தொழில்நுட்பம்

5ஜி சிப்செட் உருவாக்கும் பணிகளை துவங்கிய சாம்சங்

Published On 2019-04-06 09:12 GMT   |   Update On 2019-04-06 09:12 GMT
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung



சாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனம் 5ஜி மோடெம் மற்றும் சிப்செட்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இவை சமீபத்திய பிரீமியம் மொபைல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கின்றன.

5ஜி சிப்செட்கள் - எக்சைனோஸ் மோடெம் 5100, எக்சைனோஸ் ஆர்.எஃப். 5500 மற்றும் எக்சைனோஸ் எஸ்.எம். 5800 என அழைக்கப்படுகின்றன. இவை மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன.



முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் தென்கொரியாவில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இதன் விலை 1332 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை முழுமையாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும் சாம்சங் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முன்னணி நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தென் கொரியாவில் வணிக ரீதியிலான 5ஜி சேவை வழங்கப்பட்டு விட்டது. இவற்றுக்கும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் கோர் மற்றும் ரேடியோ சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
Tags:    

Similar News