிறார்.
3. “அம்மா, இவரே உம் மகன்”.... “இவரே உம் தாய்” (யோவான் 19:26,27)
‘உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளுக்கிணங்க நிர்கதியற்ற நிலையில் நிற்கும் தன் தாயின் மீது அக்கறை கொள்கிறார், தன் தாயை தன்னைப்போன்று மிகவும் அன்பாக நேசித்திட, தன் தோள் மீது சாய்ந்த தன் அன்புக்கு பாத்திரமான சீடன் யோவானிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கிறார். சீடர் யோவான் மூலம் தான் மிகுந்த கவனம் செலுத்தும் தாய்க்கு ஒரு ஆதரவை ஏற் படுத்தி, நல்ல மகனுக்கான தன் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுகின்றார்.
4. “எலோயி, எலோயி, லெமா சபக்தானி” (மாற்கு 15:34)
“என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது இதற்கு பொருள். கதிரவன் கண்களை அடைக்க காரிருள் சூழ பிற்பகல் மூன்று மணி வேளையில் இயேசுவால் உரக்க கத்தி உரைக்கப்பட்ட வார்த்தை, தாங்கொணா வேதனையில் இறைவன் தன்னை கைவிட்டு விட்டாரோ என்ற அங்கலாய்ப்போடு கூறுகிறார். இவ்வாக்கு இறைமகன் இயேசு ஒரு மெய்யான மனிதனாகவே வலிகளோடும், பாடுகளோடும் வாழ்ந்தார் என்பதை தெளிவுப்படுத்துகிறது. மானிட மகன் இயேசுவின் மனிதத் தன்மையின் மீதான ஐயத்தை அது அகற்றுகிறது.
5. “தாகமாய் இருக்கிறது” (யோவான் 19:28)
மறைநூலில் எழுதப்பட்டபடியே (திருப் பாடல்கள் 69:21) இயேசு தாகம் அடைந்தார். வியாழன் நள்ளிரவில் கைது செய்யப்படுகிற இயேசு அடுத்தடுத்த விசாரணைகளை சந்திக்கிறார். இங்கே உண்பதற்கோ, நன்னீர் பருகுவதற்கோ துளியளவும் சந்தர்ப்பம் இல்லை. ஏளனம், இகழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் மனதின் வலிகள் ஒருபக்கம். முள்முடியின் வலியோடு, வீதியெங்கும் பட்ட சாட்டையடிகளின் வலிகள் மறுபக்கம். கை கால்களில் துளைத்திருந்த ஆணிகள், உடலெங்கும் உதிரம் வழிய உழுதநிலம் போல காணப்பட்டது இயேசுவின் உடல். இந்நிலையில் இயேசு இவ்வார்த்தையை மொழிகிறார்.
6. “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30)
“திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம், அவற்றை அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று தான் உரைத்த வாக்குப்படி பல இறைவாக்குகளை தன் வாழ்வில் நிறைவேற்றியவர் இறைமகன் இயேசு. இறைவன் தன் மகன் இயேசுவின் மீது வைத்திருந்த மீட்பின் திட்டத்தை தான் நிறைவேற்றிய வெற்றிக் களிப்பில், வெற்றிக் கனியை ருசித்த போர் வீரனைப்போல், இலக்கை வெற்றியுடன் எட்டிய ஓட்டப்பந்தய வீரனைப் போல் இயேசு சிலுவையில் முழக்கமிட்டார்.
7. “தந்தையே உம் கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக்கா 23:46)
மனித உயிர் இறைவனுக்கே உரியது. உயிரை கொடுக்கவும் எடுக்கவும் அவர் ஒருவரே உரிமையுள்ளவர். மாபெரும் மீட்பின் திட்டத்தோடு தாவீதின் குமாரனாக பெத்தலையில் பிறக்கச் செய்து, தியாகப் பாதையில் வழிநடத்தி, கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு மரண மடையச் செய்யும் வரையில் உயிரளித்த தன் தந்தையிடம், தான் அளித்த உயிரை அவரிடமே மீண்டும் ஒப்படைக்கிறார்.
