என் மலர்
சினிமா

எனது வெற்றியின் ரகசியம் இதுதான் - மணிரத்னம்
`செக்கச்சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam
மணிரத்னம் இயக்கத்தில் அரவந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `செக்கச்சிவந்த வானம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை நேரலையாக வாசித்து காண்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் ‘நல்ல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் என் படங்களில் இடம்பெறுவதே எனது வெற்றியின் ரகசியம்’ என்றார்.
அருண்விஜய் பேசும்போது ’சிம்புவுடன் பணிபுரிந்தபோது தான் அவர் எப்படிபட்டவர் என்று புரிந்தது. சிறந்த மனிதர் அவர். இந்த படத்தில் நான் இடம்பெற்றதில் எந்த அளவு மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சி சிம்பு இந்த படத்தில் இடம்பெற்றதில் எனக்கு இருக்கிறது’ என்றார். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், வைரமுத்து மூவரிடமும் இந்த கூட்டணியில் உருவான எந்த பாடல் உங்கள் ஃபேவரிட்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ஏ.ஆர்.ரகுமான் கண்ணாளனே(பம்பாய்) பாடலையும், வைரமுத்து உயிரே(பம்பாய்) பாடலையும், மணிரத்னம் தமிழா தமிழா(ரோஜா) பாடலையும் கூறினார்கள். அதிதி ராவ் பேசும்போது ‘நான் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளாதது வசதியாக போய்விட்டது. தமிழ் தெரியாததால் மணிரத்னத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது’ என்றார். சிம்பு பேசும்போது படம் பற்றி பேச மறுத்துவிட்டார். படம் பேசும் என்று மட்டும் கூறினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam
Next Story






