தொழில்நுட்பம்
புகைப்படம்: நன்றி Concept Creator

கூகுள் பிக்சல் 3, பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்கள்

Published On 2018-05-11 06:34 GMT   |   Update On 2018-05-11 06:34 GMT
கூகுளின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மர்மமாக இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கிறார்.
கலிஃபோர்னியா:

உலகின் தலைசிறந்த ஸ்மா்ட்போன்களாக கூகுளின் பிக்சன் 2 மற்றும் பிக்சல் 2XL இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் 2018 பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

புதிய கூகுள் ஸ்மார்ட்போனின் விவரங்களை பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி இவற்றின் வெளியீட்டு தகவல்களும் இடம்பெற்றுள்ளன.


புகைப்படம்: நன்றி Concept Creator

முந்தைய ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் கூகுள் நிறுவனம் இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்றும் இவை பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL என அழைக்கப்பட இருப்பதாக எவான் பிளாஸ் தெரிவித்திருக்கிறார். 2018 இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களும் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இவர் தெரிவித்துள்ளார். 

வெளியீட்டை பொருத்த வரை கடந்த ஆண்டு நடைபெற்ற ஹார்டுவேர் நிகழ்வு தேதியிலேயே இந்த ஆண்டு நிகழ்வும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் கூகுள் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார். 
 

கோப்பு படம்

இந்த ஆண்டு நிகழ்வு தேதியை கூகுள் இதுவரை உறுதி செய்யாத நிலையில், செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத முதல் வார காலத்தில் பிக்சல் அறிமுக நிகழ்வு நடைபெறலாம் என பிளாஸ் தெரிவித்துள்ளார். 

புதிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேற்கொள்ள இருக்கும் ஹார்டுவேர் மாற்றங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு ஹார்டுவேர் நிகழ்வில் கூகுள் பிக்சல் பட்ஸ் மர்றும் பிக்சல் பிரான்டு ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கூகுள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News