என் மலர்
கிறித்தவம்
துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து கருணை மாதா மலைக்கு திருச்சிலுவை பயணம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் இறுதி வாரத்தை புனித வாரமாக கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இந்த வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதன்ஒரு பகுதியாக, பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சி குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இயேசு சிலுவை பாடுகளை அனுபவித்து உயிர் துறந்த தினம் புனிதவெள்ளியாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
புனிதவெள்ளியான நேற்று, கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆண்டுதோறும் புனிதவெள்ளியன்று, கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புனித கருணை மாதா மலையை நோக்கி திருச்சிலுவை பயணம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு 38-வது திருச்சிலுவை திருப்பயணம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, காலை 7 மணிக்கு துண்டத்துவிளை ஆலய வளாகத்தில் இருந்து திருச்சிலுவை திருப்பயணம் புறப்பட்டு கருங்கல் சந்திப்பு, தபால் நிலையம், சிந்தன்விளை வழியாக கருணை மாதா மலை அடிவாரத்தை அடைந்தது. இதில் ஒருவர் இயேசுவை போல் வேடம் அணிந்து சிலுவையை சுமந்து வந்தார்.
இந்த திருப்பயணத்தில் இயேசுவின் பாடுகளின் 14 நிலைகளையும் நினைவு கூறும் வகையில் ஆலய நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். வழிநெடுகிலும், இயேசுவின் சிலுவைபாடு பாடல்கள் பாடியபடி ஏராளமான பங்குமக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திருப்பயணத்தின் இறுதியில் மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் நேர்ச்சையாக கஞ்சி வழங்கப்பட்டது.
இயேசுவின் கல்வாரி பயணத்தில் கலந்துகொள்ளும் உணர்வினை ஏற்படுத்தும் இந்த பயணத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தேவ் மற்றும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்த கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம், செயலாளர் ரசல்ராஜ், துண்டத்துவிளை ஆலய பங்குத்தந்தை பீட்டர், இணை பங்குத்தந்தை ஆல்பின் ஜோஸ், துணைத்தலைவர் வில்லியம், செயலாளர் ரெக்ஸ்லின் விஜி, துணை செயலாளர் செல்வன் ஜெஸ்ரின், பொருளாளர் ஜெகன் ததேயுஸ், பணிவன்பன் வின்சென்ட், மற்றும் மறைமாவட்ட, வட்டார அருட்பணியாளர்கள் செய்திருந்தனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் துறந்ததால் புனிதமான இந்த வெள்ளி, நமது சமூகத்தில் நிலவும் அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர அடித்தளம் அமைக்கட்டும்!
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் இன்று (30ந்தேதி) புனித வெள்ளியைக் கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை மரத்தில் ஒரு படுகொலை நிகழ்ந்த நாள், புனிதமானதாக அனுசரிக்கப்படுவது ஏன் என்பது குறித்து இங்கு காண்போம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து என்ற தெய்வீகப் புரட்சியாளரின் வாழ்வே வரலாற்றை கி.மு. - கி.பி. என்று இரண்டாக கூறு போட்டது. இயேசு கிறிஸ்து அரசியல் புரட்சியோ, சமயப் புரட்சியோ செய்ததால் கொலை செய்யப்படவில்லை.
உலகில் நிலவிய மூடப் பழக்கங்களுக்கும், சமூக அநீதிகளுக்கும் முடிவு கட்ட குரல் கொடுத்ததே அவர் செய்த புரட்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் நலமான வாழ்வுக்காக குரல் கொடுத்த இயேசுவால், தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற ஆதிக்க சக்திகளின் எண்ணமே அவரது சிலுவை மரணத்துக்கு காரணமானது.
தாம் விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்தவர் என்று போதித்த இயேசு, தம்மை ‘இறைமகன்’ என்றும் கூறினார். தமது வார்த்தைகள் உண்மையானவை என்பதை, தமது அற்புதச் செயல்களால் நிரூபித்தார். அவர், தண்ணீரை திராட்சை ரசமாக்கினார், புயலை அடக்கினார், கடல் மீது நடந்தார். பார்வையற்றவர் பார்க்கவும், செவித்திறன் இல்லாதோர் கேட்கவும், கால் ஊனமுற்றோர் நடக்கவும், தொழுநோயாளர் நலமடையவும், இறந்தோர் உயிர்த்தெழவும் செய்தார்.
இயேசு கிறிஸ்து செய்த எண்ணற்ற அற்புதங்கள், திரளான மக்களை அவர் பக்கம் ஈர்த்தன. அவரது போதனைகள், வழிதவறிய மக்களை மனம் திருப்பின, பகைவரை மன்னிக்கச் செய்தன, ஏழைகளுக்கு இரக்கம் காட்டச் செய்தன, உணவையும் உடைமைகளையும் பிறரோடு பகிரச் செய்தன, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கின.