தியாகமும், அன்பும், அமைதியும் தான் உலகுக்கு நிலையான மெய் மகிழ்வை தர முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திச் சென்றவர் இறைமகன் இயேசு.
அருட்பணி.ம.பென்னியமின், பரளியாறு.

1818-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்ட தொடங்கிய புனித அந்திரேயா ஆலயத்துக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) 200 வயது ஆகிறது. பழமை மாறாமல் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
புனித அந்திரேயா ஆலயம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை அருகில் உள்ளது. இந்த ஆலயம் 1818-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1821-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு ஆலயம் கட்ட தொடங்கிய 200-வது ஆண்டு நினைவு நாள் இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதற்காக இன்று இரவு 7 மணிக்கு ஆலயத்தில், நன்றி தெரிவிக்கும் ஆராதனை நடைபெற இருக்கிறது. வருகிற 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் நன்றி தெரிவிக்கும் ஆராதனையுடன், ஆலயம் கட்டத்தொடங்கியது எப்படி? ஆலயத்தின் கட்டிட சிறப்பம்சங்கள் என்ன? என்பது அடங்கிய புத்தகம் வெளியிடப்பட இருக்கிறது.
அடிக்கல் நாட்டப்பட்டதன் 200-வது ஆண்டில் வீறுநடைபோடும் ஆலயத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அந்த ஆலயத்தின் பாதிரியார் ஐசக் ஜான்சன் கூறியதாவது:-
புனித அந்திரேயா ஆலயம் கட்ட இந்த இடத்தை முதலில் தேர்வு செய்த போது, வெறும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. அதை அகற்றுவதற்காக 150 இடங்களில் கிணறுபோல் 14 அடி முதல் 50 அடி வரை ஆழமாக குழி தோண்டி அதில் அந்த சேறும், சகதி மற்றும் நீர் சேகரித்து, அதில் ஜல்லிக்கல், கூழாங்கல், மணல் மற்றும் செங்கல் ஆகியவற்றை கொண்டு நிரப்பி அடித்தளம் தயார் ஆனது.
அதன்பின்னர், ஆலயத்தின் கட்டிடத்தை கட்டிடக்கலை நிபுணர் தாமஸ்டி ஹவிலாண்ட், தலைமை என்ஜினீயர் கொலனல் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியால் நேர்த்தியாக கட்டப்பட்டது. கட்டிடத்துக்கான பணிகளில் சேத்துப்பட்டு பகுதியில் இருந்து நம்முடைய மக்கள் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் பிரசித்தி பெற்ற ஆலய கட்டிட வடிவமைப்பான ‘நியோ கிளாசிக்கல் சர்ச்சஸ்’ கட்டமைப்பில் தான் கட்டப்பட்டு இருக்கிறது. வட்டவடிவில் ஆலயத்தின் நடுப்பகுதி இருக்கும். அதன் குவிமாடத்தில் வட்டவடிவில், மொட்டை மாடியில் இருந்து வானத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ? அதே தோற்றத்தில் நீல நிறம் மற்றும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.
196 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் பொலிவு மாறாமல் அதே வண்ணத்தில் நீடிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நீலநிற வண்ணம் ஸ்காட்லாந்தில் ‘லேபிஸ் லசுலி’ என்ற நீலநிறத்திலான கற்களை நொறுக்கி பெயிண்டாக மாற்றி இதில் பூசப்பட்டு இருக்கிறது. அதன் ஆயுட்காலம் ஏறக்குறைய 500 ஆண்டுகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
எந்திரத்தின் உதவி இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் முற்றத்தை தாங்கி பிடிக்கும் பிரமாண்டமான 16 தூண்கள் பிரமிக்கத்தக்க வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. இதையும் நம் நாட்டு கலைஞர்களை கொண்டே கட்டியிருப்பது மேலும் சிறப்பம்சமாகும். 3 ஆண்டுகளில் கட்டுமான பணிகளை சிரமத்துடன் கலைநயமாக வடிவமைத்து முடித்து, 1821-ம் ஆண்டு ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு பணிகளை அப்போது முடித்து இருக்கின்றனர்.
