என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தான் இயக்கிய முதல் குறும்படத்திற்கு சர்வதேச விருது வென்றுள்ளார்.
    தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கினார். சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் இந்த குறும்படத்தில் நடித்திருந்தனர். 

    தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை இதில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த குறும்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தொடர்ந்து படங்கள் இயக்குவேன் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் சர்வதேச குறும்பட விழா இணையதளத்தில் நடந்தது. இதில் ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படத்துக்கான சர்வதேச விருதை வென்றுள்ளது. 

    ராதிகா ஆப்தே

    இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறும்போது “எனது குறும்படம் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வெப் தொடர்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். லண்டன் தெருக்களில் நடந்து செல்லும்போது என்னை அடையாளம் கண்டு எனது நடிப்பை பாராட்டுகிறார்கள்” என்றார். லண்டனை சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ரீது வர்மா காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.
    தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரீது வர்மா. தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.

     இந்நிலையில் ரீது வர்மா சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது. 

     அதற்கு அவர், நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும், என பதிலளித்துள்ளார்.
    பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார்.
    எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அஜித்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சோதனையாகவே இருந்தது. பல அவமானங்கள், துரோகங்கள், தோல்விகள் இப்படி எல்லாவற்றையும், தன்னுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றால் அடித்து நொறுக்கி, இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் பாக்ஸ் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

     சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா திரையுலகினரையுமே அதிர்ச்சியடைய செய்தது என்று கூறலாம். அவர் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த சுஷாந்தை பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கினர் எனவும், அதனால் அவர் பல அவமானங்களை சந்தித்தார் எனவும், அந்த டிப்ரஷன்தான் அவர் உயிரை காவு வாங்கியுள்ளது எனவும் தகவல்கள் பரவி வருகிறது. 

    வாசுகி பாஸ்கர்

     தமிழ் சினிமாவின் காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் இது பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பல சுஷாந்த் உள்ளனர். சிலர் என்னிடம் வருத்தப்படுவார்கள், சிலர் அமைதியாக சிரித்து கொண்டே புறக்கணிப்பின் வலியை கடப்பார்கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன், அவ்வப்போது தல அஜித் பட்ட போராட்டங்களை நினையுங்கள்’ என அஜித் ஆரம்ப காலத்தில் ஒதுக்கப்பட்டதை குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்கா எதிர்மறையான விஷயங்களால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    பாலிவுட் படங்களில் நடித்து வரும் சோனாக்‌ஷி சின்கா கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்‌ஷி.

     இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகி இருப்பது தான் மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில் தான் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் எனது ட்விட்டர் கணக்கை டிஆக்டிவேட் செய்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கான எதிர்வினைகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி பற்றி எரியட்டும். எனக்கு கவலையில்லை என்று சோனாக்‌ஷி தலைப்பிட்டுள்ளார்.
    பிரபல நடிகையான எமி ஜாக்சன் வெளியிட்ட யோகா செய்யும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ் குறைந்து வருகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம், கடந்த ஞாயிறு அன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

     பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.  இந்த நிலையில் தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் எமி ஜாக்சன் யோகா செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    எமி ஜாக்சன்

     மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
    சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

     கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான  அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தோழியுடன் சமந்தா

     ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட்  வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தாவின்  ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்தர். சமீபத்தில் தானே சந்தித்துக்கொண்டார்கள்.. அதனால் அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
    சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்.

     இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

    சனம் ஷெட்டி

     இதுகுறித்து அவர் கூறும்போது, சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்க வேண்டும். டிக்டாக் மற்றும் பப்ஜி ஆப் - களை புறக்கணிக்க வேண்டும். சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தி விட்டு இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.
    ஆந்திரா, தெலுங்கானாவில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தாலும், கொரோனா பீதியால் தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார்களாம்.
    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் பீதி நிலவுகிறது. சில மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்து இரு வாரங்கள் ஆகியும் இரு மாநிலங்களிலும் தெலுங்கு படப்பிடிப்புகளை இன்னும் தொடங்கவில்லை. 

    மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அல்லு அர்ஜூன் மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் கொரோனா அச்சத்தால் ஆகஸ்டு மாதம் வரை வர படப்பிடிப்புக்கு வர மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனால் படப்பிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உள்ளது. 

    தெலுங்கு நடிகர்கள்

    நடிகர் ராணாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, “கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் எல்லோரும் ஆகஸ்டு மாதம்வரை படப்பிடிப்புக்கு வரமாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனால் படப்பிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உள்ளது. 

    குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வைத்து பெரிய படப்பிடிப்புகளை நடத்துவதும் இயலாத காரியம். பல தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னையில் இருக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதிலும் சிக்கல் உள்ளது. எனவே ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம்தான் படப்பிடிப்பை தொடங்க முடியும்“ என்றார்.
    கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஆன்யா சிங் நடித்துள்ள கண்ணாடி படத்தின் முன்னோட்டம்.
    "வி ஸ்டுடியோஸ்" நிறுவனம் ஸ்ரீ சரவண பவா பிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ள படம்  'கண்ணாடி', இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கண்ணாடி படக்குழு

    'திருடன் போலிஸ்', 'உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி உள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கே.எல்.பிரவீன் இப்படத்துக்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளதால், சினிமா இயக்குனர் ஆனந்த் என்பவர் மளிகை கடை திறந்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் பட உலகம் முடங்கி 3 மாதங்களை நெருங்குகிறது. திரைத்துறையினர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. 

    இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். இவர், ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கொரோனா ஊரங்குக்கு முன்பு துணிந்து செய் என்ற படத்தை இயக்கி வந்தார். 

    இயக்குனர் ஆனந்த்

    மளிகை கடை திறந்துள்ள இயக்குனர் ஆனந்த் கூறும்போது, “கொரோனாவால் 3 மாதங்களாக சினிமா தொழில் இல்லை. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்று முடிவு எடுத்து நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு வாங்கி மளிகை கடை திறந்துள்ளேன். இங்கு குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்கிறேன். கடைமுன்னால் விலைபட்டியல் போர்டும் வைத்து இருக்கிறேன்.

    இந்த கொரோனா கஷ்டத்தில் மக்களுக்கு ஒரு சேவையாக இந்த தொழிலை செய்கிறேன். படப்பிடிப்பு தொடங்கியதும் நான் இயக்கி வரும் துணிந்து செய் படவேலைகளை கவனிக்க மீண்டும் சினிமா தொழிலுக்கு சென்று விடுவேன். அப்போதும் இந்த கடையை மூடமாட்டேன். வேறு ஒருவரை வேலைக்கு வைத்து கடையை நடத்துவேன்” என்றார்.
    சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
    லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம்  வழங்கப்பட்டது. இதேபோல் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சம், திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சம் வழங்கினர்.

    பழனியின் குடும்பத்தினரிடம் காசோலையை வழங்கிய விஜய் ரசிகர்கள்

    இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு உதவுவதாக விஜய் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதிக்கான காசோலையை ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினரிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேற்று வழங்கினர்.
    மேயாத மான், பிகில், மகாமுனி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை இந்துஜாவின் சமீபத்திய போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழில் மேயாத மான், மெர்குரி, 60 வயது மாநிறம், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. விஜய்யின் பிகில் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் லேசாக கவர்ச்சி காட்டினார். திரைப்படங்களை போல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    அந்த வகையில் இந்துஜா சேலையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்துஜாவா இது என கேட்கும் அளவுக்கு ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் அந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. பட வாய்ப்புக்காக ரம்யா பாண்டியன் பாணியை இந்துஜா பின்பற்றுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    இந்துஜா

    நடிகை இந்துஜா அடுத்ததாக காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுதவிர நயன்தாராவின் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
    ×