அறிந்து கொள்ளுங்கள்

இது தெரியாம போச்சே! - 70 சதவீத ஐபோன் 14 மாடல்களில் சாம்சங் OLED!

Update: 2022-11-27 04:15 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கின்றன.
  • ஐபோன் மாடல்களுக்கு தேவையான பாகங்களை பல்வேறு மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் OLED சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் சாம்சங்கின் OLED பேனல்களை தனது ஐபோன்களில் பயன்படுத்தி வருகிறது. OLED மட்டுமின்றி ஐபோனில் உள்ள மேலும் சில பாகங்கள் சாம்சங் போன்று மூன்றாம் தரப்பு நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 14 சீரிசில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டிஸ்ப்ளே பேனல்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சாம்சங் உற்பத்தி செய்தவை என தெரியவந்துள்ளது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களில் வழக்கமான பேனல்களும், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் LTPO டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது முதன்மை சீரிசில் 120 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் சுமார் 80 மில்லியன் யூனிட்களில் சாம்சங் பேனல், 20 மில்லியனுக்கும் மேற்பட்ட யூனிட்களில் LG டிஸ்ப்ளே வழங்கும் ஸ்கிரீன்கள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர BOE பேனல்கள் 6 மில்லியன் யூனிட்களில் வழங்கப்பட இருக்கிறது.

மீதமுள்ள யூனிட்களுக்கு யார் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குவது என்ற முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் மற்றும் எல்ஜி டிஸ்ப்ளே ஐபோன் 14 சீரிசின் நான்கு வேரியண்ட்களுக்கும் டிஸ்ப்ளே பேனல்களை வழங்குகின்றன. BOE வழங்கும் பேனல்கள் ஐபோன் 14 மாடலில் உள்ள 6.1 இன்ச் LTPS OLED-க்கள் ஆகும்.

Tags:    

Similar News