என் மலர்
சினிமா

வரலட்சுமி சரத்குமார்
டபுள் ஆக்ஷனில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார், வித்தியாசமான முயற்சியில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டபுள் ஆக்ஷனில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ’தடுப்பூசி போடவில்லை என்று ஒரு வரலட்சுமி கேட்க அதற்கு இன்னொரு வரலட்சுமி ’தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்று கூறுகிறார்கள், அது மட்டுமின்றி இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிக்கிறது என்று கூறுகிறார்.
அதற்கு முதல் வரலட்சுமி ’தடுப்பூசி என்பது ஒரு ஹெல்மெட் போன்றது என்றும் ஹெல்மெட் போட்டவர்களுக்கு விபத்துகள் ஏற்படாது என்பது உறுதி அல்ல என்றும் ஆனால் விபத்துக்கள் ஏற்பட்டால் உயிர் பிழைத்து விடுவார்கள். அதேபோல்தான் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்காது என்பது உறுதி அல்ல என்றும் ஆனால் தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்றும் கூறுகிறார்.

வரலட்சுமி சரத்குமார்
இதனை அடுத்து மறுமுனையில் இருக்கும் வரலட்சுமி நாளைக்கே நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Next Story






