என் மலர்
சினிமா செய்திகள்
வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சியான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
கே.எல். புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண்மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: வயதான அப்பா, அம்மா எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக ‘சியான்கள்’ படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்” என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால் நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.
நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படமும் தேர்வாகியுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தனுஷ், “கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோராமா பிரிவில் அசுரன் திரைப்படம் திரையிடப்பட தேர்வாகிருப்பது படக்குழுவிற்கு கிடைத்த பெருமை. மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், புதிய படங்களை ஓடிடி-யில் நேரடியாக வெளியிட ஆரம்பித்தனர். அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் முதலில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து நிறைய படங்களை ஓடிடி-யில் வெளியிட ஆரம்பித்தனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன. இருப்பினும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியிடப்பட்ட சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுவரை மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில படங்களும் இந்த போட்டியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.
ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர். தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.

உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர் நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.
என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன் உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
‘திரெளபதி’ இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
இதனிடையே மோகன் ஜி இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதன்படி தனது அடுத்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டிருப்பதாகவும், ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி. சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் அறிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் ‘போடா போடி’. சிம்பு நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார். 2012-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பதம் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்நிலையில், போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் சிம்புவே அப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க உள்ளாராம்.

முதல் பாகத்தை போன்றே இந்த படமும் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட உள்ளதாகவும் அடுத்தாண்டு மே மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். ‘போடா போடி 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை எனக்கூறி உள்ள பதம் குமார், அது முதல் பாகத்தை இணைக்கும் ஒரு கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆரவ், அவரின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை காலமானார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். ஆரவ்வுக்கும், இளம் நடிகை ராஹிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், ஆரவ்வின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை, சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆரவ்வின் தந்தை கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா? என்பது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
பிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தையும், சித்ராவின் மாமனாருமான பி.ரவிச்சந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போதுதான் எனக்கு பல சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் மூலம் சித்ரா, ஏற்கனவே 3 ஆண்களை காதலித்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் நெருக்கமான படத்தை வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டியதாகவும், அரசியல்வாதிகள் தினமும் தொலைபேசியில் பேசியதாகவும் தொடர்ந்து செய்தி வந்துகொண்டுள்ளது.
ஒரு சில தொலைபேசி எண்கள் வந்தால் சித்ரா பதற்றத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே அதன் அடிப்படையில், சித்ராவை மிரட்டிய நபர்களைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ராவின் தாயாருக்கு கூட உண்மை நிலவரம் தெரிந்தும், அவர் மிரட்டல் விடுத்த நபர்களுக்கு பயந்து அமைதி காத்து வருவதாகவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் சித்ரா மரணத்தில் உண்மை வெளியே வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்புதான் தனது அடுத்த படத்தை அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார். 'பாட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரித்து வருகிறது.
தற்போது இதில் பகத் பாசிலுக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'பாட்டு' படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரளாவில் தொடங்கவுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு மற்றும் பாடல்கள் உருவாக்கம் ஆகிய பணிகளை அல்போன்ஸ் புத்திரன் கவனித்து வருகிறார்.
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ’பரோல்’ படத்தின் முன்னோட்டம்.
ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே "காதல் கசக்குதய்யா" படத்தை இயக்கியவர்.
’பரோல்’ படத்தில் பீச்சங்கை படத்தில் நடித்த கார்த்திக் மற்றும் சேதுபதி & சிந்துபாத் படத்தில் நடித்த லிங்காவும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ’பரோல்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். படத்தின் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வரவேற்பை பெற்றது மட்டுமன்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
தயாரிப்பு - மதுசூதனன் (ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட்), எழுத்து இயக்கம் - துவாரக் ராஜா, ஒளிப்பதிவு - மகேஷ் திருநாவுக்கரசு, இசை - ராஜ்குமார் அமல், படத்தொகுப்பு - முனீஸ்
ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில், நாகார்ஜூனா, நானி, சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் தேவதாஸ் படத்தின் விமர்சனம்.
மருத்துவ படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய நானி, மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அங்கு இருக்கும் டீனுக்கும் நானிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியே வந்து சின்னதாக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.


மறுபக்கம், தாதாவாக இருக்கும் சரத்குமார் சிறுவயதில் நாகார்ஜூனாவை எடுத்து வளர்க்கிறார். இவர் சில காரணங்களால், ஊருக்கு வெளியே வளர்ந்து பெரிய ஆளாக மாறி டானாக இருக்கிறார். இந்நிலையில், உள்ளூர் தாதாக்கள் சரத்குமாரை கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடையும் நாகார்ஜூனா, உள்ளூர் தாதாக்களை கொல்ல ஊருக்குள் வருகிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்பட, நானியின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்கிறார். நாகார்ஜூனாவை பற்றி தெரிந்துக் கொள்ளும் நானி, அவரை மாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் நாகார்ஜூனா, தனது தந்தை சரத்குமாரை கொன்றவர்களை கண்டுபிடுத்து கொன்றாரா? நாகார்ஜூனாவின் மனதை நானி மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் டானாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நாகார்ஜூனா. இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. டாக்டராக வரும் நானி ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். சரத்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகிகளாக வரும் அகன்ஷா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியான தேவதாஸ் திரைப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. டானும் டாக்டரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு டப் செய்திருக்கிறார்கள். மணி சர்மா இசையில் பாடல்கள் கேட்கும் தாளம் போட வைக்கிறது. சம்டத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘தேவதாஸ்’ மாஸ்.






