என் மலர்

    சினிமா

    செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
    X

    செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நட்சத்திரங்களின் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் 4 நட்சத்திரங்களின் 4 முதற்பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV

    Next Story
    ×