சிக்னேச்சர் போனுடன் புது ஸ்மார்ட்வாட்ச்... சூப்பர் அப்டேட் கொடுத்த மோட்டோ..!
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடுகளுடன் வரும், மேலும் 1 ATM தர மதிப்பீட்டையும் கொண்டிருக்கும்.
- உடற்பயிற்சிகளுக்கு துல்லியமான கண்காணிப்பை உறுதியளிக்கும் இரட்டை அதிர்வெண் GPS-உடன் வருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் CES 2026 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட, மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனுடன், மோட்டோ நிறுவனத்தின் அடுத்த மோட்டோ வாட்ச் ஜனவரி 23ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனை மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய மோட்டோ வாட்ச் மாடல் 1.4-இன்ச் OLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த பிரிவில் இத்தகைய பாதுகாப்புடன் வரும் ஒரே மாடலாக புதிய வாட்ச் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெப், தூக்கம், மன அழுத்தம், இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு உள்ளிட்ட விரிவான சுகாதார நுண்ணறிவுகளை கொண்டிருக்கும்.
இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடுகளுடன் வரும், மேலும் 1 ATM தர மதிப்பீட்டையும் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் உடற்பயிற்சிகளுக்கு துல்லியமான கண்காணிப்பை உறுதியளிக்கும் இரட்டை அதிர்வெண் GPS-உடன் வருகிறது.
47மிமீ அளவில் வட்ட வடிவம் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் சான்ட்-பிளாஸ்ட்டெட் அலுமினியம் ஃபிரேம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிரவுன், மேலும் இது மூன்றாம் தரப்பு 22மிமீ பட்டைகளுடன் இணக்கமானது. இத்துடன் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அழைப்புகள், நோட்டிஃபிகேஷன் அலர்ட்கள் மற்றும் "கேட்ச் மீ அப்" போன்ற மோட்டோ AI அம்சங்களுக்கான மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்குவதை மோட்டோ நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.