தொழில்நுட்பம்

சியோமியின் கேமிங் போன் வெளியீட்டு விவரம்

Published On 2019-03-09 06:46 GMT   |   Update On 2019-03-09 06:46 GMT
சியோமி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BlackShark2 #GamingPhone



சியோமியின் பிளாக் ஷார்க் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் மார்ச் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக பிளாக் ஷார்க் ஹெலோ கேமிங் போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படுகிறது. முன்னதாக விவோ தனது கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ என அழைக்கப்டுகிறது. 

பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்படும் என பிளாக் ஷார்க் தலைமை செயல் அதிகாரி பீட்டபர் தெரிவித்திருக்கிறார். இது டவர் போன்ற சர்வதேச கூலிங் அமைப்பாகும். இதுபற்றிய முழு விவரங்கள் விழா அரங்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.



சீன வலைதளமான அன்டுடு (AnTuTu) பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் 359973 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது கேமிங் போன்களில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் சியோமியின் Mi 9 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 371849 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதன்படி புதிய பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வெர்ஷன் மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 

இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News