என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: நம்பிக்கை தரும் வார்த்தை
    X

    தவக்கால சிந்தனை: நம்பிக்கை தரும் வார்த்தை

    மக்களுக்கு மீட்பும் நன்மையும், உண்மையுமாய் இருந்து அவர்களை நல்வழி நடத்த தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார் இயேசு.
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இஸ்ரவேல் வழி மரபில் வந்த யூதர்களிடமும், தங்களையே தலைவர்களாக காட்டிக்கொள்கிற தலைவர்களிடமும் உண்மையாய் இருப்பது பற்றி கூறுகிறார். தான் கடவுளின் சார்பாக இருப்பதாகவும், தன்னுடையை வார்த்தைகளை கடைப்பிடித்தால் நிலைவாழ்வு கிடைக்கும் என்றும் கூறுகின்றார்.

    ஆனால் யூதர்களோ தங்களின் மூதாதையர்களின் முறைப்படி ஆபிரகாம் மட்டுமே பெரியவர் என்றும், அவரை விட பெரியவர் இனி வரபோவதில்லை என்றும் நம்பு. நீர் ஆபிரகாமை விட பெரியவரோ என்று சொல்லி, அவரை பேய் பிடித்தவன் என்று நினைக்கின்றனர். இறை வல்லமை கொண்ட இயேசு, ஆபிரகாமை எனக்கு தெரியும்.

    அவர் சொன்னதையெல்லாம் நான் கடைபிடிக்கிறேன் என்று சொல்கிறார். அவர்கள் கோபம் அதிகமானவர்களாய் உனக்கு 50 வயது கூட ஆகவில்லை. நீ எப்படி ஆபிரகாமை கண்டிருக்க முடியும் என்று அவரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் இயேசுவோ, இறை சாயல், இறை வல்லமையை கொண்டு அவர்களிடம் இவற்றை சொல்கிறார்.

    இயேசுவின் வார்த்தைகள் நல்ல வாழ்க்கையை தரக்கூடியதாக இருக்கிறது. யூதர்களுடைய வார்த்தை வெறுப்பான வார்த்தைகளாக இருக்கிறது. மேலும் இயேசுவின் வார்த்தைகளை மக்கள் பின்பற்ற தொடங்கிவிட்டால் இவர்களில் பலருக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடும். ஆகவே தான் பலர் அதில் ஆர்வம் கொண்டு மக்கள் மத்தியிலே அவரை பேசவிடாமலும், புதுமைகள் செய்ய விடாமலும் அவரை தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருந்தனர்.

    அப்படி இயேசு என்ன வார்த்தைகளை தான் பயன்படுத்தினார் என்று பார்க்கின்ற போது “லாசரே எழுந்து வா”. இறந்து போன ஒருவனை ஆண்டவராகிய இயேசு எழுந்து வா என சொல்லி வாழ்வு தருகிறார். மக்களுக்கு மீட்பும் நன்மையும், உண்மையுமாய் இருந்து அவர்களை நல்வழி நடத்த தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார் இயேசு. அனைவரும் இறைவனுடைய பிள்ளைகள் என்ற மனநிலை வந்தால், எங்கும் எதிலும் நிம்மதியே நமக்கு கிடைக்கும். இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டால் வாழ்வு உண்டு.

    - அந்தோணி தாஸ், ஆயர் இல்லம், குடந்தை.

    Next Story
    ×