என் மலர்
சினிமா செய்திகள்
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.

இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்ஸி படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாம் மெக்ராத் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘தி பாஸ் பேபி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் குழந்தைகளாக இருந்த டிம்மும், அவரது பாஸ் பேபி சகோதரரான டெட்டும் இரண்டாம் பாகத்தில் இளசுகளாக இருக்கின்றனர். இதில் டிம்முக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. டெட் ஒரு கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். டிம்முடைய குழந்தை டீனா, ஒரு சீக்ரெட் மிஷன் செய்வதற்காக டெட்டை அழைக்கிறார்.
இது ஒருபுறம் நடக்க மறுபுறம், டாக்டர் எட்வின் ஆம்ஸ்ட்ராங், தான் நடத்தி வரும் பள்ளியில் உள்ள குழந்தைகளை வைத்து சில விநோதமான விஷயங்களை செய்து வருகிறார். அதன்மூலமாக உலகத்தை தன் வசப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் செய்யும் விஷயங்களை கண்டுபிடித்து, உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவே சீக்ரெட் மிஷனை நடத்துகிறார் டீனா.

எட்வின் ஆம்ஸ்ட்ராங்
இதற்காக டிம், டெட் இருவரையும் குழந்தை உருவத்துல ஆம்ஸ்ட்ராங்கோட பள்ளிக்கு டீனா அனுப்புகிறார். டிம், டெட் இருவரும் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கோட பிளான் என்ன என்பதை கண்டுபிடித்து அதை தடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இது ஒரு அனிமேஷன் படம், இந்த படத்தின் மிகப்பெரிய பலமே அனிமேஷன் தான். முதல் பாகத்தைப் போலவே இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குழந்தைகளை கவரும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார் இயக்குனர் டாம் மெக்ராத்.

டிம், டீனா, டெட்
குறிப்பாக டிம், டெட் இருவரும் குழந்தைகளாக மாறும் காட்சி வேற லெவல். தொழிநுட்ப ரீதியாக பலமாக இருந்தாலும், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர். முதல் பாகத்தை போன்று இந்தப் படம் விறுவிறுப்பாக இல்லாதது பின்னடைவு.
ஹேன்ஸ் சிம்மர் மற்றும் ஸ்டீவ் மசாரோவின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘தி பாஸ் பேபி 2’ விறுவிறுப்பில்லை.
தமிழ், இந்தி மொழிகளில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வரும் பிரபு தேவா தற்போது பஹிரா என்னும் படத்தில் நடித்து இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பிரபுதேவா பேசும் போது, பஹிரா படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். ஆதிக் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல் தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் பல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ்.

நாயகி ஜனனி அழகாக இருக்கிறார், அழகாகவும் நடிக்கிறார். அப்புறம் காயத்ரியும், சாக்ஷி, அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் அனைவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஒவ்வோரு சீனுக்கும் புது புது டிரஸ் கொடுத்து அசத்தினார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பஹிரா திரைப்படம் அனைவரும் பிடிக்கும் என்றார்.
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

அண்ணாத்த படக்குழு வெளியிட்ட போஸ்டர்
அப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 2-வது பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ‘சாரக்காற்றே’ எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். ரஜினி - நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இது படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர்.
பஹிரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், கடைசி 7 நாட்களை மறக்க முடியாது என்று பட விழாவில் பேசி இருக்கிறார்.
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இதில் கதாநாயகிகளாக அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, படத்தில் கதாநாயகிகளே இல்லை. அனைவரும் திறமையான நடிகர்கள். அமைராவிற்கு பிரபு தேவாவுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. அமைராவிற்கு தமிழ் தெரியாது. ஆனால், நான் சொன்னதை கேட்டு திறமையாக நடித்து கொடுத்தார்.

பிரபு தேவா - ஆதிக் ரவிச்சந்திரன்
பஹிரா திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரபு தேவா மாஸ்டர் தான். அவரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயமாக இருந்தது. என் பயத்தை போக்கினார். பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை என்னால் மறக்க முடியாது என்றார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வரும் சாக்ஷி அகர்வால், என் கனவு நிறைவேறியது என்று பட விழாவில் பேசி இருக்கிறார்.
பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இதில் கதாநாயகிகளாக அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் சாக்ஷி அகர்வால் பேசும் போது, பஹிரா படத்தின் இயக்குனர் ஆதிக் என்னிடம் கதை சொல்லும் போது, இந்த படத்தில் 7 கதாநாயகிகள் என்று சொன்னார். நான் எப்படி இயக்குவார் என்று பயந்தேன். ஆனால், சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

