தொழில்நுட்பம்

புதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

Published On 2019-02-17 04:48 GMT   |   Update On 2019-02-17 04:48 GMT
லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்க துவங்கியிருக்கிறது. #Motorola #AndroidPie



லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு தனது மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே மற்றும் மோட்டோ இசட3 பிளே ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கி வருகிறது. புதிய அப்டேட் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் துவங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற பகுதிகளிலும் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பை அப்டேட் ஸ்மார்ட்போன்களில் புதிய வடிவமைப்பு கொண்ட நோட்டிஃபிகேஷன்கள், அடாப்டிவ் பேட்டரி, புதிய யு.ஐ. (யூசர் இன்டர்ஃபேஸ்), மேம்பட்ட ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. முன்னதாக மோட்டோ இசட்3 மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு பை அப்டேட் கடந்த மாதம் வழங்கப்பட்டது.



கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அறிமுகம் செய்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் பணிகள் துவங்கி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் அப்டேட் பற்றி முழு விவரங்கள் வெளியாகவில்லை.

இதனால் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் பாதுகாப்பு அப்டேட் ஏதும் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. பிரேசில் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு பிரேசில் நாட்டில் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டிருப்பதால், வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News