என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    தர்பார்

    அதில், “ ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்திற்காக லைகா நிறுவனம் ரூ.12 கோடியை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்கு கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு லைகா நிறுவனம் ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
    சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் வால்டர் படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் மேனன் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது இவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார்.

    இதுகுறித்து இயக்குனர் அன்பு கூறும்போது, ‘வால்டர் படத்தின் வெகு முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குனர் கௌதம் மேனனை அணுகினோம். அவரும் கதாப்பாத்திரம் பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் ஒப்பந்தம் செய்து படமாக்கி வருகிறோம்.

    நட்டி நட்ராஜ்

    அவரது கதாபாத்திரம் முழுக்க வில்லன் என சொல்லமுடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாபாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும் என்றார்.
    சமீபத்தில் விருது விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா, விஜய்சேதுபதியை காதலிக்கணும், விஜய்யை திருமணம் செய்யணும் என்று கூறியிருக்கிறார்.
    கடந்த சில காலமாக இளைஞர்களின் ஹார்ட் பீட் நடிகையாக இருப்பது ராஷ்மிகா தான். ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்காமல் அவர் தமிழ் நாட்டில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விருது விழாவில் பேசிய அவரிடம், எந்த நடிகரை காதலிக்க ஆசை, திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு பதில் கூறிய அவர் நடிகர் விஜய்யை திருமணம் செய்ய ஆசை என சொல்லியிருக்கிறார்.

    ராஷ்மிகா

    தொடர்ந்து நட்பு என்பதற்கு விஜய் தேவரகொண்டா பெயரையும், காதல் என்பதற்கு விஜய் சேதுபதி பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    நெடுஞ்சாலை படம் மூலம் நடிகராக மிகவும் பிரபலமான ஆரி, தற்போது அவரது பெயரை மாற்றி இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    நெடுஞ்சாலை படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆரி. இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், அலேகா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

    ஆரி அருஜூனா

    தமிழில் முன்னணி நடிகராக வலம் ஆரி தற்போது அவருடைய பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றி இருக்கிறார். ‘இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜூனா என மாற்றியுள்ளேன். இனி வரும் காலங்களில் ஆரி அருஜூனா என்று என்னை அழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, டாப்சி பட இயக்குனருக்காக புதிய முயற்சி ஒன்றை எடுக்க இருக்கிறார்.
    சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்குத் திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது.

    தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் அவ்வப்போது நடித்துவிட்டு செல்வார். இந்த வருடம் சமந்தா நடித்து தமிழில் வெளிவந்த ஒரே படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. அதன்பின் வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

    சமந்தா

    இதனிடையே, டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், சமந்தாவிடம் கதை ஒன்றை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டாராம். படத்தின் கதையால் கவரப்பட்ட சமந்தா, தெலுங்கு, தமிழில் அவரே படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் மட்டும் வேறு ஒரு நிறுவனம் இணை தயாரிப்பு செய்யும் எனத் தெரிகிறது.
    இசையமைப்பாளர் இளையராஜா ஒன்னுமே இல்லாத படத்திற்கும் உயிர் கொடுத்து விடுவார் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:  விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. 

    பாரதிராஜா, இளையராஜா

    இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா. பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. 

    இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வன்முறை காட்சிகள் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்" என்றார்.
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

    விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்

    படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் டி40 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 

    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் சுமார் 70 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பழனி அருகில் உள்ள கோம்பைபட்டியில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. 

    தனுஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நான் நடித்ததிலேயே விரைவாக முடிவடைந்த படம் இதுதான். கார்த்திக் சுப்புராஜ் போன்ற விவேகமான, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய இயக்குனருடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பானது என்று பாராட்டியுள்ளார்.
    நடிகை மீராமிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தவர், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி இழிவாக வீடியோக்கள் வெளியிட்டதாக ஜோமைக்கேல் பிரவீன் என்பவர் மீது அடையாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்காக 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் ஜோ மைக்கேல் ஒருமுறை கூட ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் அடையாறு மகளிர் போலீசார் விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தனர். அப்போது பெண்காவலர்களை ஜோ மைக்கேல் பிரவீன் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இது தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தல், மானபங்கம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோமைக்கல் பிரவீன் மீது வழக்கு போடப்பட்டது. 

    ஜோமைக்கேல் பிரவீன்

    அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜோ மைக்கேல் பிரவீன் மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். நடிகையும் அழகியுமான மீராமிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமான நடிகை யாஷிகா, அஜித் டுவிட்டருக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
    'இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஓரிரு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 

    அஜித், யாஷிகா

    சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அவ்வப்போது கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் டுவிட்டரில் இணைய வேண்டும், அதுவே எனது விருப்பம், அவரது ரசிகர்களும் இதனை விரும்புவார்கள் என யாஷிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
    ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலின் புரோமோ வீடியோ, யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
    முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.

    ரஜினிகாந்த்

    தர்பார் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இந்த பாடல் தற்போது யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. ரஜினியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அஜித்குமார்-வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தில் பிரபல வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

    பாவெல் நவகீதன்

    இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அஜித் நடிக்கும் சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வலிமை படத்தில், வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார். மெட்ராஸ், வடசென்னை போன்ற படங்களில் நடித்துள்ள பாவெல் நவகீதன், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வி1 படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×