என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜோதிகா நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் சான் ரோல்டன் இசையில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் முன்னோட்டம்.
    ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. 

    ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 

    சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா கீதா ராணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
    பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா நடிப்பில் கேரி டாபர்மேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ படத்தின் விமர்சனம்.
    அனபெல், அனபெல் கிரியேஷன்ஸ் ஆகிய பட பாகங்களை தொடர்ந்து அனபெல் கம்ஸ் ஹோம் என்ற பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது.

    பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா இருவரும் பல பேய்களின் ஆன்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார்கள். இதில் அனபெல் பொம்மையில் இருக்கும் பேயை வீட்டிற்குள் கொண்டு வந்து அடைக்கிறார்கள். அப்போது தன் மகளுடன் கூடிய மூன்று சிறுமிகளை வீட்டில் தனியாக விட்டு வெளியே செல்கிறார்கள். 




    அந்த மூன்று சிறுமிகளும், பேய்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று அனபெல் இருக்கும் கண்ணாடி அறையை திறந்து விட்டுவிடுகிறார்கள். வெளியே வரும் அனபெல் வீட்டில் இருக்கும் மற்ற பேய்களையும் எழுப்பி விட்டுவிடுகிறது.

    இறுதியில் அனபெல்லை மீண்டும் கண்ணாடி அறைக்குள் அடைத்தார்களா? சிறுமிகள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான் என்று மீண்டும் இப்படம் மூலம் நிருபித்திருக்கிறார்கள். பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கேரி டாபர்மேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    மெதுவாக தொடங்கும் திரைக்கதை போகப்போக வேகம் பிடிக்கிறது. பல காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பவர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் பர்கெசின் ஒளிப்பதிவும், ஜோசப் பிஷாராவின் இசையும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ மிரட்டல்.
    வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற ராஜேஷ் வைத்யா, தற்போது தனது குழுவினருடன் ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார்.
    வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் ராஜேஷ் வைத்யா. பிரபல இசையமைப்பாளரான ஜி.ராமநாதன் இவரது பெரியப்பா ஆவார்.

    ராஜேஷ் வைத்யா, தனது குழுவினருடன் 60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகளை வாசித்து, ஆசிய அளவில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறார்.

    தனியார் ஓட்டலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆசிய நாடுகளின் தேசிய சாதனையாளர்களை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்காக, ‘ஆசிய சாதனையாளர்களை அங்கீகரித்து வருகிறது.



    இதில் ஆசிய நாடுகளான இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வியட்நாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இண்டோசீனா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லாவோஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நேபால் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய தேசிய சாதனையாளர்கள், தங்களை ஒப்பிட்டு, போட்டியிட்டு, ‘ஆசிய சாதனையாளர்’ அந்தஸ்துக்கு தங்களை உயர்த்தி கொள்வதற்கு இது அடித்தளமாக அமைந்திருக்கிறது.

    ராஜேஷ் வைத்யாவின் ஒரு மணி நேரத்தில் 60 பாடல்கள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா, நடிகை சுகாசினி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
    ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் சினிமா எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா". இதில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோருடன் யூடியூப் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். 

    ஷபீர் இசையத்த இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க இளைஞர்கள் பங்களிப்பில் உருவான இந்த திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. அனைத்து தரப்பிலும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் சென்னையில் நடைபெற்றது.



    இதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘இந்த படத்தின் மீது எனக்கு பயம் எதுவும் இல்லை, நம்பிக்கை தான் அதிகம் இருந்தது. கதையை படிக்கும்போதே அவர் எழுதியிருந்த கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தயாரிப்பாளராக நான் மட்டும் வெற்றி பெறுவதை தாண்டி, இதில் பங்கு பெறும் எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் தயாரிப்பை துவங்கினோம்.

    யூடியூப் ஆட்களை நம்பி பணம் போடணுமா? படம் எடுக்கணுமா என நிறைய கேள்விகள் வந்தன. என் மீது மக்களும், மற்றவர்களும் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் நான் இங்கு இல்லை. அதுபோலவே இவர்கள் மீது நான் நம்பிக்கை வைத்தேன். சினிமா எனக்கு தெரியாது, ஆனால் அனுபவங்கள் தான் என்னை இதுவரை வழிநடத்தி செல்கிறது. பல நூறு விமர்சனங்களையும் கடந்த வெற்றி இது. எல்லா விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்டு, அவற்றில் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம்’ என்றார்.
    பிகில் படத்தில் விஜய் பயன்படுத்திய ஐ.டி.கார்டு இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

    நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.

