என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முகநூலில் இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பிரபல நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்- 7 போட்டியாளரும் ஆவார். தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்து இருந்தார். இந்தநிலையில் அஜாஸ் கான் முகநூலில் இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் அஜாஸ் கானை கைது செய்து உள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர போதை பொருள் வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், அவெஞ்சர்ஸ், அயர்ன் மேன், ஜூராசிக் பார்க், ஹரிபாட்டர், கிங்காங், ஜான்விக் உள்ளிட்ட பல படங்களின் பல்வேறு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. அதுபோல் தமிழிலும் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. எந்திரன், காஞ்சனா, பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, அரண்மனை, சாமி, சண்டக்கோழி, உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம் படம் 3 பாகங்களாக வந்தது.

    இந்நிலையில் விஜய் சேதுபதியின் ‘சூதுகவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சூதுகவ்வும் படம் விஜய் சேதுபதிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா? என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டார். அதிகமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சூதுகவ்வும் 2-ம் பாகத்தின் பட வேலைகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
    தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, யுத்தத்தில் வெல்வோம் என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து  கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார்.

    அதில், "உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கக் காரணம் நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தான், உங்களுக்குச் சாத்தியப்பட்டால், யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதைக் கடப்போம்" இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
    தடையை மீறி ஆன்லைனில் வெளியான ஹீரோ திரைப்படம் தற்போது ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ஹீரோ பட கதைத் திருட்டு சம்பந்தமாக இயக்குனர் போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம் இடை காலத்தடை வழங்கியது. அதன்படி, வேறு மொழிகளில் வெளியிட இடைக்காலத்தடை விதித்தும். மொழிமாற்றம் [டப்பிங்] மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    ஆனால், தடையையும் மீறி தெலுங்கில் சக்தி என்ற பெயரில் ஹீரோ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 20-ம் தேதி தெலுங்குத் திரையுலகில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை.

    இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் அமேசான் பிரைம் என்ற இணையதளத்தில் ஹீரோ மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்ட சக்தி திரைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து இயக்குனர் போஸ்கோ கூறும்போது, ”ஹீரோ” திரைப்படம் எந்த ஒரு வேற்று மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோ திரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம் மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி என எதிலும்  வெளியாவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ள நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானது.  இதையடுத்து அமேசான் பிரைமுக்கு இமெயில் மூலம்  நீதிமன்றத்தின் நகலை அனுப்பினேன். இதைப் பார்த்த அவர்கள் ஆன்லைனில் இருந்து படத்தை நீக்கிவிட்டார்கள். விரைவில் நீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்றார்.
    தற்போதைய சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் தலையணை சவாலை பிரபல நடிகை ஏற்று அதை செய்து இருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு டி சர்ட் சவால் டிரெண்டிங் ஆகியது. இந்நிலையில் தற்போது தலையணை சவால் வந்துள்ளது.

    அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட், உதயநிதி ஸ்டாலின் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். 
    சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த நடிகை கோபப்பட்டு இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

    தற்போது மாற்றி மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு, #June22BlackdayForVijay, #June22VijayDeathDay போன்ற டேக்குகளை அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

    நடிகை கஸ்தூரியின் ட்விட்

    இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மே 1 அஜித் பிறந்தநாள், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அதை கொண்டாட அவர்களின் ரசிகர்கள் தயாராகி வரும் இந்த சூழலில் தான் இப்படி ஒரு மோதல் நடந்துள்ளது.

    இந்த மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, "அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு" என ட்விட் செய்துள்ளார்.
    ராம்சரண், ஜூனியர் என்டிஆரை வைத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கிவரும் ராஜமவுலி அடுத்ததாக பிரபல நடிகரை இயக்க இருக்கிறார்.
    பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி, ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட் நடித்து வருகிறார்கள்.

    இயக்குனர் ராஜமவுலி, நடிகர் மகேஷ்பாபு

    சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபுவை வைத்து ராஜமவுலி படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதை மகேஷ்பாபு உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
    கொரோனா நமக்கு பாடத்தை உணர்த்தி இருக்கிறது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.

    எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.

    இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

    காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமாகி பிரபலமான சுனைனா பிறந்த நாளுக்கு டிரிப் படக்குழுவினர் கிப்ட் கொடுத்துள்ளனர்.
    தமிழில், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் அறிமுகமான சுனைனா, அதைத்தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், தெறி, கவலை வேண்டாம், எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இது அதிரடி திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. சுனைனா அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

    டிரிப் போஸ்டர்

    இவரது பிறந்த நாளை முன்னிட்டு நாயுடன் முறைத்தபடி நிற்கும் அவரது முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ‘டிரிப்’ படத்தில் பிரவீன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டென்னிஸ் இயக்கி உள்ளார். சிலர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பயணப்படுகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனாவால் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனா தொற்றுநோயில் சிக்கி மரணம் அடைந்துள்ளார்.

    கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் தவிக்கின்றன. இந்த தொற்றுநோய்க்கு நடிகர்-நடிகைகளும் பலியாகி வருகிறார்கள்.

    தற்போது பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனா தொற்றுநோயில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 77. சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

    இவர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய ஈ.டி, தி கலர் பர்பிள், எம்பயர் ஆப் தி சன், தி எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆலன் டாவ்யூ 5 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது.
    அலுங்குறேன் குலுங்குறேன்...’ என்ற பாடல் மூலம் பிரபலமான நமீதா பாபு பாட்டு பாடி குட்டி ஸ்டோரி சொல்லுகிறார்.

    ‘சண்டி வீரன்’ படத்தில் இடம்பெற்ற ‘அலுங்குறேன் குலுங்குறேன்...’ என்ற பாடல் மூலம் பாடகியாக பிரபலமானவர் நமீதா. இப்படலை தொடர்ந்து திருநாள், வீரையன், மகளிர் மட்டும் உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடியிருக்கிறார்.


    தற்போது இவர் புதிய யூடியூப் சேனல் தொடங்கி, அதில் பல பாடல்களை பாடி வருகிறார். மேலும் பாடல்கள் உருவான விதம் குறித்து குட்டி ஸ்டோரியும் சொல்லி வருகிறார்.

    கொரோன ஊரடங்கு நேரத்தில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் உடற்பயிற்சி, சமையல் செய்து வரும் நிலையில், பாடகி நமீதா பாட்டு பாடி குட்டி ஸ்டோரி சொல்வது பலருடைய கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
    இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விக்ரமுக்கு வடிவேலு வித்தியாசமான வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் சீயான் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விக்ரம். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

     மேலும் தனது வித்தியாசமான நடிப்பால் இவர் ரசிகர்களை எப்போதுமே ஆச்சர்யத்தில் வைத்துள்ளார். இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  இதை முன்னிட்டு, அவருக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு சூப்பரான வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம், வாழ்க பல்லாண்டு' என பதிவிட்டுள்ள அவர்,  இருவரும் சேர்ந்து நடித்த கிங் படத்தில் இடம்பெற்ற காமெடியை பகிர்ந்துள்ளார்.

    இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


    ×