என் மலர்
பைக்
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
அந்த வகையில் வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கவாசகியின் பாரம்பரிய லைம் கிரீன் நிறம் வீல்கள், டிரெலிஸ் பிரேம் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்டவைகளில் பூசப்பட்டு உள்ளது. 2021 கவாசகி இசட்650 மாடல் புல் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 ரக டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. மாடலில் மேம்பட்ட 649சிசி பேரலெல் ட்வின் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் நின்ஜா 650 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 68 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஸ்டான்டர்டு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் அசத்தல் அப்டேட்களுடன் 2021 சிபி650ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது.
ஹோண்டா நிறுவனம் தனது மிடில்வெயிட் நேக்கட் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் சிபி650ஆர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 2021 மாடல் வடிவமைப்பு முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
எனினும், தற்சமயம் இது யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் மற்றும் மேம்பட்ட சஸ்பென்ஷன் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் புல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் பியூயல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட் மற்றும் அன்டர்பெல்லி எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.

2021 மாடலில் புதிய சேடு பேனல்கள், பின்புற மட்கார்டு/நம்பர் பிளேட் மவுண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹேன்டிள்பார் கோணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் பியல் ஸ்மோக்கி கிரே, மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக், கேண்டி குரோமோஸ்பியர் ரெட் மற்றும் மேட் ஜீன்ஸ் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 649சிசி, இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 93.8 பிஹெச்பி பவர், 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனம் தனது 2021 நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் லைம் கிரீன் கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுதவிர சிவப்பு நிறத்தில் வைட் கிராபிக்ஸ் மற்றும் ரெட்ரோ ஸ்டைல் டியல் புளூ மற்றும் சில்வர் நிற கிராபிக்ஸ் உடன் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர நின்ஜா 400 மாடலில் 399சிசி பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது யூரோ 5 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2021 கவாசகி நின்ஜா 400 விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2020 ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2020 ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடலில் புதிய அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்களில் புல் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. ஹெட்லைட் மட்டுமின்றி மோட்டார்சைக்கிளின் டேன்க் எக்ஸ்டென்ஷன்களும் மாற்றப்பட்டு இருக்கிறது.

தொழில்நுட்பங்களை பொருத்தவரை புதிய ஜி 310 ஜிஎஸ் மாடலில் ரைடு-பை-வையர் திராட்டிள், ப்ளூடூத் சார்ந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 312சிசி பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சுசுகி நிறுவனம் இந்தியாவில் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல்களை புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மோட்டார்சைக்கிள்களை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜிக்சர் 250 மாடல் மெட்டாலிக் ட்ரிடன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதில் புளூ பேஸ் பெயின்ட், புளுயோ எல்லோ ஹைலைட்கள் மற்றும் பெரிய சுசுகி லோகோ இடம்பெற்றிருக்கிறது. ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் ட்ரிடன் புளூ/சில்வர் நிறத்தில் கிடைக்கிறது.

புதிய நிறங்கள் தவிர ஜிக்சர் 250 மாடல்கள் மெட்டாலிக் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் ட்ரிடன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. ஜிக்சர் 250 சீரிஸ் புதிய நிறம் தவிர விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்த வகையில் இந்தியாவில் சுசுகி ஜிக்சர் 250 மாடல் விலை ரூ. 1.65 லட்சம் என்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் ரூ. 1.76 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல்களில் 249சிசி ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 26.1 பிஹெச்பி பவர், 22.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புதிய 350சிசி மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இது ஹைனெஸ் எனும் பெயர் கொண்டுள்ளது. புதிய ஹோண்டா ஹைனெஸ் மாடல் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ரெட்ரோ-ஸ்டைல் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஹோண்டா ஹைனெஸ் வட்ட வடிவ ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார், டியர்டிராப் வடிவ பியூயல் டேன்க், ஒற்றை இருக்கை மற்றும் சாப்டு பென்டர்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் புல் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், ரிங்-ஸ்டைல் இன்டிகேட்டர்கள், அனலாக் ஸ்பீடோமீட்டர், சிறிய எல்சிடி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கன்சோல் ப்ளூடூத் வசதி கொண்டுள்ளது. மேலும் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், போன் கால் மற்றும் மெசேஜ்களை குரல் வழியே இயக்க முடியும்.
ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அக்டபோர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இரு மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கியது. இதுதவிர ஜி 310 சீரிசுக்கு மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்6 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை விவரங்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

