என் மலர்
சினிமா செய்திகள்
ஆர்.எஸ்.கே.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சையத் இயக்கத்தில், அபி சரவணன் வழங்கும் தராதிபன் படத்தின் முன்னோட்டம்.
ஆர்.எஸ்.கே.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சையத் இயக்கத்தில், அபி சரவணன் வழங்கும் திரைப்படம் தராதிபன். இப்படம் ஒரு திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே H.சையத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் யாமா படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.
மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. பிரபல சக்தி பிலிம் பேக்டரி டிஸ்டிபியூட்டர் சக்தி வேலன் தராதிபன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக அபிசரவணன், நாயகியாக பிரியங்கா நடிக்கிறார்கள். சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முத்து கணேஷ் இசையமைக்க இருக்கிறார்.
மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தனது குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மயக்கம் என்ன' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரிச்சா. தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

ரிச்சாவின் குழந்தை
இந்த நிலையில் மே 27-ஆம் தேதி ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘லூகா’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். தற்போது குழந்தை புகைப்படத்தை பதிவு செய்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரிச்சா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தில் ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ஜூன் 7 ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்து இருக்கிறார். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவி படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் 4 கதாநாயகிகளை வைத்து சத்தமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பதால் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள்.

நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா
நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் ’தலைவி’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகராகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராகவும் இருக்கும் கமல், உட்பட படக்குழுவினர் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்து இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் படங்கள் இயக்க தயாராகி உள்ளார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இந்தியன் 2 வழக்கு இதற்கு தடையாக உள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து விட்டுத்தான் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

அதே நேரம் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்தியன் 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கருக்கும், இந்தியன் 2 பட தயாரிப்பாளருக்கும் இடையே கமல்ஹாசன் மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கோர்ட்டு தீர்ப்புக்காக கமல்ஹாசன் உள்பட இரு படக்குழுவினரும் காத்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் உடன் நடித்த காட்சியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார்.
ஆனால் அவர் இயக்குனராகும் முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி அந்த மலரும் நினைவுகளின் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பூச்சூடவா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பாஸ் மற்றும் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தை உதயசங்கர் என்பவர் இயக்கியிருந்தார்.
நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ள அந்த காட்சியில் சர்வராக தோன்றும் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை யாமி கவுதம் இயக்குனரை திடீர் திருமணம் செய்து இருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் நடித்து வருபவர் யாமி கவுதம். தமிழில் ‛கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், திடீரென இன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம் செய்துள்ளார். யூரி படத்தில் யாமியும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

யாமி கவுதம்
இதுப்பற்றி யாமி கவுதம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குபெற எங்கள் திருமணம் நடந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் வேளையில் அனைவரின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் தேவை என பதிவிட்டுள்ளார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை பலரும் கொண்டாடி வரும் நிலையில் இசையமைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இன்று(ஜூன் 4) கொண்டாடி வருகிறார்கள். மேலும் அவரைப்பற்றிய பல நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.


இசையமைப்பாளர் தினாவின் பதிவு
இந்நிலையில் இசையமைப்பாளர் தினா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛எஸ்பிபியின் 75 பிறந்தநாளை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தி வணங்குகிறோம். தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள். அண்ணாரின் உருவ சிலையை சென்னையில் நிறுவ வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவை பிரபல இயக்குனர் ஒருவர் கஷ்டப்படுத்தி இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.

ஆண்ட்ரியா - மிஷ்கின்
ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம். இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். படம் பயமுறுத்தத்தான் செய்யும் என்றார்.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5ஜி அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கிவிட்டது.

அதேநேரம், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஜூஹி சாவ்லா
பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
எஸ்பிபி அண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை நினைப்போம், பாடலை கேட்போம் என்று பிரபல பாடகர் வாழ்த்து கூறி இருக்கிறார்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர், கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பின்னணி பாடகர் மனோ பாட்டுப்பாடி எஸ்.பி.பி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மனோ
அதில், எஸ்.பி.பி. அண்ணனை நினைக்காத இதயமே கிடையாது. 1000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை தந்து விட்டு சென்றிருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை நினைப்போம், பாடலை கேட்போம். பாடல்கள் மூலம் பல பேருக்கு நிம்மதி தந்திருக்கிறார் என்று வீடியோ மூலம் வாழ்த்து கூறி இருக்கிறார்.
எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும், கமலும் நெருங்கிய நண்பர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ pic.twitter.com/2Zs7j0pRTs
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2021