உள்ளே இருக்கும் மர வேலைப்பாடுகளுக்கும் இதே வயது தான் ஆகிறது. இதுவரை ஆலயத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. 166½ அடி உயர கோபுரம் ஆலயத்தின் நுழைவுப்பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 500 குடும்பத்தினர் ஆலயத்தில் உறுப்பினர்களாக இப்போது இருக்கிறார்கள். அப்போதில் இருந்து இப்போது வரை ஸ்காட்லாந்து முறைப்படியான ஆராதனையே நடைபெற்று வருகிறது.
அடிக்கல் நாட்டிய 200-வது ஆண்டு நினைவு நாள் இப்போது கொண்டாடப்படுகிறது. அடுத்ததாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு விழா வருகிற 2021-ம் ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

எல்லா நெருக்கடியிலும் பக்திக்கான நல்லதை மட்டுமே செய்யும் வைராக்கியம் இல்லாவிட்டால், மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் நாம் வித்தியாசம் ஆனவர்கள் அல்ல.
உலகத்தில் இயல்பாக கிடைக்க வேண்டிய நன்மைகளை பெறுவதற்கே மிகுந்த போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அவற்றைப் பெறுவதில், நேர்மையானவர்கள் நியாயமான வழிகளை சிந்திப்பார்கள். மற்றவர்கள் குறுக்கு வழிபற்றி ஆராய்வார்கள். ஆனால் இந்த இரண்டு வழியிலுமே போராட்டம் உண்டு.
இவற்றை ஒப்பிட்டால், நேர்மையான வழியில் நின்று போராடுபவனுக்கே அதிக கஷ்டம் உண்டு. அவன் இறுதிவரை பொறுமையுடன் இருந்தாக வேண்டும். ஆனால் அதன் பிரதிபலனாக எதிர்காலத்தில் அவனோடு அவனது (பக்தன், பக்தியற்றவன், இறைமறுப்பாளன் உள்ளிட்டோரின்) வாரிசுகளும் சமாதானத்தை இறைவன் அளிக்கிறார்.
நேர்மையில் நீடிப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. முடிந்த வரை நேர்மையைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு வகை; இழப்பாக எது நேர்ந்தாலும் நேர்மையை விட்டுத் தராத நிலை மற்றொரு வகை. பெரிய அளவில் இழப்புகள் வரக்கூடும் என்றாலும், நேர்மையை விட்டுவிடாமல் ஒருவனால் அதில் நீடிக்க முடியும் என்றால் அது உண்மையான கிறிஸ்தவனால்தான் முடியும்.
ஏனென்றால், அதில் அவனுக்கு ஒரு முன்னுதாரணம் உள்ளது. கடுமையாக அடிகள்பட்டு சிலுவையில் குற்றுயிராய் தொங்கிச் சாக வேண்டும் என்ற தனக்கான இறைசித்தத்தை விட்டுவிலகாமல், அதில் பக்திக்கான நேர்மையைக் கடைப்பிடித்து, அதற்காக உயிரையே இழந்தவர் இயேசு.
எனவே, அவரது வழியை பிசகாமல் பின்பற்றுபவனும், உயிர் உட்பட எந்த இழப்புகளுக்கு அஞ்சாமல், இறைவனுக்காக இறுதிவரை நேர்மையை பின்பற்றவே விரும்புவான். இயேசுவுக்குப் பின்னரும், பக்திக்கடுத்த நேர்மைக்காக அவரது சீடர்கள், பக்தர்கள் பலர் உயிரிழந்து இன்றும் சாட்சிகளாக உள்ளனர்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது முடிந்த காரியங்களில் நேர்மையாகவும், முடியாதவற்றில் சூழ்நிலைக்கு ஏற்பவும் செயல்படுவது அல்ல. அரசின் அதிகார நெருக்கடி, தெரிந்தவர்கள் முன்னிலையில் அடிகள், உடனிருந்தவர்கள் கைவிடுதல், கேலிப்பேச்சுகள், அவமானம், செய்யாத குற்றத்துக்கு உச்சபட்ச தண்டனை போன்ற எத்தனையோ நெருக்கடிகளை சகித்துத்தான் பக்திக்கான நேர்மையை இயேசு கடைப்பிடித்தார்.
