என் மலர்tooltip icon

    சினிமா

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    X
    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    அவரை நினைப்போம், பாடலை கேட்போம்... எஸ்பிபி பிறந்தநாளுக்கு பிரபல பாடகர் வாழ்த்து

    எஸ்பிபி அண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை நினைப்போம், பாடலை கேட்போம் என்று பிரபல பாடகர் வாழ்த்து கூறி இருக்கிறார்.
    பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர், கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பின்னணி பாடகர் மனோ பாட்டுப்பாடி எஸ்.பி.பி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மனோ
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மனோ

    அதில், எஸ்.பி.பி. அண்ணனை நினைக்காத இதயமே கிடையாது. 1000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை தந்து விட்டு சென்றிருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை நினைப்போம், பாடலை கேட்போம். பாடல்கள் மூலம் பல பேருக்கு நிம்மதி தந்திருக்கிறார் என்று வீடியோ மூலம் வாழ்த்து கூறி இருக்கிறார்.
    Next Story
    ×