என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் பல பேருக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டின் வீட்டிற்குச் சென்று மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார். 

    தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

    இந்நிலையில் சோனுசூட்டின் வீட்டிற்கு சென்று பொதுமக்கள் பலரும் உதவி கேட்டு வருகிறார்கள். அவர்களை சந்தித்து குறைகளை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் காளி வெங்கட், அது குறித்த அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் காளி வெங்கட் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், இந்த வீடியோவை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மாதிரி தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.

    இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது. நான் இதுல இருந்து வென்றே தீருவேன்னு என்றெல்லாம் நினைக்கல. வந்துருச்சு அடுத்த என்ன பண்ணலாம்ன்னு தான் இருந்தேன்.

    டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன். கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. தைரியமா இருங்க. முக்கியமா எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி, அவர் சொல்றத கேளுங்க என வீடியோவில் கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள் என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தனது தாய் இறந்தது குறித்து உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

    அதில், "இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன், வெளிப்படையாக எங்கள் இருவருக்குமே தெரியாது, என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக அது இருக்கும் என்று!

    இமான் பதிவு

    அவர் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் திரும்பி வருவார் என்று எனக்கு பலமான நம்பிக்கை இருந்தது, ஆனால் மே 25-ஆம் தேதி (2008) சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை!" என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
    சமூக வலைத்தளத்தில் கார்த்தி நடிப்பில் கைதி படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

    இந்தப் படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் 'கைதி 2' கண்டிப்பாக உருவாகும் என்று கூறினார். முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2-ம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு 'கைதி 2' குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.

    கைதி

    இந்நிலையில் 'கைதி 2' குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக 'கைதி 2' உருவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
    ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோக்கள் வெளியான நிலையில் பாலை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறார். 

    தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

    சோனு சூட்

    இந்நிலையில் சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கினார்கள். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதே போல தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

    இதில் ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் பாலை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானிடம் பிரபல பாடகி ஒருவர் உதவி கேட்டு இருக்கிறார்.
    ஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் '99 சாங்ஸ்' பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் பேசியது குறித்தும் குறிப்பிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.

    சுசீலா - ஏ ஆர் ரஹ்மான்
    ஏ.ஆர்.ரகுமான் - சுசீலா

    அப்போது, "மிகச்சிறந்த தென்னிந்தியப் பாடகி பி.சுசீலா அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, '99 சாங்ஸ்' படம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டேன். அப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வந்துவிட்டது என்று கூறினேன். படத்தைப் பார்த்தபிறகு என்னை மீண்டும் அழைத்த பி.சுசீலா, 'மிகவும் நன்றாக இருக்கிறது' என்று கூறினார். 

    மேலும், 'என்னுடைய கதை இதேபோன்றுதான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியுமா? என்று கேட்டார். அது மிகச்சிறந்த தருணம். ஏழு தலைமுறைகளாகப் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமைகளில் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அந்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் என்னுடைய படத்தைப் பாராட்டுவது அருமையான விஷயம்" என்றார்.
    வேல்மதி இயக்கத்தில் ஸ்ரேயாரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் முன்னோட்டம்.
    ஜேஎஸ்கே பிலிம் கார்பரே‌ஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ வி‌ஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்‘. ஸ்ரேயாரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். அஸ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படம் குறித்து நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறியதாவது: “இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. ‘திமிரு’ அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ‘திமிரு’ பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார்.

    ஸ்ரேயாரெட்டி
    ஸ்ரேயாரெட்டி 

    நீங்க ஒண்ணும் தயங்க வேண்டாம், நேரா ஷூட்டிங்குக்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்தார்” என்றார்.
    ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை விஷ்ணு விஷால் நடிப்பில், வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ் எனும் கதாபாத்திரம் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும், அதனை தற்போது ராஜகோபாலன் விவகாரத்தோடு ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

    ராட்சசன் படத்தில் இன்பராஜாக நடித்த வினோத் சாகருடன் இயக்குனர் ராம்குமார்
    ராட்சசன் படத்தில் இன்பராஜாக நடித்த வினோத் சாகருடன் இயக்குனர் ராம்குமார்

    அவர் பதிவிட்டுள்ளதாவது: “ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்” என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.


    ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் 5-வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    உலகளவில் திரைப்படங்களை தாண்டி தற்போது வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் தொடருக்கென உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை பற்றிய கதைதான் இந்த ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடர். இதுவரை, 4 சீசன்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு சீசனும் தலா 8 எபிசோடுகளைக் கொண்டது. 

    மனி ஹெய்ஸ்ட் தொடரின் போஸ்டர்
    மனி ஹெய்ஸ்ட் தொடரின் போஸ்டர்

    இந்நிலையில் ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் தொடரின் 5-வது சீசன் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5-வது சீசன் இரண்டு பகுதிகளாக வெளியாக உள்ளது. முதல் பகுதி வருகிற செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 5-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான 4 சீசன்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 5-வது சீசனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
    தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ராணாவின் ‘விராட பருவம்’, நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

    நடிப்பை போலவே நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் சாய் பல்லவி. இவரது நடனத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதனால் இவர் நடனமாடும் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

    சாய் பல்லவி
    சாய் பல்லவி

    இந்நிலையில், நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதன்படி மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 1,150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே போல் ‘பிடா’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘வச்சிந்தே’ என்ற பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

    தற்போது அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ என்ற பாடலும் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் வேறு எந்த நடிகையும் இத்தகைய சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    அப்பாவும், அம்மாவும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
    நடிகை சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழப் பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். ஒத்துப் போகாத இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது என்பது முடியாத ஒன்று. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

    சுருதிஹாசன், சரிகா
    சுருதிஹாசன், சரிகா

    அவர்கள் எனக்கும், எனது தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான் அம்மாவை விட அப்பாவிடம் தான் நெருக்கம். அம்மா நலமுடன் இருக்கிறார். எங்கள் வாழ்க்கையிலும் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்து இருக்கிறது. அப்பா, அம்மா இருவருமே ரொம்ப நல்லவர்கள். ஆனால் சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே ஒத்துப் போகவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள்”. இவ்வாறு சுருதிஹாசன் கூறி உள்ளார்.
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பையா, சிறுத்தை, தீரன், கைதி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. 

    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை
    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

    அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
    ×