இது மற்ற பக்தர்களால் முடியுமா? பக்திக்கான நேர்மையை காப்பாற்றுவதற்கு இவ்வளவு வைராக்கியத்தை காட்ட வேண்டுமா? இதனால் உலக வாழ்க்கையை இயேசுபோல இழக்க நேரிடுமா? இந்த வைராக்கியம் தானாகக் கிடைக்குமா? என்பதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.
சரீர பாவங்கள், உள்ளத்தில் இருந்து சிந்தனையாக வரும் பாவங்கள், பிறவிக் குணங்களின்படி செய்யும் பாவங்கள் (ஜென்ம சுபாவங்கள்) ஆகியவற்றை செய்யமாட்டேன் என்று உறுதியாக முடிவு செய்து, மனம் திருந்தியவன்தான் தகுதி (பக்தி) உள்ள கிறிஸ்தவன். இவன்தான் எந்த நெருக்கடியிலும் கிறிஸ்து காட்டிய பாதையைவிட்டு விலகமாட்டான்.
பாவநெருக்கடியிலும் அதில் விழாமல் வைராக்கியம் காட்டும் பக்தனுக்கே பக்திக்கடுத்த நேர்மையை கடைப்பிடிப்பதில் இறைவன் வைராக்கியம் பெறச் செய்கிறார். அந்த வைராக்கியத்தினால் உயிர்போகும் என்றாலும், அதுதான் அவனுக்கு உச்சபட்ச மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் நடுங்கச் செய்யும் மரணமே உன் கூர் எங்கே? என்று அதை தைரியமாக எதிர்கொள்வான்.
பக்தி வைராக்கியத்தின் அடிப்படையில்தான் அவன் உலக வாழ்க்கையை மேற்கொள்வானே தவிர, உலக இயல்பு குணங்களான பகை, பொய், வெறுப்பு, இச்சை போன்ற இயல்பான தன்மைகளை நாடமாட்டான்.
உதாரணமாக, லஞ்சம் மூலம் பெறும் காரியங்களை நோக்கிச் செல்லமாட்டான். பொய் சொல்லி நிவாரணம் பெறமாட்டான். எனவே மற்றவர்களைப்போல இவனுக்கு பல உலக நன்மைகள் கிடைத்திருக்காது. ஆனாலும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சமாதான வாழ்க்கை அவனுக்கும் அவனது பிற்கால சந்ததிக்கும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
வாரிசுகளுக்கு பக்தன் வைத்துச் செல்லும் ஆசீர்வாதம் இதுதான். ஆனாலும் மற்றவர்கள் கூறும் ஆசீர்வாதம் நம்மை அடைய வேண்டும் என்றால், அதற்கான பக்தி என்ற தகுதியை நாம் பெற்றிருக்க வேண்டும். காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது என்று வேதம் கூறுவதுபோல, பிறரால் அருளப்படும் ஆசீர்வாதங்களும், நம்மிடம் தகுதியில்லாவிட்டால் தங்காது.
ஆனால், உலகம் நிர்ணயித்தபடி எல்லாம் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, ஆசீர்வாதமும் வந்து சேர்வதற்கு ஆசைப்படும் மக்களாக பலர் காணப்படுகின்றனர். இவர்களை ஆசீர்வதித்து திருப்திப்படுத்தும் பல போதனைகளும் உலவிக்கொண்டிருக்கின்றன.
இந்த போதனைகளிலும், அதற்கானவர்களிடத்திலும் சிக்கிவிடாமல், எப்போதும் நல்லதைச் செய்யும் வைராக்கியம் நம்மிடம் உள்ளதா என்பதை வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள் (கலா.4:18). அந்த வைராக்கியம் இல்லாவிட்டால் நிலைத்த பக்தியையும், ஆசீர்வாதங்களையும் பெறக்கூடிய தகுதியையும் பெறவில்லை என்று அர்த்தம்.
