தொழில்நுட்பம்

சாம்சங் ஸ்மார்ட்போன் விளம்பரத்திற்கு ஐபோன் பயன்பாடு - ட்விட்டரில் அம்பலம்

Published On 2018-12-04 04:31 GMT   |   Update On 2018-12-04 04:31 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விளம்பரப்படுத்த ஐபோன் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #Samsung



சாம்சங் மற்றும் ஐபோன்களிடை அவ்வப்போது நடைபெறும் அக்கப்போர் இம்முறை ட்விட்டரில் ஆரம்பித்து இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் மூலம் ஏற்கனவே சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், மற்றொரு சாம்சங் அக்கவுண்ட் ஐபோன் மூலம் ட்விட் பதிவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த முறை சாம்சங் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்த சாம்சங் இம்முறை எதுபோன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சாம்சங் மொபைல் நைஜீரிய அக்கவுண்ட் ட்விட்டர் கணக்கில் சாம்சங் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ ஐபோன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பிரபல யூடியூபரான MKBHD தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார். 



விவகாரம் ட்விட்டரில் சூடுப்பிடித்த நிலையில், சாம்சங் மொபைல் நைஜீரிய ட்விட்டர் அக்கவுண்ட் சில மணி நேரங்களுக்கு டி-ஆக்டிவேட் செய்யப்பட்டு பின் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட சாம்சங் அதிகாரிகள் தான் காரணம் என தெரிகிறது.

சமீபத்தில் ரஷ்யாவுக்கான சாம்சங் விளம்பர தூதர் செனியா சோப்சாக் பொதுவெளியில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான செனியா சோப்சாக் ஐபோன் X பயன்படுத்திய வீடியோ தொலைகாட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சாம்சங் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது. #Samsung #iPhone
Tags:    

Similar News