என் மலர்
சினிமா செய்திகள்
எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும், கமலும் நெருங்கிய நண்பர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி பாடி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ pic.twitter.com/2Zs7j0pRTs
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2021
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார், வித்தியாசமான முயற்சியில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டபுள் ஆக்ஷனில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ’தடுப்பூசி போடவில்லை என்று ஒரு வரலட்சுமி கேட்க அதற்கு இன்னொரு வரலட்சுமி ’தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்று கூறுகிறார்கள், அது மட்டுமின்றி இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிக்கிறது என்று கூறுகிறார்.
அதற்கு முதல் வரலட்சுமி ’தடுப்பூசி என்பது ஒரு ஹெல்மெட் போன்றது என்றும் ஹெல்மெட் போட்டவர்களுக்கு விபத்துகள் ஏற்படாது என்பது உறுதி அல்ல என்றும் ஆனால் விபத்துக்கள் ஏற்பட்டால் உயிர் பிழைத்து விடுவார்கள். அதேபோல்தான் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்பது உறுதி அல்ல என்றும் ஆனால் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் கூறுகிறார்.

வரலட்சுமி சரத்குமார்
இதனை அடுத்து மறுமுனையில் இருக்கும் வரலட்சுமி நாளைக்கே நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பசங்க, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமலின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பசங்க, களவாணி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விமல். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூட வா, உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக கன்னிராசி திரைப்படம் வெளியானது.


விமலின் குழந்தைகள்
இந்நிலையில், நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், மகளின் புகைப்படம் மற்றும் மனைவி மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கசட தபற’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் ஆகிய 6 பேர் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளனர். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர்.

விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
பிரபாஸ் நடிப்பில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர்
இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது. முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்
இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், சசிகாந்த் தயாரித்து உள்ளார்.
தனுஷின் ஜகமே தந்திரம் படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதற்கு நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் சசிகாந்திடம், தனுஷுடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து அவர் கூறியதாவது: “கடந்த 4 மாதங்களாக, இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தொடர்பாக நான் எந்தவித கருத்தும் சொன்னதில்லை. எதிர்மறையாக இல்லாமல், நாம் தயாரித்துள்ள படம் உலக அளவில் போகப் போகிறது என்பதில் மட்டுமே இருக்கிறேன்.

நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இந்தப் பட விவகாரத்தில் எங்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷும் இந்தப் படத்தின் நல்லதுக்குத்தான் பேசினார். 'ஜகமே தந்திரம்' தியேட்டரில் ரிலீசானால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது சரியான கருத்து தான்.
ஆனால், கமர்ஷியல் ரீதியாக கடந்த ஓராண்டாக, இத்தகைய பெரிய பட்ஜெட் படத்தை வைத்துக் கொண்டிருப்பது, எவ்வளவு வட்டி என்பது எனக்கு தான் தெரியும். இது தொடர்பாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. தற்போது இந்த படம் உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அமெரிக்காவில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக அது எனக்கு சந்தோஷத்தை தருகிறது”. இவ்வாறு சசிகாந்த் கூறியுள்ளார்.
‘மிஷன் இம்பாசிபிள் 7’ படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தில் நடிக்கிறார். இதன் தயாரிப்பாளரும் அவர்தான். இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. அங்கு பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஜூன் 14-ந் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தை அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களாக இங்கிலாந்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மிஷன் இம்பாசிபிள் 7 படத்தை கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கி வருகிறார்.
கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கையை “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் படமாக்கி உள்ளனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த வருடம் ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது.
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையான ‘எம்.எஸ்.தோனி: தி அன்ட்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சுஷாந்த் சிங், ‘நய்யே தி ஜஸ்டிஸ்' படத்தின் போஸ்டர்
இந்த நிலையில், சுஷாந்த் சிங் வாழ்க்கையை “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் படமாக்கினர். இதில் சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், காதலி ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லாவும் நடித்தனர். திலீப் குலாட்டி இயக்கினார்.
இந்த படம் வருகிற 11-ந்தேதி ரிலீசாக இருந்த நிலையில் சுஷாந்த் சிங் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், படத்துக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.
வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கசட தபற’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், கொரோனா காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர்.
நயன்தாரா படத்தில் நடித்த நடிகை ஒருவர், வைரலாக பரவும் ஆபாச வீடியோ குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரம்யா சுரேஷ். சமீபத்தில் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் இருப்பது நடிகை ரம்யா சுரேஷ் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து அறிந்த நடிகை ரம்யா சுரேஷ், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்றும், அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரம்யா சுரேஷ்
அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாளான இன்று, பிரபல பாடகி ஒருவர் அவருக்கு பாட்டுப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர், கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பின்னணி பாடகி சுவேதா மோகன், பாட்டுப்பாடி எஸ்.பி.பி.க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘பாடும் நிலாவே’ பாடலை பாடியுள்ள சுவேதா மோகன், எஸ்.பி.பி. குறித்து கூறியதாவது: “எஸ்.பி.பி. அவர்களுடைய குரலாலும், இசையாலும் நம்முடைய வாழ்க்கை என்றைக்கும் நிறைந்திருக்கும் என நான் நம்புகிறேன். அவர் நம்முடன் தான் இருக்கிறார் என நான் தீர்க்கமாக நம்புகிறேன். எஸ்.பி.பி. சார், நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Happy 75th Birthday dear #SPB Sir 🎂🎶 We miss you here on Earth 🙏🙏🙏#HappyBirthdaySPBpic.twitter.com/dgLePOxHv9
— Shweta Mohan (@_ShwetaMohan_) June 4, 2021