கிறிஸ்தவ பக்தி வாழ்க்கை எளிதானதல்ல. எல்லா நெருக்கடியிலும் பக்திக்கான நல்லதை மட்டுமே செய்யும் வைராக்கியம் இல்லாவிட்டால், மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் நாம் வித்தியாசம் ஆனவர்கள் அல்ல. பக்தியை அடைந்தவர்கள், அதை எதற்காகவும் விட்டுவிடாத வைராக்கியத்தை பெற்றாக வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் மின்னல் மாதா குடிகொண்டுள்ளார். இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது, தன்னூத்து கிராமம். இங்கு சேர்ந்தமரம் பங்குக்கு உட்பட்ட புனித அருளானந்தர் ஆலயம் இருக்கிறது. இங்குதான் மின்னல் மாதா குடிகொண்டுள்ளார். இந்தப் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது புனித அருளானந்தர் ஆலய கோபுரத்தின் இரண்டாவது அடுக்கில் நின்ற நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மாதா சிலை, மின்னல் தாக்கியதில் கீழே விழுந்தது.
அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தும், மாதா சிலையில் ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. மேலும் அந்தச் சிலையானது, கோபுரத்தின் மேலே எப்படி நின்ற நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததோ, அதே போல நின்ற நிலையிலேயே தரையில் வந்து நின்றது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தச் செய்தியை அறிந்ததும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலரும் ஆலயத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து, அந்த மாதாவை தரிசனம் செய்தனர். அன்று முதல் இந்தத் திருத்தலம், மின்னல் மாதா ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாதாவானவர், வானத்தில் இருந்து பூலோகத்தில் இருக்கும் தன் மக்களை காக்க, தரையிறங்கி வந்ததாகவே அனைவரும் கருதுகின்றனர். தற்போது அந்த மின்னல் மாதா சிலை, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

மின்னல் மாதாவின் அற்புதத்தை அறிந்து, தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், பலர் இங்கு வந்து மாதாவை தரிசித்துச் செல்கின்றனர். பல மாநில இறைமக்கள், தங்களில் பங்குத் தந்தையோடு இங்கு வந்து அவரவர் மொழிகளில் மாதாவை பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
இதுதவிர தன்னூத்துப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் ஜாதி, மத, இன பாடுபாடு இல்லாமல் இந்த அன்னையிடம் தங்களது கோரிக்கைகளை வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதி, மாதாவின் பாதங்களில் சமர்ப்பிக் கிறார்கள். அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட காரியம் நிறைவேறியதும், அதற்கு நன்றிக் கடிதம் ஒன்றையும் எழுதி மாதாவிடம் சமர்ப்பணம் செய்கிறார்கள். இப்படிக் குவிந்த நன்றிக் கடிதங்கள் அனைத்தும், ஆலயத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆலயத்திற்கு வருபவர்களில் அதிகமானவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டி மாதாவின் அருகில் இருக்கும் வேப்பமரத்தில் தொட்டில் கட்டிச் செல்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்தபின் இங்கு வந்து நன்றியுடன் காணிக்கை செலுத்துகின்றனர். இதுவே இந்த ஆலயத்தின் சிறப்பாகும். வார வாரம் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு இந்த ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனை நடக்கிறது.
இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்கள் அனைத்தும் பொதுமக்களே மனமுவந்து அளிக்கிறார்கள். மாதத்தின் முதல் சனிக்கிழமை இங்கு திரளான பக்தர்கள் இறைவழிபாட்டிற்காக கூடுகிறார்கள். இந்த ஆலயத்தின் பங்குத் தந்தையாக எஸ்.ஏ.அந்தோணிசாமி அடிகளார் உள்ளார்.

கூடார விழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது.
இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் பின்பற்றுமாறு சொன்ன மாபெரும் விழாக்கள் ஏழு. அந்த ஏழு விழாக்களின் கடைசி விழா இந்த கூடாரப்பெருவிழா.
இது இஸ்ரயேலர்களின் ஏழாம் மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாளில் தொடங்கி ஏழு நாட்கள் கொண்டாடப்படும்.
“விழாவின் முதல் நாள் ‘திருப்பேரவை கூடும் நாள்’. அந்த நாளில் எந்த வேலையும் செய்யாமல் எல்லோரும் ஓய்வாய் இருக்கவேண்டும். எட்டாம் நாள் மீண்டும் திருப் பேரவை கூடும் நாள். அது நிறைவு நாள். அந்த எட்டு நாட்களும் தவறாமல் கடவுளுக்கு நெருப்புப் பலி செலுத்த வேண்டும். அந்த ஏழு நாட்களும் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்” என்பதே இறைவன் கொடுத்த கட்டளையின் சுருக்கம்.
