தொழில்நுட்பம்
கோப்பு படம்

குறைந்த விலையில் புதிய ஐபோன்

Published On 2018-06-19 09:55 GMT   |   Update On 2018-06-19 09:55 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 வெளியீடு மற்றும் புதிய ஐபோன் மாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.


 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்2 மாடலை வெளியிடாது என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்2 முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலிக்சர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன் விவரங்களை சரியாக லீக் செய்ததில் பிரபலமாக இருக்கிறது. இவை ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அவற்றுக்கான உபகரணங்களை (அக்சஸரீ) தயாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

உபகரணங்களை தயாரிக்கும் ஆக்சிலர்-க்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்2 மாடலுக்கு மாற்றாக இதுவரை ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரிய ஐபோன் மாடலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஐபோன் X மாடலை ஆப்பிள் உருவாக்கி வருவதாகவும், இதற்கான உபகரணங்களை தயாரிக்க ஆக்சிலர் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மினி மாடலாக ஐபோன் எஸ்இ2-வை வெளியிடும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையி்ல் ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் அளவில் பெரிய ஐபோன் X வெர்ஷனை சற்றே குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது. 

மிகப்பெரிய ஐபோன் X மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதன் விலை அதிகமாகவே நிர்ணயம் செயய்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 இன்ச் மாடல் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. வழக்கம் போல இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News