முந்தைய பிஎஸ்4 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் 313சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இவற்றின் செயல்திறன் அளவுகள் பிஎஸ்4 மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மாடல் சக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு துறையிடம் டுகாட்டி பதிவிட்டுள்ள ஆவணங்களில் இருந்து புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடல் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி என்ஜின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆவணங்களில் உள்ள சில தகவல்களின் படி புதிய மாடலின் என்ஜின் மாற்றப்படுவதை குறிக்கிறது. அதில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதுதவிர ட்வின் சிலிண்டர் 950 மற்றும் 1260 மல்டிஸ்டிராடா மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் டுகாட்டி தெரிவித்து இருக்கிறது.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடல் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்சி 125 மாடலினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து உள்ளது.
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் ஆர்சி 125 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் விலை ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நிறத்தை பொருத்தவரை பின்புறம் மெட்டாலிக் சில்வர் மற்றும் முன்புற பென்டரில் டார்க் கல்வேனோ ஷேடில் கிடைக்கிறது. மேலும் இதன் கிராபிக்ஸ் கேடிஎம்-இன் எலெக்ட்ரிக் ஆரஞ்சு நிறத்தில் செய்யப்பட்டு உள்ளது. புதிய பெயின்ட் முந்தைய ஆரஞ்சு மற்றும் வைட் நிற ஆப்ஷனுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது.

இவைதவிர கேடிஎம் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் டூயல் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், முன்புறம் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.
கேடிஎம் ஆர்சி 125 மாடலில் 125சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இது 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஒகினவா நிறுவனம் இந்தியாவில் ஒகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஒகினவா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒகி100 எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருக்கறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலக்கட்டத்தில் வெளியாக இருக்கிறது.
ஒகி100 மாடல் தோற்றத்தில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ப்ரோடோடைப் போன்று காட்சியளிக்கிறது. ஒகி100 மாடலில் மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இது பிரதமர் மோடியின் வோக்கல் பார் லோக்கல் திட்டத்தை ஆதரிப்பதாக ஒகினவா தெரிவித்து உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 100 சதவீதம் லோக்கல் பொருட்களுடன் இந்தியாவில் வெளியாகும் என தெரிகிறது. இந்தியாவில் 100 சதவீதம் லோக்கலைசேஷனை எட்டும் முதல் எலெக்ட்ரிக் நிறுவனமாக ஒகினவா இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஒகி100 மாடலின் விலை ரூ. 1 லட்சம் வாக்கில் நிர்ணயம் செய்யப்படும் என ஒகினவா தெரிவித்து உள்ளது. இத்துடன் புதிய மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு சிறப்பான நிதி உதவி வழங்க பல்வேறு வங்கிகளுடன் கைகோர்க்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து உள்ளது. தி ரிவைவர் என்ற தனது வியாபார யுக்தியின் அங்கமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கான உற்பத்தி ஆலை ஹரியானா மாநிலத்தின் பவால் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து நாடு முழுக்க ஹார்லி டேவிட்சன் மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டு வந்தன.

அந்த வகையில் புதிய வியாபார யுக்தியின் அங்கமாக பவால் தொழிற்சாலை விரைவில் மூடப்பட இருக்கிறது. எனினும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க ஒப்பந்த முறையில் டீலர்களை நியமிப்பதாக ஹார்லி டேவிட்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் மற்றும் எதிர்கால சேவைகளை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் வதகி கொண்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் கொண்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,23,500, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இனி அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் அல்லது ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் மோட் வசதியின்றி சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் வழங்கப்படும். இதுதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளில் பெதர் டச் ஸ்டார்ட், எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், பாடி கிராபிக்ஸ், கிளைடு த்ரூ தொழில்நுட்பம், ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
2020 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளில் 197.75சிசி சிங்கிள் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 20.2 பிஹெச்பி பவர், 16.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.