எகிப்தில் அடிமையாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டை விட்டு கடவுளின் அருளால், மோசேயின் தலைமையில் வெளியேறியபின் கூடாரங்களில் குடியிருந்தார்கள். அந்த நினைவை புதுப்பித்துக் கொள்ளும் விதமாக இந்த விழா நாட்களில் இஸ்ரயேலர்கள் அனைவரும் கூடாரங்களில் குடியிருந்தார்கள்.
சாலமோன் மன்னனும் இந்த பண்டிகையைத் தவறாமல் கொண்டாடினார் என்கிறது 2 குறிப்பேடு 8:13.
“ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று விழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்” என விவிலியம் விளக்குகிறது.
இறைவன் காட்டிய பேரன்பை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய பணியை இத்தகைய விழாக்கள் செய்கின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பங்கள் வலுவாக இல்லாத பண்டைய காலங்களில் இத்தகைய செய்திகளை நினைவுகூர விழாக்களே அடிப்படைக் காரணிகளாக இருந்தன.
பாலை நிலத்தில் அலைந்து திரிந்த நாற்பது வருடங்களும் இறைவன் அவர்களை பல அதிசயங்கள் மூலம் ஆசீர்வதித்து வழிநடத்தினார். அவர்கள் உண்ண தினமும் வானிலிருந்து ‘மன்னா’ எனும் உணவு வழங்கினார்.
இஸ்ரயேலர் கூட்டம், பெண்கள் குழந்தைகள் உட்பட, மொத்தமாக 20 லட்சம் பேர் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்படிப்பார்த்தால் தினமும் மூன்று வேளை சாப்பிட அவர்களுக்குத் தேவையான பல லட்சம் ‘மன்னா’ தேவைப்பட்டிருக்கும். அப்படியே நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக சாப்பிட எவ்வளவு தேவைப்பட்டிருக்கும்?
இவை கடவுளின் மிகப்பெரிய அற்புதமன்றி வேறு எந்த விதமாகவும் நடந்திருக்க சாத்தியமே இல்லாத ஒன்று.
அதே போல அவர்கள் இறைச்சி வேண்டும் என கேட்டபோது இறைவன் பறவைகளை அவர்களுடைய கூடாரங்கள் அருகே விழவைத்தார். அத்தனை கூட்டம் கூட்டமான பறவைகள் வந்து விழுவது இறைவனின் அதிசயச்செயல் அன்றி வேறில்லை.
தாகம் எடுத்த போது மோசே பாறையில் அடித்தார். தண்ணீர் பாய்ந்தோடியது. இத்தனை லட்சம் பேர் குடிக்க வேண்டுமெனில் தண்ணீர்ஒரு ஆறு போல பாய்ந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இத்தனை மக்கள் பேரணியாகச் சென்றாலே பலப்பல கிலோமீட்டர் நீளமாய் அந்த பேரணி இருந்திருக்கும்.
இப்படி இறைவன் செய்த அதிசயங்களை நினைவுகூரும் விதமாகக் கொண்டாடப்படுவது தான் கூடாரப் பெருவிழா. இந்தநாட்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது இறைவன் இவர்களுக்குக் கொடுத்த ஒரு கட்டளை. இந்த விழாவைக் கொண்டாடாதவர்கள் அழிவுக்குள்ளாவார்கள் என செக்கரியா 14 ம் அதிகாரம், அன்றைய மக்களை எச்சரித்தது.
புதிய ஏற்பாட்டில் இந்த விழா இயேசுவின் இரண்டாம் வருகை தரப்போகும் ஆயிரம் ஆண்டின் அரசாட்சியை குறிப்பால் உணர்த்துகிறது. ‘பாவம்’ எனும் பாலை நிலத்தில் இத்தனை ஆண்டுகள் அலைந்து திரிந்த நாம், இயேசுவின் ரத்தத்தால் மீட்கப்பட்டுஅவரது அன்பில் இணைகிறோம். இதுவே புதிய ஏற்பாட்டு சிந்தனை.
