என் மலர்
சினிமா செய்திகள்
அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.

பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.
இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.
"படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.
என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.
அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!
எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?
இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.
இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.
இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''
- இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.
இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:
"சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.
குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.
இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.
"ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.
"குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.
ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.
அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.
ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.
இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.
அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.
இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.
அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.
என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.
கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!
தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை.

ஜெப்ரி இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அனு அன்ட் அர்ஜுன்’ படத்தின் விமர்சனம்.
அக்கா, தம்பியான காஜல் அகர்வாலும், விஷ்ணு மஞ்சுவும் இரட்டையர்கள். நாயகன் விஷ்ணு மஞ்சு கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். அப்போது வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்ட விரோதமாக எடுத்து அதை வெளியே விற்று குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து வருகிறார். விஷ்ணு மஞ்சுவின் தில்லுமுல்லு வேலைகளை கண்டுபிடிக்கும் கால் சென்டர் முதலாளியான நவ்தீப், அவருடனே கூட்டு சேர்ந்து பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றார்.
இதற்காக தனியே ஒரு அலுவலகத்தை தொடங்கி, வெளிநாடுகளில் இருக்கும் பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கின்றனர். இதற்கு காஜல் அகர்வாலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார்கள். இதையடுத்து அவர்களுக்கு என்ன ஆனது? அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஷ்ணு மஞ்சு, மிடுக்கான தோற்றத்துடன் திறம்பட நடித்திருக்கிறார். கொள்ளையடிக்க இவர் போடும் யுக்திகள், சிக்கிய பிறகு அதிலிருந்து தப்பிக்க முயல்வது என ரசிக்கும்படி நடித்துள்ளார். இவரின் அக்காவாக வரும் காஜல் அகர்வால், புத்திசாலி பெண்ணாக நடித்துள்ளார். அழகு பதுமையுடன் வந்து கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
கால் சென்டர் முதலாளியாக வரும் நவ்திப்பின் நடிப்பும் அட்டகாசம். போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் ஷெட்டி, வில்லனாக வரும் நவீன் சந்திரா ஆகியோர் சரியான தேர்வு, நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் ஜெப்ரி, ஐடி துறையில் நடந்த மிகப்பெரிய மோசடியை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமாக உள்ளது படத்திற்கு பலம். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். டப்பிங் படம் என்பதால் பாடல்கள் சுமார் தான். ஆனால் பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். புரூஸ் மற்றும் ஷெல்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘அனு அன்ட் அர்ஜுன்’ விறுவிறுப்பு.
ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, ஜி.காளையப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மதுரை மணிக்குறவன்’ படத்தின் முன்னோட்டம்.
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்து வில்லனாக நடித்துள்ள படம் மதுரை மணிக்குறவன். ராஜரிஷி இயக்கியிருக்கிறார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க, மாதவிலதா கதாநாயகியாகி நடித்துள்ளார்.
மேலும் சுமன், பருத்திவீரன் சரவணன், குணச்சித்திரங்களாக ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை - இளையராஜா, பாடல்கள்-முத்துலிங்கம், ஒளிப்பதிவு -டி.சங்கர், படத்தொகுப்பு - வி.டி.விஜயன், ஸ்டண்ட் - ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார், நடனம் - தினா, அபிநயஸ்ரீ, தயாரிப்பு -ஜி.காளையப்பன், வசனம் - வெற்றி விஜய்
இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாணி ராணி, சித்தி 2, பாக்யலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையின் தாய்க்கு குழந்தை பிறந்துள்ளதாம்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நேகா மேனன். நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். வாணி ராணி, சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
19 வயதாகும் நடிகை நேகா, கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதள பக்கத்தில், தன் குடும்பத்தில் ஒரு குட் நியூஸை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது அதனை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், அவருக்கு திருமணமாகப் போவதாக கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் அந்த குட் நியூஸ் என்னவென்று நேகா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என் அம்மா கடந்த 8 மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனது தாய்க்கும், தங்கைக்கும் உங்களின் ஆசியை வழங்குங்கள். தற்போதைக்கு இவர்கள் தான் என்னுடைய உலகம்.
இதை பார்த்தபின் வரும் மோசமான கமெண்டுகளை எல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன். அவ்வாறு செய்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். தற்போது அக்கா என்பதை விட தாயாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலான நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டுவிட்டர் பதிவு மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ள மாதவன், தான் உடல்நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரை வைத்து படம் இயக்க உள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது வரை தொடங்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள ஷங்கர், அடுத்த படம் இயக்க தயாராகி வருகிறார்.
அதன்படி இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ந் தேதி ரிலீசாக உள்ளது.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனால் படத்தை வெளியிட தடைகோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷிவானி, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள, நடிகை ஷிவானி, அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்தவாரு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறுகையில், “பிரம்மாண்ட படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உற்சாகமாக உள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆவலோடு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங்குடன், நடிகை அங்கிதா 6 வருடங்கள் காதலில் இருந்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பலர் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தி நடிகை அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இவர் கங்கனா ரணாவத்துடன் மணிகர்னிகா படத்தில் நடித்து பிரபலமானவர். பாஹி 3 படத்திலும் நடித்துள்ளார்.
தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இந்தி நடிகர் சுஷாந்த் சிங்குடன் அங்கிதா 6 வருடங்கள் காதலில் இருந்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிதா லோகண்டே அளித்த பேட்டியில், “நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். ஒரு படத்தில் நடிக்க சென்றபோது தயாரிப்பாளரிடம் சமரசத்துக்கு தயாராக இருக்க வேண்டும்’ என்றனர். தயாரிப்பாளர் எந்த மாதிரி விரும்புகிறார், உணவு சாப்பிட செல்ல வேண்டுமா? என்றேன்.
அந்த தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றனர். இதனால் படத்தில் இருந்து வெளியேறினேன். தொலைக்காட்சியில் நடித்து பிரபலமாக இருந்தபோது ஒரு படத்தில் நடிக்க இதேமாதிரி சமரசம் செய்ய அணுகினர். உடனே அங்கிருந்து கிளம்பினேன்'’ என்றார்.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.
"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.
அவர் கூறுகிறார்:-
"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.
அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.
இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.
ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.
அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.
அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.
மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.
அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.
அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.
இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.
இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.
டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.
சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.
1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்
பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்
ஒனப்பத் தட்டும் தாரேன்
ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்
மாட்டப் பாத்து குத்து''
- இது அண்ணன்.
"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க
ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க
ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள
ஒழிச்சிக் கட்டப் போறோம்''
- இது நான்.
இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?
இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி
இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?