சமத்துவம், பொதுவுடைமை என இன்று மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு முதலில் அடித்தளம் அமைத்தவர் இயேசு கிறிஸ்துவே. ஒருவர் ஏழையாக இருப்பது அவரது பாவத்தின் காரணமாகவே என்று போதித்த யூத சமூகத்தில், ஏழைகளை உருவாக்கியவர்கள் பணக்காரர்களே என்றும், அவர்கள் மோட்சத்தில் நுழைவது கடினம் என்றும் இயேசு கற்பித்தார்.
மனிதரிடையே கடவுள் பாகுபாடு பார்ப்பதில்லை, மனிதர்கள் அனைவரும் அவர் முன்பு சமமானவர்களே, அவர் நல்லோர் மீதும் தீயோர் மீதும் மழை பொழியச் செய்கிறார் என்று போதித்தவர் இயேசு. பாவிகளையே தாம் தேடி வந்ததாக கூறிய அவர், பாவிகளின் மனமாற்றம் விண்ணகத்தில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது என்று எடுத்துரைத்தார்.
எருசலேமில் இருந்த யூத சமயத் தலைவர்கள், ரோம பேரரசின் அடியாட்களாக செயல்பட்டு பதவி சுகத்தை அனுபவித்தனர், மதக் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மக்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். அவர்களது செயல்பாடுகள், வறுமையில் வாடியோரை இன்னும் ஏழைகளாகவும், செல்வம் படைத்தோரை இன்னும் பணக்காரர்களாகவும் மாற்றின.
இதனால், வசதியானவர்கள் யூத சமய குருக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டு, ஏழைகளை வாட்டி வதைத்து வந்தனர். இத்தகைய ஆதிக்க சக்தியினருக்கு, இயேசுவின் போதனைகள் பெரும் சவாலாக அமைந்தன. ஆகவே, அவரை கொலை செய்வதே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வழி வகுக்கும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அக்காலத்து பாலஸ்தீன் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வாழ்ந்த கலிலேயாவில் தொடங்கிய இயேசுவின் புரட்சி பணி, ஆதிக்கம் செலுத்துவோர் பரவிக் கிடந்த எருசலேம் நோக்கி நகர்ந்தது. கலிலேயாவில் போதனை செய்து வந்தது வரை இயேசுவை ஆதிக்க சக்தியினர் கண்டு கொள்ளவில்லை. அவரது பணி யூதேயாவில் தாக்கத்தை ஏற்படுத்தி, எருசலேமில் வாழ்ந்த மத குருக்களுக்கும் செல்வந்தர்களுக்கும் தொந்தரவாக மாறிய வேளையில் அவரை கொலை செய்யும் முடிவுக்கு அவர்கள் வந்தனர். ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் யூத தலைமைச் சங்கத்துக்கு இல்லை என்பதால், ரோமானிய ஆளுநர் பிலாத்துவின் முன்பு இறைமகன் இயேசு முன்னிறுத்தப்பட்டார்.
யூத தலைமைச் சங்கமே இயேசுவுக்கு மரணத் தீர்ப்பு எழுதி விட்டாலும், அதை நிறைவேற்றும் அதிகாரம் பிலாத்துவிடம் இருந்தது. இயேசு குற்றமற்றவர் என்று அறிந்த பிலாத்து, அவரை விடுவிக்க வழி தேடினார். ஆனால், அவரை விடுவித்தால் கலவரம் வெடிக்கும் என்றும், பிலாத்து தமது பதவியை இழக்க நேரிடும் என்றும் ஆதிக்க சக்தியினர் மிரட்டல் விடுத்தனர்.
அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த பிலாத்து, இயேசுவை சிலுவை மரணத்துக்கு கையளித்தார். சிலுவை என்ற கழு மரத்தில் தாம் உயிர் துறப்பது கடவுளின் திட்டம் என்று முன்னரே தம் சீடர்களுக்கு அறிவித்திருந்த இயேசு, தந்தையாம் கடவுளை மாட்சிப்படுத்த சிலுவையைத் தம் தோள்களில் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
கல்வாரி மலை நோக்கி சிலுவையைச் சுமந்து சென்ற இயேசு கிறிஸ்து, இரு கள்வர்களுக்கு நடுவில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். உண்மையை அறிவிக்கவே தாம் விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்ததாக பிலாத்துவுக்கு பதிலளித்த இயேசு, உண்மைக்கு சான்று பகருமாறு சிலுவை மரணத்துக்கு தம்மையே கையளித்தார். உண்மையா? அது என்ன? என்று கேட்ட பிலாத்துவுக்கு இயேசு பதில் கொடுக்கவில்லை. ஆனால், அதற்கான பதில் நம் அனைவருக்கும் தெரியும். ‘கடவுள் முன்னிலையில் மனிதர் அனைவரும் சமம்’ என்ற உண்மையை நிலைநாட்டவே இறைமகன் இயேசு தம் உயிரை பலியாகக் கொடுத்தார். இந்த உண்மை ஏற்கப்படும் இடத்தில் இயேசு கிறிஸ்து கொண்டு வந்த மீட்பு செயலாற்றுகிறது.