    இப்படத்தில், இந்துஜா, சத்யராஜ், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    லீக் ஆன ஐ.டி. கார்டு

    இந்நிலையில், இப்படத்தில் விஜய்யின் மைக்கில் கதாப்பாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஐ.டி.கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட குழுவின் தலைமை பயிற்சியாளர் மைக்கில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ’பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
    புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இயக்குனர் கதையை மாற்றியதால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா கூறியிருக்கிறார்.
    தெலுங்கில் ராஜு காரி காதி படத்தின் 3வது பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். கதாநாயகியை சுற்றியே நகரும் கதை கொண்ட இந்த படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி தமன்னா விலகியுள்ளார்.

    ஓம்கர் இயக்கும் இப்படத்தின் துவக்க விழாவில் தமன்னா கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு தமன்னாவிடம் தெரிவிக்காமலேயே கதை மாற்றப்பட்டிருக்கிறதாம். மாற்றப்பட்ட கதை தமன்னாவிற்கு பிடிக்காமல் போனதால், அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    தமன்னா தற்போது சயீரா நரசிம்ம ரெட்டி, குயீன் படத்தின் தெலுங்கு ரீமேக், பாலிவுட் படம் என கை நிறைய படங்கள் வைத்துள்ளார். 
    விக்ராந்த் நடித்துள்ள 'வெண்ணிலா கபடி குழு 2' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. 

    இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.

    மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

    வெண்ணிலா கபடி குழு 2 பட போஸ்டர்

    இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'வெண்ணிலா கபடி குழு 2' படம் வருகிற 12-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பொதுக்குழு கூட்டத்தில் இயக்குநர் சங்கத்துக்கான தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இயக்குநர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்தற்கு மிகவும் நன்றி. 



    ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலுக்கு, பேரம்பும் என்றும் தொடரும்...

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பிரபல காமெடியனாக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்மபிரபு’ திரைப்படம் பேஸ்புக்கில் நேரலையாக வெளியாகி இருக்கிறது.
    யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள தர்மபிரபு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முத்துகுமரன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, ரேகா, மனோபாலா, அழகம் பெருமாள், சிறப்புத் தோற்றத்தில் ஜனனி ஐயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    எமலோக கதையை பின்னணியாக கொண்டு தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, விவசாயம், என சமூக கருத்துகளுடன் காமெடி கலந்து இந்தப் படம் வெளியானது. தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். இதையறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



    படம் திரைக்கு வரும் முதல்நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த நிலையில், தற்போது பேஸ்புக்கில் நேரலையாக வெளியானது சினிமா உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களை அடுத்து கார்த்திக் ராஜு இயக்கிய 'கண்ணாடி' படத்தின் டிரைலரை அமலாபால் வெளியிட்டார்.
    திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக 'கண்ணாடி' எனும் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சுதீப் கிஷான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அன்யா சிங் நடித்துள்ளார். 

    கருணாகரன், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வருகிறது. 



    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை நடிகை அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ஷகிலாவின் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார்.

    திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

    ஷகிலா பட போஸ்டர்

    சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த அப்படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறார்.
    நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா டிராவல் டைரி என்ற தலைப்பில் தனது சுற்றுலா படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் தன் மகன் வேத் உடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் படத்தை நேற்று சமூகவலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. சென்னை நகரமே தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும்போது இந்த படம் தேவையா என்ற கேள்விகளும் எழுந்தன.

    இந்த காரணத்தால் அந்த படத்தை நீக்கிவிட்டார். அவர் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:



    தண்ணீர் பற்றாக்குறையால் என்னை சுற்றிலும் உள்ளவர்கள் அவதிப்படும் நேரத்தில் அந்த படம் வேண்டாம் என்று நீக்கி விட்டேன். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதால் அவனுக்கு அளிக்கும் பயிற்சியை பகிரும் நோக்கத்தில் தான் அந்த படத்தை வெளியிட்டேன்.

    இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    ×