இறைமகன் இயேசுவும், தான் மனிதனாக வாழ்ந்த காலத்தில் இந்த விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் வெளிச்சமும், தண்ணீரும் குறியீடுகளாக உள்ளன. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இயேசு, விழாக்காலத்தில் ஆலய பகுதியில் நின்றுகொண்டு, “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவதுபோல் அவருடைய உள்ளத்தில்இருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என அறைகூவல் விடுத்தார்.
இந்த காலத்தில் கூடார விழாவானது புதிய அர்த்தத்தை நமக்குத் தருகிறது. முதலில் இது இயேசுவின் இரண்டாம் வருகையையும், அவர் நம்மோடு ஆளப்போகின்ற ஆயிரம் ஆண்டு ஆட்சியையும் குறிப்பிடுகிறது. அவர் நம்மோடு கூடாரமடித்து தங்குவார் எனும் நம்பிக்கை விழாவாக இது அமைகிறது.
இன்னொன்று, ‘வார்த்தையான இறைவன் நம்மிடையே குடிகொண்டார்’ எனும் முதல் வருகையின் நினைவு கூர்தலாகவும் அமைகிறது.
இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக, நமது பாவங்களை விட்டு விலகி அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரால் நிராகரிக்கப்படுபவர்களாக இல்லாமல், வரவேற்கப்படுபவர்களாக இருக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதையே இந்த விழா நமக்கு எடுத்துச் சொல்கிறது.

மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரம் செலுத்துகின்ற விழா தான் ‘பாவக்கழுவாய் விழா’ என அழைக்கப்படுகிறது.

“ஆண்டவர் மோசேயிடம், ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக்கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். அந்த நாளை ஓய்வு நாளாய் அனுசரிக்க வேண்டும்” என கட்டளை கொடுத்தார்.
அது மிகவும் முக்கியமான நாளாகக் கொண்டாடப்பட்டது. அந்த பலியில் பங்கு பெறாதவர்கள் அழிக்கப்படுவார்கள். உயிர் வாழவேண்டுமென்றால் அந்த பண்டிகையைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் எனுமளவுக்கு அந்த விழா கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
கடவுளின் ஆலயத்தில் தூயகம், அதாவது மகா பரிசுத்த ஸ்தலம் ஒன்று உண்டு. அங்கே யாரும் நுழைய முடியாது. தூயகத்துக்கு முன்னால் ஒரு தொங்கு திரை இருக்கும். அதைத் தாண்டி யாராவது நுழைந்தால் கடவுளால் அவர்கள் கொல்லப் படுவார்கள்.
அந்த நாளில் மோசேயின் சகோதரர் ஆரோன் என்பவர் தான் பலி செலுத்தும் அனுமதி பெற்ற குருவாக இருந்தார். அவர் அந்த தூயகத்துக்கு நுழையும் முன் இரண்டு பலிகளைச் செலுத்த வேண்டும்.
நன்றாகக் குளித்து சுத்தமானபின், நார்ப்பட்டினாலான ஆடைகளைத் உடுத்த வேண்டும். கச்சை, தலைப்பாகை போன்றவற்றை அணிய வேண்டும். முதலில் அவர் ஒரு காளையைப் பலியிட்டு தனக்கும், தன் குடும்பத்துக்கும் இருக்கும் பாவக்கறைகளை நீக்க வேண்டும்.
அதன்பின் இரண்டு வெள்ளாட்டுக் கிடாக்களைக் கொண்டு வருவார். அதில் ஒரு ஆடு பலியாகப் போகும் ஆடு. இன்னொன்று போக்கு ஆடாக அனுப்பப்படப் போகும் ஆடு.
பலி கொடுக்கப்படுவதெற்கென தெரிந்து கொள்ளப்பட்ட ஆட்டை முதலில் ஆரோன் அடிப்பார். அந்த ரத்தத்துடன் தான் தூயகத்தில் தொங்கு திரையைத் தாண்டி அவர் நுழைய முடியும். அவர் ஒற்றை ஆளாக தனியாக தூயகத்தில் நுழைந்து சடங்குகளைச் செய்வார். அப்போது அந்த சந்திப்புக் கூடாரத்திலேயே யாரும் இருக்கக் கூடாது.