எங்கெல்லாம் மனித மாண்புக்கு அச்சுறுத்தல் எழுகிறதோ, மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, ஏற்றத் தாழ்வுகள் தொடர்கிறதோ, அடக்குமுறைகள் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இயேசு கிறிஸ்து கொண்டு வந்த மீட்பு தேவைப்படுகிறது. இயேசுவின் போதனைகளுக்கு ஏற்ப சமத்துவ பொதுவுடைமை சமூகத்தை உருவாக்கி வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்கள், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடியும் வரை ஆயிரக்கணக்கில் ரோம பேரரசால் படுகொலை செய்யப்பட்டனர். இருப்பினும், என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்தொடரட்டும் என்ற இயேசுவின் வார்த்தையில் அவர்கள் நிலைத்திருந்ததால், கிறிஸ்தவம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது.
என் பெயரால் பிறர் உங்களை துன்புறுத்தும் வேளையில் நீங்கள் பேறுபெற்றோர் என்ற இயேசுவின் வாக்குறுதி, உயிர்ப்பை நோக்கிய நம்பிக்கைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. எங்கெல்லாம் அநீதி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட தம் சீடர்களை இயேசு அழைக்கிறார். உண்மையை நிலைநாட்ட இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் துறந்ததால் புனிதமான இந்த வெள்ளி, நமது சமூகத்தில் நிலவும் அநீதிகளை முடிவுக்கு கொண்டு வர அடித்தளம் அமைக்கட்டும்!
- டே. ஆக்னல் ஜோஸ்

புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட இயேசு, 3-ம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க தினமாக கடைபிடிக்கின்றனர்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் அருகே உள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அவர் மக்களுக்கு பல்வேறு ஆன்மிக கருத்துகளை போதித்து வந்தார். போதனைகளை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர் 40 நாட்கள் நோன்பு இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இயேசுவை கைது செய்தனர். மக்கள் ஒருமித்து கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இயேசுவை 2 கள்வர்களுக்கு நடுவே சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.
இயேசுவை கொலை செய்வதற்கு முன்பு போர்ச் சேவகர்கள் அவருக்கு முள்கிரீடம் சூட்டி, சிலுவையை சுமக்க வைத்து, வழிநெடுக நடக்கச் செய்தனர். சிலுவையில் அவர் குற்றுயிராய் 3 மணிநேரம் தொங்கினார். அப்போது 7 வசனங்களை இயேசு பேசினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் இயேசுவுக்கு நேரிட்ட இந்த சம்பவங்களை நினைவுகூர்வதற்காக 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து தியானித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நோன்பு இருக்கின்றனர்.
தவக்கால இறுதியில் வரும் புனித வெள்ளிக்கிழமையில் (இன்று), இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் 3 மணிநேரம் சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு ஆராதனையில், சிலுவையில் இயேசு கூறிய 7 வசனங்களின் அடிப்படையில் சபை பாதிரியார்கள், மூப்பர்கள் பிரசங்கம் செய்வார்கள். துக்கமான பாடல்களை தேவாலயங்களில் பாடுவார்கள்.
சில தேவாலயங்களில் சிலுவைக் காட்சிகளை சபை மக்கள் நடித்துக் காட்டுவதும் உண்டு.
புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட இயேசு, 3-ம் நாளில் உயிர்த்தெழுந்தார். அந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அவர் உயிர்த்து எழுந்த பிறகு கிறிஸ்தவர்களின் புனித இடமாக மாறியது.
இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு பிறகு, அவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட திருச்சிலுவையை நிலத்தடி குகை ஒன்றில் எறிந்து விட்டனர். இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அவர் உயிர்த்து எழுந்த பிறகு கிறிஸ்தவர்களின் புனித இடமாக மாறியது. கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய ரோம பேரரசு, கி.பி.125ஆம் ஆண்டளவில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தின் மீது வீனஸ் தேவதைக்கு கோயில் கட்டியது. கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கிய ரோம பேரரசர் கொன்ஸ்தாந்தீனின் தாய் ஹெலெனா, கி.பி.326ல் இயேசுவின் கல்லறை மற்றும் அவர் அறையப்பட்ட திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார்.
இயேசு கிறிஸ்து அறையப்பட்ட திருச்சிலுவையுடன் மேலும் இரு சிலுவைகளும் கிடைத்தன. இதனால், சரியான சிலுவையைக் கண்டறிய எருசலேம் ஆயர் மக்காரியுசுக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி, நீண்ட நாட்களாக தீராத நோயால் துன்புற்ற ஒரு பெண்மணியை அந்த சிலுவைகளைத் தொடுமாறு அவர் கூறினார். ஒரு சிலுவையைத் தொட்டதும் அந்த பெண்மணி முழுமையாக நலமடைந்தார். உடனே, அதுதான் இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்று முடிவு செய்தனர். இதையடுத்து, இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அவரது திருச்சிலுவை கிறிஸ்தவர்களின் வணக்கத்திற்காக அங்கு நிறுவப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகே, சிலுவை கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமாக மாறியது.
