என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
By
மாலை மலர்2 Sep 2018 4:26 AM GMT (Updated: 2 Sep 2018 4:26 AM GMT)

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்ததாக படத்தின் இசை வருகிற 5-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை கச்சேரியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு முடிவு செய்துள்ளது.
The news you've been waiting for! @arrahman will be performing Chekka Chivantha Vaanam songs live on the 5th of September at #CCVUnplugged!
— Chekka Chivantha Vaanam (@MadrasTalkies_) September 1, 2018
Online launch from 5th onwards...
Want to catch the event? We're going Facebook Live for you!#ChekkaChivanthaVaanam#CCV#ManiRatnampic.twitter.com/bYeYvnXbDr
அதனைத் தொடர்ந்து படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam
Maniratnam Chekka Chivantha Vaanam CCV Arvind swami Simbu STR Vijay Sethupathi Arun Vijay Jyothika Aishwarya Rajesh Aditi Rao Hydaari Dayana Erappa AR Rahman Santhosh Shivan Nawab மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் அரவிந்த்சாமி சிம்பு விஜய் சேதுபதி அருண் விஜய் ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் அதிதி ராவ் ஹிடாரி டயானா எரப்பா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