பின்னர் இரண்டாவது ஆடு கொண்டு வரப்படும். அதன் மீது ஆரோன் கைகளை வைப்பார். இஸ்ரேல் மக்கள் செய்த அத்தனை பாவங்களையும் அதன் மேல் சுமத்துவார். அந்த ஆட்டை ஒருவர் கொண்டு சென்று பாலை நிலத்தில் அலைய விடுவார். பின் அவர் குளித்து தூய்மையானபின் ஊருக்குள் வருவார்.
அன்றைய தினம் முழுவதும் மக்கள் நோன்பிருந்து தங்கள் பாவங்களையெல்லாம் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்பார்கள்.
இதுவே அன்றைய காலத்தில் கொண்டாடப்பட்ட பாவக்கழுவாய் சடங்கு விழா.
விவிலியத்தில் கொண்டாடப்படும் விழாக்கள் குறியீடுகளே. அவற்றுக்கான உண்மையான பொருள் மறைவாய் இருக்கும்.
இதுவும் இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பிடுகின்ற ஒரு விழா. பலியாகும் ஆடு, இறைமகன் இயேசு. அவர் கல்வாரியில் பலியானார். அவர் பலியான போது ஆலயத்தின் தொங்கு திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அதன் மூலம் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயிருந்த திரையை இறைமகன் இயேசு அழித்து விட்டார். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே இப்போது நேரடியான உறவு இயேசுவின் மூலம் உருவாகி விட்டது.
அவரே பாவம் இல்லாத முதன்மை குரு, பிரதான ஆசாரியன். கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார் எனும் எபிரேயர் 5:5 வசனம் அதை தெளிவாக்குகிறது.
இரண்டாவது ஆடு குறித்து பல்வேறு இறையியல் சிந்தனைகள் உலவுகின்றன. அதில் பெரும்பாலானோர் ஒத்துக் கொள்ளும் சிந்தனை, இரண்டாவது ஆடு ‘சாத்தான்’ என்பது.
பாவம் மனுக்குலத்தில் நுழைய முக்கிய காரணமாக இருந்தவன் சாத்தான். எனவே அவனே பாவத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையின் போது ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி நடக்கும். அப்போது சாத்தான் கட்டி வைக்கப்படும். அதன் பின் சில காலம் கட்டவிழ்த்து விடப்படும் என்கிறது திருவெளிப்பாடு 20-ம் அதிகாரம்.
பாஸ்கா விழா ஒருவகையில் இஸ்ரேல் மக்களுக்கான ஒரு மீட்பு வாழ்க்கையை குறிப்பிடுகிறது. பாவக்கழுவாய் விழாவோ சர்வதேச இறை சமூகத்துக்கான மீட்பாக அமைகிறது.
இன்றைக்கு இந்த விழா நமக்கு உணர்த்தும் பாடம், இறைமகன் இயேசுவின் பலியை உணர்ந்து கொள்வதும், அதன் மூலம் கிடைக்கும் மீட்பை அணிந்து கொள்வதும், பாவமற்ற ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்பதும் தான்.
இரண்டாம் வருகை எப்போது வரும் என்பதல்ல கேள்வி.
வந்தால் நாம் தயாராக இருக்கிறோமா என்பது மட்டுமே கேள்வி.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 25-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் இறைவனான ஏசு, எருசலேமில் பிறந்தார். பின்னர் ஏசு அந்த அரசினால் கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த புனித வெள்ளிக்கிழமை துக்க நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியையொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளியையொட்டி நேற்று மாலை பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுக்கள் நடைபெற்றன. அதைதொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்கு தந்தைகள் சிலுவையில் உள்ள ஏசுவின் பாதத்திற்கு முத்தமிட்டனர். அதனைத்தொடர்ந்து ஏசுவின் சிலை பேராலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பேராலயத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏசு சிலையின் பாதத்தில் முத்தமிட்டனர். பின்னர் ஏசுவின் உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய கீழ் கோவிலுக்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.