கி.பி.614ல் எருசலேம் மீது படையெடுத்த பெர்சியர்கள், இயேசுவின் திருச்சிலுவையை அபகரித்து கொண்டு சென்று விட்டனர். 630ஆம் ஆண்டு திருச்சிலுவையை மீட்ட பைசாந்திய பேரரசர் ஹெராக்ளியுஸ், செப்டம்பர் 14ந்தேதி எருசலேம் ஆலயத்தில் நிறுவினார். இதுவே, திருச்சிலுவையின் மகிமை விழாவாக கொண்டாடப்படுகிறது. பின்னர், 10ஆம் நூற்றாண்டு முடிய திருச்சிலுவை மக்களின் பொது வணக்கத்தைப் பெற்றது.
1009ஆம் ஆண்டில், இயேசுவின் கல்லறை ஆலயத்தை இடிக்க பாத்திமித் கலீபா உத்தரவிட்டதால், திருச்சிலுவை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டது. இக்காலத்தில், திருச்சிலுவையில் இருந்து வெட்டப்பட்ட சில துண்டுகள் கொன்ஸ்தாந்திநோபிள் மற்றும் ரோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும் கட்டப்பட்ட எருசலேம் திருக்கல்லறை ஆலயத்தில், இயேசுவின் திருச்சிலுவை 1099ஆம் ஆண்டு பொது மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எருசலேம் உள்ளிட்ட இடங்களை தங்கள் வசம் கொண்டு வர நினைத்து, கிறிஸ்தவர்கள் சிலுவைப் போரை நடத்தினர். அவ்வாறு ஹாத்தின் என்ற இடத்தில் 1187ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு, இயேசுவின் திருச்சிலுவை கொண்டு செல்லப்பட்டது. அந்த போரின் முடிவில், இயேசுவின் திருச்சிலுவை எதிரிகளின் கரங்களில் சிக்கி மாயமானது. அதன்பிறகு, ரோம் மற்றும் கொன்ஸ்தாந்திநோபிளில் இருந்த திருச்சிலுவை துண்டுகளின் பகுதிகள் உலகின் பல ஆலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் சில துண்டுகள் தமிழக ஆலயங்களிலும் உள்ளன.

பெரிய வியாழக்கிழமையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவதற்கு முன் தனது 12 சீடர்களுடன் இரவு உணவு உண்டார். அப்போது பந்தியில் அமர்ந்திருந்த இயேசு திடீரென எழுந்து தனது மேலாடையை கழற்றி வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு துண்டை கட்டிக்கொண்டார். பின்பு அன்பையும், சகோதரத்துவத்தையும், பணிவு வாழ்வையும் உணர்த்தும் வகையில் சீடர்களின் பாதங்களை நீரினால் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டினால் துடைத்தார்.
பிறருக்கு பணி செய்து வாழவேண்டும் என்று உணர்த்திய இயேசுவின் இந்த செயலை எடுத்துரைக்கும் வகையில், உலகம் முழுவதும் கத்தோலிக்க ஆலயங்களில் இறைமக்களின் பாதங்களை ஆயர்களும், அருட்பணியாளர்களும் கழுவி துடைக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சி தவக்காலத்தின் இறுதி வாரத்தில் வரும் வியாழக்கிழமை அன்று நடைபெறும். இந்த நாளை, ‘பெரிய வியாழன்’ என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு பெரிய வியாழன் நாளை (வியாழக்கிழமை) கடை பிடிக்கப்படுகிறது.
நாளை மாலையில் கத்தோலிக்க ஆலயங்களில் இறைமக்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. பங்குத்தந்தை ஆரோக்கிய ஷெல்லிரோஸ் கலந்து கொள்கிறார்.
மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், திருப்பலியும் நடக்கிறது.
