என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
    சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்தது.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். 

    தி பேமிலி மேன் 2 போஸ்டர்
    தி பேமிலி மேன் 2 போஸ்டர்

    இந்நிலையில் இந்த வெப் தொடர் திடீரென்று ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று ரிலீசாகி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான ஐயா படத்தில் கதாநாயகி வேடத்தை தவறவிட்டதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
    சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் நெப்போலியன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

    நவ்யா நாயர்
    நவ்யா நாயர்

    இந்த படத்தில் முதலில் கதாநாயகி வேடத்திற்கு தேர்வானவர் நவ்யா நாயர். இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நவ்யா நாயர் கூறியிருக்கிறார். ஐயா படத்தை ஏன் நிராகரித்தார் என்று கேட்டதற்கு, மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததுதான் முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறார். இதேபோல் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்திலும் தனக்கு வந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
    கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
    கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’பீர்பால்’. இந்தப் படம் தெலுங்கில் ‘திம்மரசு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ஜனவரி மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ’பீர்பால்’ படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

    சாந்தனு
    சாந்தனு

    நடிகர் சாந்தனு ஏற்கனவே ’முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘ராவண கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சயின் வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய்யின் 14 நொடி வீடியோ ஒன்று திடீரென சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும், இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இரவில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். 


    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா தம்பதிகள் இருவரும் தங்களது 48 ஆவது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
    நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை ஜெயாவிற்கு கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் அபிஷேக் எனும் மகனும் உள்ளனர். இதில் அபிஷேக் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    மனைவியுடன் அமிதாப்பச்சன்
    மனைவியுடன் அமிதாப்பச்சன்

    நடிகர் அமிதாப் பச்சன் தனது 48 ஆவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
    மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தின் இசை பணியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இருக்கிறார்.
    சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல் பதிவுக்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும், 2 பாடல்களை முடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    ஏ ஆர் ரஹ்மான் - சிம்பு

    ஏ.ஆர்.ரகுமான் மற்றும் கிருஷ்ணா இணைந்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் அதே போன்று இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் மீண்டும் குத்துச் சண்டை பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.

    ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு பதிப்பான குரு படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.

    ரித்திகா சிங்

    தற்போது புதிய பட வாய்ப்புகளும், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் இல்லாததால் மீண்டும் குத்துச் சண்டைக்கே திரும்ப ரித்திகா சிங் முடிவு செய்து இருக்கிறார். தனி பயிற்சியாளரை நியமித்து வீட்டிலேயே குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை சுபிக்‌ஷா, கொரோனாவால் உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்களுக்கு உதவி வருகிறார்.
    கொரோனா காலத்தில் நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழில் கடுகு, கோலிசோடா 2, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்த நடிகை சுபிக்‌ஷா கொரோனாவால், உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்கள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு உதவி வருகிறார்.

    பொது மக்களுக்கு உணவுகள், கால்நடைகளுக்கு பழங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு நேரில் சென்று கொடுத்து வருகிறார். தற்போது சுபிக்‌ஷா நடிப்பில் கன்னித்தீவு திரைப்படம் உருவாகி உள்ளது.

    கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என பல படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் மறைவிற்கு கமல் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    தற்போது கமல் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தறுவாய் வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன். கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர்.குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார்.

    கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டிற்கு 'கமல் இல்லம் என்று பெயர் வைத்தார். இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக் கூடும்.

    ஜி.என்.ரங்கராஜன்
    ஜி.என்.ரங்கராஜன்

    ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும். கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார் என கேள்வியுற்றேன். தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர்.

    நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும், தம்பி இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி உள்ள கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    "லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் திகில் கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட படமாக ‘கலர்ஸ்’ தயாராகி இருக்கிறது. நகர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், இதுவரை நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

    கலர்ஸ் படக்குழு

    இவர்களுடன் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். நிஜார் டைரக்டு செய்து இருக்கிறார். அஜி இட்டிகுலா தயாரித்துள்ளார். படம், கோட்டயம் மற்றும் சென்னையில் வளர்ந்துள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான நடிகர் யாஷ், அடுத்ததாக ‘போக்கிரி’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். கன்னட படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய  மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    யாஷ், பூரி ஜெகன்நாத்
    யாஷ், பூரி ஜெகன்நாத்

    இந்நிலையில், நடிகர் யாஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, பிசினஸ்மேன் போன்ற படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், யாஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் தேவரகொண்டாவின் ‘லிகர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின் அவர் யாஷ் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
    ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் நடிகை வரலட்சுமி.
    ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடிப்பதால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. 

    தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலப் பணிகளையும் செய்து வருகிறார்.

    தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் வரலட்சுமி. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். 

    உதயநிதி ஸ்டாலினை நடிகை வரலட்சுமி சந்தித்தபோது எடுத்த புகைப்படம்
    உதயநிதி ஸ்டாலினை நடிகை வரலட்சுமி சந்தித்தபோது எடுத்த புகைப்படம்

    மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவிஎண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார். இந்த சேவையையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    ×