தொழில்நுட்பம்

நான்கே மாதங்களில் 5.8 கோடி ட்விட்டர் அக்கவுண்ட்கள் முடக்கம்

Published On 2018-07-19 06:53 GMT   |   Update On 2018-07-19 06:53 GMT
2017 இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விவரங்களை பார்ப்போம். #Twitter



ட்விட்டர் தளத்தை பாதுகாப்பானதாகவும், இதில் போலி செய்திகளை பரப்பப்படுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ட்விட்டர் மேற்கொண்டு வருகிறது. இதன் அங்கமாக பல்வேறு அக்கவுண்ட்களை ட்விட்டர் முடக்கி வருகிறது. 

கடந்த வாரத்தில் வெளியான பல்வேறு அறிக்கைகளின்படி உலகின் பிரபல அரசியல் பிரமுகர்கள் முதல் பிரபல நட்சத்திரங்களை பின்தொடர்வோர் (ஃபாளோவர்) எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது. அதன்படி டொனால்டு டிரம்ப், ஒபாமா துவங்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரது ஃபாளோவர்களும் குறைந்தது அனைவரும் அறிந்ததே. 

2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி போலி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அசோசியேட்டெட் பிரெஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட்டெட் பிரெஸ் வெளியிட்ட தகவல்களுக்கு ட்விட்டர் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.

மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் அக்கவுண்ட்களை முடக்கியிருக்கிறது. ட்விட்டரின் அதிரடி நடவடிக்கையால் ட்விட்டர் ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

ட்விட்டரில் முடக்கப்படும் கணக்குகள் பெரும்பாலும், குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும், இந்த அக்கவுண்ட்கள் மாதாந்திர பயனர் கணக்கில் சேர்க்கப்படாது என கூறப்படுகிறது. எனினும் அக்கவுண்ட்களை முடக்குவதை ட்விட்டர் குறைப்பதாக தெரியவில்லை. #Twitter
Tags:    

Similar News