மஞ்சாடி புனித சூசையப்பர் ஆலயத்தில் குழித்துறை மறைமாவட்டம் குருகுல முதல்வரும் பங்குத்தந்தையுமான ஜேசுரெத்தினம் தலைமையிலும், நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தலத்தில் அதிபர் ரசல்ராஜ் தலைமையிலும், கொல்வேல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஒய்ஸ்லின் சேவியர் தலைமையிலும், காஞ்சிரகோட்டில் பங்குத்தந்தை அருளப்பன் தலைமையிலும், பாலவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் திருத்துவபுரம் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் புஷ்பராஜ் தலைமையிலும், பள்ளியாடி ஏசுவின் திரு இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை அனலின் தலைமையிலும்,
வெட்டுமணி புனித அந்தோணியார் திருத்தலத்தில் அதிபர் அருள் தேவதாசன் தலைமையிலும், மார்த்தாண்டம் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை கிளட்டஸ் தலைமையிலும், திக்குறிச்சி ஆலயத்தில் பங்குத்தந்தை பால் ரிச்சர்ட் தலைமையிலும், மேல்புறம் ஆலயத்தில் பங்குத்தந்தை பிரைட் சிம்சராஜ் தலைமையிலும், இலவுவிளைஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ஜெயகொடி தலைமையிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் ஆலயங்களில் திருச்சிலுவை ஆராதனையும், சிலுவைப்பாதை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விவிலியத்தில் ‘எக்காளம்’ என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் எக்காளம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
விவிலிய விழாக்களில் ஐந்தாவதாக வருகின்ற விழா எக்காளத் திருவிழா என அழைக்கப்படுகிறது. ‘எக்காளம்’ என்பது ஒரு கருவி. அது விலங்கின் கொம்பினாலோ அல்லது வெள்ளி போன்ற உலோகங்களினாலோ உருவாக்கப்படக் கூடிய ஒரு கருவி.
விவிலியத்தில் ‘எக்காளம்’ என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் எக்காளம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
எக்காளப் பண்டிகையைக் குறித்து விவிலியம் குறிப்பிடுகின்ற செய்தி இவ்வளவு தான், “ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்”
ஏழாவது மாதத்தை யூதர்கள் ‘திசிரி மாதம்’ என அழைக்கின்றார்கள். அவர்களுடைய மாதங்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தான் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன நாள்காட்டியின் படி இது புத்தாண்டின் தொடக்க நாள். எனவே புத்தாண்டு விழா என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.
விவிலியத்தின் முக்கியமான பண்டிகைகள் ஏழு. எல்லாமே இயேசுவின் வாழ்வோடு தொடர்புடையவை. இயேசு அருள்கின்ற மீட்போடு தொடர்புடையவை. முதல் நான்கு பண்டிகைகளான பாஸ்கா விழா, புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, முதற் பலன் விழா, பெந்தேகோஸ்தே விழா ஆகிய நான்கு விழாக்களும் இயேசுவின் முதலாம் வருகையோடு நிறைவு பெற்ற விழாக்கள் !
அடுத்த மூன்று பண்டிகைகளும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பால் உணர்த்தக் கூடிய பண்டிகைகளாக அமைந்திருக்கின்றன.
ரோஷ் ஹா சனா என எபிரேய மொழியில் அழைக்கப்படும் இந்த விழாவானது இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையை முன்னறிவிக்கும் ஒரு அடையாள ஒலியாக, எச்சரிக்கையின் ஒலியாக ஒலிக்கிறது. முதல் நான்கு விழாக்களும் நடந்து முடிந்தபின் சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த விழா ஆரம்பமாகிறது. இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம் என இதைக் கருதலாம்.
அறுவடைக்காலத்தின் முடிவு நாட்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. விதைப்பின் காலமும், விளைச்சலின் காலமும் முடிந்து விட, அறுவடையாம் நியாயத் தீர்ப்பின் காலம் வரப்போகிறது என்பதன் குறியீடு அது.
“ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்” என்கிறது 1 கொரிந்தியர் 15:52.
இயேசுவின் முதல் வருகை அமைதியாய் நடந்தது. ஆனால் இரண்டாம் வருகையோ உலகமே அறியும் வகையில் மிகப்பெரிய அளவில் நடக்கும். இதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.
“கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்”. இது ஒரு கடைசி எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளலாம்.
விவிலியத்திலுள்ள திருவெளிப்பாடு நூல் இறைவனின் இரண்டாம் வருகையை குறியீடுகளால் விளக்குகின்ற நூல். அதில் ஏழு எக்காளங்கள் வருகின்றன. கடைசியாக வருகின்ற எக்காளம் இறுதித் தீர்வையில் நிறைவடைகிறது. அதன் பின் எந்த திரும்பிப் பார்த்தலுக்கும், திருந்தி வாழ்தலுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பது திண்ணம்.
பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் எக்காளம் ஊதப்பட்டதோ அப்போதெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. யாருமே அசைக்க முடியாத எரிகோ கோட்டை எக்காளத்தின் சத்தத்தினால் தானே இடிந்து தரைமட்டமாகிவிட்டது.
பத்து கட்டளைகளை மோசே இறைவனிடம் பெற்று வரும் போது எக்காளமே அடையாளமானது.
எக்காளம் என்பது அழைப்பு. இயேசு தனது உயிரை நமது பாவங்களுக்காய் கையளித்தபோது புதிய ஏற்பாடு எனும் ஒரு புதிய வாழ்வுக்கான அழைப்பைக் கொடுத்தார். அது ஒரு எக்காளத் தொனி. அந்த அழைப்புக்குச் செவிகொடுத்து அவரது வழியில் நடந்தால் இரண்டாம் வருகையைக் குறித்த அச்சமோ, விண்ணக வாழ்வைக் குறித்த சந்தேகமோ எழத்தேவையில்லை.