பிரபு தேவா
படத்தின் நாயகன், பிரபு தேவா சாருக்கு மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. 2 வருடமாக இப்படத்திற்கு கடின உழைப்பை படக்குழுவினர் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.
2018ம் ஆண்டு வெளியான எ கொயட் பிளேஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
எ கொயட் பிளேஸ் முதல் பாகத்தில் ஏலியன்கள் உலகத்திற்கு வந்து மக்களை அழிக்கிறார்கள். இதில் தப்பிக்கும் ஒரு குடும்பம் எலியன்களிடம் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொண்டு ஏலியன்களை அழிக்கிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
ஊரை அழித்து இருக்கும் ஏலியன்களுக்கு கண் தெரியாது. சத்தம் கேட்டால் அங்கு வந்து மனிதர்களை தாக்கும். இந்த ஏலியன்களிடம் இருந்து தனது குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள நாயகி எமிலி பிளண்ட் மக்கள் வசிக்கும் ஊருக்கு செல்ல வேண்டும் என திட்டமிடுகிறார். இவருடன் இருக்கும் மில்லிசென்ட் சிம்மண்ட்ஸ், ரேடார் கருவி மூலம் மக்கள் வசிக்கும் ஊரை கண்டுபிடிக்கிறார்.
இறுதியில், நாயகி எமிலி பிளண்ட் குடும்பம் ஏலியன்களிடம் இருந்து தப்பித்து மக்கள் வசிக்கும் ஊருக்கு சென்றார்களா? ஏலியன்களை கொன்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் எமிலி பிளண்ட், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட நடிப்பு திறனை காட்டி இருக்கிறார். குழந்தைகளை காப்பாற்ற போராடும் போது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார். சிறுமியாக வரும் மில்லிசென்ட் சிம்மண்ட்ஸ் காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். துணிச்சலாக இவர் எடுக்கும் முடிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.
சிறுவனாக வரும் நோவா ஜூப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். காலில் அடிபட்டவுடன் வலியை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சிலியன் மர்பி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

சைலண்ட் திரில்லர் கதையை ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜான் கிராசின்ஸ்கி. படத்திற்கு பெரிய பலம் திரைக்கதை. சத்தமே இல்லாமல் நகரும் திரைக்கதை, பல இடங்களில் பார்ப்பவர்களை பயத்தில் சத்தம் போட வைத்திருக்கிறது. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
போலி மோர்கனின் ஒளிப்பதிவும், மார்கோ பெல்ட்ராமியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘எ கொயட் பிளேஸ் 2’ சைலண்ட் வெற்றி.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது. சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

பொன்ராம், சிவகார்த்திகேயன்
இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம். போட்றா வெடிய” என குறிப்பிட்டுள்ளார்.
அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் ரிலீஸ் ஆகும் தேதியை டிஸ்னி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
அவதார் படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அவதார் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.
ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சமூக வலைத்தள பக்கத்தில் ஆர்யனுக்கு ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார்.
அதில், என் அன்பான ஆரியன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். இது நிச்சயமற்றது என்பதால் அது சிறந்ததாக உள்ளது. அது உங்களுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. ஆனால் கடவுள் கனிவானவர். அவர் விளையாடுவதற்கு கடினமான பந்துகளை மட்டுமே கொடுக்கிறார்.

ஹிருத்திக் ரோஷன் - ஆரியன் கான்
குழப்பங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அழுத்தத்தை உணரும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆர்யன் தனது கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை ஆகியவற்றை அப்படியே தன்னுள் இருக்க அனுமதிக்க வேண்டும். கடினமான காலங்கள் உன்னை வலிமையாக்கும் என கூறி உள்ளார்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கைதி படத்தில் நடித்து பிரபலமான நரேனின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குனர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.
இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார்.

குரல் படத்தின் பர்ஸ்ட் லுக்
இப்படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நரேன் பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ரஷ்ய படக்குழுவினர் விண்வெளியில் நடத்தி இருக்கிறார்கள்.
ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார்.
கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை.

படக்குழுவினர்
சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு தீவிர பயிற்சியும், பரிசோதனையும் படக்குழுவினருக்கு நடத்தப்பட்டிருக்கிறது. சோயஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்று அங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி படம் எடுத்து வருகிறார்கள்.
இது பற்றி இயக்குனர் கூறும்போது, “விண்வெளி நம் வாழ்க்கையை மாற்றும். கடந்த மூன்று மாதங்களாக அற்புதமான உலகில் இருக்கிறோம். பூமியில் படம் எடுப்பதை விடக் குறைவான நேரமே இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.






