தொழில்நுட்பம்

வீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்

Published On 2019-02-16 09:40 GMT   |   Update On 2019-02-16 09:40 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் போன்களில் வீடியோ காலிங் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. #OnePlus #GoogleDuo



சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் பட்டியிலில் ஒன்பிளஸ் முதலிடம் பிடித்திருக்கிறது. 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019 முதல் அரையாண்டு காலத்திற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதற்கனெ ஒன்பிளஸ் நிறுவன்ம் கூகுள் டுயோ வீடியோ காலிங் வசதியை தனது ஆக்சிஜன் ஓ.எஸ்.இல் சேர்த்துள்ளது. இதனால் ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் இனி கூகுள் டுயோ மூலம் வீடியோ கால் பேசலாம். இந்த அம்சம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கோர் அம்சங்களில் இணைக்கப்பட்டு விடும்.

மேம்பட்ட ஆக்சிஜன் ஓ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் அனைத்து ஒன்பிளஸ் சாதனங்களிலும் கூகுள் டுயோ வசதி சேர்க்கப்படுகிறது. இதனால் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கூகுள் டுயோ சேவையை பயன்படுத்த துவங்கலாம். ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன்களுக்கும் கூகுள் டுயோ வசதி சேர்க்கப்படுகிறது. 

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வடிவில் வரும் வாரங்களில் வழங்கப்படும். ஒன்பிளஸ் சாதனங்களில் கூகுள் டுயோ வசதி சேர்க்கப்பட்டாலும், பயனர்கள் நெட்வொர்க் சார்ந்த வீடியோ கால்களையும் மேற்கொள்ள முடியும். இதனால் ஜியோவின் எல்.டி.இ. சேவையை கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் தொடர்ந்து இந்த சேவையை பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News