எக்காளம், நமக்கு இறைவனிடமிருந்து ஒரு செய்தி இருக்கிறது என்பதன் அடையாளம்.
எக்காளம், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடையாளம்.
எக்காளம், போருக்குத் தயாராக வேண்டும் என்பதன் அடையாளம்.
எக்காளம், தலைவர் திரும்ப வருகிறார் என்பதன் அடையாளம்.
எக்காளம், நினைவூட்டுதலின் அடையாளம்.
இறைவனின் வழியில் மகிழ்வோடு நடந்தால் இறைமகனின் எக்காளத் தொனி நமக்கு அக்களிப்பின் தொனியாகக் கேட்கும். இல்லையேல் நரகத்தின் நகக்கீறல்களே நமது ஆன்மாவை ஊடுருவும்.
எக்காளப் பண்டிகை, நிகழப்போவதன் முன்னறிவிப்பு. நாம் எப்படி வாழவேண்டும் என்பதன் எச்சரிக்கை.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

இம்மட்டும் நடத்தின தேவன் இனிமேலும் ஆசீர்வாதமாக நடத்த வல்லவராக இருக்கிறார். ‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்’ ஏசாயா 43:19 இந்த வசனத்தின்படி நிச்சயமாகவே நம் அருமை ஆண்டவர் உங்கள் வாழ்விலே புதிய காரியத்தைச் செய்து உங்களை சந்தோஷப்படுத்துவாராக. எப்படிப்பட்ட புதிய காரியங்களைச் செய்யப்போகிறார் என்பதை ஜெபத்தோடு தியானிப்போம்.
வனாந்தரத்தில் வழி
“நான் வனாந்தரத்திலே வழியை... உண்டாக்குவேன்”. ஏசாயா 43:19
வனாந்தரம் என்றால் ஒரு வழியுமே இல்லாத ஒரு இடம். எங்கு நோக்கினும் வறட்சி மட்டுமே காணப்படும். இந்த வனாந்தரத்திலிருந்து எப்படி வெளியே வரமுடியும்? வழி தெரியவில்லையே! என திகைக்கின்ற இடம் தான் வனாந்தரம்.
ஒருவேளை உங்கள் வாழ்க்கையிலே எப்பக்கம் திரும்பினாலும் நெருக்கம், பிரச்சினை, வியாதி, கடன்பாரம் போன்றவற்றில் சிக்கி, இதிலிருந்து வெளியே வர வழியே தெரியவில்லை என திகைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
வேதத்திலே, ஆகார் தன் குடும்பத்தினரால் துரத்தப்பட்டு, கையில் குழந்தையோடு எங்கு போவது? எதிர்காலம் என்ன? என வழி தெரியாமல் திகைத்த போது, அந்த வனாந்தரத்தில் கர்த்தர் அவளைக் கண்டு அவளுக்கு வழிகாட்டி, அவளுக்கென்று ஒரு ஊற்றைத் திறந்து ஆசீர்வதித்தாரல்லவா? அதே தேவன் உங்களுக்கும் இரங்கி, உங்கள் எல்லா பிரச்சினைகளையும் மேற்கொள்ள ஒரு வழியையும் காட்டி உங்களை ஆசீர்வதிப்பார்.
அன்னாளின் வனாந்தரமான குடும்ப வாழ்வில் ஒரு சாமுவேலைக் கட்டளையிட்டவர் நம் தேவனல்லவா? அவர் நிச்சயம் உங்கள் வாழ்விலும் ஒரு வழியைத் திறப்பார். வனாந்தரமான உங்கள் வாழ்க்கை மாறும்.
வனாந்தரத்தில் செழிப்பு
“அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்”. ஏசாயா 43:19
ஆறு ஒரு பகுதியிலே ஓடினால் ஒரு செழிப்பு உண்டாகுமல்லவா? அதைப் போலவே உங்கள் வாழ்விலும் ஒரு செழிப்பை உண்டாக்குவார்.
கடந்த வருடத்தில் நீங்கள் பலவித கடன் பாரங்கள், பொருளாதார நெருக்கடி, பஞ்சம், பட்டினி இப்படிப்பட்ட வனாந்தரம் வழியாக கடந்து வந்து, ‘என் தரித்திரம் எப்போது மாறும்?’ என வேதனையோடு காணப் படுகிறீர்களா?
பிரியமானவர்களே, மாற்கு 6-ம் அதிகாரத்தில் ‘வனாந்தரத்திலே இயேசு ஜனங்களுக்கு போதித்த பின்பு வெகுநேரமான படியால் அவர் களுக்கு புசி்க்கக் கொடுக்க வேண்டும்’ என்று சீடர்களிடத்தில் சொன்ன போது, ‘சீடர்கள் இது வனாந்தரமாயிற்றே, எப்படி ஜனங்களை போஷிப்பது’ என்றார்கள். ஆனால் இயேசுவோ அதே வனாந்தரத்தில் 5 அப்பம், 2 மீன்களைக் கொண்டு அநேக ஆயிரம் ஜனங்களை போஷித்து மீதியான துணிக்கை எடுக்கச் செய்தார் அல்லவா?
