தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்

Published On 2018-10-23 05:58 GMT   |   Update On 2018-10-23 06:01 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன இணை நிறுவனர் அறிவித்துள்ளார். #OnePlus



ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த புரளிகளுக்கு, ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் பதில் அளித்திருக்கிறார்.

அதன்படி ஹாங்காங் நகரில் நடைபெற்ற 4ஜி/5ஜி உச்சிமாநாட்டில் கால் பெய், அடுத்த ஆண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிடும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக ஒன்பிளஸ் இருக்கும் என தெரிவித்தார். 



மேலும் ஆகஸ்டு மாதத்தில் குவால்காம் தலைமையகத்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒன்பிளஸ் வெளியிடும் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்றும் இது 2019-ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் சமீபத்திய QT052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் தவிர அசுஸ், ஃபுஜிட்சு, ஹெச்.எம்.டி. குளோபல், ஹெச்.டி.சி., இன்சீகோ/நோவாடெல் வயர்லெஸ், எல்.ஜி., மோட்டோரோலா, நெட்காம் வயர்லெஸ், நெட்கியர், ஒப்போ, ஷார்ப், சியெரா வயர்லெஸ், சோனி மொபைல், டெலிட், விவோ, டபுள்யூ.என்.சி. மற்றும் சியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் 2019-ம் ஆண்டு 5ஜி பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், X50 5ஜி என்.ஆர். மோடெம்களை சோதனை செய்ய துவங்கி இருக்கின்றன.



குவால்காம் நிறுவன சிப்செட் முதல்முறையாக Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்றும், இது 5ஜி வசதி கொண்ட வணிக ரீதியிலான முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். சியோமி மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து பல்வேறு இதர நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை 2019-ம் ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக குவால்காம் நிறுவன தலைவர் கிரிஸ்டியானோ அமோன், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் இருபெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனகளில் 5ஜி தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என்றும், இதில் ஒரு மாடல் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் மற்றொன்று விடுமுறை காலத்திலும் அறிமுகமாகலாம் என தெரிவித்தார். #OnePlus #5G #Smartphones
Tags:    

Similar News