என் மலர்
சினிமா செய்திகள்
சினிமா உதவி இயக்குனரை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து நடிகை ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.
உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘‘நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’ இவ்வாறு ஆனந்தி கூறினார்.
பிரசாந்த் நடிப்பில் உருவாக உள்ள அந்தகன் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும் நடிகை சிம்ரனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்தும், சிம்ரனும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் பெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தில் பிரசாந்துடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 13-ந் தேதி மாஸ்டர் படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம், வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பின் வெளியாக உள்ளதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாஸ்டர் படம் வெற்றியடைய வேண்டி, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் அர்ஜுன் தாஸ், லல்லு மற்றும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் ஆகியோர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலில் படக்குழுவினருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்க உள்ளாராம்.
தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'டிரைவர் ஜமுனா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து பெண், கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்டு கிரைம் திரில்லர் படமாக இது உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
இதுபற்றி லதா கூறியதாவது:-
"15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.
போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.
அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.
நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.
என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?
ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.
ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.
சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.
செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''
இவ்வாறு லதா கூறினார்.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.
அதுபற்றி லதா கூறியதாவது:-
"நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.
இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.
மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.
எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.
நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.
நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.
இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''
இவ்வாறு லதா கூறினார்.
தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.
"சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)
"சிவகாமியின் செல்வன்'' படத்தில் சிவாஜியும், லதாவும். இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.
"வட்டத்துக்குள் சதுரம்'' என்ற படத்தில் சுமித்ரா, லதா.

ஸ்ரீ சாய் எம்.கே.செல்வம் இயக்கத்தில், ஜிப்ஸி குமார், ஹேமா நடிப்பில் வெளியாகியிருக்கும் பச்சைக்கிளி படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஜிப்ஸி குமார், முறைப்பெண்ணாக இருக்கும் நாயகி ஹேமாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார். ஆனால் ஹேமா ஒருவரை காதலித்து வருகிறார். காதலர் வெளியூர் சென்ற நேரம் பார்த்து ஹேமாவை ஜிப்ஸி குமாருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

ஊர் திரும்பிய காதலர் ஹேமாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். இறுதியில் ஹேமா, கணவரை விட்டு காதலனுடன் சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜிப்ஸி குமார் இதற்கு முன் இயக்குனராக இருந்தவர். தற்போது இப்படத்தின் மூலம் நாயகனாக மாறி இருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். பச்சைக்கிளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹேமாவிற்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.
கிராமத்து பின்னணியில் காதலா உறவா என்ற கோணத்தில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ சாய் எம்.கே.செல்வம். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் திரைப்படம் பலவீனமாக அமைந்துள்ளது. கதாப்பாத்திரங்களிடையே வேலை வாங்க மறந்து இருக்கிறார்.

செல்வாநம்பி இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஏ.எஸ்.உதயசங்கரின் ஒளிப்பதிவு அதிகம் எடுபடவில்லை.
மொத்தத்தில் 'பச்சைக்கிளி' பழைய கிளி.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வால், அரண்மனை 3 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.

இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூறியிருக்கிறார்.
ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜு, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் யாமா படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார்.
"அங்காடித் தெரு" "அசுரன்" ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார். மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. "யாமா" திரைப்படத்தின் தலைப்பும் பர்ஸ்ட்லுக்கும் சமீபத்தில் வெளியாகவுள்ளது.
மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தியாராக நடித்து வரும் நிலையில், முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் கணக்கு வாத்தியாராக நடித்துள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். அதில், விக்ரம் கணக்கு வாத்தியாராக நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக நடித்திருக்கும் இர்பான் பதான், நம்பரை வைத்து விக்ரம் விளையாடுகிறார் என்றும் கூறுகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா, அனிதா சம்பத் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ஆஜித் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த வாரம் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் ஷிவானி குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 வருடங்களாக உயிருக்கு போராடி வரும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கண்கலங்கி இருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பற்றி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு.
ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையான அவர், கடந்த 20 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க போன பாரதிராஜா கண்கலங்கி கொஞ்சம் உதவி செய்து விட்டு வந்துள்ளார். பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில், 2021ம் ஆண்டில் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்களின் முழு தொகுப்பு.
2020-ம் ஆண்டு உலக சினிமாவையே உருக்குலைத்த கொரோனோ, தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து மற்ற துறைகள் படிப்படியாக மீண்டு வந்தாலும், சினிமா துறை இன்னும் மந்த நிலையில் தான் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதமே 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்தாலும், மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. காரணம், ஒருபக்கம் கொரோனா பயம் இருந்தாலும், தற்போது வரை பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, 2021 பொங்கலன்று செம விருந்து காத்திருக்கு அப்டினே சொல்லலாம். ஏனெனில் விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த 3 படங்களைத் தவிர இந்த ஆண்டில் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தும் மேலும் சில படங்களும் இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பனவற்றை பார்க்கலாம்.

முதலாவதாக ரஜினியின் அண்ணாத்த படம். கொரோனா பிரச்சனை மட்டும் இல்லேனா, இப்படத்தை கடந்தாண்டு ஆயுத பூஜைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் ரிலீசை பொங்கலுக்கு தள்ளிப்போட்டனர். இருப்பினும் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாத காரணத்தால் இப்படம் மேலும் தாமதமாகி உள்ளது. இந்தாண்டு இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக கமலின் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. கடந்தாண்டு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்தில் 3 பேர் பலியானதால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 11 மாதங்கள் ஆகியும் இன்னும் தொடங்கிய பாடில்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. அதற்கு பின் எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு மவுனம் காத்து வருகிறது. படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என்பதால் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி இப்படத்தை வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

யாஷின் கேஜிஎப் 2. 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.

விக்ரமின் கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படம் உருவாகியுள்ளது. இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்துவும் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

விஜய் சேதுபதிக்கு லாபம், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், முகிழ் என மாதத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணும் அளவுக்கு கைவசம் வைத்துள்ளார்.

கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படங்கள் அனைத்தும் வெளியாகுமா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.