அதே இயேசு இன்று உங்கள் வாழ்வில் ஒரு அற்புதம் செய்து உங்களைப் போஷிக்க வல்லவராயிருக்கிறார். உங்கள் குறைவுகளை நிறைவாக்கி, உங்கள் தேவைகளை சந்தித்து நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்.
உங்கள் வனாந்தர வாழ்க்கை செழிக்கும்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், அருட்சகோதரர்கள் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

மக்களுக்கு மீட்பும் நன்மையும், உண்மையுமாய் இருந்து அவர்களை நல்வழி நடத்த தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார் இயேசு.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இஸ்ரவேல் வழி மரபில் வந்த யூதர்களிடமும், தங்களையே தலைவர்களாக காட்டிக்கொள்கிற தலைவர்களிடமும் உண்மையாய் இருப்பது பற்றி கூறுகிறார். தான் கடவுளின் சார்பாக இருப்பதாகவும், தன்னுடையை வார்த்தைகளை கடைப்பிடித்தால் நிலைவாழ்வு கிடைக்கும் என்றும் கூறுகின்றார்.
ஆனால் யூதர்களோ தங்களின் மூதாதையர்களின் முறைப்படி ஆபிரகாம் மட்டுமே பெரியவர் என்றும், அவரை விட பெரியவர் இனி வரபோவதில்லை என்றும் நம்பு. நீர் ஆபிரகாமை விட பெரியவரோ என்று சொல்லி, அவரை பேய் பிடித்தவன் என்று நினைக்கின்றனர். இறை வல்லமை கொண்ட இயேசு, ஆபிரகாமை எனக்கு தெரியும்.
அவர் சொன்னதையெல்லாம் நான் கடைபிடிக்கிறேன் என்று சொல்கிறார். அவர்கள் கோபம் அதிகமானவர்களாய் உனக்கு 50 வயது கூட ஆகவில்லை. நீ எப்படி ஆபிரகாமை கண்டிருக்க முடியும் என்று அவரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் இயேசுவோ, இறை சாயல், இறை வல்லமையை கொண்டு அவர்களிடம் இவற்றை சொல்கிறார்.
இயேசுவின் வார்த்தைகள் நல்ல வாழ்க்கையை தரக்கூடியதாக இருக்கிறது. யூதர்களுடைய வார்த்தை வெறுப்பான வார்த்தைகளாக இருக்கிறது. மேலும் இயேசுவின் வார்த்தைகளை மக்கள் பின்பற்ற தொடங்கிவிட்டால் இவர்களில் பலருக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடும். ஆகவே தான் பலர் அதில் ஆர்வம் கொண்டு மக்கள் மத்தியிலே அவரை பேசவிடாமலும், புதுமைகள் செய்ய விடாமலும் அவரை தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருந்தனர்.
அப்படி இயேசு என்ன வார்த்தைகளை தான் பயன்படுத்தினார் என்று பார்க்கின்ற போது “லாசரே எழுந்து வா”. இறந்து போன ஒருவனை ஆண்டவராகிய இயேசு எழுந்து வா என சொல்லி வாழ்வு தருகிறார். மக்களுக்கு மீட்பும் நன்மையும், உண்மையுமாய் இருந்து அவர்களை நல்வழி நடத்த தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார் இயேசு. அனைவரும் இறைவனுடைய பிள்ளைகள் என்ற மனநிலை வந்தால், எங்கும் எதிலும் நிம்மதியே நமக்கு கிடைக்கும். இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டால் வாழ்வு உண்டு.
- அந்தோணி தாஸ், ஆயர் இல்லம், குடந்தை.

கடவுளின் வார்த்தை வலிமையும், வல்லமையும் நிறைந்தது ஆகும். அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்க வேண்டும் இந்த தவக்காலத்தில் மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுவதும்.
இறைவனுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் மிக்கது. அதன் உண்மையான அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ளும் போது....
இணைசட்டம் 11:18 “என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும், நினைவிலும் நிறுத்துங்கள்”.
இணைசட்டம் 32:47 “இத்திருச்சட்டத்தின் எந்த வார்த்தையும் வீணானதல்ல. இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
யோசுவா 1:8 “இந்த திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனை தியானம் செய்து இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைபிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய். வெற்றி காண்பாய்”.
திருப்பாடல் 119:50 “உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஏனெனில் அது எனக்கு வாழ் வளிக்கின்றது”.
நீதி மொழிகள் 30:5 “கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பதக்கதாய் விளங்குகிறது”.
