தொழில்நுட்பம்

பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது - பரபரப்புக்கு முற்றுப்புள்ள வைத்த ஹெச்.எம்.டி. குளோபல்

Published On 2019-03-25 14:58 GMT   |   Update On 2019-03-25 14:58 GMT
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து பயனர் விவரம் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹெச்.எம்.டி. குளோபல் பதில் அளித்துள்ளது. #HMDGlobal



நோக்கியா ஸ்மார்ட்போன்களில் இருந்து சீனாவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது, நோக்கியா மொபைல் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபின்லாந்தின் தகவல் பாதுகாப்பு நிறுவனம் நோக்கியா மொபைல் போன்கள் விதிகளை மீறியதா என்பதை ஆய்வுக்கு பின் அறிவிப்பதாக தெரிவித்தது. 

இந்த விவகாரத்தில் புதிய தகவல்களுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தகவல் திருட்டில் பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பதில் இடம்பெற்றிருக்கிறது. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த பிழை ஏற்பட்டது, எனினும் இதில் எவ்வித தகவலும் மூன்றாம் தரப்புக்கு பகிர்ந்து கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

“நாங்கள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ததில், ஒரு பங்கு நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சீன வேரியண்ட்களில் இடம்பெறும் டிவைஸ் ஆக்டிவேஷன் குறியீடுகள் இடம்பெற்றிருந்தன. இவை தவறுதலாக மூன்றாம் தரப்பு சர்வெருக்கு தகவல்களை அனுப்ப முயன்றன. எனினும், இந்த தகவல்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதில் பயனரின் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.” என ஹெச்.எம்.டி. குளோபல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பிழை பிப்ரவரி மாதத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து சாதனங்களிலும் பிழை அப்டேட் மூலம் கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டன. நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழை சரி செய்யப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அபவுட் போன் -- பில்டு நம்பர் உள்ளிட்டவற்றை க்ளிக் செய்ய வேண்டும். 

இவ்வாறு செய்ததும் ‘00WW_3_39B_SP03' or ‘00WW_3_22C_SP05'  என்ற பில்டு நம்பர் வந்திருந்தால் உங்களது நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பிழை சரி செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களது மொபைல் அப்டேட் செய்யப்படவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அட்வான்ஸ்டு -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்து மொபைலை அப்டேட் செய்ய வேண்டும்.

நோக்கியா 7 பிளஸ் தவிர மற்ற நோக்கியா போன்களிலும் இதேபோன்ற பிழை ஏற்பட்டதாக வெளியான தகவல்களை ஹெச்.எம்.டி. குளோபல் மறுத்திருக்கிறது. மேலும், சீனா வேரியன்ட் தவிர மற்ற நோக்கியா போன்களின் விவரங்களும் ஹெச்.எம்.டி. குளோபல் சர்வர்களில் சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News