என் மலர்

  சினிமா

  நட்புக்கிடையே நடக்கும் யுத்தம் தான் செக்கச்சிவந்த வானம்
  X

  நட்புக்கிடையே நடக்கும் யுத்தம் தான் செக்கச்சிவந்த வானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  படத்தில் சேநாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மாபெரும் தொழிலதிபராக வருகிறார். அவரது மூன்று மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூன்று பேரும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். மறுமுனையில் போலீஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது. 

  மொத்தத்தில் உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே, அப்போ யுத்தம் தான் உள்ளிட்ட காரசாரமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானா எரப்பாவும் வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசையுடன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் டிரைலர்  படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam

  செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர்:

  Next Story
  ×