சாலமோனின் ஞானம் 16:26 “ஆண்டவரே! மனிதரை பேணிகாப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல. உமது சொல்லே, உம்மை நம்பினோரை காப்பாற்றுகிறது.
1.பேதுரு 1:23 நீங்கள் அழியகூடிய வித்தினால் அல்ல: மாறாக உயிருள்ளதும் நிலைத்திருப்பதுமான அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளர்....
ஆக கடவுளின் வார்த்தை வலிமையும், வல்லமையும் நிறைந்தது ஆகும். அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்க வேண்டும் இந்த தவக்காலத்தில் மட்டுமல்ல நம் வாழ்நாள் முழுவதும். புனித எரோணிமுஸ் இவ்வாறு சொல்வார், “திருவிவிலியத்தில் நாம் வாசிக்கும் இறைவார்த்தை உண்மையான உணவும், பானமும் ஆகும்.” எனவே நம் இறைவார்த்தையை கடைபிடிப்போம். இயேசுவின் உண்மை சீடர்களாவோம்.
- அருட்திரு. ஆல்பர்ட் புஷ்பராஜ், பங்குத்தந்தை, புனித அன்னாள் ஆலயம், கீழ நெடுவாய்.

கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன.
கர்த்தருடைய வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது வேதாகமம். கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், ஆண்டவருடைய வார்த்தைகளினால் வேதாகமம் நிறைந்து இருக்கிறது.
இது ஒரே புத்தகம் தான் என்றாலும், ஆனால் அதில் கடவுள், நாம் அவரை பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு கிடைக்கும் இரட்சிப்பைப்பற்றியும், நாம் இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியும், அவருடைய விருப்பத்தை பற்றியும், மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நமக்கு விவரிக்கிறார்.
உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருந்தது (சங்கீதம் 119:105). இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுளுக்கு தனி நபரின் வாழ்க்கையில் இடைப்பட்டு அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமென்ன?. நாம் பெரிய பதவியில் இருந்தாலும், கல்வி மானாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய உச்சத்தை எட்டி இருந்தாலும், நல்ல குடும்ப வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு வெற்றிடத்தை பூர்த்தி செய்ய கடவுளால் மட்டுமே இயலும்.
அவருடைய வார்த்தை அதற்கு உறுதுணையாய் நிற்கும். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4). ஒரு தனிமனிதனை நண் பனாக ஏற்று கொள்ள, நாம் அவருடைய கடந்த கால வாழ்க்கை, சுற்றுப்புறம் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம்.
பின்னர் தான் நண்பராக ஏற்றுக்கொள்கிறோம். அதே போல கடவுளுக்கு நம்மை பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் நமக்கு கடவுளை பற்றி என்ன தெரியும்? அதற்கு அவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுப்பதே ஒரே வழி. அப்பொழுது தான் நட்பின் ஆழம் பலப்படும். ஆமென்!

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள். இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார்.
நாயீன் ஊருக்குள் இயேசு போனார். திரளான மக்களும், சீடர்களும் அவருடன் சென்றார்கள். “அவர் ஊரின் வாசலுக்குச் சென்ற போது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் செய்ய கொண்டு வந்தார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடன் வந்தார்கள் (லூக்கா:7:12). இந்த வசனங்களில் இரண்டு விதமான திரள் கூட்டத்தை பார்க்க முடிகின்றது. ஒரு கூட்ட மக்கள் இயேசுவோடு வருகின்றார்கள். மற்றொரு கூட்ட மக்கள் தன் மகனை பறிகொடுத்த விதவை தாயோடு வருகின்றார்கள்.
இயேசு செய்யும் அற்புதங்களை பார்த்திட, அவரோடு திரளான மக்கள் நடந்து வந்திருப்பார்கள். மரித்த வாலிபரை அடக்கம் செய்திட விதவை தாயோடு திரளான மக்கள் நடந்து வந்திருப்பார்கள். இப்படிப்பட்ட இரண்டு விதமான திரள் கூட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து முயற்சி செய்யாமல், நம்பிக்கை இழந்த நிலையில், கண்ணீரோடு காணப்படும் தாயை தேற்றுவதையே மேன்மையாக கருதியுள்ளார். ஏனென்றால் அந்த தாயின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. அவளுடைய கணவனும் மரித்துப்போனான்; இப்போது அவளுடைய வாழ்வுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த மகனும் இறந்து போனான்.
இயேசு, அந்த தாயை பார்த்து அழாதே என்றார். இயேசுவிடம் யாரும் அந்த மரித்துப்போன மகனை எழுப்பும்படி கேட்கவில்லை. மனதுருகிய இயேசு, அவராகவே சென்று இறந்தவனின் உடலை தொட்டார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேச தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்படைத்தார். (லூக்கா: 7: 12-15.)
பிரியமானவர்களே, எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள். இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு அழாதே என்கிறார்.