search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மனைவியுடன் அமிதாப் பச்சன்
    X
    மனைவியுடன் அமிதாப் பச்சன்

    48வது திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகர்... குவியும் வாழ்த்துகள்

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா தம்பதிகள் இருவரும் தங்களது 48 ஆவது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர்.
    நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை ஜெயாவிற்கு கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுவேதா என்ற மகளும் அபிஷேக் எனும் மகனும் உள்ளனர். இதில் அபிஷேக் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    மனைவியுடன் அமிதாப்பச்சன்
    மனைவியுடன் அமிதாப்பச்சன்

    நடிகர் அமிதாப் பச்சன் தனது 48 ஆவது திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
    Next Story
    ×